Showing posts with label பெருநாள் வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label பெருநாள் வாழ்த்துக்கள். Show all posts

Thursday, September 24, 2015

கோகன்ட் பஸ்பூசா - அரபிக் ரவா கேக் - இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்

உலகில் உள்ள அனைத்து முஸ்லீம் களுக்கும்
* இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்.*


அல்ஹம்து லில்லா இன்று ஹஜ் பெருநாள் தொழுகை துபாய் ஈத்கா திடலில் நல்ல படியாக தொழுது முடிச்சு வந்தோம்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல் கிருபை புரிவானாக.









Eggless Coconut Basbousa 

கோகன்ட் பஸ்பூசா - அரபிக் ரவா கேக்

அரபிக் ரவா கேசரி /கேக் / ஓவன் மெத்தட்
Click below link

பஸ்பூஸா என்பது துபாயில் தாஜா சிக்கன், கே எஃப் சி, அல் பரூஜ், போன்ற அரபிக் உணவங்களில் பிரத்தி பெற்ற இனிப்பு கேக் . இது முட்டையில்லாமல் செய்த்தது முட்டை போட்டு சாப்ரான் கொஞ்சம் சேர்த்து கொண்டால் இன்னும் நல்ல சுவையாக இருக்கும்.


தேவையான பொருட்கள்

பாகு தயாரிக்க

சர்க்கரை - 200 கிராம்
தண்ணீர் - 100 கிராம்
லெமன் ஜூஸ் - ஒரு துளி
ஆரஞ்ச் ஜுஸ் - 1 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் - 1 தேக்கரண்டி





கேக் தயாரிக்க

செமோலினா ( பட்டு போல் உள்ள ரவை) - 225 கிராம்

சர்க்கரை - 100 கிராம்
கன்டென்ஸ்ட் மில்க் - அரை கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கர்ண்டி
பால் - ஒரு கப்

வென்னிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
உருக்கிய வெண்ணை - 20 கிராம்
வெள்ளை எள் பேஸ்ட் அல்லது பட்டர் - சிறிது
grated Dry coconut  - 1/2 cup
பொடியாக அரிந்த பாதாம் - தேவைக்கு

செய்முறை

சர்க்கரை பாகு தயாரிக்க





முதலில் வாயகன்ற பவுளில் சர்க்கரையும் தண்ணீரும் சேர்த்து கொதிக்க விட்டவும், லெமன் சாறு சேர்த்து குளிரவிடவும். பிற்கு ரோஸ் வாட்டரும் , ஆரஞ்ச் வாட்டர் ( அல்லது) ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து தனியாக வைகக்வும்.

பேக்கிங் ட்ரேவில் தஹீனி அல்லது பட்டரை தடவி வைக்கவும்.






பெரிய வயகன்ற பவுளில் செமொலினா, சர்க்கரை, தேங்காய் , பேக்கிங் பவுடர் அனைத்தையும் கலந்து வைககவும்.
நடுவில் ஒரு துளை போட்டு அதில் உருக்கிய பட்டர்,வென்னிலா எசன்ஸ்,சர்க்கரை பாகு சிறிது ,தேவைக்கு பால் சேர்த்து கையால் நன்கு கலக்கவும், கட்டியான சூப் போல கலக்கி வைகக்வும்.
பேக் செய்ய போகும் ட்ரேவில் ஊற்றி 12 மணி நேரம் ஊறவைக்கவும்.



3 மணி நேரமும் போதுமானது

ஓவனை 200 டிகிரிக்கு சூடுபடுத்தி ட்ரேவில் இருக்கும் பஸ்பூசா கலவையை 3 இஞ்ச் சதுரவடிவமாகவோ அல்லது டயமண்ட் வடிவிலோ வெட்டி  மேலே பாதாம் பருப்பை எல்லா கட்டத்திலும் அடுக்கி வைத்து 15 லிருந்து 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

நல்ல வெந்து ப்ரவுனானதும் மீதி உள்ள சர்க்கரை பாகை சூடு படுத்தி கேக்கின் மேல் ஊற்றி குளிரவிடவும்.

பரிமாறும் போதுசிறிது சர்க்கரை சிரப் ஊற்றி பரிமாறலாம்.




சுவையான அரபிக் ரவா/சோஜி /சோமாலினா கேக் / பஸ்பூசா ரெடி.




Please Check my Youtube channel for Dhum process in mutton sabji biriyani
 
please click above linkfor Dhum process
 

Mutton Sabji Biriyani - Samaiyal Attakaasam



Ramdan Day 23 ,2013
Iftar Menu

  1.  Mutton Veg Kanji /Mutton Rice Porridge/Soup
  2. Basbausa Arabic Sweet
  3. Nannaari Sharbath
  4. Urad Dhal Pepper Vadai
  5. Mutton Cutlet
  6. Ketti Chutney
  7. Colourful Milk Agar Agar
  8. Boiled Peanut
  9. Fruits ( Orange, Apple, Grapes, Watermelon)
  10. Dates



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, October 6, 2014

புனித தியாக திருநாள் வாழ்த்துக்கள்/ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்




புனித தியாக திருநாள் வாழ்த்துக்கள்/ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்

இந்தியாவில் இன்று பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் புனித தியாக திருநாள் வாழ்த்துக்க்ள், இந்த பெருநாள் அன்று இஸ்லாத்தின் 5 கடமைகளும் ஒன்றான ஹஜ்செல்வதை வசதி உள்ளவர்கள் ஹஜ் சென்று தங்கள் கடமையை நிறைவேற்றுவார்கள்.

ஹஜ் க்கு செல்லாதவர்கள் பெருநாளுக்கு ஒரு நாள் முன்பு நோன்பு வைக்கனும்.இந்த நோன்பு வைப்பதால் நாம் செய்த சிறு பாவங்கள் மன்னிக்கப்படும்.

இந்த நோன்புக்கு பெயர் "அரஃபா நோன்பு" என்பதாகும்.
ஹஜ் க்கு சென்றவர்கள் அரஃபா என்ற மைதானத்தில் ஒன்று கூடுவார்கள்.

நானும் குடும்பத்துடன் ஹஜ் செல்லவேண்டும் என்று நாட்டம் வைத்துள்ளேன். அதை அல்லாஹ் சீக்கிரம் நிறைவேற்றி வைக்க எனக்காக துஆ செய்யுங்கள்.


நோன்பு பெருநாள் , ஹஜ் பெருநாள் தொழுகை என்பது , இறைவனுக்கு நன்றி செல்லுத்தும் பொருட்டு உலகில் உள்ள அனைத்து முஸ்லீம் களும் காலை சூரியன் உதமாகும் போது இரண்டு ரக் அத்தை கொண்ட தொழுகையை நிறைவேற்றுவதாகும்.

ஹஜ் பெருநாள் தொழுது முடித்து வந்து நாம் சமைத்து வைத்திருக்கும் இனிப்பு பண்டத்தை சாப்பிடவேண்டும்.




எப்போதும் வெளிநாடுகளில் ஒரு நாள் முன் பெருநாள், மறுநாள் இந்தியாவில் வரும். இந்த முறை இரண்டு நாள் தள்ளி வந்துள்ளது.
இங்கு துபாயில் சனிக்கிழமை - 04.10.14 அன்று பெருநாள் நல்லபடியாக முடிந்தது.

நாங்கள் இங்குள்ள ஈத்கா என்னும் தொழுகை திடலில்  குடும்பத்துடன் சென்று தொழுது வந்தோம்.

இந்த தடவை 5 வருடமாக எங்க கூட இல்லாமல் இந்த முறை என் பெரிய பையன் எங்களுடன் வந்து சேர்ந்து பெருநாள் கொண்டாடியது மிக்க மகிழ்சி.

இந்த வருடம் ஹஜ் பெருநாளுக்கு நான் செய்தது.


காலை டிபன்


  1. ஷீர் குருமா/Sheer Kurma
  2. மட்டன் சேமியா/Mutton Semiya
  3. ஊறுகாய் / Pickle
  4. இஞ்சி டீ/Ginger Tea



மதியம்


  1. மட்டன் பிரியாணி(Mutton Biriyani)
  2. எண்ணை கத்திரிக்காய்(ennai kaththirikkaay) (Bringal Curry)
  3. ஓமம் தயிர் பச்சடி (Ajwain Raita)
  4. பாதாம் ஹல்வா ( Badam /Almond Halwa)
  5. சாலட் ( Salad)
  6. லெமன் பிளாக் டீ ( Lemon Black Tea)


இரவு

  1. ப்ரட் புல்ஸ் ஐ ( Bread Bulls Eye)
  2. மசாலா டீ  ( Masala Chai)


படங்கள் பிறகு இணைக்கிறேன்



ஹஜ் பெருநாளுக்கு எல்லாரும்  ஆடு அறுத்து  அதை உறவினர்களுக்கும் , தெரிந்தவர்களுக்கும் பண்டமாற்று போல் ஒருவருக்கு ஒருவர் பங்கிட்டு  கொடுப்பார்கள், அப்படி எல்லாவீடுகளில் இருந்து வரும் கறிகளை பதப்படுத்துவார்கள். முன்றில் ஒரு பங்கை ஏழைகளுக்கும் கொடுப்போம்.

போன வருடம் ஹஜ் பெருநாள் அன்று ஊரில் இருந்தேன். அப்போது மாமியார் வீட்டில் , குர்பாணி கொடுத்தபோது கிட்னி, ஈரல், மட்டன் எல்லாவகைகளையும் தனித்தனியாக செட்டி நாடு மட்டன், மிளகு ஈரல், கிட்னி ஃப்ரை, என பலவகைகளை எல்லோருக்கும் செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தினேன், எல்லாரும் ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டது போல் இருக்கு என்றார்கள்.

அம்மாவீட்டில் கறி தக்குடி எல்லாரும் சேர்ந்து போட்டோம். 
மட்டன் தக்குடி  குர்பாணி கறியில் செய்வதற்கு ஏற்ற சமையல் கறி தக்குடி.


முக்கியாமாக துண்டு கறிகளை உப்பு கண்டம் போடுவார்கள்.உப்பு கன்டம் கறி தயாரித்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் பேக்கிங் செய்து அனுப்புவார்கள்.

கறியை சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அதில் அவரவர் விருப்ப மசாலாவை சேர்த்து பிரட்டி சிறிது நேரம் ஊறவைத்து சனல் கயிற்றை கோணி ஊசியில் கோர்த்து இந்தகறியை தூர தூரமாக கோர்த்து  கொடுப்போல் காயவைக்கவேண்டும்.காய்ந்த கறியை ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து தேவைக்கு தட்டி பொரித்து சாப்பிடலாம்.



இதை தண்ணீர் படாமல் வைத்து தேவைக்கு எடுத்து தட்டி அப்பளம் பொரிப்பது போல் பொரித்து ரசம் சாதம், பருப்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.ஏற்கனவே  4 வருடம் முன் போட்ட பதிவு தான் மீண்டும் இப்போது லின்க் கொடுத்துள்ளேன்.

நிறைய பேருக்கு வந்து குமியும் கறியை வைத்து என்ன செய்வதென்று தெரியாது 

இந்த குர்பாணி கறியை வைத்து

1. உப்பு கன்டம்
2.கறி தக்குடி
3. ஸ்பேர் பாட்ஸ் பிரியாணி
4. கட்லட் செய்தும் ஃப்ரீஜரில் ஸ்டோர் செய்யலாம்.


உப்புகன்டம் கறி ( காயப்போட்ட கறி/தட்டுகறி)



http://samaiyalattakaasam.blogspot.com/2010/11/uppu-kandam.html




இதில் மசாலாவகைகள் அவரவர் விருப்பத்துக்கு, சீரகதூள் , கரம்மசாலா தூள் சோம்பு தூள் வகைகளும் சேர்த்து கொள்வதாக இருந்தாலும் சேர்த்து கொள்ளலாம்.,


ஆட்டு ஈரல் பிரியாணி

இதை ஸ்பேர் பார்ட்ஸ் ரைஸ் என்று கீரையுடன் செய்வோம் , இந்த ஹஜ் பெருநாளில் செய்யசரியாக இருக்கும். ரெசிபி படங்கள் தான் சரியாக இல்லை.



அனைவருக்கும் புனித தியாக திருநாள்  வாழ்த்துக்கள்



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/


Saturday, October 4, 2014

ஆட்டு ஈரல் பாலக் கீரை பிரியாணி (புலாவ்)

அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.


Mitta Khana மிட்டாகானா  லின்கை சொடுகி பார்க்கவும்.




ஹஜ் பெருநாளுக்கு எல்லாரும்  ஆடு அறுத்து  அதை உறவினர்களுக்கும் , தெரிந்தவர்களுக்கும் பண்டமாற்று போல் ஒருவருக்கு ஒருவர் பங்கிட்டு  கொடுப்பார்கள், அப்படி எல்லாவீடுகளில் இருந்து வரும் கறிகளை பதப்படுத்துவார்கள். 

அதை உப்பு கண்டம் போடுவார்கள்.உப்பு கன்டம் கறி தயாரித்து வெளிநாடுகளில் உள்ளவர்கள் பேக்கிங் செய்து அனுப்புவார்கள்.இதை தண்ணீர் படாமல் வைத்து தேவைக்கு எடுத்து தட்டி அப்பளம் பொரிப்பது போல் பொரித்து ரசம் சாதம், பருப்பு சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.







மட்டன் தக்கடியும் போட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து விருந்து வைத்து சாப்பிடலாம்.






அதில் இருக்கும் ஈரல், மண்பத்தை போன்றவைகளை இப்படி புலாவ் பிரியாணி போல் செய்யலாம்.

ஆட்டு ஈரல் பாலக் கீரை பிரியாணி (புலாவ்)
தேவையான பொருட்கள்
தேங்காய் சாதம் தாளிக்க
1.    தரமான பாசுமதி அரிசி – அரை படி (4டம்ளர்) 800 கிராம்
2.    தேங்காய் – அரை மூடி
3.    எண்ணை – 100 மில்லி
4.    பட்டை  - 1ஒரு இன்ச் சைஸ்
5.    கிராம்பு – 2
6.    ஏலக்காய் – 2
7.    வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
8.    இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைகரண்டி
9.    கொத்துமல்லி புதினாதழை
10.  பாலக் கீரை – இரண்டு கட்டு
11.  கடலைபருப்பு – 100 கிராம்
ஈரல் வேக வைக்க
1.    ஈரல் – அரை கிலோ
2.    எண்ணை – 50 மில்லி
3.    வெங்காயம் – கால் கிலோ
4.    தக்காளி – கால் கிலோ
5.    இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைகரண்டி
6.    பச்ச மிளகாய் - 2
7.    மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
8.    தனியா தூள் – ஒரு தேக்கரண்டி
9.    உப்பு தூள் – தேவைக்கு
10.  கரம் மசாலா தூள் – கால் தேக்க்ரண்டி
11.  கொத்துமல்லிபுதினா தழை – சிறிது



செய்முறை
1.    முதலில் ஈரலை சுத்த படுத்தி தண்ணீரை வடிக்கவும்
2.    கடலை பருப்பை 5 நிமிடம் ஊறவைத்து வேகவைத்து லேசாக மசித்து வைக்கவும்.அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
3.    கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி பொடியாக நறுக்கிவைக்கவும்.
4.    தேங்காயை துருவி பாலெடுத்து வைக்கவும்.


5.    குக்கரில் எண்ணையை காயவைத்து பட்டை ஏலம் கிராம்பு போட்டு வெடிய விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சைவாடைபோகும் வரை வதக்கி கொத்துமல்லி புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி தக்காளிபொடியாக அரிந்து சேர்த்து பச்சமிளகாய் ஒடித்து போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.சேர்க்க வேண்டிய தூள்வகைகள் அனைத்தையும் சேர்த்து ஈரலையும் சேர்த்து குக்கரில் முன்று விசில் விட்டு இரக்கவும்.

6.    பிரியாணி செய்யும் பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி பட்டை கிராம்பு ஏலம் சேர்த்து வெடிய விட்டு வெங்காயம்,இஞ்சி பூண்டு புதினா கொத்துமல்லி தழை சேர்த்து தாளிக்கவும்.

7.    அடுத்து வெந்த ஈரலை சேர்த்து ஒரு டம்ளருக்கு ஒன்னறை டம்ளர் வீதம்  அளந்து ஊற்றவும். 4 டம்ளர் அரிசிக்கு 6 டம்ளர் தேங்காய் பால் ஊற்றவேண்டும்.


8.    லேசாக கொதிக்கும் போது அரிசியை களைந்து ஊற்றி உப்பு சரி பார்த்து சேர்க்கவும். அரை பதம் அரிசி வெந்த்தும் வேகவைத்த கடலை பருப்புஅரிந்து வைத்துள்ள கீரை சேர்த்து முடிபோட்டு தீயின் தனலை சிம்மில் வைத்து20 நிமிடம் தம்மில் விடவும்.
9.    சுவையான ஆரோக்கியமான சத்தான ஈரல் கீரை பிரியாணி ரெடி.

இது ஹிமோ குளோபின் அளவு கம்மியாக உள்ளவர்கள் இந்த ஈரல் கீரை பிரியாணியை அடிக்கடி  சாப்பிட்டு வந்தால் கூடிய விரைவில் இரண்டு மாதத்திற்குள் ஹிமோ குளோபின்   அளவு அதிகரிக்கும்

பரிமாறும் அளவு : 6 நபர்களுக்கு
ஆயத்த நேரம் : 1 மணி நேரம்

சென்னை ப்ளாசா : https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
சமையல் அட்டகாசங்கள்: https://www.facebook.com/Samaiyalattakaasam




அனைவருக்கும்  இனிய தியாக திருநாள் வாழ்த்துக்கள்




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, October 15, 2013

ஹைதராபாத் மட்டன் பிரியாணி - Hyderabad Mutton Biriyani




தேவையானவை
எலும்பில்லாத மட்டன் – 300 கிராம்
தரமான பாசுமதி அரிசி – 400 கிராம்
உருளை கிழங்கு – 100 கிராம்
தயிர் – அரைகப்
பச்ச மிளகாய் – 2 நீளவாக்கில் கீறியது
கொத்துமல்லி தழை
புதினா
பட்டை - 1
லவங்கம் - 2
ஏலக்காய் - 2
கருப்பு பெரிய ஏலக்காய் - 1
பிரிஞ்சி இலை – 2
சீரகதூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்தூள் – அரை தேக்கரண்டி
முழு மிளகு  - 5
இஞ்சி பூண்டு விழுது – இரண்டு மேசை கரண்டி
பொரித்த வெங்காயம் – 2 பெரியது
ஜாதி பத்திரி
லெமன் ஜூஸ் – 3 தேக்கரண்டி

வெண்ணீரில் அல்லது பாலில் ஊறவைத்த சாப்ரான் – ¼ தேக்கரண்டி
செய்முறை:
அரிசியை நன்கு களைந்து ஊறவைக்கவும்.
வெங்காயத்தை அரிந்து சிவற கருகாமல் வறுத்து வைத்து கொள்ளவும்.
வாயகன்ற பேசினில் ( பாத்திரத்தில்) சுத்தம் செய்த மட்டனை சேர்த்து அதில் மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள்,உப்பு தூள் , சீரக தூள்,பட்டை , லவங்கம் , ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பிரிஞ்சி இலை,தயிர், வறுத்த வெங்காயம்,கொத்துமல்லி , புதினா, சாப்ரான் ஊறியது,பச்சமிளகாய், உருளைகிழங்கு,ஜாதி பத்திரி அனைத்தயும் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒருமணி நேரம் ஊறவைத்தாலும் நல்ல இருக்கும்.

மற்றொரு வாயகன்ற பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீரை விட்டு உப்பு சிறிது எண்ணை சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதி வந்த்தும் ஊறிய அரிசியை போட்டு முக்கால் பாகத்துக்கு (65 %) குறைவாக வேகவைத்து வடிக்கவும்.
( உலை கொதிக்கும் போது அதில் புதினா கொத்துமல்லி ஷாஜீரா போன்றவை சிறிது சேர்த்து கொள்ளவேண்டியது)
பிரியாணி செய்யும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மேரினேட் செய்து வைத்துள்ள மட்டனை முதலில் பரவலாக வைக்கவும். அடுத்து வடித்த சாத்த்தை பரவலாக வைக்கவும்.
அதன் மேல் ப்ரஷ் புதினா கொத்துமல்லி தழை,சாப்ரான் தண்ணி , வறுத்த வெங்காயம்.எல்லாவற்றியும் தூவு ஒரு பாயில் பேப்பரை போட்டு முடி கனமான முடியை போட்டு மூடி , தீயின் தனலை 15 நிமிடம் மீடியமாகவும் பிறகு சிறிய தீயிலும் வைத்து 30 நிமிடம் தம் போடவும்.

தம் போடுமுன் பிரியாணி சட்டியின் அடியில் தம்போடும் கருவி அல்லது கணமான தோசை தவ்வாவை வைத்து தம் போடவும்.இப்படி வைப்ப்து சிறிதும் அடி பிடிக்காது.
தம் போட முடிய பிறகு சும்மா சும்மா பிரியாணி சட்டியை திறக்க கூடாது.

30 நிமிடம் கழித்து லேசாக பிரட்டி விடவும்.
சுவையான ஹதராபாத் மட்டன் பிரியாணி ரெடி.


 பரிமாறும் அளவு 4 லன்ச் பாக்ஸ்
ஆயத்த நேரம் (ஊறவைக்கும் நேரம் + 10 நிமிடம்
சமைக்கும் நேரம் – 30 நிமிடம்.





 இதில் கவனிக்க வேண்டியது: உப்பின் அளவை சரி பார்த்து கொள்ளவும். மேரினேட் செய்யவும் சேர்க்க வேண்டும், சாதம் கொதிக்கவும் சேர்க்கவேண்டும்.

இதற்கு தொட்டு கொள்ள காராபூந்தி ரெய்தா, மற்றும் ஹைதராபாத் சிக்கன் 65, பைங்கன் பர்தா போன்றவை கொண்டு பரிமாறலாம்.


Fried Onion




பிரியாணி என்றாலே எங்க வீடுகளில் பாரம்பரியமாக செய்யும் மட்டன் பிரியாணி தான் எங்க எல்லாருக்குமே பிடிக்கும்.ரொம்ப நாளாக பாரம்பரிய ஹைதராபாத் பிரியாணி எப்படி செய்யனும் என்று செய்து பார்க்க் ஆசை.
ஹதராபாத் சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி முன்பு செய்துள்ளேன், நம்ம பாயிஜா முறையிலும் ஒரு முறை செய்துள்ளேன். அதில் நெட்டில் தேடியதும் வா செஃப் என் தங்கை அடிக்கடி சொல்வாள் அவர் சொல்லும் போதே நமக்கு சாப்பிடனும் போல இருக்கும் என்று, ம்ம வாரே வாஹ் செஃப் nஹைதராபாத் பிரியாணி ரொம்ப பிடிச்சி இருந்த்து. இதில் சிக்கன் பிரியாணி தான் அடிக்கடி செய்வது, மாதம் ஒரு முறை கண்டிப்பாக ஹைதராபாத் சிக்கன் பிரியாணி செய்துவிடுவது. சில மசாலா வகைகள் ரொம்ப அதிகமாக இருந்த்தால் கொஞ்சம் குறைத்து கொண்டேன். இதில் செய்துள்ளது போன்லெஸ் மட்டனும் உருளையும் சேர்த்து ஒரு நாள் முன்பே மசாலாஊறவைத்து விட்டேன். காலையில் செய்து ஆபிஸுக்கும் கட்டி கொண்டு வந்து லன்சுக்கு சாப்பிட்டாச்சு ரொம்ப ஈசியாக வேலை முடிந்துவிட்ட்து. இதில் எண்ணையும் குறைவு, தக்காளியும் சேர்க்க தேவையில்லை,டயட் செய்பவர்களுக்கு சூப்பரான உணவு.எதுவும் தாளிக்க தேவையில்லை ஒரே தம் அவ்வளவுதான். இதுபோல் வெஜ் மற்றும் சிக்கனிலும் செய்யலாம். சிக்கன் பிரியாணி ஆங்கில பிளாக்கில் போஸ்ட் பண்ணி உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு சென்று பார்க்கலாம், இங்கு பிறகு பதிவிடுகிறேன்.








அனைவருக்கும் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள். நான் ஊருக்கு போகிறேன். இனி பிறகு பார்ப்போம் ..... 


Hyderabad Boneless Mutton Biriyani
Khara Bhoondi Raitha
Chennai Plaza   Old website

Chennai Plaza  முகநூல் முகவரி

Chennai Plaza Page -  லைக் பண்ணுங்கோ. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் கடையை பற்றி தெரியபடுத்துங்கள். 



 https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Thursday, August 8, 2013

சென்னை ப்ளாசா புதிய வீடு - Chennai Plaza New Website





சென்னையில் உள்ள * சென்னை ப்ளாசா* எங்க கடை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும் என நினைக்கிறேன், தெரியாதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.
சென்னை ப்ளாசா கடைக்கு புதிய வெப்சைட் போட்டுள்ளோம் http://www.chennaiplazaik.com என்பதை www.chennaiplazaki.com ஆக மாற்றி உள்ளோம்.

இதை நல்ல படியாக அமைத்து கொடுத்த அறுசுவை மற்றும் தமிழ் குடும்ப தோழி சுஹைனாவிற்கு என் நன்றிகள். 

சில படங்கள் இணைத்து கொடுத்தார்கள் மீதி படங்கள் இப்போது நான் இணைத்து கொண்டு இருக்கிறேன்.

எல்லா பொருட்களுக்கும் விலை பட்டியல் பிறகு இணைக்கப்படும்.
உங்களது விருப்பமுள்ள பொருட்களுக்கு விலை வேண்டும் என்றால் கிழே எங்கள் ஈ மெயில் முகவரி கொடுத்துள்ளோம். எங்களை தொடர்பு கொள்ளவும்.

 சென்னை ப்ளாசா முக புத்தக சுட்டி இதிலும் இணைந்து கொள்ளுங்கள்.



Chennai Plaza FB Page

அனைவரும் இதில் லைக் கொடுத்து இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.




Our shop Chennai Plaza web site is now changed from www. Chennai plazaik .com to www.chennaiplazaki.com
We  have updated our product and introduced new items in our website. 

Chennai Plaza Facebook Id


Please give your comments and Likes in the facebook. 

Also inform your known persons.
Price list for the all the Products will be posted later.
Price for any model number will be provided upon request through 

E-mail.

or

அனைவருக்கும் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள். 

இந்த வருடம் நோன்பு ஏக வல்ல இறைவனின் அருளால் நல்லபடியாக முடிந்தது, இனி வரும் வருடங்களிலும் நல்ல படியாக அனைவரும் நோன்பை நிறைவேற துஆ கேட்போமாக.


சமையல் அட்டகாசங்கள் முகநூலிலும் இணைந்து கொள்ளுங்கள்  https://www.facebook.com/Samaiyalattakaasam


ஈத் ஸ்பெஷல் ஷீர் குருமா  - பாக்கிஸ்தானியர்களின் ரிச் பாயாசம்