Showing posts with label ரசம் வகைகள். Show all posts
Showing posts with label ரசம் வகைகள். Show all posts

Wednesday, November 22, 2017

தக்காளி பீட் ரூட் ரசம் (சூப்) - Tomato Beet Indian Soup/Rasam



Key Iron Ingredients: Tomato and Beetroot
Preparation Time : 7
cooking time : 13 minutes
serve 3 or 4

சாதரண புளி ரசம் தயாரிப்பதோ அதற்கு பதில் இப்படி இரும்பு சத்து அதிகமாக உள்ள பீட்ரூ, தக்காளி சேர்த்து செய்தால் சும்மா 3 டம்ளர் அப்படியே குடிக்கலாம்.


என்ன டயட்டோஅது வெயிட் குறைக்கவோ அல்லது டயாபட்டீஸ்க்கோ வேற என்ன காரணத்துக்காக குறைக்கனும் நினைக்கிறீங்கள் .
அதுக்கு முதலாவதாக நான் சொல்லும் டயட்
சூப் தான் !! ஆமா!1
சூப்  என்றால் ஐய்யோ நமக்கு செய்ய வராதே என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?
கவலை வேண்டாம் எளிமையாக செய்ய நான் சொல்லி தரேன்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமான சூப் தயாரிக்கலாம்.
வாங்க

Tomato Beet Rasam (soup)
*தக்காளி பீட் ரூட் ரசம் (சூப்)*

தக்காளி பெரியது 4
பீட் ரூட் பொடியாக அரிந்தது கால் கப் அ இரண்டு மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
ரசம் பொடி ஆச்சி அ சக்தி
கொத்து மல்லி தழை கொஞ்சம்
புளி ஒரு சின்ன திராட்சை பழம் அளவு - தேவைபட்டால்
மஞ்சள் தூள் சிறிது
மிளகாய் தூள் கால் தேக்கரண்டி

தாளிக்க

நெய் ஒரு தேக்கரண்டி
கடுகு கால் தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது பூண்டு இரண்டு பல்
பச்சமிளகாய் சின்னது ஒன்று
பெருங்காயம் ஒரு சிட்டிக்கை



செய்முறை

தக்காளி பீட் ருட் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சிறிது கருவேப்பிலை சிறிது கொத்துமல்லி தழை
இவை அனைத்தையும் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள்
வெந்ததும் மசித்து தண்ணீரை வடிகட்டவும்.
மறுபடி அந்த வடிகட்டிய தக்காளியில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலக்கி வடித்து வடிகட்டிய தக்காளி பீட் சாற்றை கொதிக்க விடவும்.
பிறகு கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்து கொண்டு இருக்கும் தக்காளி சாறில் சேர்த்து கலக்கி இரக்கவும்.
இதை வாரம் ஒரு நாள் அல்லது முன்று நாட்கள்
ஒரு முட்டை மற்றும் பொரியலுடன் இரண்டு டம்ளர் அளவுக்கு குடிக்கலாம்

Liquid Diet

Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.  

happy healthy deit,Tomato Beetroot rasam/soup


ரசம் வகைகள், சூப் வகைகள், பீட்ரூட், தக்காளி, டயட் சமையல்,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, June 10, 2017

வேப்பம் பூ ரசம் - Neem flower rasam



உணவில் அறுசுவை உணவு வகைகளில் கசப்பும் ஒன்றும் சாப்பாட்டு வகைகளில் கசப்பு தன்மை உள்ள சமையலும் செய்து சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சி புழுக்கள் அழிய உதவும்.

பாகற்காய், வேப்பம் பூ, வேப்பிலை சாறு, வெந்தயம் போன்றவைகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவேண்டும்.

வேப்பம் பூ  ரசம் - Neem flower rasam



தேவையான பொருட்கள்

வேப்பம் பூ -  இரண்டு மேசைகரண்டி
ரசப்பொடி - ஒரு மேசைகரண்டி
புளி - ஒரு எலுமிச்சை அளவு

ஒரு பெரிய தக்காளி

தாளிக்க

நெய் - ஒரு தேக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கொத்தும்மல்லி தழை - சிறிது
கருவேப்பிலை - சிறிது
பூண்டு - முன்று பல்
வெந்தய பொடி - கால் தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - அரை தேக்கரண்டி

செய்முறை

வேப்பம் பூவை உருவி கழுவி நெய்யுல் வதக்கி வைக்கவும்.
புளியை கரைத்து அதில் தக்காளி பிழிந்து விட்டு ரசம் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
பூண்டு கொத்துமல்லி பச்ச மிளகாயை இடிச்சி வைக்கவும்.

தாளிக்க நெய்யை சூடு படுத்தி அதில் கடுகு கருவேப்பிலை, சிறிது வெந்தயப்பொடி, பெருங்காயம் தட்டி வைத்துள்ள பூண்டு பச்சமிளகாய் கொத்துமல்லி சேர்த்து வதக்கி , கடைசியாக நெயில் வதக்கி வைத்துள்ள வேப்பம் பூவை சேர்த்து வதக்கி
 கொதிக்க வைத்து வைத்துள்ள ரசத்தில் கொட்டி கலக்கவும். சுவையான மருத்துவ குணமுள்ள வேப்பம் பூ ரசம் ரெடி.




Neem Flower Rasam/Soup good medicine for stomach ulcer 
ttakaasam http://www.chennaiplazaki.com/ https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyala

Saturday, August 28, 2010

தக்காளி ரசம் - tomato rasam







தேவையான பொருட்கள்
நன்கு பழுத்த பெரிய தக்காளி - 3
ரசப்பொடி - ஒன்னறை தேக்கரண்டி
சாம்பார் பொடி - அரை தேக்கரண்டி
காஷ்மீரி சில்லி பவுடர் - கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
மஞ்சள் தூள் -- கால் தேக்கரண்டி
புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
கருவேப்பிலை, கொத்து மல்லி


தாளிக்க

எண்ணை - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
கருவேப்பிலை - ஒரு கொத்து
கொத்து மல்லி தழை - அரை கைப்பிடி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை




செய்முறை

தக்காளியை நன்கு கழுவி நான்காக நருக்கி முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் மஞ்சள் , உப்பு சேர்த்து வேகவிடவும்.

வெந்த தக்காளியை நன்கு மசித்து சாறை வடிக்கவும், மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சக்கையை பிசைந்து சாறை எடுத்து வடிகட்டவும்.
புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து மேலும் அரை டம்ளர் ஊற்றவும்.

வடித்து வைத்துள்ள தக்காளி புளி கலவையில் சாம்பார் பொடி,ரசப்பொடிமிளகாய் தூள்,சிறிது கருவேப்பிலை,கொத்து மல்லி சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.




கடைசியாக் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
கம கமக்கும் தக்காளி ரசம் ரெடி.

இது எட்டு நபர்கள் சாப்பிடலாம்.

நான் இதை அடிக்கடி செய்வது, ஊரிலும் போய் அம்மா வீட்டிலும் ,மாமியார் வீட்டிலும் செய்து எல்லோருக்கும் ரொம்ப பிடித்து டைரியிலும் நோட் பண்ணி கொண்டார்கள்.
ரசத்த குடிப்பவர்கள் சும்மா அப்ப்டியே குடிக்கலாம்.
தக்காளி ரசத்தில் தக்காளி பழத்தை பிசைந்து செய்வார்கள், என் பிள்ளைகளுக்கு அது பிடிக்காது ஜூஸ் போல் எடுத்து வாயில் எதுவும் தடுக்காமல் அப்படியே சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம்.
ஒரு வயது குழந்தைக்களுக்கு கூட கொடுக்கலாம்.ரசித்து சாப்பிடுவார்கள், அவர்களுக்கு செய்து போது காரம் சிறிது குறைவாக போட்டு கொள்ளனும்.





Friday, May 21, 2010

தக்காளி பருப்பு ரசம் - tomato dal rasam




தேவையான‌வை




புளி = நெல்லிக்காய் அளவு
தக்காளி = இரண்டு
துவரம் பருப்பு வெந்ததது = கால் கப்
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு


ஹொம் மேட் ரசப்பொடி(அ) ரெடி மேட் ரசப்பொடி = இரண்டு தேக்கரண்டி

தாளிக்க‌


நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
எண்ணை = அரை தேக்கர‌ண்டி
க‌டுகு = ஒரு தேக்க‌ர‌ண்டி
பெருங்காய‌ப்பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = இர‌ண்டு ஆர்க்
பூண்டு = இர‌ண்டு ப‌ல்
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது


செய்முறை



1. ஒன்னறை தக்காளியை கைகளால் பிசைந்து அத்துடன் புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து மஞ்சள் தூள், உப்பு தூள், ரசப்பொடி, அரை பழத்தை அப்படியே முழுசாக சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

2. பிறகு வெந்து வைத்துள்ள பருப்பை நன்கு மசித்து சேர்த்து தேவைக்கு மேலும் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இரக்கவும்.



3.கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள்வைகளை தாளித்து சேர்த்து கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.




4. ரொம்ப அருமையாக நெய் மனத்துடன் அப்படியே ஊற்றி குடிக்கலாம் போல இருக்கும்.
குறிப்பு:
இதில் தக்காளி பழத்தை ரசத்தில் இருந்து எடுத்து சாப்பிடுபவர்கள், முழு தக்காளி பழத்தை கூட நாலாக அரிந்து சேர்த்து கொதிக்க வைக்கலாம்.
தக்காளி பழம் வெந்து எடுத்து சாப்பிட நல்ல இருக்கும்.

Wednesday, April 21, 2010

புள்சார் என்னும் ரசம்

புள்சார் என்ன பெயர் வித்தியாசமாக இருக்கா? ரசத்தை தான் இஸ்லாமியர்கள் புள்சார் என்பார்கள். புளிசாரு தான் நாளடைவில் புள்சாராகிவிட்டது.


இது அசைவ உணவு சாப்பிட்டு விட்டு கடைசியாக இந்த புள்சாரை ஒரு பிடி சாதத்தில் ஜீரணத்துக்காக சாப்பிடுவது.

பழங்காலத்தில் இஸ்லாமிய இல்லங்களில் ரசத்துக்கு முக்கியத்துவமே கிடையாது. அதை ரொம்ப கேர் எடுத்து தாளிப்பதும் கிடையாது.
இன்றும் கூட சில வீடுகளில் இப்படி தான் இதை தயாரிக்கிறார்கள்.
ரசப்பொடி இல்லா அவசர ரசம் என்று கூட இந்த புள்சார சொல்லாம்.
தேவையானவை
புளி = ஒரு பெரிய நெல்லிக்காய் சைஸ்
த‌ட்டி கொள்ள‌
மிள‌கு = கால் தேக்க‌ர‌ண்டி
சீர‌க‌ம் = அரை தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
க‌ருவேப்பிலை = சிறிது
பூண்டு = முன்று ப‌ல்
கொத்தும‌ல்லி காம்பு = சிறிது
தாளிக்க‌
எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
கொத்தும‌ல்லி த‌ழை = சிறிது க‌டைசியாக‌ மேலே தூவ‌



செய்முறை

1.புளியை சுடு தண்ணீரில் கரைத்து சுமார் இரண்டரை டம்ளர் அளவிற்கு கரைத்து வடித்து கொள்ளவும்.


2. தட்ட கொடுத்துள்ள பொருட்களை ஒரு சுத்தி எடுத்து (மண்டையில் இல்ல) பொருட்களை ஒன்றும் பாதியுமாக தட்டி வைத்து கொள்ளவும்.


3. எண்ணை கடுகு கருவேப்பிலையை சேர்த்து தாளித்து தட்டி வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து உப்பு போட்டு சூடு படுத்தவும் , ரசத்தை தாளித்த பிறகு கொதிக்க விட கூடாது.

4. சூடு வந்து ஓரத்தில் நுரை கிளம்பும் போது இரக்கி கொத்துமல்லி தழை தூவி தாளித்த சட்டியில் இருந்து உடனே வேறு ஒரு சில்வர் பாத்திரத்துக்கு மாற்றி விடவேண்டும்.


5. தாளித்த சட்டியில் ரசத்தை வைக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதே போல் ரசம் கவனிக்காமல் தெரியாமல் கொதித்து விட்டால் ஒரு துளி எண்ணை (அ) தண்ணீர் சேர்க்கலாம்.

குறிப்பு


எங்க அம்மா ரசப்பொடி திரித்து அதை இன்னும் நல்ல வாசமாக பல வகையாக செய்வார்கள்.


எனக்கும் ரசத்தை ஒரே சுவையில் சாப்பிட பிடிக்காது, என் சுவைக்கு தான் ரசப்பொடியும் திரித்து கொள்வது. ரெடி மேட் ரசப்பொடி எனக்கு பிடிக்காது, நானே திரித்து செய்தால் சும்மா கும்முன்னு இருக்கும்

நானே முயற்சி செய்தது, தக்காளி ரசம் இது பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிக்கும், கருவேப்பிலை கொத்து மல்லி ரசம், இஞ்சி ரசம்,பருப்பு ரசம், (தேங்காய்பால் ரசம் இதுவும் அடிக்கடி வாய் புண் உள்ளவர்களுக்கு செய்து கொடுப்போம்) மோர் ரசம்,பூண்டு ரசம், பிளம்ஸ் ரசம், கொள்ளு ரசம் ..... இன்னும் பல வகைகளை செய்ய ஆரம்பித்து ரொம்ப நல்லவும் வந்துள்ளது.

ரொம்ப ஹெவியான சாப்பாடு என்றால் மறுநாள் ஒன்லி ரசம் தான், ஒரேயடியாக வெரும் புளி ரசம் சாப்பிடுவது உடம்பிற்கு நல்ல தல்ல அதற்கு இதுபோல் விதவிதமாக வைத்து சாப்பிடலாம்

பருப்பு ரசம் மற்றும் ஈசியான தக்காளி ரசத்தை பிறகு போடுகீறேன்.
ஏற்கனவே பல வகையான ரசம் வகைகள் கொடுத்துள்ளேன். லேபிளில் ரசம் பகுதியை கிளிக் செய்து பார்க்கவும்.

டிஸ்கி: டுடே லொள்ளு

சுதாகர் சார் ஒரு வேளை சின்ன வயதில் இப்படி இருப்பாரோ, இப்ப தான் அவர் சின்ன வயதில் உள்ள சுவாரசிய கதைகள் எழுதி இருக்கிறார்.



Saturday, March 27, 2010

ஊட்டி ஆப்பில் ரசம் - plums rasam




பிள‌ம்ஸ் ர‌ச‌ம் , பிள‌ம்ஸ் நிறைய‌ வாங்கி அது புளிப்பாக‌ இருந்தால் சால‌ட் செய்து சாப்பிட‌லாம். ச‌த்தான‌ ர‌ச‌மும் வைக்க‌லாம். நீங்க‌ள் சொன்னால் தான் இது பிள‌ம்ஸ் ர‌ச‌ம் என்று தெரியும்.


ஊட்டி ஆப்பில் = 3
தண்ணீர் = இரண்டு டம்ளர்
புளி = சின்ன‌ கொட்டை பாக்க‌ள‌வு

தட்டி கொள்ள‌

மிளகு = அரைதேக்கரண்டி
சீரகம் = அரை தேக்கரண்டி
பூண்டு = முன்று பல்
பச்ச மிளகாய் = ஒன்று
கருவேப்பிலை = சிறிது

தாளிக்க‌

எண்ணை = ஒரு தேக்கரண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
பெருங்காய‌ப்பொடி = ஒரு சிட்டிக்கை
உளுத்த‌ம் ப‌ருப்பு = கால் தேக்க‌ர‌ண்டி

கொத்து ம‌ல்லி கீரை = சிறிது க‌டைசியில் தூவ‌

ஊட்டி ஆப்பிலை இர‌ண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் ஊற்றி குக்க‌ரில் இர‌ண்டு விசில் விட்டு வேக‌ விட்டு இர‌க்க‌வும்.

அப்ப‌டியே ந‌ல்ல‌ ம‌சுமையாக‌ வெந்து விடும், புளியை ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் க‌ரைத்து கொள்ள‌வும்.த‌ட்டி கொள்ள‌ வேண்டிய‌ பொருட்க‌ளை மொத்த‌மாக‌ முத‌லில் மிள‌கு சீர‌க‌த்தை இடித்து அத்துட‌ன் ப‌ச்ச‌மிள‌காய்,பூண்டு க‌ருவேப்பிலையை சேர்த்து த‌ட்டிகொள்ள‌வும்.

தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து த‌ட்டிய‌ பொருள்க‌ளை சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்கி பிள‌ம்ஸ் வெந்த‌ த‌ண்ணீர் + புளி க‌ரைச‌லை சேர்த்து உப்பு சேர்த்து நுரைத்த‌தும் இர‌க்க‌வும்.
தேவைப‌ட்டால் சிறிது நெய் சேர்ர்த்து கொள்ள‌லாம்.


சுவையான சத்தான பிளம்ஸ் ரசம் ரெடி.

Sunday, October 11, 2009

கொள்ளு ரசம் - horse gram rasam - deit



//இது கொள்ளு ரசப்பொடியில் செய்தது, கொள்ளு சட்னிக்கு கொள்ளு வேகவைக்கும் போது அந்த தண்ணீரில் செய்தது. கொள்ளு உடல் எடையை குறைக்கும் ஆனால் கொள்ளு சூடு . எப்பவாவது என்றால் பரவாயில்லை அடிக்கடி கொள்ளு சேர்த்து சமைத்து சாப்பிடுபவர்கள். அதற்கேற்றார் போல் பொருட்களை சேர்த்து செய்து கூட கூலானா ஜூஸ் (அ) மோர் குடித்து கொள்வது நல்லது.//

தேவையான‌ பொருட்க‌ள்

கொள்ளு வேக வைத்த தண்ணீர் = ஒரு ட‌ம்ள‌ர்
கொண்டைகடலை வேகவைத்த தண்ணீரி = ஒரு ட‌ம்ள‌ர்
புளி = ஒன்ன‌றை எலுமிச்சை அள‌வு (க‌ரைத்த‌து ஒரு டம்ளர்)
கொள்ளு சேர்த்து திரித்த ரசப்பொடி = இரண்டரை தேக்கரண்டி

தாளிக்க

எண்ணை = ஒரு தேக்கரண்டி
நெய் (அ) பட்டர் = ஒரு தேக்கரண்டி
கடுகு = ஒரு தேக்கரண்டி
வெந்தயம் = ஐந்து
க‌ருவேப்பிலை = இர‌ண்டு ஆர்க்
கொத்து ம‌ல்லி = கால் கை பிடி
பூண்டு = நான்கு பல்
சாம்பார்பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
த‌னியா தூள் = கால் தேக்க‌ர‌ண்டி




செய்முறை

1.கொள்ளு வேக‌வைத்து வ‌டித்த‌ த‌ண்ணீர், கொண்டைக‌ட‌லை வேக‌ வைத்து வ‌டித்த‌ த‌ண்ணீர், புளி க‌ரைத்த‌ த‌ண்ணீர் முன்றையும் ஒன்றாக‌ க‌ல‌ந்த்து அதில் உப்பு , இர‌ண்டு தேக்க‌ர‌ண்டி ர‌ச‌ப்பொடி, இர‌ண்டு ப‌ல் பூண்டு த‌ட்டி போட்டு, சிறிது க‌ருவேப்பிலை, சிறிது கொத்தும‌ல்லி சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.

2. த‌னியாக‌ ச‌ட்டியில் எண்ணை +நெய்யை சூடாக்கி க‌டுகு, வெந்த‌ய‌ம், பூண்டு, க‌ருவேப்பிலை, சாம்பார் பொடி மீத‌ம் உள்ள‌ ர‌ச‌ப்பொடி, பெருங்காய‌ப்பொடி சேர்த்து க‌ருகாம‌ல் தாளித்து கொதித்து வைத்துள்ள‌ ர‌ச‌த்தில் சேர்க்க‌வும்

குறிப்பு

இது பூரி சென்னாவிற்காக‌ வேக‌ வைத்த‌தால் அந்த‌ த‌ண்ணீரை வேஸ்ட் செய்யாமல் இதில் சேர்த்தேன், நீங்க‌ள் செய்யும் போது இல்லை என்றால் வெரும் கொள்ளு த‌ண்ணீரும் புளி த‌ண்ணீருமே போதுமான‌து, தேவைப்ப‌ட்டால் த‌க்க்காளி ஒன்று பிசைந்து விட்டு கொதிக்க‌ விட்டுகொள்ள‌லாம்.

Saturday, June 20, 2009

கொத்து மல்லி கருவேப்பிலை ரசம்






//உணவு உண்ட பின் செரிமானத்துக்கு ரசம் ஒரு அருமையான உணவு, இதில் ரசத்தில் தாளிக்கும் கருவேப்பிலை மற்றும் கடைசியாக மேலே தூவும் கொத்து மல்லி புதினா கொண்டு தயாரிக்கும் விதம்.
கொத்தும‌ல்லி கீரை ந‌ம‌து உட‌லில் ர‌த்த‌தை சுத்த‌ப்ப‌டுத்துகிற‌து, கர்பிணி பெண்களின் வாய்க்கு ருசி ப‌டும், க‌ருவேப்பிலையை (முடி வ‌ள‌ர , முடி கொட்டும்பிரச்சனைக்கு) தேங்காய் எண்ணை (அ) ந‌ல்லெண்ணையில் காய‌வைத்து பொடித்து த‌லைக்கு தேய்பார்க‌ள், அதை உண‌வாக‌ உட்கொள்வ‌த‌ன் கூடுதல் பலன் .கிடைக்கும்.
ஜுர‌ம் வ‌ந்து வாய் க‌ச‌ப்பாக‌ இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு செய்து கொடுத்தால் வாய்க்கு ருசி ப‌டும். க‌ல்யாண‌ விட்டில் பிரியாணி சாப்பிட்டு இரவு வெரும் ர‌ச‌ம் சாதம், மாசி தொட்டு கூட சாப்பிட‌லாம். //


தேவையான‌ பொருட்க‌ள்
****************************
புளி = ஒரு சிறிய‌ ஒன்ன‌றை எலுமிச்சை அளவு
உப்பு = ருசிக்கு
ரசப்பொடி = ஒரு தேக்க‌ர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி

அரைத்து கொள்ள‌
***************** *
ந‌ன்கு ப‌ழுத்த‌ த‌க்காளி = ஒன்று
கொத்தும‌ல்லி = ஒரு கைப்பிடி
க‌ருவேப்பிலை = ஒரு கைப்பிடி
மிள‌கு = ஒரு தேக்க‌ர‌ண்டி
ப‌ச்ச‌ மிள‌காய் = ஒன்று
பூண்டு = நான்கு ப‌ல்
சீர‌க‌ம் = ஒரு தேக்க‌ர‌ண்டி
தாளிக்க‌
எண்ணை = ஒரு தேக்க‌ர‌ண்டி
நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
க‌டுகு = அரை தேக்க‌ர‌ண்டி
வெந்தயம் = 5 எண்ணிக்கை
பெருங்காய‌ம் = ஒரு சிட்டிக்கை
க‌ருவேப்பிலை = 5 இதழ்
கொத்து ம‌ல்லி சிறிது


செய்முறை


1.புளியை க‌ழுவி சுடுத‌ண்ணீரில் க‌ரைத்து முன்று ட‌ம்ள‌ர் அள‌விற்கு வைக்க‌வும்.


2. கொத்தும‌ல்லி, க‌ருவேப்பிலையை ஆய்ந்து ம‌ண்ணில்லாம‌ல் க‌ழுவி த‌ண்ணீரை வ‌டிக்க‌வும்.


3. இப்போது அரைக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை முத‌லில் மிள‌கு சீர‌க‌த்தை அரைத்து கொண்டு அத்துட‌ன் த‌க்காளி, பூண்டு, கொத்தும‌ல்லி, ப‌ச்ச‌மிள‌காய், க‌ருவேப்பிலை ஆகிய‌வ‌ற்றை சேர்த்து அரைத்து (அரைத்த‌து + மிக்சியில் இருந்து வ‌ழித்தெடுத்த‌து) இர‌ண்டு ட‌ம்ள‌ர் அள‌வு.


4. இப்போது க‌ரைத்து வைத்திருக்கும் புளி த‌ண்ணீருட‌ன் அரைத்த‌ க‌ல‌வை, ர‌ச‌ப்பொடி, உப்பு,ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.


5. இப்போது தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை க‌ரிகாம‌ல் தாளித்து கொதித்து வைத்திருக்கும் க‌ல‌வையில் ஊற்றி கொத்தும‌ல்லி த‌ழை தூவி இர‌க்க‌வும்.


6. க‌ம‌ க‌ம‌ன்னு கொதிக்கும் போது உங்க‌ள் ர‌ச‌ம் வாசனை எட்டு வீட்டு மூக்கை துளைக்கும்.


குறிப்பு
ர‌சத்தை ப‌ல‌வ‌கையாக‌‌ வைக்க‌லாம். த‌க்காளி ர‌ச‌ம், அரைத்து விட்ட‌ ர‌ச‌ம்,தேங்காய் பால் ர‌ச‌ம், எலுமிச்சை ர‌ச‌ம், அன்னாச்சி ப‌ழ‌ ர‌சம்.
வாங்கும் ஊட்டி புளிப்பா போச்சா க‌வ‌லை வேண்டாம் அதிலும் ர‌ச‌ம் த‌யாரிக்க‌லாம்.இதில் ஒரு சிறிய‌ பிட்டு வெல்ல‌ம் போட்டாலும் ந‌ல்ல‌ இருக்கும்.
இது சுமார் ஆறு பேர் சாப்பிட‌லாம்

Tuesday, March 3, 2009

இஞ்சி ரசம்








புளி - ஒரு லெமென் சைஸ்
தக்காளி - ஒன்று

அரைத்து கொள்ள
------------ -----------

இஞ்சி இரண்டு அங்குல துண்டு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முழு தனியா - ஒரு மேசை கரண்டி
காஞ்ச மிளகாய் - இரண்டு
கொத்து மல்லி தழை - கால் கை பிடி அளவு
கருவேப்பிலை - கால் கை பிடி அளவு
தாளிக்க
********

நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை அளவு


செய் முறை
********* *****

1. புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியை போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
2.அரைக்க கொடுத்துள்ளவைகளை (வதக்க வேண்டாம்) அரைத்து கொள்ளவும்.
3. தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, அரைத்தது சேர்த்து மேலும் இரண்டு
கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
4. கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.
5. சுவையான கம கம இஞ்சி ரசம் ரெடி.





குறிப்பு

பூண்டு தேவை படுபவர்கள் இரண்டு பற்கள் சேர்த்து கொள்ளலாம்.
சளி தொந்தரவிற்கு மிகவும் நல்லது குளி காலங்களில் அடிக்கடி செய்து சாப்பிடலம்.
வீசிங் பிராப்ளம் உள்லவர்கலுக்கும் நல்லது.
சில குழந்தைகளுக்கு சளி இருமல் இருக்கும் போது இஞ்சி சாறு கொடுக்க முடியாது அதற்கு இப்படி ரசம் செய்து சாத்த்தில் பிசைந்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரம் சிறிது குறைத்து கொள்ளலாம். காரம் அதிகம் சாப்பிடுபவர்கள். கூட்டி கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்கவும் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
இது பிள்ளை பெற்றவர்களுக்கும் ரொம்ப நல்லது.

ஜலீலா

தேங்காய் பால் ரசம்

ஒன்றாக கலக்கி கொள்ள

******************

தேங்காய் பால் - இரண்டு கப்

புளி - சிறிதளவு

தக்காளி - ஒன்று



ஒன்றும் பாதியுமாய் தட்டி கொள்ள

***************************

மிளகு - அரை தேக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

சோம்பு - அரை தேக்கரண்டி

பச்சமிளகாய் - ஒன்று

பூண்டு - முன்று பற்கள்

கருவேப்பிலை - கால் கை பிடி

கொத்து மல்லி தழை - கால் கைபிடி



1. தக்காளியை நன்கு பிசைந்து அதில் புளி தண்ணீர் மற்றும் தேங்காய் பாலை சேர்த்து கொள்ளவும்.



2. கொர கொரப்பாக தட வேண்டிய பொருட்களை தட்டி கொள்ள வேன்டும்.



3. சட்டியை காயவைத்து அதில் எண்ணை ஒரு தேக்கரண்டி ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காஞ்சமிளகாய் தாளித்து பொருங்காய பொடியும் சேர்த்து லேசாக தட்டி வைத்துள்ளதை சேர்த்து வதக்கி, கரைத்து வைத்துள்ல முன்று கலவையையும் சேர்த்து உப்பு சேர்த்து தீயை மிதமாக வைக்கவும்.



4. லேசாக நுரைத்து வரும் போது இரக்கிவிடவும்.



குறிப்பு

********



இதில் முதலே கூட தட்டிய மசாலாக்களை (புளி, தேங்காய், தக்காளி ) கலவையில் சேர்த்து கொள்ளலாம்.

இது வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்களுக்கு ரொம்ப நல்லது.



ஜலீலா