Friday, May 21, 2010

தக்காளி பருப்பு ரசம் - tomato dal rasam




தேவையான‌வை




புளி = நெல்லிக்காய் அளவு
தக்காளி = இரண்டு
துவரம் பருப்பு வெந்ததது = கால் கப்
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு


ஹொம் மேட் ரசப்பொடி(அ) ரெடி மேட் ரசப்பொடி = இரண்டு தேக்கரண்டி

தாளிக்க‌


நெய் = ஒரு தேக்க‌ர‌ண்டி
எண்ணை = அரை தேக்கர‌ண்டி
க‌டுகு = ஒரு தேக்க‌ர‌ண்டி
பெருங்காய‌ப்பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
க‌ருவேப்பிலை = இர‌ண்டு ஆர்க்
பூண்டு = இர‌ண்டு ப‌ல்
கொத்து ம‌ல்லி த‌ழை = சிறிது


செய்முறை



1. ஒன்னறை தக்காளியை கைகளால் பிசைந்து அத்துடன் புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து மஞ்சள் தூள், உப்பு தூள், ரசப்பொடி, அரை பழத்தை அப்படியே முழுசாக சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.

2. பிறகு வெந்து வைத்துள்ள பருப்பை நன்கு மசித்து சேர்த்து தேவைக்கு மேலும் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு இரக்கவும்.



3.கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள்வைகளை தாளித்து சேர்த்து கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.




4. ரொம்ப அருமையாக நெய் மனத்துடன் அப்படியே ஊற்றி குடிக்கலாம் போல இருக்கும்.
குறிப்பு:
இதில் தக்காளி பழத்தை ரசத்தில் இருந்து எடுத்து சாப்பிடுபவர்கள், முழு தக்காளி பழத்தை கூட நாலாக அரிந்து சேர்த்து கொதிக்க வைக்கலாம்.
தக்காளி பழம் வெந்து எடுத்து சாப்பிட நல்ல இருக்கும்.

40 கருத்துகள்:

எல் கே said...

//ஒன்னறை தக்காளியை கைகளால் பிசைந்து அத்துடன்//
அப்ப மீதம் இருக்கற அரை தக்காளி ????

நல்ல இருக்குங்க உங்க ரசம். வீட்ல அடிக்கடி பண்றது இது

ஸாதிகா said...

வாவ்..இந்த ரசத்தை அப்படியே சூப் மாதிரியும் குடிக்கலாம்.சுவையோ சுவை.

Jayanthy Kumaran said...

Hy,
First time here...lovely space you have...Am your new follower now..:)
Do drop in at my space sometime.

Ananya Mahadevan said...

சேம் புரொசீஜர் தான். பட் வித்தவுட் பூண்டு. புளித்தண்ணி கொதிக்கும்போதே கட்டிப்பெருங்காயம் போட்டுடுவேன். கம கமன்னு வாசனையா கொதிக்கும். மத்தபடி அதே ப்ராஸஸ் தான்! எங்க மன்னி ரசத்துக்கு தாளிக்கும்போது ரெண்டு வெந்தியம் போடுவாங்க..பில்டிங்கே தாளித கம கம வாசனை வரும்!

athira said...

ஜல்..ஜல்.. ஜலீலாக்கா.. உங்கள் தலைப்பைப்போலவே அட்டகாசமாகவே இருக்கு உங்கள் குறிப்புக்கள்.. நல்ல ரசம்.

Ananya Mahadevan said...

ஜலீலா அக்கா,
Are u forgetting something?
கொத்தமல்லித்தழை நறுக்கி கார்னிஷ் பண்ணணுமே!

பனித்துளி சங்கர் said...

ஒவ்வொரு பதிவிலும் ஒரு புதுமை . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

Nithu Bala said...

Engha varaikum varuthu rasam vasanai..

ஜெய்லானி said...

சூடா ஒரு கிளாஸ் அப்படியே குடிக்கலாம் .

பருப்பை பவுடராக்கி அப்படியே போட்டால் வேலை மிச்சம்.

கால் தக்காளியை என்ன செய்ய குழந்தை கையில குடுத்திடலாமா ?

GEETHA ACHAL said...

அருமையான தக்காளி பருப்பு ர்சம்...இதனை தான் அடிக்கடி வீட்டில் செய்வது...அக்ஷ்தா குட்டிக்கு மிகவும் பிடித்த ரசம்...

Chitra said...

அக்கா, மண மணக்குது ........ கம கமக்குது..... சூப்பர்!

Angel said...

jaleela neengal niraya recipe tharugireergal , thank you very much,enakku chicken salna recipe podugirergala. pala varudam munbu
vaniyambadyil sappiten ,dosayudan sema taste.mmmmmmmm

நட்புடன் ஜமால் said...

பருப்பு ரசம் தெரியும்

தக்காளி பருப்பு ரசம் தெரிஞ்சிகிட்டாச்சி

Prema said...

My daughter's favourite,i use to prepare twice in a week.loved ur version too.yummy recipe.

CINEMA GALLARY said...

ஸ்ருதி ஹாசன் ஹாட் - Sruthi Hasan Hot

http://cinema-gallary.blogspot.com/2010/05/sruthi-hasan-hot.html

Jaleela Kamal said...

எல்.கே மீதி அரை தக்காளிய முழுசா அப்படியே போட்டு கொதிக்க விடனும். ஒரு லைன் மறந்துட்டேன் சொல்ல., இது முன்பு போட்டு வைத்து இருந்த குறீப்பு. அப்படியே பப்லிஷ் பண்ணி விட்டேன்.

நாம் வாரத்தில் நான்கு தடவை ரசம் ஏதாவது மாற்றிமாற்றி செய்வேன். இது எல்லோரும் பிடித்த ரசம்.

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா ஊற்றி குடிக்கலாம். வெரும் பீன்ஸ் பொரியலுடன் குழைவா ஊற்றி சாப்பிட ரொம்ப நல்ல இருக்கும்.

சுவையோ சுவை தான்

Jaleela Kamal said...

ஜெய் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி/
நேரம் கிடைக்கும் போது வருகிறேன்.

Jaleela Kamal said...

அதிரா நலமா? தவறாமல் ஜலீலா அக்கா பகக்ம் வந்தமைக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

அநன்யா இத பார்த்ததும் இன்று வைத்த தக்காள் பருப்பு ரசத்தில் கொதிக்கும் போது பொருங்காயம் போட்டு இருக்கேன். மதியம் தான் சாப்பிட்டு பார்க்கனும்.
நானும் சில நேரம் தாளீக்கும் போது வெந்தயம் 5 போடுவேன்.
அல்ரெடி ரசப்பொடியிலும் வெந்தயம் சேர்த்து தான் திரித்து இருக்கேன்.

Jaleela Kamal said...

கொத்துமல்லி தழை எல்லாம் போட்டு தான் இருக்கேன்.
இது காலையிலேயே செய்தது, மதியம் தான் போட்டோ எடுத்தேன்.

Jaleela Kamal said...

பனித்துளீ சங்கர் உங்கள் தொடர் வருக்கும் கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

நீத்து அங்கு வரை வாசனை அடிக்கிறதா? உடனெ செய்து சாப்பிடுங்கள்.
வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஜெய்லானி டீவியில புது டிப்ஸா பருப்ப பவுடராக்கி போடுவது.

ரசத்துக்குன்னு தனியா எல்லாம் பருப்பு வேகவைப்பது கிடையாது.
சாம்பார், தண்ணி பருப்பு, கட்டி பருப்பு வைக்கும் போதே கொஞ்சம் எடுத்து வைத்துடுவோம்.

தக்காளி எல் .கே விற்கு பதில் சொல்லி இருக்கேன் அதை பார்த்து கொள்ளவும்.

Jaleela Kamal said...

கீதா என் சின்ன பையனுக்கு ஹோட்டல் சாம்பார், ரசம் கூட பிடிக்காது, நான் செய்யும் சாம்பார் ரசம் தான் பிடிக்கும்.

தொடர் வருகைக்கும் கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி சித்ரா

Jaleela Kamal said...

ஏஞ்சலில் கண்டிப்பாக போடுகிறேன்,
நேரமில்லாததால் குறீப்புகள் அவ்வளவா போட முடியல.
முடிந்த போது போட்டு விடுகிறேன்.ஆ தோசையுடனா சூப்பரா இருக்கும்.

Jaleela Kamal said...

சகோ.ஜமால். வாங்க , இப்ப தெரிந்து கொண்டீர்களா தங்கஸ் கிட்ட சொல்லிடுங்கோ.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//பருப்பை பவுடராக்கி அப்படியே போட்டால் வேலை மிச்சம்.
//ஜெய்லானி உங்கள் வீட்டம்மா இப்படித்தான் ரசம் வைத்து தருவார்களா?ஈசியான டிப்ஸை "நச்"என்று வந்து சொல்லிவிட்டீர்களே...ஹாஹா..

Asiya Omar said...

தக்காளி பருப்பு ரசம் ஈசியாக இருக்கு.

நாஸியா said...

Super rasam!

Menaga Sathia said...

மிகவும் பிடித்த ரசம் இது..சூப்பர்ர்ர் அப்படியே சூப் மாதிரி குடிக்கலாம்..

Chitra said...

Looks yummy.i wish to have it with a bowl of rice :)

Jaleela Kamal said...

ஆசியா , நாஸியா, மேனகா, சித்ரா உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி

மனோ சாமிநாதன் said...

தக்காளி பருப்பு ரசம் அருமை, ஜலீலா!

Unknown said...

எத்தனை வகை குழம்புகள் இருந்தாலும் ,ரசம் இல்லையெனில் அது சுவை ஆகுமா?

Priya Suresh said...

Wat a comforting food, rasatha appadiye yeduthu kudikalam, avalo superaa irruku..

Jaleela Kamal said...

மனோ அக்கா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி,

இளம் துயவன் ஆமாம் நல்ல செரிமானம் ரசம் அப்பளம் இருந்தால் போதும் . அருமை தான், நன்றி

பிரியா வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

prethika said...

best rasam to go with rice ...looks delicious

Jaleela Kamal said...

ப்ரித்திகா வருகைக்கு மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா