Sunday, July 31, 2011

பேபி கார்ன் பஜ்ஜி - Baby corn bajji

பேபி கார்ன் பஜ்ஜி


குழ‌ந்தைக‌ளுக்கு ரொம்ப‌ பிடித்த‌து, ச‌த்தும் அதிகம் இதை செய்யும் போது முழுவ‌து க‌ட‌லைமாவில் முக்கி பொரிக்காம‌ல் லேசாக‌ கார்ன் வெளியில் தெரிவ‌து போல் செய்தால் பிள்ளைக‌ளுக்கு ரொம்ப‌ பிடிக்கும்.

தேவையான‌ பொருட்க‌ள்

பேபிகார்ன் = ஆறு
க‌ட‌லை மாவு = முன்று மேசை க‌ர‌ண்டி
கார்ன் மாவு = ஒரு தேக்கர‌ண்டி
பொட்டு க‌ட‌லை பொடி = ஒரு தேக்க‌ர‌ண்டி
உப்பு = ருசிக்கு தேவையான‌ அள‌வு (கால் தேக்க‌ரண்டி)
பெப்ப‌ர் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
ரெடி க‌ல‌ர் பொடி = கால் தேக்க‌ர‌ண்டி
பேக்கிங் ப‌வுட‌ர் = கால் தேக்க‌ர‌ண்டி
எண்ணை + ப‌ட்ட‌ர் = பொரிக்க‌ தேவையான‌ அள‌வு

செய்முறை

1.பேபி கார்னை ந‌ன்கு க‌ழுவி நீள‌வாக்கில் இர‌ண்டாக‌ க‌ட் ப‌ண்ணி கொள்ள‌வும்.

2.க‌ட‌லைமாவு, கார்ன் மாவு, பொட்டுக‌ட‌லை பொடியை ம‌ற்றும் உப்பு, பெப்ப‌ர் பொடி, பேக்கிங் ப‌வுட‌ர் அனைத்தையும் ப‌ஜ்ஜிமாவு ப‌த‌த்திற்கு க‌ரைத்து கொள்ள‌வும்.3. பட்டர் + எண்ணையை காயவைத்து தீயின் அளவை மீடியமாக வைத்து கரைத்த கலவையில் கார்னை தோய்த்து பொரித்து எடுக்கவும்.

4.. சுவையான குழந்தைகளுக்கு பிடித்த கார்ன் பஜ்ஜி ரெடி டொமேட்டோ கெட்சப்புடன் சாப்பிட கொடுக்கவும், எல்லா கார்னும் நிமிஷத்தில் பறந்து விடும்


I sending this recipe to Reva's Corn for dinner event.

ரமலானில் செயல் படுத்த வேண்டிய திட்டங்கள். கொஞ்சம் இதையும் போய் பாருங்களேன்.

ரமலானில் ஓதவேண்டிய முக்கியமான துஆக்கள்

Saturday, July 30, 2011

ஸ்வீட் கார்ன் சிக்க‌ன் சூப் - sweet corn chicken soup


//ஹோட்டல்களில் சென்றுதான் ஸ்விட் கார்ன் சிக்கன் சூப் குடிக்கனுமா, ஏன் நாமே செய்யலாமே இதை செய்து நீங்கள் பழகிவிட்டால் ஹோட்டலில் குடிக்கும் சூப் உங்களுக்கு பிடிக்காது. வீட்டிலேயே செய்ய‌ க‌த்து கொண்டால் பார்டிக‌ளில் அச‌த்த‌லாம்.
நோன்பு காலங்களில் தினம் கஞ்சி குடிப்பதற்கு பதில் இதை செய்து குடிக்கலாம். குளிர் காலங்களில் அடிக்கடி சளி பிடிக்கும் அதற்கும் இது ரொம்ப நல்லது.//தேவையான பொருட்கள்

சிக்கன் = நான்கு பெரிய துண்டு எலும்புடன்
மேகி சிக்கன் கியுப் ‍= ஒன்றில் பாதி
கீரீம் ஆஃப் சிக்கன் சூப் பவுடர் = ஒரு பாக்கெட்
கீரீம் ஆஃப் ஸ்வீட் கார்ன் - ஒரு டின்
பட்டர் ‍ ஒரு = மேசைக்கரண்டி
கார்ன் பிளார் பவுடர் ‍ ஒரு குழி கரண்டி
உப்பு - தேவைக்கு
சோயா சாஸ் ‍= ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் ‍ = ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் ‍= ஒரு தேக்கரண்டி
முட்டை = ஒன்று

செய்முறை


1. முதலில் சிக்கனில் மேகி கியுப்,உப்பு ஒரு தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ் சிறிது, போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
2. வெந்ததும் வடிகட்டி சிக்கன் துண்டுகளை எலும்பில்லாமல் பிரித்தெடுக்கவும். சிக்கன் வடிகட்டிய தண்ணீரை கொதிக்க விடவும்.
3. தனியாக சிக்கன் சூப் பாக்கெட்டை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொதித்துக்கொண்டிருக்கும் சிக்க்ன் தண்ணீரில் ஊற்றவும்.
4. பிறகு கார்ன் டின்னை ஊற்றவும்.
5. பிறகு பிரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை உதிர்த்து போட்டு மீண்டும் கொதிக்கவிடவும்.
6. பிறகு கார்ன் பிளார் மாவை கால் டம்ளர் கரைத்து ஊற்றவும்.
7. கடைசியில் ஒரு முட்டையை நுரை பொங்க அடித்து ஒரு கையால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொண்டே கிளறவும். கிளறி அடுப்பை அனைக்கவும்.
8. பிறகு உப்பு , ஒரு தேக்கரண்டி பெப்பர் தூள்,ஒரு டிராப் சோயாசாஸ் , ஒரு மேசைகரண்டி பட்டர் ஊற்றி இரக்கவும்
குறிப்பு:


இதற்கு கட்லட் சூப்பர் காம்பினேஷன். மற்றபடி சிக்கன் பஜ்ஜி, பகோடா,பஜ்ஜி, வடை, சிக்கன் போன்டா வும் செய்யலாம் ரொம்ப கட்டியாகி விட்டால் பார்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பார்டிகளுக்கு செய்யலாம். நோன்பு காலங்களில் தினம் கஞ்சி குடிப்பதற்கு பதில் இதை செய்து குடிக்கலாம்.லைட்டாகவும் ஹெல்தியாகவும் இருக்கும். குளிர் காலங்களில் அடிக்கடி சளி பிடிக்கும் அதற்கும் இது ரொம்ப நல்லது.இதை வீட்டில் உள்ள‌ பொருட்க‌ளை வைத்து எளிதாக‌ வேறு முறையில் த‌யாரிக்க‌லாம்.ரூ ஆப்ஷா கடல் பாசி Rooapsha agar agar

மசாலா சாய் Masala chay

ரோஸ் மில்க் |Rose milk

கேரட் ஜூஸ் Carrot juice

சிக்கன் ஸ்பிரிங் ரோல் Chicken Spring Roll

ஸ்பினாச் வடை Spinach Vadai

ஈத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி Eid Special Mutton Biriyani

சிக்கன் பிஸ்ஸா தோசை Chicken Pizza Dosai

I am sending all the recipe toUmm Mymoonah's Iftar moment event.


 Sweet corn chicken soup recipe  I am sending to reva's corn for dinner event.
பதிவுலக தோழ தோழியர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

புனித ரமளானே வருக - முத்தான துஆவுக்கு வாருங்கள்
நேரமின்மையால் பழைய பதிவுகள் தான் மீள் பதிவு முடிந்தால் புதுப்பதிவு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டிஸ்கி: நான் இவ்வளவு கழ்டபட்டு பதிவு போடுகிறேன் படிச்சிட்டு கண்டுக்காம போன எப்பூடி என் பதிவுகள் கண்டிப்பாக எல்லோருக்கும் பயனுள்ளது தான் நிறைய பேர் முக்கு சந்தில் கடை போட்டுள்ளது தெரியும். ஒரு வார்த்தை பின்னூட்டம் இடலாமே, இல்லை ஓட்டாவது போடலாமே.

Tuesday, July 26, 2011

ஃப்ரவுன் அரிசி இட்லி , சிவப்பு மிளகாய் சட்னி - brown rice idly with red chilly chutney(உலகத்திலேயே உள்ள உணவு வகைகளில் லைட்டான ஆகாரம்இட்லி தான் எந்த உபாதையும் செய்யாது, எண்ணையில்லாத அயிட்டம், எல்லாவகையான் சட்னி வகைகளும், குழம்பு வகைகளும் இதுக்கு பொருந்தும்.)
ப்ரவுன் அரிசியில் செய்துள்ளதால் இன்னும் சத்துப்ரவுன் இட்லிக்கு

ப்ரவுன் ரைஸ் – 200 கிராம்
பச்சரிசி – 200 கிராம்
உளுந்து – 100 கிராம்
ஜவ்வரிசி – ஒரு மேசை கரண்டி
வெந்தயம் – அரை தேக்கரண்டி

செய்முறை
இரண்டு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து , உளுந்துடன் வெந்தயம் சேர்த்து தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
அரிசியை சற்று கொர கொரப்பாகவும்.உளுந்தை மையாகவும் அரைத்து ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு க்லவையை கலக்கி வைக்க்வும்.
8 மணி நேரம் புளிக்கவிடவும்/
பிறகு இட்லியாக வார்க்கவும்.சிவப்பு மிளகாய் ,பொட்டு கடலை சட்னி

சிவப்பு மிளகாய் – 3
பொட்டு கடலை 50 கிராம்
தேங்காய் – 4 பத்தை
உப்பு சிறிது
பூண்டு – ஒரு பல்
வெங்கயாம் – அரை தேவைப்பட்டால்
தாளிக்க
எண்ணை – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -  அரை தேக்கரண்டி
கருவேப்பிலை – ஆறு இதழ்
நீட்டு மிளகாய் – ஒன்று

செய்முறை
சிவப்பு ( காஞ்ச மிளகாயை) லேசாக தீயில் சுட்டு கொள்ளவும்
அத்துடன் தேங்காய் பொட்டுகடலை சேர்த்து அரைக்கவும்.
கடைசியாக உப்பு, பூண்டு வெங்காயம் சேர்த்து அரைத்து வழிக்கவும்.
வழித்த மிக்சியில்  அரை கப் தண்ணீர் விட்டு கழுவிவைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கழுவி வைத்துள்ள தண்ணீரை ஊற்றி அடுப்பை அனைக்கவும்.
கட்டியாக அரைத்து வைத்துள்ள கலவையில் தாளித்த கலவையை ஊற்றி கலக்கி வைக்கவும்.

டிபன் பாக்ஸ்க்கு கொண்டு செல்ல இட்லியை நான்காக வெட்டி அதில் நல்ல இட்லி முழ்கும் அளவுக்கு சட்னியை ஊற்றவும், சாப்பிடும் போது சட்னி இட்லியில்  ஊறி அருமையாக இருக்கும்.

b

Friday, July 22, 2011

சிக்கன் பிஸ்ஸா தோசை - chicken pizza dosai


இது முழுக்க முழுக்க என் முயற்சி,இப்ப குட்டிசுக்கு பிட்சா என்றால் முன்று வேளைக்கும் செய்து கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். ஓவன் இல்லாதவர்கள், பிரட் பண்ணில், தோசைமாவில் பிட்சாவாக சைவம் மற்றும் அசைவ முறையில் தயாரிக்கலாம்.
காய்கறிகளை வைத்தும் இதே போல் பல வகையாக பிஸ்ஸா தோசை செய்யலாம். இந்த முறையில் செய்வது ஆரோக்கியமும் கூட குழந்தைகள் சாப்பிடாத காயகறிகளை இப்படி பிஸ்ஸா தோசையாக்கிசாப்பிட வைத்துடலாம்.

தேவையான பொருட்கள்

தோசை மாவு - முன்று குழிகரண்டி

சிக்கன் போன்லெஸ் - 100 கிராம்
(மிளகுதூள் - அரை தேக்கரண்டி,இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை தேக்கரண்டி,உப்பு)

ஆலிவ் காய் கருப்பு மற்றும் பச்சை - 12
துருவிய சீஸ் - முன்று சூப் ஸ்பூன் முழுவதும்


பிஸ்ஸா சாஸ் (அ) கெட்சப் - தேவைக்குசெய்முறை

சிக்கனை பொடியாக அரிந்து சிறிது உப்பு ,இஞ்சி பூண்டு பேஸ்ட்,மிளகு தூள் சேர்த்து வேகவைத்து உதிர்த்து கொள்ளவும்.
முதலில் தவ்வாவை காயவைத்து சிறிது எண்ணை ஊற்றி வெங்காயத்தை பாதியா அரிந்து நன்கு தேய்க்கவும். (அப்பதான் ஒட்டாமவரும்).

ஒரு பெரிய குழி கரண்டி அளவு தோசைமாவை சிறிது தடிமனாக ஊற்றவும்.

பாதி வேகும் போது பிட்சா சாஸை தோசை முழுவதும் தேய்த்து சிக்கன் ஆலிவ் காயை பரவலாக தூவி மேலே சீஸை தூவி விடவும்.
சிறிது பட்டர் அங்காங்கே தெளித்து விடவும்.முடி போட்டு 2 நிமிடம் விட்டு தோசையை எடுக்கவும்.
சூப்பரான சுவையான சிக்கன் பிட்சா தோசை ரெடி.


பரிமாறும் அளவு: ஒரு நபருக்கு
முன்று பிட்சா தோசை வரும்.

டிஸ்கி: பார்த்துட்டு சும்மா போகக்கூடாது உங்கள் பொன்னா கமெண்டுகளை சொல்லிட்டு போங்க...