Monday, June 29, 2009

கேரட் ஜூஸ் ‍ குழ‌ந்தைக‌ளுக்கு







<
தேவையான‌ பொருட்க‌ள்




கேரட் = ஒன்று
பால் = ஒரு டம்ளர்
தண்ணீர் = ஒரு டம்ளர்
சர்க்கரை = ஒரு மேசை கரண்டி (அ) தேன்


செய்முறை




கேரட்டை தோலை நீக்கி பூந்துருவலாக துருவவும்.துருவலை மிக்சியில் போட்டு பால் பாதி தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.

அரைத்ததை வடிக்கவும், மறூபடி மிக்சியில் போட்டு மீதி தண்ணீரை ஊற்றி அரைத்து வடிக்கவும்.
குழந்தைகளுக்கு கொடுக்கவும்.



குறிப்பு:



குழந்தைக‌ளுக்கு இதை ஆறு மாத‌த்திலிருந்து கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ கொடுத்து ப‌ழ‌க்க‌வும்.

முத‌லில் வெரும் ஆறிய‌ வெண்ணீரில் செய்து கொடுக்க‌வும்.
இதனுடன் ஆப்பிள் ஒரு துண்டு சேர்த்து அரைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.


பிற‌கு எந்த‌ பார்முலா மில்க் ஆர‌ம்பிக்கிறீர்க‌ளோ அதில் கொடுக்க‌வும்.
பெரிய குழந்தைகள் என்றால் ஐஸ் கியுப்ஸ் போட்டு கொடுக்கலாம்.
நல்ல ஒரு எனர்ஜி பானம்.

கண்பார்வை கோளாறு உள்ளவர்கள் தினம் அருந்தலாம்.
க‌ர்பிணிபெண்க‌ள் தின‌ம் இதை குடிக்க‌லாம். குழ‌ந்தைக்கு ந‌ல்ல‌ க‌ல‌ர் கிடைக்கும்.
முக‌த்தில் அரைத்தும் தேய்க்க‌லாம். முக‌ம் ப‌ள‌ ப‌ள‌க்கும்.



6 கருத்துகள்:

Mrs.Menagasathia said...

பார்க்கவே எனக்கு இப்ப ஜூஸ் குடிக்கனும் போலயிருக்கு ஜலிலாக்கா.இப்ப செய்து குடிக்க போறேன்.

Jaleela said...

//பார்க்கவே எனக்கு இப்ப ஜூஸ் குடிக்கனும் போலயிருக்கு ஜலிலாக்கா.இப்ப செய்து குடிக்க போறேன்//

செய்து குடிங்க ரொம்ப சிம்பிள் நிமிஷத்தில் தயாரித்து விடலாம்.
இன்னைக்கும் எங்க வீட்டில் கேரட் ஜூஸ் தான்.

ஷிவானி குட்டிக்கும் கொடுங்கள். இன்னும் இதில் ஸ்வீண்ட் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்தால் சுவை அபாரமாக இருக்கும்.

ஷ‌ஃபிக்ஸ் said...

கேரட்டில் விட்டமின்கள் A, C, E, B6 and K நிறைய இருக்காம். விட்டமின்கள் A, C, & E சேர்ந்தது தான் Anti Oxidantனு சொல்லுவாங்க. இது நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறனை கூட்ட உதவுகிறது.

Jaleela said...

ஷபி உங்கள் தகவலுக்கு நன்றி, மேலே குறிப்பில் சேர்த்து விடுகிறேன்.

sha said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நேற்று நோன்பு திறக்க கேரட் ஜூஸ் தான் செய்தேன். வாவ் ரொம்ப ரொம்ப அருமை. குடிக்க குடிக்க திகட்டவில்லை. வேண்டும் வேண்டும் என்று தோன்றியது. வீட்டில் அணைவரும் கேரட் ஜூஸ் பிரியர்களாகிவிட்டோம்.

Zazak allah khair

Jaleela Kamal said...

வா அலைக்கும் அஸ்ஸ்லாம் ஷா பெயர் சரியா தெரியல போட்டு இருந்தால் சந்தோஷப்பட்டு இருப்பேன்.

கேரட் ஜூஸா ம்ம் வீட்டில் எல்லோரும் கேரட் ஜூஸ் பிரியர்களா? அப்ப எல்லோரும் கேரட் கலரில் மின்ன போறீங்க, இதில் ஆப்பில் சேர்த்து அடித்தாலும் சுவை அபாரமாக இருக்கும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா