இந்த சாலை பணியாளர்களை பாருங்கள் மனுசாட்கள் அவரவர் ஷேவிங் செய்கிறார்களோ இல்லையோ ரோட்டோரம் உள்ள செடிகளுக்கு இங்கு அடிக்கடி ஷேவிங் நடக்கும். அதுவும் விதவிதமா வடிவமைத்து வெட்டி விடுவார்கள்.
மற்ற பணியாளர், மரத்தில் காய்த்து கொண்டிருக்கும் டேட்ஸ் மரத்துக்கு காயை சுற்றி துணி சுற்றி கொண்டு இருக்கிறார். இல்லனா நம்மூர் மக்காஸ் மாங்காவ கல்லால அடிப்பது போல் அடித்தே அத்தனையும் ஒரு வழி பண்ணிடுவாங்களே...
சாலையை துப்புரவு செய்து கொண்டிருக்கிறார்.
//இதே போல் பலசரக்கு சாமான் களை கொண்டு தருபவர்கள், ஒரு போனடித்தால் வீட்டுக்கு சாமானகள் வந்துவிடும், அவர்களும் நாள் முழுவதும் சைக்கிளில் சாமான்களை வீடு வீடாக சளைக்காமல் கொண்டு கொடுக்கிறார்க்ள், ஆனால் இந்த வெயிலில் ரொம்ப வே சிரமம்.//
கட்டுமான பணியாளர் இவர்கள் பாடு தான் படு மோசம்.நாள் முழுவதும் வெயிலில் வேலை பார்க்கிறார்கள். இதில் ரொம்ப சின்சியரா உழைப்பவர்களும் இருக்கிறார்கள். பிரெண்ஸ் படத்தில் விஜெய், சூரியா, வடிவேலு எல்லாம் சேர்ந்து நடிக்கும் படத்தில் சூரியா சுவருக்கு நோகாமா சுரண்டி கொண்டு இருப்பாரே அது போல் ஓபி அடிபப்வர்கலும் உண்டு.
கட்டுமான பணியில் இருக்கும் இவர்கள் மொத்தமாக அல்குஸ் , கிஸேஸ் போன்ற இடத்தில் லேபர் கேம்பில் இடத்தில் தங்குவார்கள், ஊரில் உள்ள லாரியில் வந்து இரங்குவது போல் மொத்தமாக பிக்கப்பில் சைட்டுக்குஅழைத்து வந்துடுவார்கள். தங்குமிடம் ஃபிரி ஆனால் சாப்பாடு எப்படின்னு தெரியல. குருப் குரூப்பா சேர்ந்து மெஸ்ஸில் சேர்ந்தும் சாப்பிட்டு கொள்வார்கள்.
சாப்பாடு ஊரில் விவசாயிகள் தூக்கு டிபன் தூக்கி வருவது போல் எல்லாம் கொண்டு வருவார்கள் .
அதான் மதியத்துக்கு அது சில நேரம் இந்த வெயிலில் ஊசியும் போய்விடுமாம்.
தண்ணீர் தான் பாட்டில் பாட்டிலா பிடித்து கொண்டு போவார்கள், அதை குடித்து கொண்டு வெப்பம் தாங்க முடியாமல் அதை தலையிலும் ஊற்றி கொள்வார்கள்.
எல்லா சாலையிலும் கச்சாடா (குப்பை போட ) பெரிய வண்டி நிறுத்தி வைத்து இருப்பார்கள். அதை காலையில் அள்ளி கொண்டு போக வருவார்கள்.
முன்பெல்லாம் வந்த புதிதில் இரவில் வரும் அப்போது ஆம்புலன்ஸ் லைட் போல் மேலே சுற்றி கொண்டு இருக்கும்.
சத்தமும் பயங்கரமா இருக்கும். தூங்கிக்கொண்டு இருக்கும் போது இருட்டில் ஸ்கிரீன் மேலே அந்த வெளிச்சம் வரும் போது ரொம்ப பயமா இருக்கும், எனக்கு ஒரு குண்டூசிய யாராவது கீழே போட்டாலும் அந்த சத்ததில் எழுந்துடுவேன். மெதுவா எழுந்து ஸ்கிரீன் திறந்து பார்க்கவும் கொஞ்சம் பயம் தான் (பேயோன்னு), கடைசியில சே கச்சடா வண்டியா?அதிலிருந்து பயம் போயே போச்சு.
இவர்களுக்கெல்லாம் சம்பளம் மிகக்குறைவு. இன்னும் இது போல் ஏசியில் வேலை பார்க்காத பணியாளர்கள் நிறையவே உண்டு.
இன்னும் நிறைய போட்டோக்கள் வைத்து இருந்தேன், இப்போதைக்கு எடிட் செய்ய நேரமில்லை. இது வரை போட்டுள்ளேன்.
Tweet | ||||||
54 கருத்துகள்:
பாவமாத்தான் இருக்கு...
என்ன சொல்றதுன்னு தெரியலக்கா. =((
சாலைப்பணியாளர் பாடு ரொம்ப கஷ்டம்.. அதுவும் இந்த வருஷம் ரொம்ப வெயிலு..
ரொம்ப கஷ்டம்.நம்மால் என்ன செய்ய முடியும்.
பார்க்க பாவமாக இருக்கும்
தண்ணீர் தான் பாட்டில் பாட்டிலா பிடித்து கொண்டு போவார்கள், அதை குடித்து கொண்டு வெப்பம் தாங்க முடியாமல் அதை தலையிலும் ஊற்றி கொள்வார்கள்.
...... மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குது. நாலு காசு சம்பாதிக்க, எப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்க...!!!
கஷ்ட்டம் தான் ஆனால் அவர்களை பார்க்கும் போதெல்லாம் உழைப்பின் உன்னதம் விளங்குகிறது...
உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் நம்மவர்கள்...எனக்கு பெருமையா இருக்கு...பகிர்வுக்கு நன்றி ஜலி கா...
இந்த வார அதிக பட்ச வெப்பம் 55C :(
கொடுமைக்கா, பாவம் இவ்ளோ கஷ்டப்பட்டும் அவங்களுக்கு காசு கம்மிதான். இப்போ போன வாரம் என் கார் ரிப்பேர், ரெண்டு நாள் லஞ்ச் நடந்து தான் சாப்பிடப் போனேன், பாய்லர்க்குள்ள நடக்கிற மாதிரி இருந்தது, காத்து அடிச்சா கூட அனல் காத்து, இந்த மண்ணுப் பய ஊர்ல ஒதுங்க ஒரு மர நிழலும் கிடையாது. என்ன பன்ன, பாவம் அவங்க.
இவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
ரொம்ப கஷ்டமா இருக்கு :((
காலையில எட்டு மணிகே இங்கே 101 டிகிரி வெயில் அடிக்குதே . பாவம் மக்கள்ஸ்..!!
இந்த வருஷம் வெளியல் ரொம்ப ஜாஸ்தி... 55 டிகிரில்லாம் வந்துச்சுன்னு சொல்றாங்க... ஆனா ஒண்ணும் வெளில வராது... ரொம்ப கஷ்டம்... சாயங்காலமே வெளிய இறங்க முடில... அனல் காத்து வீசுது...
அதிகாலை தொடங்கும் இவர்கள் பணி
மதி மயங்கும் மாலை முடியும் இவர்கள் பணி
என்று துவங்குமோ இவர்களுக்கு நல்வழி
இறைவா அருள் புரிவாயாக
இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அக்கா , சாக்கடையில் இறங்கி வேலை செய்வோர், கழிவறைகளை சுத்தம் செய்வோர் இப்படி எவ்ளோ பேர் இருக்கிறார்கள். என்ன பண்ணுவது நம்மால் பரிதாபம் மட்டும் தான் பட முடிகிறது.
ரொம்ப கஷ்டம்....
பாவம் தான், இதே நிலை தான் தொழிற்சாலைகளிலும், என்ன செய்வது:(
55 டிகிரியா??
ஆண்டவா :(((((
எல்லா வருடமும் ஆகஸ்டில் தான் இந்த மாதிரி வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும். இந்த வருடம் ஜூனிலேயே துவங்கி சக்கை போடு போடுகிறது.
கஷ்டத்திற்காக சம்பாதிக்க வந்திருப்பவர்களை இந்த வெயிலும் சில ஸ்பானசர்களை போல் கஷ்டப்படுத்தியே...
//சம்பளம் மிகக்குறைவு. இன்னும் இது போல் ஏசியில் வேலை பார்க்காத பணியாளர்கள் நிறையவே உண்டு//
நம்ம ஊரிலும் ஏசி என்றால் என்னான்னு தெரியாம வெய்யிலில் வேலைபார்ப்பவர்கள் பலர் உண்டு இருந்தாலும் இங்கு அடிக்கும் வெயிலில் வேலை பார்ப்பது என்பது கொடுமை:(
கட்டுமான பணியாளர்கள் தான் ரொம்ப பாவம்
சவுதில நோன்புக்காவது பொழச்சாங்க அமீரகத்தில் நோன்புல தான் ரொம்ப ...
ரொம்ப கஷ்டமாக இருக்கு
பிழைப்பிற்க்காக எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வாழ்க்கை வாழுகிற மக்கள் ஒரு பக்கம். கொலை+கொள்ளை அடித்து வாழுகிற மக்கள் ஒரு பக்கம். என்ன சொல்வது இது தான் வாழ்க்கை இது தான் உலகம்.
சுடுகிறது.
ன் தம்பி அங்கு ரோட் வொர்க் இஞ்சினியாராக இருந்தான் இரண்டு வருடம். ஜீன்ஸ் பேண்ட் தொப்பலாக நனைந்து விடும்.ஒன் பாத்ரூம் வரவே வராது.அதிகம் வேர்ப்பதால்.திடீரென்று பணியாளர்கள் அப்படியே தொப் என்று மயங்கி விழுவார்கள்.காலையிலேயே பக்கெட்டில் தண்ணீர் பாத்ரூமில் பிடித்து வைத்து வருவார்களாம்.டேங்க் தண்ணீர் சூடாக இருக்குமாம்.நிறைய சொல்லுவான்.அந்த வெயில் பற்றி தெரியாமல் போய் சிக்கி கொள்பவர்கள் தான் அதிகம்.மூன்று மாதங்கள் அந்த வேலைகளை நிறுத்தி வைக்கலாம்.அவர்களுக்கு நஷ்டம் இல்லை.சம்பளம் இல்லாமல் பணியாளர்கள் தான் கஷ்டப்படுவார்கள்.தீர்வே இல்லை..இதற்கு..
அமைதிச்சாரல் ஆமாம் ரொம்ப பாவமாக இருக்கும்.
இது மட்டும் இல்லை இன்னும் .
சிலிண்டர் எடுத்து வருகீறவர்கள்,தண்ணீர் கொண்டு வருகிறவர்கள். ரோடில் , வீட்டில் பேப்பர் போடுகிறவர்கள், கார் ஷெட்டில் , பம்ப் மோட்டார் போன்றவை ரிப்பேர் செய்கிறவர்கள்
எல்லோரின் நிலையும் இது தான்
அனமிக்கா , ஆமாம் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. உஙக்ள் பக்கம் வரவே முடியவில்லை.முடிந்த போது வருகிறேன்.
ஆமாம் ஸ்டார்ஜன், சாலைபணியாளர்கள் படும் பாடு ரொம்ப கழ்டம், இந்த வருடம் ஆரம்பமே அனல் பரக்குது
ஆமாம் ஸ்டார்ஜன், சாலைபணியாளர்கள் படும் பாடு ரொம்ப கழ்டம், இந்த வருடம் ஆரம்பமே அனல் பரக்குது
ஆமாம் ஆசியா நம்மால் ஒன்றும் செய்யமுடியாது.
எனக்கென்னவோ இப்படி அவர்களை பார்க்கும் போது மனசு துடிக்கும்
//தண்ணீர் தான் பாட்டில் பாட்டிலா பிடித்து கொண்டு போவார்கள், அதை குடித்து கொண்டு வெப்பம் தாங்க முடியாமல் அதை தலையிலும் ஊற்றி கொள்வார்கள்//
ஆமாம் சித்ரா இந்த காட்சிய பார்த்து நான் ரொம்ப்வே நொந்து விட்டேன்
/கஷ்ட்டம் தான் ஆனால் அவர்களை பார்க்கும் போதெல்லாம் உழைப்பின் உன்னதம் விளங்குகிறது...
உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் நம்மவர்கள்...//
ஆமாம் சீமான் கனி
நம்ம ஆளுங்க (ஏசியில் இருந்து வேலை பார்ப்பவரகள்) நான் கழ்ட படுக்றேன் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன் என்ன மூட்டைய தூக்குராங்க,
இவர்கள் தான் உண்மையான உழைப்பாளிகள்.
//இந்த வார அதிக பட்ச வெப்பம் 55C :(
//
ராஜ நடராஜன் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் இரவில் கூட் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு சூடு காத்து தான் அடிக்குது.
//கொடுமைக்கா, பாவம் இவ்ளோ கஷ்டப்பட்டும் அவங்களுக்கு காசு கம்மிதான். இப்போ போன வாரம் என் கார் ரிப்பேர், ரெண்டு நாள் லஞ்ச் நடந்து தான் சாப்பிடப் போனேன், பாய்லர்க்குள்ள நடக்கிற மாதிரி இருந்தது, காத்து அடிச்சா கூட அனல் காத்து, இந்த மண்ணுப் பய ஊர்ல ஒதுங்க ஒரு மர நிழலும் கிடையாது. என்ன பன்ன, பாவம் அவங்க.//
பாந்தோம் மோகன் , ஆமாம் கொஞ்சம் நடந்து வந்தாலே தொப்பகட்டையா நனைந்து விடுகிறோம் ,
அவர்கள் இந்த வேகதா வெயிலேயே தான் முழுநேரமும்.
//இவர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது//
வாங்க அன்சாரி வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் என்ன சம்பாத்தித்து என்ன புரயோஜம்,
இவர்களைஎல்லாம் அங்கிருந்து ஒரு புரோக்கர், 50 ஆயிரம் வாங்கி தான் இங்கு பணியில் சேர்ட்த்து இருப்பார்கள்
.
வந்து இந்த கடனை அடைக்கவும் , அவர்கள் அரைகுரையானா பத்தாத சாப்பாட்டுக்கே சரியா போகும்,
இதுக்கு ஊரில் ஒரு பொட்டி கடை வைத்தாலும் பிழைத்து கொள்ளலாம் போல
ஆமாம் எல் கே
மிகவும் கழ்டமான வாழ்க்க்கை அவர்களுடையத்
ஜெய்லானி காலையில் அடிக்கும் வெயிலுக்கே நம்மால் நடக்க முடியல மண்டைய பிளக்கும் மதிய வெயிலில் எப்படி வேலை செய்வார்கல்
//இந்த வருஷம் வெளியல் ரொம்ப ஜாஸ்தி... 55 டிகிரில்லாம் வந்துச்சுன்னு சொல்றாங்க... ஆனா ஒண்ணும் வெளில வராது... ரொம்ப கஷ்டம்... சாயங்காலமே வெளிய இறங்க முடில... அனல் காத்து வீசுது...//
ஆமாம் பிரதாப் என்னத்த சொல்வது.
துபாயில் வெயிலடித்தாலும் தாஙகாது.
மழை அடித்தாலும் தாங்காது, குளிரடித்தாலும் தாங்காது
//அதிகாலை தொடங்கும் இவர்கள் பணி
மதி மயங்கும் மாலை முடியும் இவர்கள் பணி
என்று துவங்குமோ இவர்களுக்கு நல்வழி
இறைவா அருள் புரிவாயாக//
ஆமாம் இளம் தூயவன், இறைவன் வரம் தரேனுன்னு கேட்டா இது போல் உலகத்தில் கழ்டப்டுகிறவர்க்களுக்கு ஒரு வழி காட்டு ஆண்டவா என்று சொல்லனும்.
//இன்னும் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அக்கா , சாக்கடையில் இறங்கி வேலை செய்வோர், கழிவறைகளை சுத்தம் செய்வோர் இப்படி எவ்ளோ பேர் இருக்கிறார்கள். என்ன பண்ணுவது நம்மால் பரிதாபம் மட்டும் தான் பட முடிகிறது.//
தம்பி சசி இன்னும் எழுத நிறைய லிஸ்ட் இருக்கு, நேரமில்லாததால் சுருக்காக முடித்து கொண்டேன்
சுந்தர் , வருகைக்கு மிக்க நன்றி.
ஆமாம் ரொம்ப கழ்டம்.
//
பாவம் தான், இதே நிலை தான் தொழிற்சாலைகளிலும், என்ன செய்வது//
ஆமாம் ஷபி தொழிற்சாலைகளிலும் நிறைய பணியாளர்களின் நிலை இபப்டிதான்
மங்களூர் சிவா வாங்க வருகைக்கு மிக்க நன்றி
//எல்லா வருடமும் ஆகஸ்டில் தான் இந்த மாதிரி வெயிலின் தாக்கம் அதிகமிருக்கும். இந்த வருடம் ஜூனிலேயே துவங்கி சக்கை போடு போடுகிறது.
கஷ்டத்திற்காக சம்பாதிக்க வந்திருப்பவர்களை இந்த வெயிலும் சில ஸ்பானசர்களை போல் கஷ்டப்படுத்தியே//
எம் அப்துல்லா, இது மழை, சுனாமி வந்ததிலிருந்து இப்படி கிளைமேட் தலை கிழே மாறி இருக்கலாம்
நோன்பு வேர ஆகஸ்டில் வருது ஆண்டவன் தான் எல்லோருக்கும் சக்திய கொடுக்கனும்.
வருகைக்கு மிக்க நன்றி
//நம்ம ஊரிலும் ஏசி என்றால் என்னான்னு தெரியாம வெய்யிலில் வேலைபார்ப்பவர்கள் பலர் உண்டு இருந்தாலும் இங்கு அடிக்கும் வெயிலில் வேலை பார்ப்பது என்பது கொடுமை//
குசும்பன் வாஙக் உஙக்ள் முதல் வருகைக்குகும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றீ
இங்கு அரபு நாடுகளில் அடிக்கும் வெயில் மிக்ககடுமையே
//கட்டுமான பணியாளர்கள் தான் ரொம்ப பாவம்
சவுதில நோன்புக்காவது பொழச்சாங்க அமீரகத்தில் நோன்புல தான் ரொம்ப //
ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான்
//ரொம்ப கஷ்டமாக இருக்கு//
சாருஸ்ரீ என்ன செய்வது. எல்லோரும் சேர்ந்து புலம்ப தா முடிகீறது
//பிழைப்பிற்க்காக எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வாழ்க்கை வாழுகிற மக்கள் ஒரு பக்கம். கொலை+கொள்ளை அடித்து வாழுகிற மக்கள் ஒரு பக்கம். என்ன சொல்வது இது தான் வாழ்க்கை இது தான் உலகம்//
//இது வறுமை மற்றும் பணக்கழ்டத்தால் இப்படி மாறிவிடுகீன்றனர் விஜி //
நான் கொஞ்சம் லேட்டாவே வந்துட்டன்.. மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்
எனது பதிவையும் உங்கள் பதிவில் இனைத்தமைக்கு நன்றிகள் அக்கா
அல்லாஹ் அருள் புரியட்டும் உங்களுக்கு..
:((
கஷ்டப் படுபவர் மீது ஓர் கனிவான பார்வை ,
அருமை
ஜலீலா...
இது போன்ற தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை நான் கூட என் வலையில் “மத்திய கிழக்கு நாடுகள் - அயல் நாட்டு மோகம்” என்று பெயரிட்டு எழுதினேன்...
இதைப்பற்றி நான் விரிவாக எழுத இருந்தேன்... நீங்களே எழுதி விட்டீர்கள்... இந்த முறை வெய்யிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது... இத்தனைக்கும் பீக் சம்மர் எனப்படும் ஜூலை-ஆகஸ்ட் வரவில்லை.. ஜூன் மாதத்திலேயே வெய்யில் பட்டையை கிளப்புகிறது...
தமிழையும், தமிழ்நாட்டையும் தாண்டி குடும்ப சுமைகளை சுமப்பதற்காக இங்கிருந்து அங்கு சென்று அல்லல்படும் தமிழர்களை பார்ப்பதற்கு பரிதாபமாகஉள்ளது
படித்து விட்டு மனம் வலிக்கிறது. பாவம் அவர்கள்.
வெளி வேலை செய்பவர்கள்தான் இதில் அதிகம் பாதிப்படைகிறார்கள்.
நல்ல பகிர்வு ஜலீலா அக்கா. எனது சுட்டியையும் இணைத்ததற்கு நன்றி.
dubaiyil nammavarkal padum kashtam-padam pidithu kaaddi viddeergal- ariya pathivu-meerapriyan
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா