Showing posts with label புகைப்படங்கள். Show all posts
Showing posts with label புகைப்படங்கள். Show all posts

Tuesday, August 11, 2009

வீட்டு பிள்ளைகள்



ஹனீப்,ஆஃப்தாப்,ஆதிஃப்








ச‌ஃபா









ஹ‌கீம்

Wednesday, July 29, 2009

அண்ணாவை காலேஜ் சேர்க்க தம்பியின் பில்டப்



இது அல‌காபாத்தில் எடுத்த‌து அங்குள்ள‌ ரிக் ஷாக்க‌ள் ந‌ம்ம‌ ஊர் ரிக் ஷா மாதிரி இல்லை ஒரு ஜிகு ஜிகுன்னு இருக்கு ப‌ட்டும், ஜ‌ரிகை லேசுமாக‌ அல‌ங்க‌ரிக்க‌ ப‌ட்டுள்ள‌து.

எல்லாம் முடிந்து வரும் போது சின்னவர் ரிக் ஷாவில் ஏறி உட்கார்ந்து போட்டோ வேறு.








பெரிய பையனை காலேஜ் சேர்க்க அவசரமா எல்லோரும் 10 லீவு போட்டு கொண்டு இந்தியா போனோம், அப்ப சின்னவருடைய ஆட்டம் தாஙக் முடியல.என்னவோ அவர் தான் காலேஜ் சேருவது போல் அங்கு ஒரு பில்டப்
காலேஜ் அட்மிசன் செல்லும் முன் அண்ணாவிற்கு வாங்கி டிரெஸ் எவ்வளவோ அதே தனக்கும் ஒரு பிளாக் டிரெஸ் அதுக்கு மேட்சா தொப்பி போட்டு கொண்டு ரெடிஆனார்.







இங்கிருந்து அரபிகள் போடும் கந்துரா நாங்க உம்ரா போன போது வாங்கியது அதை எடுத்து வெள்ளிகிழமை ஜும்மாவிற்கு போட்டு கொண்டு போனார்.

Monday, July 13, 2009

அழுகையிலும் ஒரு சிரிப்பு






என் இரண்டு செல்லங்கள் அப்துல் ஹகீம், ஹனீபுதீன்.

பெரிய பையன் காலேஜ் சேர ஊருக்கு கிளம்பும் நேரத்தில் ஒரே அழுகை தான் அப்ப என் பிள்ளைகளிடம் பேசிய போது.


அழுகையிலும் ஒரு சிரிப்பு

நான்: சின்னவனிடம் ஹனீப் அண்ணா ஊருக்கு போகிறான் ஏதாவது கிஃப்ட் கொடு..

ஹனீப்: அவன் பார்எவர் போகிறானா? ஆமா. அப்ப அவன் எனக்கு கவுண்டர்ஸ்ரைக் கேம் போட்டு கொடுத்தா 5 திர்ஹம் கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன்.


நான் : பெரியவனிடம் ஹகீம் ஊருக்கு போறீயே தம்பி கிட்ட சொல்லிட்டு போ, உன் கூட பிறந்தவன், என்று சொன்னேன்.



ஹகீம்: வு இல்ல இல்ல அவன் என் கூட பிறக்கல.
நான்: ஆ ஆ என்ன இப்படி சொல்கீறான்.


ஹகீம்: அவனுக்கு முன் நான் ஏழு வருடம் முன்பே பிறந்துவிட்டேன் என்றான்.
அப்ப‌டியே அழுகைய‌ நிருத்திட்டு சிரிப்பு வ‌ந்து விட்ட‌து.

Saturday, July 11, 2009

த‌ம்பி ம‌க‌ள் அச‌லீனா





தம்பி புகாரியின் மகள் அசலீனா

பிப்ரவரி 16 ந்தேதி பிறந்தது , சாட்டிங் பண்ணும் போது எடுத்தது


















அண்ணா தம்பி , ஹனீப்





முன்று பேரும் சேர்ந்து ஒரே கம்புட்டரில் கேம், அதுக்கு கண்ணு இருந்த அது கூட அழுதிருக்கும்.























ப‌ச்ச‌ குழ‌ந்தை என்றாலே எல்லோருக்கும் ஆசை தான் /

ஆண்டி ஆண்டி நான் கொஞ்ச‌ம் நேர‌ம் வைத்து கொள்கிறேன்.என் பைய‌ன் ஹ‌னீப் சொன்னான். ம‌டியில் வைத்த‌து ச‌ந்தோஷ‌ம் தாங்க‌ல‌ அத‌ நான் போட்டோ வேறு எடுப்ப‌தால் ஒரு சிரிப்பு + போஸ் வேறு க‌ண்ணை விரித்து கொண்டு...
அடுத்து அண்ணா த‌ம்பி இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேருடைய‌ பேச்சுக்க‌ளை சொன்னால் சொல்லி கொண்டே போக‌லாம்.

அவ‌ர்க‌ள் ஒருவ‌ரை ஒருவ‌ர் கூப்பிட்டு கொள்வ‌தே அண்ணா ஆ ஆஆ
த‌ம்பி பீ பீ பீ என்று தான் அது வீட்டுக்கு வ‌ர‌ எல்லோருக்கும் ரொம்ப‌ பிடிக்கும்.



உட‌னே ஹ‌னீப் த‌ம்பிய‌ வ‌ச்சுக்குறான், த‌ம்பி வா குட்டி த‌ம்பிய‌ வ‌ச்சு போட்டோ எடுதுக்க‌லாம்.




த‌ம்பிக்கு த‌லைவ‌லிக்கு தான் ஆஃப்தாப் கொஞ்ச‌ம் தைல‌ம் தேச்சு விடுமா.. என் த‌ங்கை சொல்ல‌ உட‌னே த‌ம்பீ இங்க‌ வா தைல‌ம் தேய்க்கிறேன்.
உட‌னே த‌ம்பி ப‌டுத்து கொண்டே நீ வேணும்நா இங்க‌ வ‌ந்து த‌ட‌வி விடு....
சின்ன‌துக்கு ரொம்ப‌வே குசும்பு ஜாஸ்தி....
அடுத்து லைட் போட்டா குட்டி த‌ம்பி முழித்து விடுவான் போய் கொஞ்ச‌ம் த‌ண்ணீ கொண்டு வாம்மா...
ச‌த்தமா த‌ம்பீ குட்டி த‌ம்பி தூங்குறா போ போய் த‌ண்ணீ கொண்டு வா,
க‌டைசியில் இரண்டும் இருட்டில் போக‌ ஒரு டார்ச் ந‌ல்ல‌ வெளிச்ச‌மா போட்டு கொண்டு ந‌ல்ல‌ குழ‌ந்தை முக‌த்தில் அடித்து கொண்டு த‌ண்ணிய‌ கொடுத்தார்க‌ளாம்.






Thursday, July 9, 2009

பிரிவு என்பது ஏன் வருகிறது


என் செல்லம் ஹகீம்
என் செல்லம் ஊருக்கு போய் இன்றோடு ஒரு மாதம் ஆகப்போகிறது.
அப்துல் ஹகீம் காலேஜ் சேர ஊருக்கு போய் விட்டான்.
அவன் ஊருக்கு போன‌திலிருந்து ஒரு வேலையும் ஓட‌ல‌ இது வ‌ரை பிரிந்த‌தே இல்லை.
ஒரு ர‌ச‌ம் வைக்க‌ கூட‌ என்னால் முடிய‌ல‌, வீட்டில் சின்ன‌ பைய‌னும், என் ஹஸும் இருந்தால் கூட அவர்களுக்காகவும் சமைக்க முடியல, ஒரே அழுகை தான் அவன் துணியாபார்த்தா அழுகை வருது , அவன் புக்கை பார்த்தா அழுகை வருது.


ஏன் பிரிவு என்பது ஏன் வருகிறது. எப்ப பார்த்தாலும் ஹகீம் ஹகீம் ம்ம்ம்ம்ம்ம் என்று கூப்பிட்டு கொண்டே இருப்பேன்.
அமைதியான தங்கமான பையன், ஒரு சாக்லேட் வாங்கி சாப்பிடுவதா இருந்தால் கூட என் கிட்ட கேட்டுட்டு தான் சாப்பிடுவான். அவன் உண்மைய சொல்வதில் அவன் காந்திஜி வீட்டு பக்கத்து வீட்டு பையன் என்றூ சொல்லலாம்.
நானும் பிளாக்கில் எவ்வளவோ பதிவுகள் போட்டு மனசை தேர்த்த பார்த்தேன், ஆனால் என்னால் முடியல.
எல்லோரும் ப‌டிக‌க் தானே போகிறான், பொம்ப‌ல‌ பிள்ளைக‌ளே த‌னியா போய் ப‌டிக்கிறார்க‌ள். இவ‌னை அனுப்பிட்டு ஏன் இப்ப‌டி அழுகிறாய் என்று கேட்டார்க‌ள். என்ன‌ தான் ச‌மாதான‌ ப‌டுத்தினாலும் என‌க்கு முடிய‌ல‌.

போய் ஊருக்கு போய் பார்த்து விட்டு வ‌ர‌போறேன்.

Wednesday, July 8, 2009

பேட்மிட்டனில் ஆஃப்தாப்








படத்தில் என் கடைசி தங்கையின் முதல் மகன் ஆஃப்தாப் அகமது ரொம்ப சுட்டி.
முதல் வரிசையில் இடமிருந்து வலமாக முதலில் உட்கார்ந்து இருப்பது தான். ஆஃப்தாப்.
21 க்கு 19 எடுத்து ரன்னர் ஆகிவிட்டான், ரொம்ப ஷாட்டா இருந்ததால எகிறி அடிக்க முடியாபோச்சு.


ஆனால் முதல் மேட்ச் வின் பண்ணதுக்கு கப்பு வாங்கியாச்சு.