Showing posts with label kungumam thozi. Show all posts
Showing posts with label kungumam thozi. Show all posts

Saturday, May 10, 2025

பலாக்கொட்டை & காஷ் கொட்டை (Chest Nut) காய்கறி புளி சால்னா (குழம்பு) Jackfruit seed & Chestnut Curry




Jackfruit seed & Chestnut Curry


பலாக்கொட்டை & காஷ் கொட்டை (Chest Nut) காய்கறி புளி சால்னா (குழம்பு)

 

 

தேவையான பொருட்கள்

 

முருங்கக்காய் – 2

கத்திரிக்காய் – கால் கிலோ

சேப்பங்கிழங்கு  – கால் கிலோ

வேகவைத்த பலாக்கொட்டை – 8

வேக வைத்த காஷ் கொட்டை (Chest Nut) - 5 

 

தாளிக்க

எண்ணை – 5 தேக்கரண்டி

கடுகு – ஒரு தேக்கரண்டி

கருவேப்பிலை – அரை கொத்து

பூண்டு – 8 பல் ( நசுக்கியது)

பெருங்காயம் – இரண்டு பின்ச்

வெங்காயம் – 2 ( பொடியாக அரிந்தது)

தக்காளி – 2

பச்சமிளகாய் - இரண்டு

புளி பேஸ்ட் – 2 தேக்கரண்டி

ஆச்சி சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

தனியாத்தூள் – இரண்டு தேக்கரண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

உப்பு – இரண்டு தேக்கரண்டி ( தேவைக்கு)

சர்க்கரை – ஒரு பின்ச்

தேங்காய் பால் -  அரை டம்ளர்

கொத்துமல்லி தழை - சிறிது

 

செய்முறை

சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி வைக்கவும்.

ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்து கடுகு ,பெருங்காயம், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி , பச்சமிளகாய், மிளகாய் தூள் மஞ்சள் தூள், உப்பு தூள், தனியாதூள் வகைகளை சேர்த்து நன்கு கிளறி முருங்கக்காய் கத்திரிக்காய் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

காய் வெந்ததும் புளி பேஸ்ட், வெந்த சேப்பங்கிழங்கு மற்றும் பலாக்கொட்டை மற்றும் காஷ் கொட்டையை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.

கவனிக்க: இதை பலாக்கொட்டைக்கு பதில் ராஜ்மா, மொச்சை கொட்டை, காராமனி,சென்னா சேர்த்தும் செய்யலாம்.

 

Chest nut என்பது பலாக்கொட்டை போலவே இனிப்பு தன்மையுடன் இருக்கும் இதை வேகவைத்து குழம்பு சூப்பில் சேர்த்து சுவை அதிகரிக்கும்.

இது என் முயற்சியே. இது பிலிப்பைனிகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

 












https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Friday, June 17, 2016

30 Days Ramadan Recipe @ Kungumam Thozi 30 veg Recipes



அல்ஹம்து லில்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே..
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பார்ந்த தோழ தோழிகளே,
இனிய ரமலான் வாழ்த்துக்கள்.





குங்குமம் தோழியில் என் குறிப்புகள் 15.06.16 அன்று வெளியாகி உள்ளது. என் அசைவ சமையல் படைப்புகளில் சில வற்றை சைவமாக மாற்றி பச்சை காய்கறிகளை உபயோகித்து சுவை மிக்க குறிப்புகளாக தந்துள்ளேன்.
ரமலான் ஸ்பெஷல் இஸ்லாமிய இல்ல நோன்பு கால ரெசிபிகள் 30, அதே சுவை ஆனால் சைவம், சுவைத்து மகிழ்ந்து ஆரோக்கியமாக இறையருள் பெற்று இனிதே ரமலானை கொண்டாடி மகிழ்வோம்.


My recipes are published in Kungumam thozi ((குங்குமம் தோழி)
Ramadan Special 30 vegetarian Recipes on 15.06.2016 issue.Hope this time on the Eve of Ramadan Everybody will enjoy our traditional Islamic recipes in variety of green vegetables.Thank you Vaidehi Ranganathan

தேவையான‌வை

பால் -  அரை லிட்டர்
க‌ஸ்ட‌ட் ப‌வுட‌ர் - ஒன்னறை மேசை கரண்டி
பாத‌ம் ஃபிளேக்ஸ் - ஒரு மேசை க‌ர‌ண்டி
ஸ்வீட்டன்ட் கன்டெஸ்ட் மில்க் - அரை கப்
வாழைபழம் -   ஒன்று பெரிய‌து
ஆப்பில்  - கால் கப் துண்டுகளாக வெட்டியது
பச்சை வண்ண ஜெல்லி அ கடல் பாசி - வேண்டிய வடிவில் கட் செய்தது.

குங்குமப்பூ - சிறிது

செய்முறை
பாலில் கஸ்டர் பவுடரை கரைத்து பிறகு பாலை காய்ச்சவும்.
சூடான பாலில் க‌ரைத்தால் க‌ட்டி த‌ட்டும்.
கண்டெஸ்ட் மில்க்  , பாத‌ம் பிளேக்ஸ் சேர்த்து காய்ச்ச‌வும், கைவிடாம‌ல் கிள‌ற‌வும், க‌ட்டியாகி வ‌ரும், அப்ப‌டியே ஆற‌விட்டு குளிற‌விட‌வும்.
குளிர வைத்த கஸ்டடில் வெட்டிய பழவகைகளை ( ஆப்பிள் மற்றும் வாழைப்பழம்) சேர்த்து கலக்க்கவும்.


குறிப்பு:


இத‌ பார்ர்டியில் வைத்தாலும் க‌ல‌ர்ஃபுல்லாக‌ இருக்கும்.
வாழை [பழம் அரிந்த‌தும் க‌ருத்துவிடும், க‌ருத்து போகாம‌ல் இருக்க‌ அரிந்த‌து சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கொள்ளலாம்.
உட‌னே சாப்பிடுவ‌தாக‌ இருந்தால் எலுமிச்சை சாறு தேவையில்லை

வாவ் யெம்மி யெம்மி ஒன்ஸ் மோர்.....தான் போங்க‌
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/