//குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்தி பானம்,நல்ல எனர்ஜி கிடைக்கும், விளையாடும் பிள்ளைகளுக்கு குடிக்க கொடுக்கலாம். கர்பிணி பெண்களுக்கு தெம்பை கொடுக்கும்.சோர்வை நீக்கும் ,பிறக்க போகும் குழந்தைக்கும் நல்ல கலர் வரும். .
தேவையானவை
கேரட் - 2
ஆரஞ்ச் பழம் - 3
குளுக்கோஸ் - தேவைக்கு
ஐஸ் கட்டிகள் - 15 முதல் 20
சர்க்கரை (தேவை பட்டால்)
உப்பு - ஒரு சிட்டிக்கை
தண்ணீர் - தேவைக்கு
செய்முறை
இதற்கு முன்
ரெசிபியில் சொன்ன படி ஆரஞ்சை பிரிச்சி வச்சிக்கோங்கோ.
கேரட்டை துருவி ஹல்வா வுக்கு துருவது போல் துருவி கொள்ளவும்
ஐஸ் கட்டி சேர்த்து நன்கு மிக்சியில் அரைக்கவும்.
இது வடிகட்டி சாறு எடுப்பத்து தான் சிரமம்.பெரிய டீ வடிகட்டியில் கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி வடிகட்டவும்.
//இல்லை ஒரு மெல்லிய துணியை வயகன்ற பாத்திரத்தில் விரித்து அடித்த ஜூஸை ஊற்றி வடிய விடலாம்//
கடைசியாக சர்க்கரைக்கு பதில் குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும். (விரும்பினால் தேன் கூட சேர்த்து கொள்ளலாம்) ரொம்ப ஹெல்தி.
கண்ணெல்லாம் சும்மா குளு குளுன்னு இருக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்ற ஹெல்தி பானம்,நல்ல எனர்ஜி கிடைக்கும், விளையாடும் பிள்ளைகளுக்கு குடிக்க கொடுக்கலாம், கர்பிணி பெண்களுக்கு தெம்பை கொடுக்கும்.
பிறக்க போகும் குழந்தைக்கும் நல்ல கலர் வரும்.
டிஸ்கி: போன வருடம் தக்காளி கேரட் ஜூஸ் பண்ணும் போது
சகோ.
நட்புடன் ஜமால் கேரட் ஆரஞ்ச் என் பேவரிட் என்றார். இந்த முறை நோன்பில் எல்லா பழ வகை ஜூஸ்களும் கண்டிப்பா உண்டு, ஆரஞ்ச் பழம் மட்டும் நாலா அரிந்து உப்பு தூவி வைப்போம், இந்த முறை வாங்கிய ஆரஞ்ச் எல்லாமே புளிப்பு அதை இப்படி அடிக்கடி ஜூஸ் செய்து , கட்பண்ணி உப்பு குளுக்கோஸ் தூவி, சாலட் செய்து, கேசரி செய்து காலி பண்ணியாச்சு.
ஆறு பேர் தாராளமாக குடிக்கலாம்.
இது கடைசி ஸ்டெப் போட்டோ எடுக்க மறந்துட்டேன். அப்பரம் பாதி குடிச்சிட்டு இருக்கும் போது ஞாபகம் வந்து போட்டோ எடுத்தேன.