Sunday, April 24, 2011

ஓமம், கருஞ்சீரக குஜராத்தி ஆட்டா பூரி - ajwan,nigella seed gujarati puri


-- 

AJWAIN NIJELLA SEED PURI

குஜராத்தி ஆட்டா -  அரை கிலோ

தேவையானவை

கருஞ்சீரகம், ஓமம், - தலா ஒரு ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
எண்ணை - 2 மேசை கரண்டி
தண்ணீர் -  200 மில்லி ( தேவைக்கு)

எண்ணை பொரிக்க தேவையான அளவு

செய்முறை

கருஞ்சீரகம், ஓமம், மிளகு லேசாக வறுத்து, மாவில் கலக்கவும்.
மேலும் உப்பு மஞ்சள் தூள்,சர்க்கரை, எண்ணை கலந்து தேவைக்கு தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு மாவை நன்கு பிசையவும்.பிசந்த மாவை 1 மணி நேரம் ஊறவிடவும்.

ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக போட்டு பூரிகளாக இட்டு சுட்டு எடுக்கவும்.

சுவையான மருத்துவ குணமுள்ள பூரி ரெடி, தொட்டு கொள்ள வெஜிடேபுள் பாஜியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


இருமல் சளி தொல்லைக்கு இது போல் அடிக்கடி சப்பாத்தி, ரொட்டி, பூரி செய்வதுண்டு

டிஸ்கி: இங்குள்ள மில்லில் வகை வகையான மாவு வகைகள் கிடைக்கின்றன,
ராகி,கம்பு, ஜோவர்(தினை)குஜராத்தி ஆட்டா, பஞ்சாபி ஆட்டா, டயட் ஆட்டா, கோதுமை மாவு, போன்ற பல வகை, மில் போய் வாங்கினா எல்லா வகை மாவும் மொத்தமா வாங்கி வந்துடுவேன், அதில் குஜராத்தி ஆட்டாவில் ஓமம் , கருஞ்சீரகம் சேர்த்து இந்த பூரியை செய்துள்ளேன்.

சென்னை ஃப்ளாசாவுக்கு வாங்க

32 கருத்துகள்:

athira said...

ஐ... வட, பூரி லட்டு எல்லாமே நேக்குத்தான் ஜலீலாக்கா.... அப்பூடியே ஒளிச்சு வையுங்க இதோ வாறேன்ன்ன்ன்

athira said...

ஜலீலாக்கா... பூரி சூப்பராக இருக்கு, ஆனா செய்து இப்படி சாப்பிடுமளவுக்கு எனக்குப் பொறுமை இல்லையே:). எமது ஊரில் சிலர் உழுந்து வடைக்கும் நற்சீரகமும் மிளகும் அரைத்துச் சேர்ப்பது வழக்கம்.

asiya omar said...

நல்ல மணமாக இருக்குமே! சூப்பர்..

Kalpana Sareesh said...

ah superrr taste.. very good ingredients..

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கே!!!!!!!!!!!!!!!

அஸ்மா said...

குஜராத்தி ஆட்டான்னா வித்தியாசம் எப்படி இருக்கும் ஜலீலாக்கா?

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
http://payanikkumpaathai.blogspot.com/2011/04/blog-post_24.html
இந்த லிங்க்கைப் பாருங்கள்.

இமா said...

பார்க்க ஆசையாத்தான் இருக்கு. மறக்காம இருந்தா வருகிற வாரம் செய்துபார்க்கிறேன் ஜலீ.

நட்புடன் ஜமால் said...

குஜராத்துக்கு போகனுமா ஆட்டா வாங்க :P

புதிதாக இருக்கு வீட்ல செய்ய சொல்லி சொல்றேன், அவங்க முடிவே இறுதியானது ... :)

GEETHA ACHAL said...

romba supera irukku...Love the pooris...

Kurinji said...

Superb poori. Nice plate. irandaium inga anuppi vaiunga.Kurinjikathambam, Event : HRH-Healthy Summer

மங்குனி அமைச்சர் said...

மருத்துவ குணமுள்ள பூரி ரெடி ///

இந்த பூரி எந்த காலேஜுல படிச்சிச்சுங்க மேடம்

மங்குனி அமைச்சர் said...

எல்லா வகை மாவும் மொத்தமா வாங்கி வந்துடுவேன்//

நீங்களே எல்லாத்தையும் மொத்தமா வாங்கிட்டு வந்திட்டா அப்புறம் அத்தவுங்க என்ன செய்றது மேடம் ??? அடுத்தவுங்க பாவம் இல்லையா

சசிகுமார் said...

அக்கா பதிவு அருமை

Aruna Manikandan said...

nice flavorful poori's :)

கோவை2தில்லி said...

மருத்துவக்குணம் கொண்டது என்றால் கண்டிப்பா செய்துட வேண்டியது தான். பகிர்வுக்கு நன்றிங்க.

angelin said...

வட இந்தியர்கள் சமையலில் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாமே நாங்கள் வசிக்கும் பகுதியில் கிடைக்கும் .ஓமம்/கருஞ்சீரகம் ரெண்டும் வீட்டில் இருக்கு .இன்னிக்கே செஞ்சுடறேன் .

மாதேவி said...

நன்றாக இருக்கிறது ஜலீலா.

இங்கு கோதுமை கிடைப்பது அரிது. மைதாவில் இப்படிச் செய்து கொள்வேன்.

Priya said...

Puri looks super yummy and delicious..

அமைதிச்சாரல் said...

வித்தியாசமா அருமையா இருக்கு..

தேனம்மை லெக்ஷ்மணன் said...

குஜராத்தி ஆட்டா பூரி எனக்கு வேணும்..:))

thenikari said...

hai jaleelakka,
naan ungalain puthiya rasigai. ungalin samayal kurippugal arumai. last week I tried bread halwa with little changes.I just added mango pulp and dates. I was superb. Thank you so much.

மனோ சாமிநாதன் said...

வித்தியாசமான குஜராத்தி பூரி நிஜெல்லா விதைகள் சேர்ப்பதால் மிகவும் நன்றாகத்தான் இருக்கும் ஜலீலா! கூடவே பல வகை மாவுகள் எங்கு கிடைக்கும் என்ற தகவல் கொடுத்ததற்கு அன்பு நன்றி!
அழகிய விருதுக்கும் என் அன்பு நன்றி ஜலீலா!

R.Gopi said...

ஓமம்...கருஞ்சீரம குஜராத்தி ஆட்டா பூரி படு சூப்பர் டேஸ்ட்....

ஆனா, பதிவு 2 முறை போஸ்டிங் செய்யப்பட்டுள்ளதோ!!?

அந்நியன் 2 said...

விதம் விதமா செய்கிறிர்கள் வாழ்த்துக்கள் சகோ.

சிநேகிதி said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

Jaleela Kamal said...

அதிரா எடுத்துங்கள் பூரி லட்டு வடை எல்லாம் உஙளுக்கு தான்

இது எனக்கு கொஞ்சம் கோல்ட் பிடிச்சா, பிள்ளைகளுக்கு கோல்ட் பிடிச்சா உடனே இதுபோல் மருந்து வகைகளை சமையலில் சேர்த்துவிடுவது.


ஆமாம் ஆசியா நல்ல மணமாக இருக்கும்

வாங்க கல்பனா கருத்துக்கு மிக்க நன்றி


ஸாதிகா அக்கா நலமா?

அஸ்மா நன்றி

நன்றி இமா

Jaleela Kamal said...

சகோ ஜமால் குஜராத்துக்கு போக தேவையில்ல நம்முரிலும் கிடைக்கும்

வருகைக்கு மிக்க நன்றி

நன்றி கீதா ஆச்சல்

வாங்க குறிஞ்சி கண்டிப்பாக அனுப்புகிறேஎன்

மங்குனிக்கு ரொம்ப தான் எகத்தாளம்

வாங்க சசி குமார் தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க அருனாஅ வருகைக்கு மிக்க ந்ன்றி


ஆமாம் கோவை2தில்லி மருத்துவ குணமுள்ளது, சுவையும் நன்றாக இருக்கும்

ஏஞ்சலின் எல்லா பொருளூம் இருககா அப்ப உடனே செய்துடுங்க, லேட்டா பதில் போட்டு இருக்க்கேன் இன்னேரம் செய்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன்


நன்றி மாதேவி

Jaleela Kamal said...

உங்கள் பாராட்டுக்கு மிக்கநன்றி
பிரியா

அமைதிச்சாரல் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

தேனக்கா உஙக்ளுக்கு இல்லாததா செய்து தரேன்

Jaleela Kamal said...

தேனிக்காரி வாங்க , ரொமப் சந்தோஷம் உஙக்ள் வருகைக்கும், பிரெட் ஹல்வா செய்து பார்த்தமைக்கும், ரொம்ப சந்தோஷம்.

Jaleela Kamal said...

மனோ அக்கா வாங்க வந்த்து ரொமப் சந்தோஷம்


கோபி ஆமாம் முதலில் அப்படி தான் இருந்தது,
இபப் சரியாகிவிட்டது

Jaleela Kamal said...

நன்றி அந்நின்யன்


அவார்டுக்கு மிக்க நன்றி சிநேகிதி, பெற்று கொண்டேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா