Showing posts with label வீடியோ. Show all posts
Showing posts with label வீடியோ. Show all posts

Monday, March 2, 2015

Prawn and Prawn Head Soup /இறால் தலை சூப் - வீடியோ சமையல்




இறால் தலை சூப்


என் வீடியோ சமையல்கள் - My cookery video's



ஏறகனவே உள்ள வீடியோவில் இறால் தலை சுத்தம் செய்வது எப்படின்னு பார்த்தோம் , இது வரை பார்க்கவதவர்கள் மேலே லின்க் கொடுத்து இருக்கிறேன் அதை கிளிக் செய்து பார்த்து கொள்ளுங்கள்.

இறால் தலை வைத்து எப்படி சூப் தயாரிப்பதுன்னு பார்போம்.

எல்லாம் போன வருடமே எடுத்து வைத்ததுதான்.

பின்னாடி அதிக சத்தம் குக்கர் சவுண்ட் இப்படி எல்லாம் இருக்கு நல்ல பின்னாடி உள்ள சவுண்ட எப்படி எடிட் செய்து ஆஃப் செய்வதுன்னு தெரியல.

ஏதாவது வீடியோ எடிட்டிங் காணொளி இருந்தால் யாராவது இங்க கமெண்டில் லின்க் கொடுங்கள்.
Prawn and Prawn Head Soup /இறால் தலை சூப் - வீடியோ சமையல்


 Prawn & Prawn Head Soup


Ingredients


For Stock 

Prawn Head – 15
Onion - 1 
Dry Rosemarry – 1 tspn
Whole Black Pepper - 8 nos
Big Cardamom - 1
Garlic – 2 pod
Whole coriander – 1 tspn
Bay leaf – 4 to 5

Salt – to taste
Knorr veg soup cube – 1 no
Fresh corn – half cup


For tempering 

Butter
Chopped Prawn -5 Nos
Spring Onion – 2 Stick
Soy Sauce – 1 tbspn
White pepper pwd – 1 tspn
Egg – 1 no
milk - 1/4 cup
White sauce or Cream of chicken packet or broccoli almond soup packet - 1



ஸாடாக் தயாரிக்க தேவையான பொருட்கள்
இறால்  தலை - 15
வெங்காயம் 1
ட்ரை ரோஸ் மேரி
முழு மிளகு
பெரிய ஏலக்காய்
பூண்டு - 2 பல்லு
முழு கொத்து மல்லி
பிரிஞ்சி இலை
வெஜிடேபுள் சூப் கியுப் - 1


தாளிக்க
பட்டர்
பொடியாக அரிந்த இறால் - 5
வெங்காய தாள் - 2 ஸ்டிக்
சோயா சாஸ் - 1 மேசைகரண்டி
வெள்ளை மிளகு தூள் - 1 தேக்கரண்டி
கிரீம் ஆஃப் சிக்கன் சூப் பாக்கெட் - 1 
அல்லது ஏதாவது ரெடி மேட் சூப் பாக்கெட் 
முட்டை - 1
பால் -  கால் கப்
ஃப்ரஷ் கார்ன் - அரை கப்
கார்ன் ப்ளார் மாவு - தேக்கரண்டி




செய்முறை

குக்கரில் ஸ்டாக் க்கு தேவையான எல்லா பொருட்களையும் சேர்த்து முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைத்து ஸ்டாக்கை வடித்து கொள்ளவும்.

தனியாக ஒரு சட்டியில் பட்டர் சேர்த்து அதில் இறாலை குட்டி குட்டியாக கட் செய்து சேர்த்து, பூண்டு , வெங்காயம், வெங்காய தாள் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.
வடித்து வைத்த ஸாடாக்கை சேர்க்கவும்.
கிரீம் ஆஃப் கார்  அரை பாக்கட் அளவு தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
ப்ரஷ் ஹோல் கார்னை உப்பு போட்டுவேக வைத்து லேசாக மசித்து கொள்ளவும்.
ஒரு தேக்கரண்டி அளவு  கார்ன் ஃப்லார் மாவை சிறிது கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.கால் கப் பாலும் ஊற்றி கொதிக்க விடவும்

முட்டையை நன்கு அடித்து சிறிது சிறிதாக ஊற்றி கட்டி பிடிக்காமல் கிளறவும்.

கடைசியாக பார்சிலி இலை, உப்பு , மிளகு தூள் தூவி சூடாக தேவையான ஸ்நாக்ஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



என் வீடியோ சமையல்கள் - My cookery video's




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

Monday, October 1, 2012

I Love you Mama , Qiyam


Arabic Song - I Love You Mama



Qiyam Qiyan Malayalam



Tamil - Vegetables 





எல்லாருக்குமே குழந்தைகளை சாப்பிட வைப்பது பெறும் பாடுஓவ்வொரு நாளைக்கு வித்தியாசமாக இருக்கனும் தினம் காகத்த காட்டியே சோறு ஊட்ட முடியாது ...
பிள்ளைகளை சாப்பிட வைக்க வேண்டுமென்றால் செல்போனிலோ, இல்லை லாப்டாப்பிலோ ஏதாவது வீடியோ ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்! முழுதாய் சாப்பிடுவதற்குள் உங்களுக்கு போதும் போதும் என்றாகி படுத்தி எடுத்து விடுவார்கள் அதுக்கு இந்த வீடியோவை காண்பிக்கவும். இப்ப சப்பாடு ஊட்டும் போது சிரமப்படதேவையில்லை. 

 இது உங்களுக்கும் பயன்படும்.

என் பெரிய பையனை சாப்பிட வைக்க நான் பட்ட பாடு இருக்கே. ஓவ்வொரு நாள் ஓவ்வொரு பக்கமாக போய் வேடிக்கைகாண்பித்து ஊட்டனும். அப்போ செல் போன் நெட் எல்லாம் கிடையாது. இப்ப எல்லாருக்கும் ரொம்ப ஈசியாக போச்சு செல் போனில் இப்படி பாட்ட ஆன் செய்து விட்டுட்டு கூட ஊட்டலாம். இல்லை கணினியில் போட்டு காண்பித்தும் ஊட்டலாம்.

இந்த இரண்டு பாடலும் உங்கள் வீட்டு செல்ல குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.


மூச்சு விடமா அழும் குழந்தைகளின் வாய கப்புன்னு அடைக்கனுமா?????

ஏற்கனவே போட்ட இந்த பாடலை பார்க்கவும்.லூன் பாடல்

ஆனால் இந்த பலூனை கையில் வைத்து விளையாடும் வரை ஒகே ஆனால் டமால் டிமிலுன்னு உடைந்தது , குழந்தைகள் அழுகை இன்னும் அதிகமாகும் ஆகையால் தூரத்தில் வைத்து விளையாட்டு காட்டுவது சுவரில் பேனில் எங்காவது தொங்க விடுவது நல்லது. 


Thursday, September 29, 2011

மேஜிக் ஷோ - Magic show

இது போன வருடம் என் பையன் எடுத்த மேஜிக் ஷோ

உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக 


டிஸ்கி: ஒரு வாரமா பிளாக்குக்கு ஜுரம் வந்துடுச்சி, ரொம்ப பேர் வந்துட்டு ஓடியே போயிட்டாங்க. ஒரு வாரம் சரியான வைரல் ஃபீவர்,
ஐய்யோ ஜலீலாக்கா பிலாக்குல மால்வேர் வைரஸ். எல்லாரும் பயம் காண்பிச்சிட்டாங்க.போன வருடமும் இதே மால்வேர் வைரஸ் தான் அபப் தான் பிலாக்கே போயிடுச்சின்னு ரொம்ப பயந்துட்டேன், ஆனால் எல்லாம் பேக் அப் எடுத்து வைத்திருந்ததால் பரவாயில்லா போனா போகட்டும் அப்பரம் பார்த்து கொள்ளலாம். என்றாகிவிட்டது.
இத பற்றி விரிவா போட நேரம் இல்லை பையன் ஊரில் இருந்து வந்துள்ளான், கொஞ்சம் பிஸி.
 .இப்ப எல்லா சரியா போச்சு வாங்க எல்லாரும்.
இன்னும் சில செட்டிங்க்ஸ் எதுவும் செய்யல.
இது சரியா ஓப்பன் ஆகலன்னா வேர ஏதும் எரர் இருந்தா உடனே சொல்லுங்க.

Wednesday, February 2, 2011

My Red Balloon

















ரொம்ப பேன்னு கத்து ர குழந்தையும் பலூன கையில் கொடுத்தீங்கனன வாய கப்புன்னு பொத்திடும். பச்ச குழந்தைகள் உள்ள வீட்டில் அங்காங்கே பலூன கட்டி சுவரில் ஒட்டி வைத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் அதிகமா அழுகையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

நான் இது வரை குழந்தை வளர்பின் போது பார்த்து கொண்ட எல்லா குழந்தைகளுக்கும் இது போல் நிறைய பலூன் வாங்கி  கையில் கொடுத்து விட்டு வாயில் என் சுவையான சமையலை கொடுத்து விட்டால் எல்லா குட்டீசுக்கும் சந்தோஷம் தான் . என் குழந்தைகளுக்கும் பலூன் ரொம்ப பிடிகும்.
சரி பலூன் நிறைய வாங்கி கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்துவது.

இந்த ரைஸ்ம்ஸ் எங்க வீட்டு குழந்தையின் பேவரிட் இது உங்கள் வீட்டு குழந்தைக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்
ஒரே இனி மை ரெட் பலூன் தான் .. ஹாப்பியா பாடுவாங்க... 




தங்கை பையன் ஆகித் விரும்பி பார்க்கும் ரைம்ஸ், இது என் தம்பி பொண்ணு அசலீனாவுக்காகவும், என் ஹஸுடைய தம்பி பையன் ஹுசேனுக்காவும் போட்டது..