| Tweet | ||||||
Showing posts with label உருளை. Show all posts
Showing posts with label உருளை. Show all posts
Wednesday, August 6, 2014
பூண்டு உருளை மயோ சாண்ட்விச் - Garlic ,Potato Mayo Mini Sandwich
குழந்தைகள் லன்ச் பாக்ஸ் க்கு என்ன வைப்பது என்று குழம்பிக்கொள்ளும் தாய்மார்களுக்கு இதோ சுலபமான உருளை சாண்ட்விச்.இதில் ஆலிவ் ஆயில் பயன் படுத்தி உள்ளேன் அதற்கு பதில் பட்டர் + எண்ணையும் பயன்படுத்தியும் செய்யலாம்.
இதே போல் பீட்ரூட் மற்றும் கேரட்டிலும் செய்யலாம்
பூண்டு உருளை மயோ சாண்ட்விச்
Garlic , Potato Mayo mini Sandwich
Small bun with potato Sandwich - Lunch box recipe
தேவையான பொருட்கள்
உருளை கிழங்கு – 1 (50 கிராம்)
ஆலிவ் ஆயில் – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
பூண்டு பொடி – கால் தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
மையானஸ் – 1 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – ஒரு தேக்கரண்டி
சிறிய பன் – 2 எண்ணிக்கை
செய்முறை
ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் ஆலிவ் ஆயில் சேர்த்து வெட்டிய உருளையை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் வேகவைக்கவும்.
அதில் மிளகு தூள், பூண்டி பொடி, உப்பு சேர்த்து உருளை நன்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
பன்னை இரண்டாக வெட்டி லேசாக் சூடு படுத்தவும்.
பன்னின் இருபுறமும் மயானஸ் மற்றும் சில்லி சாஸையும் தடவி நடுவில் ரோஸ்ட் செய்த உருளையை வைத்து மூடவும்.
சுவையான பூண்டு உருளை மையோ சாண்ட்விச் ரெடி.
குழந்தைகள் பன்னில் வைத்து கொடுப்பதால் சுலபமாக சாப்பிட்டு விடுவார்கள்.
இதே போல் கேரட், பீட்ரூடையும் வைத்து செய்து கொடுக்கலாம்.
பரிமாறும் அளவு : 1 குழந்தைக்கு
ஆயத்த நேரம்: 5 நிமிடம்
சமைக்கும் நேரம் : 7 நிமிடம்
இரண்டு சாண்ட்விச்கள் செய்யலாம்.
Labels:
உருளை,
குழந்தை உணவு,
சாண்ட்விச்,
சைவம்,
டயட் சமையல்,
லன்ச் பாக்ஸ்
Monday, September 23, 2013
வடா பாவ்/வடா ப்ரட் - Vada Pav/Vada Bread
வடா பாவ்
இது வட இந்தியாவில் பிரத்தி பெற்ற ஒரு சிற்றுண்டி, பாவ் பன்னுடன் சாஸ் சேர்த்து இதை உள்ளே வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.
Vada Pav
Vada Bread
தேவையானவை
பிரட் – 8 (அ) பன் – 4
பட்டர் – பொரிக்க தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் – தேவைக்கு
டேட்ஸ் சட்னி (அ) இனிப்பு சட்னி
வடா செய்ய
ரெடி மேட் பஜ்ஜி மாவு – அரை கப்
உருளை கிழங்கு பட்டாணி மசாலா
வேகவைத்த உருளைகிழங்கு – ஒன்று
வெங்காயம் - ஒன்று
பச்ச மிளகாய் – ஒன்று
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
எண்ணை – ஒரு தேக்கரண்டி
தாளிக்க
கடுகு – கால் தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
பட்டானி (புரோஜன்) - ஒரு மேசை கரண்டி
பெருங்காயப்பொடி – ஒரு சிட்டிக்கை
செய்முறை
முதலில் உருளைகிழங்கு மசாலா தயாரித்து கொள்ளவும்
வாயகன்ற வானலியில் எண்ணையை ஊற்றி கடுகு, சீரகம்,கருவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் பச்சமிளகாய்,பட்டானி சேர்த்து நன்கு வதக்கவும்.
மஞ்சள் தூள் உப்புதூள் வெந்த உருளைசேர்த்து நன்கு மசித்து கிளறி ஆறவைக்கவும்.
ஆறிய உருளைமசாலாவை சிறிய உருண்டைகளாக பிடித்துவைக்கவும்.
( வட நாட்டு உருளை மசாலாவில் சேரும் மசாலாக்கள் வேறு, இது நம்ம பூரி பாஜிக்கு செய்யும் மசாலா போல் தான் செய்துள்ளேன்)
( வட நாட்டு உருளை மசாலாவில் சேரும் மசாலாக்கள் வேறு, இது நம்ம பூரி பாஜிக்கு செய்யும் மசாலா போல் தான் செய்துள்ளேன்)
பிரட் (அ) பன் பொரித்து கொள்ளவும்/
பிரட்டை (அ) பன்னை பட்டர் தடவி பொரித்து கொள்ளவும்
பஜ்ஜிமாவை கார்ன் மாவு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
வானலியில் எண்ணையை காயவைத்து உருட்டிய மசாலா உருண்டைகளை பஜ்ஜிமாவில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.
வடா பன் (பாவ்)
பொரித்த பிரெட்டில் ஒரு பக்கம் கெட்சப்பும், மறுபக்கம் டேட்ஸ் சட்னியும் தடவி ஒரு பொரித்த மசாலா பஜ்ஜியை நடுவில் வைத்து மூடவும்.
குறிப்பு:
இது பிள்ளைகளுக்கு என்பதால் கெட்சப் மட்டும் போதுமானது, பெரியவர்களுக்கு ஒரு பக்கம் கீரின் கார சட்னியும், மறுபக்கம் டேட்ஸ் சட்னியும் வைத்து செய்யலாம்.அருமையான மாலை நேர சிற்றுண்டியும், குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கும் சூப்பரான டிபன். சுவைத்து மகிழுங்கள்.
Linking to Akila's Dish Name Starts with V
| Tweet | ||||||
Labels:
உருளை,
குழந்தை உணவு,
சாண்ட்விச்,
சைவம்,
பக்க உணவு
Saturday, November 24, 2012
கிரிஸ்பி ஆலு ஜீரா ஃப்ரை - Crispy Aloo Jeera Fry
கிரிஸ்பி ஆலு ஜீரா ஃப்ரை
தேவையான
பொருட்கள்
உருளை
கிழங்கு – 1 ( தோலெடுத்து பொடியாக
அரிந்த்து)
தாளிக்க
எண்ணை – 1
தேக்கரண்டி
கருவேப்பிலை
சிறிது
சீரகம் – 1
தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிக்கை
உப்பு
தேவைக்கு
காஷ்மிரி
ரெட் சில்லி பவுடர் – ¾ தேக்கரண்டி
செய்முறை
ஒரு வாயகன்ற
நான் ஸ்டிக் பேனில் எண்ணைய சூடாக்கி சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து
தாளிக்கவும்.
பொடியாக
அரிந்த உருளை கிழங்கை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
மிளகாய்
தூள், உப்பு சேர்த்து தீயின் தனலை குறைவாக வைத்து 3 மூடி போட்டு 3 நிமிடம் வேக
விடவும்.
பிறகு மூடியை
திறந்து விட்டு மேலும் முன்று நிமிடம் வதக்கி நல்ல ரோஸ்ட் ஆனதும் இரக்கவும்.
தயிர்
சாத்த்துக்கு பெஸ்ட் காம்பினேஷன் ஊறுகாயிக்கு அடுத்து உருளை வருவல் தான் பல
மசலாக்கல் சேர்த்து செய்யலாம், இது இரு சிம்பிளான ஆலு ஜீரா.
சாப்பிட
சாப்பிட மீண்டும் மீண்டும் சாப்பினும் போல் இருக்கும்.
ஆயத்த நேரம்: 4 நிமிடம்
சமைக்கும் நேரம் : 8 நிமிடம்
இங்கு நான் நடத்தும் பேச்சுலர் ஈவண்டுக்கு இதை இனைக்கிறேன்.
| Tweet | ||||||
Labels:
உருளை,
சைவம்,
பக்க உணவு,
பேச்சுலர் சமையல்,
பொரியல்
Wednesday, February 22, 2012
கொட மொளகா உருளை வறுவல் - Aloo Capsicum
ஆலு கேப்சிகம்
தேவையானவை
உருளை – 3
கேசிகம் -1 பெரியது
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு தூள் – தேவைக்கு
வெங்காயம் – 1
கெட்சப் – ஒரு தேக்கரண்டி
எண்ணை – 3 தேக்கரண்டி
செய்முறை
உருளையை நன்கு கழுவி தோலெடுத்து சின்னதாக வெட்டி வைக்கவும்.
கேப்சிகமையும் அரிந்து வைக்கவும்.
எண்ணையை காயவைத்து உருளையை சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணையில் வெங்காயம் சேர்த்து வதக்கி , கேப்சிகம், மிளகாய் தூள் உப்பு தூள் சேர்த்து வதக்கி வறுத்த உருளையை யும் சேர்த்து கிளறி கெட்சப் சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.
| Tweet | ||||||
Subscribe to:
Posts (Atom)









