Showing posts with label சுகப்பிரசவத்துக்கு. Show all posts
Showing posts with label சுகப்பிரசவத்துக்கு. Show all posts

Wednesday, December 18, 2013

சுக்கு பால் (கர்பிணி பெண்கள் சுகப்பிரசவத்துக்கு)


    கர்ப்பிணி பெண்கள் பிரசவ நேரத்தில் சுகப்பிரசவம் ஆக ஒன்பதாவது மாதம் பத்து நாட்களுக்கு பிறகு ஐம்பது கிராம் சுக்கை பொடித்து மூன்றாக பிரித்து ஐந்து நாளைக்கு ஒரு முறை இந்த பாலை காய்ச்சி குடிக்கவும். வயிற்றில் உள்ள வேண்டாத கேஸ் எல்லாம் வெளியாகிவிடும். ஒன்பதாம் மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் (மூன்று தடவை)தலைக்கு குளித்து விட்டு இதை காய்ச்சி குடித்தால் நல்லது.  தொடர்ந்து குடித்து வந்தால் வயிற்றில் உள்ள வாயு அகன்று சுகப்பிரசம் உண்டாகும்.



  • தேவையானவை
    சுக்கு - ஐம்பது கிராம்
    முழு பூண்டு - ஒன்று
    தேங்காய் - அரை மூடி
    பசும் பால் - ஒரு டம்ளர்
    இஞ்சி - ஐம்பது கிராம்
    தேன் - ஒரு மேசைக்கரண்டி
     நல்லெண்ணெய் - கால் டம்ளர்
      பனை வெல்லம் - முக்கால் டம்ளர்

  • செய்முறை 
சுக்கை நல்ல காயவைத்து தட்டி மிக்ஸியில் பொடித்து மூன்றில் ஒரு பங்கு எடுத்தால் போதும். மீதியை அடுத்த இரு முறை காய்ச்ச வைத்து கொள்ளவும்.
 பனை வெல்லத்தை இளக்கி வடிக்கட்டி வைக்கவும்.
 பூண்டை உரித்து வேக வைத்து மிக்ஸியில் அரைத்து  வைக்கவும்.
 தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும்.
 இஞ்சி சாறு எடுத்துக்கொள்ளவும்.
 எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி சட்டியை காயவைத்து நல்லெண்ணெயை ஊற்றி கலக்கியதையும் சேர்த்து நல்ல கிளறி கிளறி கொதிக்க விடவும்.
 பத்து பதினைந்து நிமிடம் கொதிக்கவிட்டு கடைசியில் தேன் கலந்து இறக்கி குடிக்கவும். சளி ஜலதோஷத்திற்கும் நல்லது.


இதில் கொடுத்துள்ள அளவுகளில் சுக்கை மற்றும் முன்று பாகமாக பிரித்து கொள்ளவும்.


இந்த அனைத்து பொருட்களும் கிடைக்காதவர்கள்

//வெரும் ரெடிமேட் ,சுக்கு பவுடரில் தேங்காய் பவுடர் சர்க்கரை சேர்த்து காய்ச்சி குடிக்கலாம்/


ஒரு டம்ளர் தண்ணீர்
ஒரு தேக்கரண்டி தேங்காய் பவுடர்
ஒரு தேக்கரண்டி சர்க்கரை

முன்றையும் ஒன்றாக கலந்து கொதிக்கவைத்து கர்பிணி பெண்கள் 9 மாதத்துக்கு பிறகு தினம் ஒரு டம்ளர் குடித்து வரலாம்.







இந்த குறிப்பு காயல்பட்டிணத்தில் இருந்து ஜாஸ்மீன் உடனே போடும் படி கேட்டதால் அவர்களுக்காக போட்டுள்ளேன்.


 கர்பிணி பெண்களுக்கு, சுகப்பிரசவத்துக்கு - பாரம்பரிய சமையல் வகை.