| Tweet | ||||||
Showing posts with label சாசேஜ். Show all posts
Showing posts with label சாசேஜ். Show all posts
Wednesday, August 14, 2013
சிக்கன் சாசேஜ் & வெஜ் ஃப்ரைட் ரைஸ்
குழந்தைகளுக்கு ரொம்ப பிடித்தது சாசேஜ், நூடுல்ஸ் , மற்றும் ப்ரைட் ரைஸ் உடன் சிக்கன் மட்டனுக்கு பதில் சாசேஜ் சேர்த்து சமைத்துகொடுக்கலாம்.
சிக்கன் சாசேஜ் & வெஜ்
ஃப்ரைட் ரைஸ்
1.
முட்டை - 1
மிளகு தூள் – ¼ + ¼ தேக்க்ரண்டி
எண்ணை + பட்டர் – 1 + ¼ + ¼ தேக்கரண்டி
உப்பு தூள் – தேவைக்கு
2.
சிக்கன் சாசேஜ் – 2 (Al Kabeer Halal Sausage)
மிளகாய் தூள் – ¼ தேக்க்ரண்டி
எண்ணை + பட்டர் – ¼ தேக்கரண்டி
உப்பு தூள் – ¼ தேக்கரண்டி
3.
எண்ணை + பட்டர் - 1
தேக்கரண்டி
சர்க்கரை –1/4 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பூண்டு –
1 பல்
பொடியாக நறுக்கிய
பச்சமிளகாய் 1
பொடியாக நறுக்கிய வெங்காய
தாள் – 1
மேகி கியிப் – ¼ துண்டு
சோயா சாஸ் – ½ தேக்கரண்டி
ஃப்ரோஜன் மிக்ஸட்
வெஜிடேபுள் – 2 மேசைக்கரண்டி
4.
உதிரியாக வடித்த சாதம் – 1
கப்
செய்முறை
1. முட்டையில் ¼ தேக்கரண்டி மிளகு தூள் மற்றும் ¼ தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க
அடித்து தவ்வாவில் கால் தேக்கரண்டி எண்ணை + பட்டர் ஊற்றி தோசையாக பொரித்து
தூளாக்கி வைக்கவும்
2. குக்க்கரில் சாசேஜை
மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசிலில் வேக வைத்து பொடியாக ¼ தேக்க்ரண்டி மிளகாய் தூள் ¼ தேக்கரண்டி உப்பு தூள் போட்டு ¼ தேக்கரண்டி பட்டர் + எண்ணையில் வறுத்து எடுத்து வைக்கவும்.
3. ஒரு வாயகன்ற நான் ஸ்டிக்
தவாவில் பட்டர் + எண்ணையை சேர்த்து சர்க்கரை, பச்சமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு
வதக்கவும்.
அடுத்து வெங்காய தாள் ,
மிக்ஸ்ட் வெஜிடேபுள் சோயா சாஸ், மிளகு தூள், உப்பு, மேகி கியுப் அனைத்தும்
சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்கவும்.
4. பொடித்து வைத்துள்ள்
முட்டை, உதிரியான சாதம் , பொரித்து வைத்துள்ள சாசேஜ் அனைத்தையும் ஒன்றன் பின்
ஒன்றாக சேர்த்து நன்கு ஒரு சேர கிளறி இரக்க்வும்.
( அரிசி 75 கிராம் 10
நிமிடம் ஊறவைத்து ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீர் கொதிக்க விட்டு அரிசியை சேர்த்து
உப்பு + எண்ணை விட்டு உதிரியாக வடித்து ஆறவைத்து வைக்கவும்.
( பச்சரிசி, பாசுமதி அரிசி
எல்லாம் உலை கொதித்து 7 நிமிட்த்தில் வெந்துவிடும்) இதை ஒரு நாள் முன்பே செய்து
பிரிட்ஜில் வைத்து மறுநாள் ப்ரைட் ரைஸில் சேர்க்கலாம்).
பள்ளி செல்லும்
குழந்தைகளுக்கும் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடலாம்.
பரிமாறும் அளவு : இரண்டு
குழந்தைகளுக்கு
ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்
Labels:
அசைவம்,
அயல் நாட்டு உணவு,
குழந்தை உணவு,
சாசேஜ்,
சாதம் வகைகள்
Saturday, November 17, 2012
சாசேஜ் பிரட் சாண்ட்விச் - Sausage Bread Sandwich
பிரெட் சாசேஜ் சாண்ட்விச்
தேவையானவை
பிரட் ஸ்லைஸ் - 6
சாசேஜ் - 2
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
சில்லி சாஸ் - அரை ஸ்பூன்
உப்பு தூள் - சிறிது
கெட்சப் - தேவைக்கு
பட்டர் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
சாசேஜை வேகவைத்து இரண்டாக அரிந்து பிரெட்டில் வைக்கும் சைஸுக்கு கட் செய்யவும்.
தவ்வாவில் பட்டர் போட்டு பிரட்டை இருபுறமும் சிவற விட்டு எடுக்கவும்.
அதே தவ்வாவில் சிறிது பட்டர் போட்டு சாசேஜை மிளகாய் தூள், உப்பு தூள், சில்லிசாஸ் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
ஒரு ப்ரெட்டில் கெட்சப் தடவி சாசேஜை வைத்து மீண்டும் சிறிது கெட்சப் ஊற்றி மற்றொரு பிரெட்டினால் மூடவும்.
குழந்தைகளுக்கு பிடித்த பிரெட் சாசேஜ் சாண்ட்விச் ரெடி.
சாசேஜ் சாண்ட்விச் இங்கே சென்று பார்க்கலாம்
| Tweet | ||||||
Labels:
அயல் நாட்டு உணவு,
சாசேஜ்,
சாண்ட்விச்,
லன்ச் பாக்ஸ்
Friday, November 9, 2012
சாசேஜ் ஃப்ரை - Sausage Fry/Sausage Plate
இங்கு உள்ள அனேக பிள்ளைகளுக்கு பிடித்தது இந்த சாசேஜ் தான்.
தேவையானவை
சிக்கன் சாசேஜ் - 4
உப்பு - 1/4 தேகக்ரண்டி
மிளகாய் தூள் (அ) மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
சோயாசாஸ் - 1/4 தேக்கரண்டி
பட்டர் - 1 தேக்கரண்டி
செய்முறை
குக்கரில் சாசேஜை முழுசாக சேர்த்து சோயாசாஸ் சேர்த்து ஒரு விசில் விட்டு இரக்கவும்.
வெந்த சாசேஜை சிறு துண்டுகளாக கட் செய்யவும்.
ப்ரை பேனில் ஒரு தேக்கரண்டி பட்டரை உருக்கி அதில் சாசேஜை வதக்கி இரண்டு நிமிடம் வதக்கி .மிளகாய் தூள் (அ) மிளகு தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கி இரக்கவும்.
இதை நீளவாக்கில் வெட்டி சாண்ட் விஜ் ஆகவும், பிரை செய்த சாசேஜை நூடுல்ஸ், பாஸ்தா , ஃப்ரைட் ரைஸில் சேர்த்தும் கொடுக்கலாம்.
சத்தமில்லாமல் தட்டு காலியாகிடும். பள்ளிக்கு கொடுத்தனுப்பினாலும் டிபன் பாக்ஸ் காலியாகிடும்.
| Tweet | ||||||
Wednesday, May 18, 2011
சாசேஜ் சாண்ட்விச் - Sasuage sandwich
சாசேஜ் என்றால் பிள்ளைகளுக்கு கொள்ளை பிரியம்.
அதை அபப்டியே சமைக்காமல் கொஞ்சம் குக்கரில் வேகவைத்து பொரித்து கொடுத்தால் நல்ல இருக்கும்.
| Tweet | ||||||
Labels:
அசைவம்,
அயல் நாட்டு உணவு,
சாசேஜ்,
சாண்ட்விச்,
டிபன் அயிட்டம்
Saturday, December 19, 2009
சாசேஜ் பிரட் டோஸ்ட்
பிரெட் = எட்டு ஸ்லைஸ்
சாசேஜ் = நான்கு
வெங்காயம் = ஒன்று
பூண்டு = இரண்டு பல்
டெமேட்டோ கெசப் = ஒரு மேசை கரண்டி
சில்லி சாஸ் = ஒரு தேக்கரண்டி
பட்டர் = அரை தேக்கரண்டி
சாசேஜை வேகவைத்து பொடியாக நருக்கவும்.
பட்டரை சூடுபடுத்தி வெங்காயம் பூண்டு போட்டு தாளித்து சாசேஜ் சேர்த்து சில்லி சாஸ், டொமேட்டோ கெட்சப் சேர்த்து , கொஞ்சமா உப்பு போட்டால் போதும் சாஸ் வகைகளில் உப்பு இருக்கும்
| Tweet | ||||||
Labels:
அசைவம்,
அயல் நாட்டு உணவு,
சாசேஜ்,
சாண்ட்விச்,
டிபன் அயிட்டம்
Saturday, November 7, 2009
தி ரீ இன் ஒன் (சாசேஜ், மின்ட் துவையல்,ஹல்வா சாண்ட்விச்) Three in one

ரொம்ப சிம்பிள் ஈசியா செய்து சாப்பிடும் காலை உணவு
குட்டி பன் = முன்று
சாசேஜ் = ஒன்று
ஹல்வா = ஒரு மேசை கரண்டி
மின்ட் துவையல் = ஒரு மேசை கரண்டி

தி ரீ இன் ஒன் (சாசேஜ், மின்ட் துவையல்,ஹல்வா சான்ட்விச்)
1. சாசேஜ் போன குறீப்பில் சொன்னபடி வேகவைத்து கொள்ளவும்.
புதினா துவையல் அரைத்து கொள்ளவும்.
புதினா துவையல் அரைத்து கொள்ளவும்.
2. ஏதாவது ரெடி மேட் ஹல்வா (அ) வீட்டில் செய்த கேரட், பீட்ரூட்,தக்காளி ஹல்வா ரெடியாக வைத்து கொள்ளவும்.
3. குட்டி பன்னை இரண்டாக அரிந்து அதை சிறிது பட்டர் தடவி நான் ஸ்டிக் பேனில் லேசாக சூடு படுத்தி கொள்ளவும்.
4. ஒரு பன்னில் துவையல், மற்றொரு பன்னில் ஹல்வா, இன்னும் ஒன்றில் சாசேஜ் பொடியாக அரிந்து வருத்தது வைத்து மூடவும்.
சுவையன முன்று வகையான சான்ட்விச் ரெடி.
அவரவர் விருப்பபடி குழந்ந்தைகளுக்கு சாசேஜ், பெரியவர்கள், மின்ட் சாண்ட்விச்சும் சாப்பிடலாம்.
| Tweet | ||||||
Labels:
அயல் நாட்டு உணவு,
சட்னி வகைகள்,
சாசேஜ்,
சாண்ட்விச்,
டிபன் அயிட்டம்
Subscribe to:
Posts (Atom)







