Wednesday, June 9, 2010

மாங்காய் தால்சா - mango dalsa



தேவையானவை

காய் வேக வைக்க:

காய் வகைகள் ( முருங்கை, கருனை, வாழை,கத்திரி) = அரை கிலோ
மாங்காய் - ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு

புளி - ஒரு சிறிய லெமன் அளவு (கெட்டியாக கரைத்து கொள்ளவும்)

பருப்பு வேக வைக்க:
கடலை பருப்பு - 100 கிராம்
துவரம் பருப்பு - 25 கிராம்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தாளிக்க:

எண்ணெய் - இரண்டு மேசை தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது -- ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - முன்று ஆர்க்
கொத்தமல்லி தழை - சிறிது மேலே தூவ




வேகவைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து மசாலாக்கள் எல்லாம் சேர்த்து காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.





புளியை கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். (மாங்காயை சேர்க்கவும்)



வெந்த பருப்பை அரைகக் வேண்டாம் மசித்தால் போதும் , பருப்பு, கொத்துமல்லி தழை சேர்த்து கொதிக்க விடவும்








கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள வைகளை தாளித்து சேர்க்கவும்.









சுவையான மாங்காய் தால்சா ரெடி

இதில் மாங்காய் கிடைகக் வில்லை என்றால் புளியின் அளவை சிறிது கூட்டி கொள்ளவும்.

இதில் இஸ்லாமிய இல்லங்களில் தால்சா என்றாலே எலும்பு சேர்த்து தான் செய்வார்கள்,
அது பகாறா கானாவிற்குகறி குழம்பு வைக்க்க வில்லைஎன்றால் சேர்த்து கொள்ளலாம்.

விருபப்படுபவர்கள் மட்டனின் முட்டெலும்பை பருப்புடன் சேர்த்து வேக வைக்கனும்.

100 வது பதிவு -2010,





46 கருத்துகள்:

kavisiva said...

எங்க அம்மா செய்யும் தால்ச்சாவை ஞாபகப் படுத்திட்டீங்க. நெய்ச்சோறுக்கு சைட் டிஷ் ஆக அம்மா செய்வாங்க

vanathy said...

Yummy recipe. Nice photos.

Asiya Omar said...

காய்கறி எல்லாம் போட்டு தால்ச்சா சூப்பராக இருக்கு ஜலீலா.

ஜெய்லானி said...

பெரும்பாலும் மட்டனுடன் சாப்பிட்டே பழகிவிட்டதால் தால்ச்சான்னு சொன்னாலே அது மட்டன் தால்ச்சாதான். ஆனா அதே டேஸ்ட் இருக்குமான்னு தெரியல...

எல் கே said...

looks yummyyy

Anonymous said...

naanga ellam thalichavula maanga podama seythathey illa.......pazhaya recipe yai thalaippai pottu mathinappula.....ithu werum thalchathaan ammani...

Jaleela Kamal said...

யாரு பதில் போட்ட அனானி தைரியம் இருந்தா பெயர போட்ட்டு கேளுஙக்
இது என் ரெசிபி, நான் எப்படி வேனுமுன்னா பேர போடுஙக் அத கேட்க நீ யார், இத உனக்கு வேலையா?

ஒ நீ தான் என் குறிப்புகளை திருடி தினகரனுக்கு அனுப்பவ்தா?

என் குறிப்புகள் பிரபல வலை தளஙக்ள் முன்றில் இருக்கும் அதே தான் இங்கும் போடுவேன் அத கேட்க நீ யாரு


மாங்காய் தால்சா என்றும் போடுவேன், வெஜ் தால்சா என்றும் போடுவேன், எலும்பு தால்சா என்றும் போடுவேன்.
போய் வேற வேல இருந்தா பாரு போ

ஸாதிகா said...

வாவ்..கலர்ஃபுல் தாளிச்சா.மாங்காய் போட்டால்த்தான் தாளிச்சாவுக்கு தனி சுவை கிடைக்கும்.சீஸனில் மாங்காய் வாங்கி தோல் நீக்க்கி துண்டுகளாக்கி ஃபிரீஸரில் போட்டு வைத்தால் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும்.

idris said...

eppo virunthu poda poringa

Anonymous said...

ஹ்ம்ம்ம்.. என்ன ஒரே வீட்டு ஞ்யாபகம் ஏற்படுத்துற ரெசிபியா போடுறீங்க.. :(

தால்சா சூப்பர்

SUFFIX said...

புதிய டெம்ப்ளேட் நல்லா இருக்கு.

Chitra said...

mouth-watering recipe. nice photos, too.... :-)

Menaga Sathia said...

தால்சா சூப்பர்ர்க்கா,புது டெம்ப்ளேட் அழகாயிருக்கு...

Vijiskitchencreations said...

சூப்பர் ரெசிப்பி. நல்ல நல்ல டெம்ப்ளட் செலக்‌ஷன்.இப்ப சூப்பரா பாஸ்டா ஜெட் வேகத்தில் ஒப்பன் ஆகுது.

Geetha6 said...

wav nice,

மங்குனி அமைச்சர் said...

Anonymous said...

naanga ellam thalichavula maanga podama seythathey illa.......pazhaya recipe yai thalaippai pottu mathinappula.....ithu werum thalchathaan ammani... ///


சார்/மேடம் உங்க தைரியத்த நான் பாராட்டுறேன் , நம்ம ராமராஜனுக்கு அப்புறம் அவர மாதிரி (என்ன தைரியமா படம் எடுப்பாரு? ) தைரியமான ஆள நான் இப்ப தான் பாக்குறேன், வீட்ல பழைய சேலை இருந்தா எடுத்து முக்காடு போட்டுகங்க ஏதாவது காத்து கருப்பு அடிச்சிட போடுது . (மேடம் பிளாக் நால கவுரதையா சொல்றேன் )

athira said...

ஆ.... ஜலீலாக்கா.... அழகான பூக்களோடு முகப்பு ஜொலிக்குது... கலர் எனக்கு ரொம்பப் பிடித்த கலர்.

மாங்காய் போட்டுச் செய்த தால்சா பார்க்கவே சூப்பராக இருக்கு. எனக்கு மாங்காய் போட்டுச் செய்ய விருப்பம் ஆனால் ஒருபோதும் நன்றாக வருவதில்லை.

மங்குனி அமைச்சர் said...

மாங்காய் - ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சை மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு////


மேடம், இதுல எனக்கு பல சந்தேகம் உண்டு , கேட்கவா ? (இப்பதான் ஆசியா மேடம் ப்ளாக்ல இதே மாதிரி கேட்டு வந்தேன் )

athira said...

ஜலீலாக்கா டென்ஷன் ஆகிடாமல் சிலவற்றுக்கு காக்கா போயிடவேண்டியதுதான்....(கண்டும் காணாமல் போங்கோ...)

சிநேகிதன் அக்பர் said...

பிரியாணிக்கு தால்ச்சா வைத்து சாப்பிட்டது. நன்றி மேடம்.

மங்குனி அமைச்சர் said...

athira said...

ஆ.... ஜலீலாக்கா.... அழகான பூக்களோடு முகப்பு ஜொலிக்குது... கலர் எனக்கு ரொம்பப் பிடித்த கலர்.

மாங்காய் போட்டுச் செய்த தால்சா பார்க்கவே சூப்பராக இருக்கு. எனக்கு மாங்காய் போட்டுச் செய்ய விருப்பம் ஆனால் ஒருபோதும் நன்றாக வருவதில்லை. ////


ஹி,ஹி,ஹி ஒத்து ஒன்னும் இல்லைங்க , முதல்ல சமைக்க தெரிஞ்சு இருக்கணும்

செந்தமிழ் செல்வி said...

ஜலீலா,
முகப்பு ரொம்ப அழகா இருக்கு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
தால்ச்சா.... அங்கு ஞாபகம் வருகிறது.

ஜெய்லானி said...

@@@Anonymous--//naanga ellam thalichavula maanga podama seythathey illa.......pazhaya recipe yai thalaippai pottu mathinappula.....ithu werum thalchathaan ammani... ///

அடப்பாவமே!! இன்னும் பிள்ளைக்கு பேரு வைக்கலையா!!! யாரு பெத்த பிள்ளையோ...இப்பிடி பேரு இல்லாம போய் தலையில குட்டு வாங்குதே!!

ஜெய்லானி said...

@@@athira--// எனக்கு மாங்காய் போட்டுச் செய்ய விருப்பம் ஆனால் ஒருபோதும் நன்றாக வருவதில்லை. //

அப்ப மாங்கொட்டையில செஞ்சி பாருங்க.. ஒரு வேளை உங்களுக்கு சரியா வரும் ஹி..ஹி..

Unknown said...

ஆஹா வாசம் மனம் தம்மாம் வரை மணக்குது. அருமை சகோதரி.

GEETHA ACHAL said...

ஆஹா...எப்படி அக்கா...தினம் தினம் புது டெம்பிளேட்டுன் பதிவு..கலக்கல்...

அன்புடன் மலிக்கா said...

அக்கா. எப்புடி எல்லாரும் பாராட்டிட்டாங்களா புதுவீட்டை. நம்ம செலக்‌ஷன் சூப்பராம். அப்பாடி இப்பதான் நிம்மதியாயிருக்கு. இல்லேன்னா அடி எனக்குள்ள விழுந்திருக்கும்.

தால்சாவும் சூப்பர்க்கா. ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..

Asiya Omar said...

ஜலீலா ,ப்ளாக் டெம்ப்லேட் அசத்தலாக இருக்கு.சூப்பர்.

Jaleela Kamal said...

/எங்க அம்மா செய்யும் தால்ச்சாவை ஞாபகப் படுத்திட்டீங்க. நெய்ச்சோறுக்கு சைட் டிஷ் ஆக அம்மா செய்வாங்க//

கவிசிவா வாங்க ஊரிலிருந்து வந்தாச்சா?

நெய் சோறுக்கு சூப்பராக இருக்கும் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்கநன்றி

Jaleela Kamal said...

நன்றி வானதி

ஆசியா இது நம் இஸ்லாமிய இல்லங்களில் செய்வது தான், கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

எல்.கே தமிலிஷ் சம்மிட் செய்ததற்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஜெய்லானி எல்லா இஸ்லாமியர்களும் இதை மட்டன் சேர்த்து தான் செய்வார்கள்.
நான் எனகென்னவோ பிடிக்கல ஆகையால் எப்போது இப்படி தான் செய்வது.

Jaleela Kamal said...

நன்றீ ரியாஸ்

அனானி போட்ட இரண்டாவது கமெண்டுக்கும் நான் கொடுத்த பதில் போதும் என்று நினைக்கிறேன்.

( ரொம்ப சந்தோஷம் உங்களுக்கு இருக்க்கிற வேலையெல்லாம் விட்டுட்டு வெட்டியா இருந்து என் குறிப்புகளை எங்க் எங்கு இருக்குன்னு மேய்ந்து கொண்டு இருப்பதுக்கு

Jaleela Kamal said...

//சீஸனில் மாங்காய் வாங்கி தோல் நீக்க்கி துண்டுகளாக்கி ஃபிரீஸரில் போட்டு வைத்தால் மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும்//

ஸாதிகா அக்கா இப்படியும் ரொம்ப நாளைக்கு பதப்படித்திவைக்கலா? இந்த டிப்ஸுக்கு
ரொமப் நன்றி

Jaleela Kamal said...

வாங்க ஜுலைகா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
பிள்ளைகள் நலமா?

Jaleela Kamal said...

நன்றி நாஸியா, வீட்டு ஞாபகம் வந்து விட்டதா? ம்ம் என்ன செய்ய


ஷபிக்ஸ் டெம்லேட் நல்ல இருகக ,அப்ப தால்சா நல்ல இல்லையா?


சித்ரா நன்றி, போட்டோ ரொம்ப நல்ல இருக்கு

நன்றி மேனகா

விஜி முன்பு மாற்றிய டிசைன் என்னாலேயே ஓப்பன் செய்ய முடியாம இருந்தது அதான் இதை இப்ப மாற்றி இருக்கேன்.
என்ன ஆளையே கானும்

நன்றி கீதா 6

Jaleela Kamal said...

அமைச்சரே என்ன டவுட் கேளுங்கள்

Jaleela Kamal said...

அதிரா முகப்பு நல்ல இருக்கா நன்றி

ஏன் மாங்காய் போட்ட நல்ல வரல,
சூப்பராக இருக்குமே.

அதிரா யார் வந்தாலும் இனி கண்டுகொள்வதா இல்லை , முன்பு போல் டென்ஷன் ஆவதும் இல்லை எனகென உள்ள நேரான பாதை தான் செல்வேன்/அக்கரை எடுத்து அட்வைஸ் பண்னதுக்கு ரொம்ப நன்றி

Jaleela Kamal said...

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி அக்பர்.

செல்வி அக்கா வாங்க முகப்பு நல்ல இருக்கா? வருகைக்கு மிக்க நன்றி, ஆமாம் இது பிளாக் தோழிகளுக்காக இங்கும்.

Jaleela Kamal said...

இளம் தூயவன் தால்சா தமாம் வரை மணக்குதா??
ரொம்ப சந்தோஷம். நன்றி.

கீதா ஆச்சல் சரியா ஓப்பன் ஆகல அதான் மாற்றி கொண்டு இருக்கேன்.

Jaleela Kamal said...

மலிக்கா புது டெம்ளேட் லிங்க் கொடுத்தமைக்கு ரொம்ப நன்றி.

பூந்தோட்டத்தில் ஒரு சமையலறை போல் இருக்கு, நன்றி.

மங்குனி அமைச்சர் said...

பார்ரா தைரியத்த ...........


///மாங்காய் - ஒன்று///

கல்லாமான்காய , மல்கோவவா, காசாலட்டா , பங்கான பள்ளியா .....................


///வெங்காயம் - இரண்டு///


சின்ன வெங்காயமா , பெரிய வெங்காயமா, உரிச்சதா , உரிக்காததா ...................


//தக்காளி - இரண்டு///

என்னா மேடம் திட்டுறிங்க , அதுவும் ரெண்டுவாட்டி


//பச்சை மிளகாய் - இரண்டு//

இருக்கிறது பாலைவனம், அதுல பச்சை மிளகாயா ???


//மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி//

தேக்கரண்டி , அப்படின்னா என்னா மேடம் ???

//தனியாத்தூள் - இரண்டு தேக்கரண்டி///

தனியா என்னா தூள் மேடம் போடணும் ??

///கொத்தமல்லி தழை - சிறிது///

சிரிதுன்னா " . " இந்த சைஸ் போதுமா மேடம் ?

//உப்பு - தேவையான அளவு///

எனக்கு ஒரு ரெண்டு டன் தேவைப்படும் பரவைல்லையா மேடம் ?

Jaleela Kamal said...

அமைச்சரே நெசமாலும் டவுட்டா?

மாங்காய் நல்ல கல்லான் மாங்காய்.

வெங்காயம் இரண்டு பெரியது
தக்காளி இரண்டு பெரியது

மிளகாய் தூள் - ஒரு தேக்க்கரண்டி என்பது 5 கிராம் அள்வு, தேக்கரண்டி என்றால் தேயிலை ஸ்பூன், 1 டீஸ்பூன்

தனியாதூள் என்றாஅல் கொத்துமல்லி தூள், கொரியாண்டர் பவுடர், உடனே க்கூகிள் ஆண்டவரான்னு கேட்க்கபடாது.


கொத்த் மல்லி தழை கைக்கு அரை கைப்பிடி.

உப்பு அவர்வர் விருபப்ம் உஙக்ள் இழ்டம் டன் கனக்கில் போட்டு சாப்பிடுங்கள்.

அமைச்சரே இதெல்லாம் சமைக்கிறவஙக்லுக்கு புரியும் நீர் ரவுண்டு க்ட்டி சாப்பிடும் ஆள் உமக்கு எபப்டி புரியும் ,

நானும் ரொமப் சீரியஸா உஙக்ளுக்கு பதில் சொல்ல்லிட்ட்டேன்.

இதிலிருந்து சமைகும் பேச்சுலர்களுக்கு இந்த சண்ட்தேகஙக்ள் இருக்கும் என்பது புரிகிறது,

இனி தெளிவா போடுகிறேன்.

தளிகா said...

ஜலீலக்காவின் வெஜ் தால்சாவின் சுவை இன்னும் என் நாவிலேயே இருக்கு..இன்றும் கூட செய்ய போகிறேன்..தமிழ் சமையல் ப்லாகை பொறுத்தவரை எனக்கு தெரிஞ்சு உங்களை அடிக்க ஆளே இல்லை..ஆங்கிலத்திலும் இருந்தால் சந்தேகமே இல்லை உங்களுக்கு தான் மகுடம்

Jaleela Kamal said...

தளிகா வருகைக்கு மிக்கநன்றி, ரொம்ப சந்தோஷம்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க் ந்ன்றி

Priya Srinivasan - I Camp in My Kitchen said...

So new to me jaleela!!! Bookmarking it!!!!

Unknown said...

அருமையான ரெஸிப்பி..

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா