Showing posts with label ஐஸ்கிரீம். Show all posts
Showing posts with label ஐஸ்கிரீம். Show all posts

Tuesday, December 19, 2017

மாதுளை குச்சி ஐஸ் - Pomegranate popsicles



மாதுளை பழம் கர்பிணி பெண்களுக்கு மிகவும் உகந்தது, கேன்சர் நோயை கட்டு படுத்தும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யும்.
மலட்டு தன்மை நீங்க ஆண் பெண் இருவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதுளை முத்துகளை சாப்பிட்டு வர குழந்தை பேறு உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இரத்த சோகையை சீராக்கும். வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும்.


அதை குச்சி ஐஸ்சாகவும் செய்து சாப்பிடலாம்








மாதுளை குச்சி ஐஸ்

மாதுளை – 6 பழம்
தண்ணீர் – 50 மில்லி
ஐஸ் கட்டிகள் – 5
ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் – 2 துளி
சர்க்கரை – அரை கப்
குங்குமபூ – சிறிதளவு
வடிகட்ட மஸ்லின் துணி

முதலில் மாதுளை முத்துக்களை பிரித்து எடுத்து கொள்ளுங்கள்
மிக்ஸியில் மாதுளை முத்துக்கள், ஐஸ்கட்டிகள், மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த கலவையை மஸ்லின் துணி அல்லது வடியில் வடித்து கொள்ளவும்.
அதில் சிறிது சாப்ரான் சேர்த்து ஐஸ் கிரீம் மோல்டில் ஊற்றி பிரீஜரில் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
சுவையான மாதுளை குச்சி ஐஸ் ரெடி.

ஐஸ் கிரீம் மோல்ட் இல்லாதவர்கள் டீ குடிக்கும் கிளாஸில் வைத்து 4 மணி நேரம் முதலில் குளிர வைத்து இடையில் எடுத்து இரண்டு டூத்பிக்கை நடுவில் சொருகி  வைத்து மீண்டும் 4 மணி நேரம் வைக்கவும்.



Pomegranate popsicles
Pome Popsicle perfect summer treat
Pomegranate - 6 fruit
water - 50 ml
ice cube - 5
Strainer or muslin cloth
Strawberry essence – 2 drops
sugar – ½ cup 
saffron
In a blender (mixie), add Pomegranate and water,ice cubes and sugar blend well.
Strain the juice in a strainer or muslin cloth. Add saffron and
pour the pome juice  mix into ice cream mould keep it inside the freezer and refrigerate for 6 to 8 hours.
Enjoy.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, September 14, 2013

ஃபலூடா-Falooda








  • பாலுதா அனைவருக்கும் பிடிக்கும் ஒரு டெசர்ட் , இங்குள்ள பாக்கிஸ்தானி , இந்தியன்  ரெஸ்டாரண்ட்களில் உணவு பட்டியலுல் முதன்மையான லிஸ்டில் இருப்பது பாலூதா..

  • நான் வெயில் காலங்களிலும், நோன்புகாலங்களிலும் அடிக்கடி செய்வதுண்டு. இதை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல விதங்களில் தயாரிக்கலாம்.நல்லதொரு பில்லிங், காலை டிபனை தவிர்த்து கூட இது போல ஒரு டம்ளர் தயாரித்து சாப்பிடலாம்.
  •  ரொம்ப ஈசியாக தயாரிக்கலாம் பிள்ளைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் அருமையான டெசர்ட்.என் சுலபமான பாலுதா குறிப்பை இங்கு சென்று பார்க்கவும்.

  • இது அறுசுவை தோழி மாலதி அக்காவின் குறிப்பு


    How to make Falooda?
  • பாலூடா செய்வது எப்படி??

  • கிழே உள்ளது அறுசுவை தோழி மாலதி அக்காவின் ஃப்லூடா
  • ஐஸ்க்ரீம் செய்ய தேவையான பொருட்கள்:
  • (அல்லது கடையில் விற்கும் ஐஸ்க்ரீம் 2 கப் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்)
  • பால் - அரை லிட்டர்
    ஓரம் நீக்கப்பட்ட ப்ரெட் ஸ்லைஸ் - 2
    சர்க்கரை - அரை கப்
    எசன்ஸ் - அரை தேக்கரண்டி


  • ஃபலூடாவிற்கு தேவையான பொருட்கள்:


  • ஊற வைத்த சேமியா - ஒரு கப்
  • ஜெல்லி - ஒரு கப் (ஜெல்லி செய்முறை அதன் டப்பாவிலேயே எழுதி இருக்கும்)
    நறுக்கிய மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழை, திராட்சை - 2 கப்
    ட்ரை ஃப்ரூட்ஸ் - கால் கப்
    செர்ரி பழம் - 5







  • ஐஸ்கிரீம் செய்முறை:
  • பாலை சுண்ட காய்ச்சவும். சூடான பாலில் ப்ரெட் ஸ்லைஸை போட்டு அப்படியே மூடி ஆற விடவும்.
    பால் ஆறியதும் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
    இந்த கலவைவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி மூடி ஃப்ரீஸரில் 5 மணி நேரம் வைக்கவும்.
    இப்போது ஐஸ்க்ரீமை எடுத்து எசன்ஸை கலந்து மறுபடியும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.



  • நன்றாக கலந்து மிருதுவானதும் கிண்ணத்தில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து விடவும்.
  • 5 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். இப்போது ஐஸ்க்ரீம் ரெடியாகி விட்டது.
    ஒரு நீளமான கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள்.
    அதில் முதலில் ஒரு கரண்டி ஊற வைத்த சேமியாவை போடவும்.
    அடுத்து கருப்பு திராட்சை, அதன்மேல் மாம்பழம், அடுத்து சிகப்பு கலர் ஜெல்லி, இப்ப கொஞ்சம் ஐஸ்க்ரிம், அதன் மேல் மற்ற பழ வகைகள் போடவும்.
    கடைசியாக சிறிது ஐஸ்க்ரீமை வைத்து அதன் மேல் ட்ரை ஃப்ரூட்ஸை தூவி மேலே ஒரு செர்ரி பழத்தை வைத்து அலங்கரித்து கொடுங்கள்.

 இது என் குறிப்பு சுட்டியை கிளிக்கி பார்க்கவும்  - ரிச் ஃப்ரூட் பாலூதா  - Rich Fruit Falooda சமையல் அட்டகாசங்கள்




பாலுதா /ஃபலூடா/Falooda - cookbookjaleela



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam