Showing posts with label கருனை கிழங்கு. Show all posts
Showing posts with label கருனை கிழங்கு. Show all posts

Tuesday, May 8, 2012

கருனை கிழங்கு சிப்ஸ் - Yam Chips





கரக்கு மொருக்குன்னு சாப்பிட சூப்பாராக இருக்கும். இதை ருசி பார்ர்த்து விட்டால்  விடவே மாட்டீங்க.. 
கருனை கிழங்குன்னு நான் சொல்வது மண்டை சைஸுக்கு பெரிசா இருக்கும். சிலருக்கு இதை அரியும் போது கை அரிக்கும் ஆகையால் புளி தண்ணீரில் கையை நனைத்து கொள்ளனும் என்பார்கள்.



கருனை கிழங்கு சிப்ஸ்

இது எனக்கு ரொம்ப பிடித்த சிப்ஸ்.அம்மா வீட்டில் இருந்து கிரான்மா வீட்டுக்கு போகும் வழியில் பேங்க் வாசலில் தள்ளு வண்டியில் இதை நிறைய பொரித்து கொண்டு இருப்பார். எனக்கும் கிரான்மாவுக்கும்,  இரண்டு பொட்டலம் வாங்கி சொல்வேன், ஆனால் அது சற்று தடிமனாக இருக்கும்






தேவையானவை
கருனை கிழங்கு  - கால் கிலோ
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு தூள் – ½ தேக்கரண்டி (தேவைக்கு)



செய்முறை
கருனைகிழங்கை மேல் தோல் சீவி கழுவு தடிமனாக முன்று இன்ச் அளவுக்கு கட் பண்ணி கொள்ளவும்.
நீளவாக்கில் முன்று இன்ச், அகலம் முக்கால் இஞ்ச் இருக்குமாறு கட் பண்ணி கொள்ளவும்.


எண்ணையை காயவைத்து மிதமான தியில் மொருகலகாக பொரித்து எடுத்து ஆறவைக்கவும். 

ஆறியதும் உப்பு, மிளகாய் தூள் தூவி நன்கு குலுக்கி விடவும்

மிளகாய் தூளுக்குபதில் மிளகுதூள் மற்றும் அவரவர் விருப்ப்படி சாட் மசாலா, ஆம்சூர் மசாலா இப்படி தூவிக்கொள்ளலாம்.

சிப்ஸ் தயிர் சாதம், புளிசாதம், லெமன் ரைஸ் பண்ணும் போது கண்டிப்பாக செய்வேன். ஆனால் ஓவ்வொருத்தருக்கு ஓவ்வோரு சிப்ஸ் பிடிக்கும். எனக்கு கருனை கிழங்கு சிப்ஸ், என் பெரிய பையனுக்கு வாழைக்காய் சிப்ஸ், சின்ன பையனுக்கு உருளை சிப்ஸ்.
இதில் உள்ள அளவு இரண்டு பேர் சாப்பிடலாம்.
போன பதில் கேட்டு கொண்டபடி சிப்ஸ் செய்து போட்டாச்சு. செய்து பார்த்து உங்கள் பொன்னான கருத்துக்களை தெரிவிக்கவும்.

கருனை கிழங்கு தால்சா
கருனை கிழங்கு வடை