Showing posts with label கருஞ்சீரகம். Show all posts
Showing posts with label கருஞ்சீரகம். Show all posts

Sunday, November 20, 2011

ராகி பார்லி,கருஞ்சீரக தட்டை - Ragi Barley ,Nijella Seed thattai


மருத்துவ குணமுள்ள சூப்பர் ஸ்நாக்ஸ்.





தேவையானவை


ராகி பவுடர் – அரை டம்ளர்
பார்லி பொடித்த்து – அரை டம்ளர்
உளுந்து வறுத்து பொடித்தது – ஒரு மேசை கரண்டி
அரிசி மாவு – ஒரு மேசை கரண்டி
மிளகு கொர கொரப்பாக திரித்தது – ஒரு தேக்கரண்டி
ஓமம் (AJWAIN)– அரைத்தேக்கரண்டி
இட்லி சோடா மாவு – அரை சிட்டிக்கை
கருஞ்சீரகம் (NAJILA SEED)– அரை தேக்கரண்டி
உப்பு – ருசிக்கு தேவையான அளவு
பட்டர் – ஒன்னறை மேசைகரண்டி
கடலை பருப்பு – ஒரு மேசைகரண்டி





செய்முறை




கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ராகி மாவு, அரிசிமாவு, பார்லி உளுந்து பொடித்தது, மிளகு , கருஞ்சீரகம், ஓமம்,பட்டர் , உப்பு , இட்லி சோடா அனைத்தையும் சிறிது நீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
பிசைந்த மாவை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டி ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.
சுவையான சூப்பரான டயட் தட்டை ரெடி




20 தட்டைகள் வரும்.


Sunday, April 24, 2011

ஓமம், கருஞ்சீரக குஜராத்தி ஆட்டா பூரி - ajwan,nigella seed gujarati puri


-- 

AJWAIN NIJELLA SEED PURI

குஜராத்தி ஆட்டா -  அரை கிலோ

தேவையானவை

கருஞ்சீரகம், ஓமம், - தலா ஒரு ஸ்பூன்
மிளகு தூள் - அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
சர்க்கரை - ஒரு ஸ்பூன்
எண்ணை - 2 மேசை கரண்டி
தண்ணீர் -  200 மில்லி ( தேவைக்கு)

எண்ணை பொரிக்க தேவையான அளவு

செய்முறை

கருஞ்சீரகம், ஓமம், மிளகு லேசாக வறுத்து, மாவில் கலக்கவும்.
மேலும் உப்பு மஞ்சள் தூள்,சர்க்கரை, எண்ணை கலந்து தேவைக்கு தண்ணீர் சிறிது சிறிதாக விட்டு மாவை நன்கு பிசையவும்.பிசந்த மாவை 1 மணி நேரம் ஊறவிடவும்.

ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக போட்டு பூரிகளாக இட்டு சுட்டு எடுக்கவும்.

சுவையான மருத்துவ குணமுள்ள பூரி ரெடி, தொட்டு கொள்ள வெஜிடேபுள் பாஜியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


இருமல் சளி தொல்லைக்கு இது போல் அடிக்கடி சப்பாத்தி, ரொட்டி, பூரி செய்வதுண்டு

டிஸ்கி: இங்குள்ள மில்லில் வகை வகையான மாவு வகைகள் கிடைக்கின்றன,
ராகி,கம்பு, ஜோவர்(தினை)குஜராத்தி ஆட்டா, பஞ்சாபி ஆட்டா, டயட் ஆட்டா, கோதுமை மாவு, போன்ற பல வகை, மில் போய் வாங்கினா எல்லா வகை மாவும் மொத்தமா வாங்கி வந்துடுவேன், அதில் குஜராத்தி ஆட்டாவில் ஓமம் , கருஞ்சீரகம் சேர்த்து இந்த பூரியை செய்துள்ளேன்.

சென்னை ஃப்ளாசாவுக்கு வாங்க