Showing posts with label கேன்சர். Show all posts
Showing posts with label கேன்சர். Show all posts

Monday, October 29, 2018

Restaurant style Red Spinach and Beet Spring Roll Healthy Version by Jaleelakamal






Beetroot is a Cancer Cure Veggie and it's cures constipation problem, intake of beetroot it will increase your hemoglobin level. very good for pregnant ladies, it is also cure problems like itching and kidney stone.Normally all are using boiled potato instead we can add beetroot and carrot , it taste very different 






Please like ,comment, subscribe samaiyal attakaasam you tube channel and share with your friends and relatives .


சிவப்பு பாலக் கீரை பீட்ரூட் ஸ்ரிங் ரோல் /சைனீஸ் ஸ்பிரிங் ரோல்



சிவப்பு பாலக் கீரை பீட்ரூட் ஸ்ரிங் ரோல் /சைனீஸ் ஸ்பிரிங் ரோல்

 Restaurant style Spring Roll Healthy  Version

ஸ்பிர்ங் ரோல் செய்ய தேவையான பில்லிங்

===============================================

சிவப்பு பாலக்கீரை – பொடியாக அரிந்தது அரை கப்

பீட்ரூட் துருவியது – அரை கப் நீளவாக்கில் துருவியது

வெங்காய தாள் – அரை கப் பொடியாக அரிந்தது

கேரட் - அரை கப் நீளவாக்கில் துருவியது

ஸ்வீட் சோய் சாஸ் – ஒரு தேக்கரண்டி

வெள்ளை மிளகு தூள் – அரை தேக்கரண்டி

உப்பு – அரை தேக்கரண்டி

கருப்பு மிளகு தூள் – கால் தேக்கரண்டி

சில்லி டொமேட்டோ கெட்சப் – ஒரு தேக்கரண்டி

லெமன் ஜூஸ் – அரை தேக்கரன்டி

கார்லிக் பட்டர் – ஒரு தேக்கரண்டி

ஆலிவ் ஆயில் – ஒரு தேக்கரண்டி



ஸ்ப்ரிங் ரோலுக்கான மேல் மாவு



மைதா – ஒரு கப்

நெய் – ஒரு தேக்கரண்டி

சர்க்கரை – அரை தேக்கரண்டி

உப்பு -  அரை தேக்கரண்டி

தண்ணீர்- அரை டம்ளர் ( தேவைக்கு)




செய்முறை



முதலில் மைதாவில் நெய் , சர்க்கரை , உப்புசேர்த்து கலக்கி தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும், கெட்டியாக பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

ஒரு வாயகன்ற வானலியில் மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்களையும் வதக்கி முக்கால் பாகம் வேக வைத்து ஆறவைக்கவும்.

பிசைந்த மாவை சிறிய பூரிகளாக திரட்டி அதில் ஒரு மேசைகரண்டி அளவு ஆறவைத்த பில்லிங்கை வைத்து மேல்பாகத்தை லேசாக மூடி இரண்டு சைடிலும் மடித்து சிலிண்டர் ஷேப்பில் உருட்டவும்.

வானலியில் எண்ணையை காயவைத்து அதில் சிலிண்டர் ஷேப்பில் செய்து வைத்த ஸ்பிரிங் ரோலை பொரித்து எடுக்கவும்.

ஒவ்வொன்றையும் இரண்டாக வெட்டி கெட்சப் உடன் பரிமாறவும்.



Beetroot is a Cancer Cure Veggie and it's cures constipation problem, intake of beetroot it will increase your hemoglobin level. very good for pregnant ladies, it is also cure problems like itching and kidney stone.Normally all are using boiled potato instead we can add beetroot and carrot , it taste very different 









https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Sunday, October 23, 2016

மிராக்கல் புட்டிங் (ABC Agar Agar)





கேன்சர் விழிப்புணர்வு பிங்க் மாதம்

மிராக்கல் புட்டிங்  (ABC Agar Agar)
தேவையான பொருட்கள் 
ஒரு டம்ளர் மிக்ஸ்ட் (பீட்ரூட் கேரட் ஆப்பில்) ஜூஸ்
5 கிராம் அகர் அகர்  பொடித்து கொள்ளவும்
சர்க்கரை (அ) வெல்லம் தேவைக்கு
தண்ணீர் – அரை கப்



செய்முறை
அகர் அகரை பொடித்து தண்ணீரில் ஊறவைத்து ஜூஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.அகர் அகர் கரைந்து அரைகப் வற்றியதும் சிறிது ரூ ஆப் ஷா எசன்ஸ் ஊற்றி ஒரு வாயகன்ற தாம்பாளதட்டில் ஊற்றீ ஆர வைத்து குளிரூட்டியில் குளிரவைத்து செட்டானதும் வேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.


கேன்சர் நோய் வராமல் தடுக்க பீட்ரூட் ஆப்பில் கேரட் சேர்ந்த ஜூஸ் (அ) சூப் (அ) மேலே சொன்னது போல கடல் பாசி செய்து சாப்பிடலாம்





Breast Cancer awareness Month


உலகில் உள்ள அனைத்துபெண்களும் வருடம் ஒரு முறை கேன்சர் டெஸ்ட் எடுத்துகொள்வது நல்லது.

இந்த மாதம் பின்க் மாதம் கேன்சர் விழிப்புணர்வு


சத்தான ஆகரங்களில்சமையல் செய்து உண்டு நீங்க ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்கள் குடும்பம் முழுவதும் ஆரோக்கியம் பெறும்.






Beetroot Peanut Raitha


Beetroot Fish Cutlet


Pome Cooler

கேன்சர் நோய் வராமல் தடுக்க கூடிய உண்வுவகைகளை சமைத்து சாப்பிடுவதன் மூலம் நாம் உடல் நலத்தை நல்ல முறையில் பார்த்து கொள்ளலாம்.

எலுமிச்சை சாறு சூடான வெண்ணீரிலோ அல்லது பிளாக் டீயிலோ அல்லது சாலடிலோ அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, October 9, 2014

புற்றுநோய்க்கு (Blood Cancer) மருந்து கண்டுபிடிப்பு




புற்றுநோய் இன்னும் பெரிய உயிர்கொல்லியாய் பல பேரை தாக்கி கொண்டு தான் இருக்கிறது, நிறைய பேர் மறந்து போயிருப்பீர்கள்.

அடிக்கடி இது போன்ற பதிவுகள் போடுவதன் மூலம் சிலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்


சரியான மருத்துவம் மூலம் சிலருக்கு சரியாகி நல்லபடியாக வாழ்ந்துகொண்டி இருக்கிறார்கள்.சிலருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இறந்து கொண்டும் இருக்கிறார்கள்.

உண்ணும் உணவை சரி படுத்தி கொண்டாலே பல நோய் களும் புற்று நோயும் வராமல் நம்மை பாதுகாத்துகொள்ளலாம்.

கண்டிப்பாக ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் வருடம் ஒரு முறை உடம்பை முழுவதும் பரிசோதனை செய்து கொளவது நல்லது.

நாள்பட உள்ள இருமல் தலை வலி போன்றவைகளை கண்டுக்காமல் விடாமல் உடனே பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ஏற்கனவே இந்த புற்றுநோய்க்கு பல பதிவுகள் போட்டுள்ளேன்.
இதற்காக கட்டுரை மற்றும் டிப்ஸ் எழுதி  , டாக்டர்களால் தேர்வு செய்ய பட்டு பரிசும் பெற்றுள்ளேன்.

ஆறுதல் பரிசாக ருபாய் 1000 க்கு உரிய புத்தகங்களும் உடுமலை டாட் காம் முலமாக .கிடைக்க பெற்றேன்.

அந்த பதிவுகளை மீண்டும் உங்கள் அனைவருக்கும் நினை படுத்து கிறேன்.


  1. கேன்சர் நோயிக்கான உணவுவகைகள்.
  2. ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை
  3. புற்றைவெல்வோம் வருமுன் காப்போம். (பெண்களுக்கு மட்டும்)
  4. புற்றை கொள்ளும் செந்நிற பானம்
  5. கேன்சர் அபாயம் - லேடிஸ் ஸ்பெஷல் மாத பத்திரிக்கையில் என் பதிவு.

இது என் அனுபவத்தில் சந்தித்தவர்களை பற்றி எழுதிய சொந்த ஆக்கங்கள். படித்து பயனடைந்து கொள்ளுங்கள்.


=======================
புற்றுநோய்க்கு (Blood Cancer) மருந்து கண்டுபிடிப்பு!******
Medicine has been found for blood cancer. 


அல்லாஹ்வுடைய சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார்கள் மீதும் என்றென்றும் நிலவட்டும்மாகுக.

இதுவரை கொடிய நோயாக


இருந்த இரத்த புற்றுநோயை(Blood Cancer)-யை 


முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து 

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.....


தேவையுள்ளவர்கள் தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



அணுக வேண்டிய முகவரி :----


Cancer institute Adyar,
East Canal Bank Road,
Gandhi Nagar Adyar,
Chennai-600020 Land Mark,
Near Michael School.
PHONE:---------
044 -24910754
044 -24911526
044 -22350241



மேலே உள்ள தகவல் எனக்கு மெயில் மூலம் வந்தது,

பலருக்கு இந்த அட்ரஸ் உதவும் என்று தான் பகிர்ந்துள்ளேன்.


 இதில் சொல்லப்பட்டிருந்த மருந்தின் பெயரை மட்டும் நீக்கி விட்டேன். 

என்ன மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை படி கேட்டு சாப்பிடுங்கள்.


======================

கேன்சர் நோயாளிகள் சாப்பிட வேண்டிய முக்கியமான உணவு.

1. அவித்த முட்டை வெள்ளை கரு மட்டும்  மூன்று

2. ஆப்பில் அல்லது ஆப்பிள் ஜூஸ்

3. சிக்கன் எலும்பு சூப்

4. காய்கறி சூப்

5. ராகி கஞ்சி


Cancer Awareness


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, June 11, 2014

பச்ச மாங்காய் சட்னி - Manga Chutney (கர்பிணி பெண்களுக்கு)









கேரளா ஸ்பெஷல் மாங்காய் சட்னி கர்பிணி பெண்கள் மசக்கையின் போது ஏறபடும் வாய் கசப்பிற்கு இந்த சட்னி மிகவும் அமிர்தமாக இருக்கும்.இதில் காஞ்ச மிளகாய் 5, 6 போட்டு கார சாரமாக செய்யனும். சாததில் போட்டு பிசைந்து சாப்பிடும் போது காரம் தெரியாது.நான் இதை தோசைக்கு தொட்டு கொள்ள அரைத்ததால் காரம் குறைவாக போட்டு இருக்கிறேன்.

Pacha manga sadni
Kerala Special Raw Mango Chutney 
தேவையான பொருட்கள்
மாங்காய் -  1
தேங்காய் – அரை கப்
காஞ்ச மிளகாய் – 3 எண்ணிக்கை
உப்பு – தேவைக்கு
சின்ன வெங்காயம் – 3 எண்ணிக்கை
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – ஒரு பல்

தாளிக்க
எண்ணை – கால் தேக்கரண்டி
கடுகு கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – 5 இதழ்


செய்முறை

மாங்காயை தோல் நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவும்.
மிக்சியில் மாங்காய், தேங்காய், உப்பு,மிளகாய், இஞ்சி பூண்டு, சின்ன வெங்காயம் அனைத்தையும் மிக்சியில் இட்டு அரைக்கவும்.
கடைசியாக கடுகு கருவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.
தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான மாங்காய் சட்னி ரெடி.
சாதத்தில் பிசைந்து சாப்பிட செய்வதாக இருந்தால் இந்த அளவிற்கு மொத்தம் 5 வர மிளகாய் சேர்க்கவேண்டும். அரைப்பது மையாக அரைக்க வேண்டாம்.சிறிது கொர கொரப்பாக அரைத்தால் சாதத்தில் போட்டு பிசறி சாப்பிட நன்றாக இருக்கும்.


படம் முதல் தடவை செய்யும் போது சரியாக எடுக்க வில்லை. ஆகையால் மறுபடி 29.10.14 அன்று சேர்த்துள்ளேன்
பரிமாறும் அளவு : முன்று நபர்களுக்கு
ஆயத்த நேரம் – 7 நிமிடம்.
ஆக்கம்
ஜலீலா கமால்
துபாய்



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/