
ரேடியோ படம் சிங்கக்குட்டி பதிவில் இருந்து சுட்டது , நன்றி சிங்கக்குட்டி.
ஞாயிற்று கிழமைகளில் மதியம் சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் சேர்ந்து
வானொலியில் நாடகம் கேட்டு கொண்டே கேரம் ஆடுவது ரொம்ப நல்ல இருக்கும்.
எப்பவும் எங்கும் எப்ப லேட்டா வந்தாலும் ஜலி ஜலீ என்று சொல்லி தான் கதவை தட்டுவார், அம்மா கோச்சுக்குவாங்க ஆமாம் ஜலியா வந்து கதவை திறக்கிறாள் என்பார்கள்.
இப்பவும் எப்ப போன் செய்தாலும் மனக்கழ்டமா இருந்தால் ஒன்றும் கவலை படக்கூடாது தைரியமா இருக்கனும், அனாவஷிய செலவு செய்ய கூடாது. அது அது நடப்பது தானா நடக்கும் என்பார்.அவர் சொல்லும் போதே பாதி கவலை போன மாதிரி ஆகிடும்.
ஆச்சு 35 வருடம் கடையிலேயே இருந்து அண்ணன் தம்பி எல்லோரையும் கவனித்து, அக்கா தங்கைகள் , அவர்கள் பிள்ளைகள்,பேத்திகள் வரை உதவி, நாங்க தலை எடுக்கும் போது கையில் ஒன்றும் இல்லை, பிறகு பத்து வருடகாலமாக நீச்சல் அடித்து பிறகு சவுதி சென்று சம்பாதித்து எல்லோரையும் கரை சேர்த்தார் . பிறகு அங்கேயே ஸ்டோரில் எண்ணை தடுக்கி விழுந்து கால் நடக்க முடியாம ஆப்ரேஷன் செய்து பிற்கு பணி தொடர முடியாமல் ஊருடன் வந்துவிட்டார்.
அப்பா எங்கு சென்றாலும் நடந்து தான் போவார் அவர் கூட் நடக்கனும் என்றால் நாங்க கூட் ஓடதான் செய்யனும் அப்படி ஒரு ஸ்பீட்.நானும் இங்கு வந்ததிலிருந்து இங்கு சம்பாத்தித்து முடிந்த வரை அப்பாவிற்கு உத்வினேன், அதில் என்க்கு மிக மனதிருப்தி.
கால் ஆப்ரேஷனில் இருந்து இப்ப வேகமாக நடப்பது சற்று சிரமம் தான்.
ரொம்ப கவலையாக இருக்கும் இங்கிருந்து போன் செய்தாலே டாடி கால் வலி இல்லாம இருக்கா பாத்ரூம் போனா பாத்து கால வையுங்கோ. படி இறங்கும் போது அவசர பட வேண்டாம், மெதுவா இரங்குங்கள் மழை பெய்தால் வெளியில் போகும் போது ஒழுங்கான செருப்ப போட்டு கொண்டு போங்க டாடி. போன் வந்த அவசரமா ஓடி வரவேண்டாம் என்று சொல்வேன்.
சின்ன வயதில் கூட இருந்ததோடு சரி அதற்கு பிறகு இது வரை பிரிந்து தான் இருக்கிறோம். படிக்கும் காலத்தில் பொருள் ஈட்ட பிரிந்து இருந்தார், கல்யாணம் ஆகி நாங்களும் சிறிதுகாலத்தில் பிரிந்தாச்சு. அப்ப வெக்கேஷன் லீவில் பார்ப்பதோடு சரி, ஆனால் முன்பு அடிக்கடி போன் செய்ய முடியாது. சவுதியில் இருக்கும் போது தனியா இருக்கிறாரே என்று அடிக்கடி போன் செய்து விசாரித்து கொண்டே இருப்பேன். இப்பவும் தோன்றூம் போதெல்லாம் பேசுவேன்.
அப்பாக்கள் என்றுமே கிரேட் தான் அவர்களை பற்றி சொல்லனுமுன்னா சொல்லி கொண்டே இருக்கலாம்.
///அப்பாக்களை பற்றி சுவரசியமான மறக்க முடியாதவை நிறைய வே இருக்கும் நீங்கள் இந்த பதிவை படிப்பவர்கள் தொடர நினைத்தால் தொடரலாம்///
இந்த பதிவில் சேகர் அவர்கள் பழைய சாதத்தை பற்றி அருமையா சொல்லி உள்ளார் பருங்கள்

தோழி ஆசியா அன்பாக விருதுகள். மிக்க நன்றி ஆசியா.
விருது களுக்கு மிக்க நன்றி ஆசியா/
எல்லோரும் வாங்கி விட்டார்கள் யாருக்கு கொடுப்பத்து. யோசிக்கிறேன்.இதற்கு தனியாக பதிவு போடனும், முடிந்த போது போடுகிறேன்.

இது என் 500 வது பதிவு
இந்தாங்க எல்லோரும் கேக் எடுத்து கொள்ளுங்கள்
இங்கு இவ்வளவு தூரம் வருகை தந்து என் பதிவுக்கென்று நேரம் ஒதுக்கி படித்து கமெண்ட் அளித்த அனைத்து பதிவுலக தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி,

தொடர்ந்து முடிந்த போது வந்து உங்கள் அன்பான கருத்துக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
டிஸ்கி: 500 வது பதிவு என்ன போடலாம் என்று யோசித்து கடைசியில் அப்பாவை பற்றி எழுதலாம் என்று தோன்றியது. டிசம்பரில் தான் அவருக்கு பிறந்த நாளும், இந்த மாத ஆரம்பத்திலிருந்து என்னேரமும் அவர் நினைப்பு தான்.நேற்று அவர் மட்டும் விட்டில் இருந்தார் , அம்மா வெளியில் போயிருந்தாங்க. தனியா இருப்பதால் நான் போன் செய்யவும் அப்படி பழைய கதைய பேசி கொண்டு இருந்தார், ரொம்ப நல்ல இருந்தது. அதான் அப்படியே அவரை பற்றி பதிவில் போட்டு விட்டேன்.