Showing posts with label முறுக்கு. Show all posts
Showing posts with label முறுக்கு. Show all posts

Tuesday, March 27, 2012

ஓமம் எள் முறுக்கு


SESAME SEED & AJWAIN MURUKKU
ஓமம் எள் முறுக்கு
தேவையானவை
கடலை மாவு – அரை கப்
அரிசி மாவு – ஒரு மேசை கரண்டி
ஓமம் –  அரை தேக்கரண்டி
வெள்ளை எள் (அ) வெள்ளை எள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
பட்டர் – ஒரு மேசை கரண்டி
செய்முறை
ஓமத்தை வெண்ணீரில் ஊறவைத்து அரைத்து தண்ணீரை வடிக்கவும்.
கடலை மாவுடன், அரிசி மாவு, எள்,உப்பு, மிளகாய் தூள்,பட்டர் உருக்கி சேர்த்து வடித்த  ஓமத்தண்ணீரை சேர்த்து பிசையவும்
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் வைத்து முறுக்குகளாக  பிழிந்து சுட்டெடுக்கவும்.


7 முறுக்குகள் வரும்.
பரிமாறும் அளவு – 2 (அ) 3 நபர்களுக்கு
சுவையான மருத்துவ குணமுள்ள முறுக்கு, மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூளும் சேர்க்கலாம்.



டிஸ்கி : தட்டில் 5 முறுக்கு தானே இருக்குன்னு பூஸார் நினைப்பார், சுட்டதும் மணம் , இரண்டு அபேஸ்....