SESAME SEED & AJWAIN MURUKKU
ஓமம் எள் முறுக்கு
ஓமம் எள் முறுக்கு
தேவையானவை
கடலை மாவு – அரை கப்
அரிசி மாவு – ஒரு மேசை கரண்டி
ஓமம் – அரை தேக்கரண்டி
வெள்ளை எள் (அ) வெள்ளை எள் – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
பட்டர் – ஒரு மேசை கரண்டி
செய்முறை
ஓமத்தை வெண்ணீரில் ஊறவைத்து அரைத்து தண்ணீரை வடிக்கவும்.
கடலை மாவுடன், அரிசி மாவு, எள்,உப்பு, மிளகாய் தூள்,பட்டர் உருக்கி சேர்த்து வடித்த ஓமத்தண்ணீரை சேர்த்து பிசையவும்
பிசைந்த மாவை முறுக்கு அச்சில் வைத்து முறுக்குகளாக பிழிந்து சுட்டெடுக்கவும்.
7 முறுக்குகள் வரும்.
பரிமாறும் அளவு – 2 (அ) 3 நபர்களுக்கு
சுவையான மருத்துவ குணமுள்ள முறுக்கு, மிளகாய் தூளுக்கு பதில் மிளகு தூளும் சேர்க்கலாம்.
டிஸ்கி : தட்டில் 5 முறுக்கு தானே இருக்குன்னு பூஸார் நினைப்பார், சுட்டதும் மணம் , இரண்டு அபேஸ்....
Tweet | ||||||
19 கருத்துகள்:
Super முறுக்கு.
Its very nice . new to me. sounds good. will try :)
இந்த மாதிரி யாராவது பக்குவமாக செய்து தந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்.:))!சூப்பர்.
//மருத்துவ குணமுள்ள முருக்கு///
பொதுவாக நொருக்கு தீணி உடலுக்கு கெடு என்பார்கள்.
ஆனால் நொருக்கு தீணியிலும் மருத்துவ குணமுள்ளதை கொடுக்க முடியும் என்பதை நீருபித்து இருக்கிறீர்கள்
அருமை வாழ்த்துகள் சகோ
கடலை மாவில் எள் போட்டு முறுக்கு மிகவும் சுவையாக மணமாக இருக்குமே.
வாங்க காஞ்சனா வருகைக்கு மிக்க நன்றி
சித்ரா உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி
ஆசியா நீங்களே நல்ல பக்குவ்மா செய்வீங்கலே.
வேணும்ன பார்சல் அனுப்பவா?
ஆமாம் சகோ ஹைதர் இது போல பண்டங்கள் தயாரிக்கும் போது கொஞ்சம் ஆரோக்கியத்தையும் பார்ப்பேன்.
ஹைதர் உஙக்ள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
ஆமாம் ஸாதிகா அக்கா நல்ல மணமாக இருக்கும்
நாங்களும் ஓமம் போட்டுதான் முறுக்கு செய்வோம்,ரொம்ப வாசனையான இருக்கும்....
உங்களுடைய ரசிகை நான் . நானும் துபாய் இல் தான் உள்ளேன். உங்கள் சிக்கன் பஜ்ஜி recipe என் கணவருக்கு மிகவும் பிடித்தது
ஓமம் முறுக்குடன் எள்ளும்போட்டு செய்திருக்கின்றீர்களா அருமை.
மேனகா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஓமப்பொடி செய்ய இருந்தேன் ஆனால் அது ஓமம் முறுககாகி விட்டது.
வாங்க நஸ்ர்ரின் என் ரசிகைய கேட்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கு
என் சிக்கன் பஜ்ஜி அனைவரின் பேவரிட், ஞாபகபடுத்திட்டீங்க உடனே செய்யனும்
கமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றி
வாங்க மாதேவி எப்படி இருக்கீங்க ,ஆம் இது மணம் சொல்லவார்த்தைகள் இல்லை
எண்ணி ஏழு முறுக்கா? அவ்வ்வ்...கலக்கறீங்க போங்க!:)
நல்ல முறுக்கு ! பகிர்வுக்கு நன்றி சகோதரி !
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா