Showing posts with label துவையல். Show all posts
Showing posts with label துவையல். Show all posts

Wednesday, October 13, 2010

கொத்துமல்லி பொட்டு கடலை துவையல் - coriander roasted gram chutney


//கொத்துமல்லி கீரை எடை குறைக்கவும், உடம்பிலுள்ள கழிவுகளை அகற்றவும், இரத்ததை சுத்தபடுத்தவும், மெயினா கேன்சர் நோயாளிகளுக்கு இந்த சட்னி கீமோ தெரபியால் நாக்கு மறத்து போய் சுவை தெரியாமல் இருக்கும் போது இந்த துவையலை அரைத்து அவர்கள் தினம் சாப்பிட்டால் வாய்க்கு ருசிபடும். //



தேவையானவை
கொத்துமல்லி தழை - ஒரு பஞ்ச்
லெமன் - அரை பழம்
பெரிய பச்ச மிளகாய் - ஒன்று
இஞ்சி துறுவல் - கால் ஸ்பூன்
தேங்காய் துறுவல் - இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் - அரை ( தேவைபட்டால்)
பொட்டு கடலை - ஒரு கை பிடி
உப்பு - கால் ஸ்பூன் (ருசிக்கு ஏற்ப கூட்டிகொள்ளவும்)


செய்முறை


1. கொத்து மல்லி தழையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி எடுத்து பொடியாக அரிந்து கொள்ளவும்.


2. சிறிது நேரம் தண்ணீரில் மூழ்க வைத்தாலே மண் அடியில் தங்கிவிடும்.
மிக்சியில் பொட்டுகடலை,பச்சமிளகாய், தேங்காய் இது முன்றையும் ஒரு திருப்பு திருப்பவும்.
3.பிறகு இஞ்சி துறுவல், லெமன் சாறு,உப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

குறிப்பு:-

தோசை, ஆப்பம், இட்லி, உப்புமா, சேமியா பிரியாணி,குழிபணியாரம் எல்லா வகையான உணவு களுக்கும் பொருந்தும்