
இனிய மாலை பொழுதினிலே, அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள், பிளாக் தோழிகள் சந்திப்பு. ரொம்ப சந்தோஷம் 7.30 மணியிலிருந்து 11 மணி வரை நேரம் போனதும் தெரியல சந்தோஷத்துக்கும் அளவே இல்லை.
இது இரண்டாவ்து பதிவர் சந்திப்பு. முதலில் நானும் மலிக்காவும், இப்போது பல தோழிகள் சேர்ந்து அறட்டை அடித்தது, பள்ளி நாட்களை ஞாபகபடுத்தியது.
ஸாதிகா அக்கா இந்தியாவில் இருந்து கத்தார் சென்று அங்கிருந்து போன வாரம் ஷார்ஜா வந்திருந்தார்கள். எப்படி சந்திப்பது எங்கு சந்திப்பது. எல்லாம் ஓவ்வொரு மூலையில் உள்ளோம். நான்கு நாட்களாக தோழிகள் மெயில் மூலம் பேசி ஒரு வழியா துபாயிலேயே சந்திக்கலாம் என முடிவு செய்தோம்.
ஸாதிகா அக்கா(எல்லா புகழும் இறைவனுக்கே) முன்பு பத்திரிக்கைகளுக்கு கதை எழுதுபவர், அறுசுவையில் பல சுவையான குறிப்பு கொடுத்தவங்க, இப்ப பிளாக்கில் அறிய தகவல் களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
டிரெங்கு பெட்டிய இந்த டிரெங்கு பெட்டிய திறந்தா பொக்கிஷம் வராது ஆனால் நிறைய பழங்கால அனுபவ மேட்டர் வரும். இப்ப தெரிந்து இருக்குமே யாருன்னு ஜீன்ஸ், இப்ப ஹீரோ பேனா வ பற்றி எழுதும் ஹுஸைனாம்மா தான் சரியாக எல்லோரையும் இனைக்க பெரும் பாடு பட்டு விட்டார்கள்.

மனோ அக்காவின்
முத்து சிதறல், இதில் பல பயனுள்ள முத்துக்கள் கிடைக்கும். 35 வருட அனுபவம் , என்ன ஒரு சாந்தம் பொருமை, அவர்கள் பொருமையின் சிகரம் என்பதற்கு மேலே அவர்கள் வரைந்துள்ள இந்த படமே ஒரு எடுத்து காட்டு. அவ்வளவு தத்ரூபமாக வரைந்து இருக்கீறார்கள்.
ஆசியா
சமைத்து அசத்தலாம் செம்மையாக சுவையான நெல்லை கிச்சனை படைத்து வரும் ஆசியா அல் அயினில் இருந்து எப்படியும் தோழிகளை சந்தித்தே ஆகனும் , இத விட்டா நல்ல சான்ஸ் எப்போதும் கிடைக்காது என்று அவங்களும் எப்படியே வந்து கலந்த்து கொண்டார்கள்.
அநன்யாவின் எண்ண அலைகள், அநன்யாவின் பிராமன ஆத்து பேச்சு நடையில் பதிவு ரொம்ப நல்ல இருக்கும். ஹா ஹா இவர்களின் பேச்சு கல்யாணத்துக்கு முன் உள்ள ஜலீலாவை பார்த்த மாதிரி இருந்தது.
பிரியாணி நாஸியா, ஹா ஹா எல்லோரும் அவரவர்களை அறிமுகப்படுத்திய போது நாஸியா பிரியாணி என்றார்கள். மனோ அக்கா விற்கும் அநன்யாவிற்கும் ஒன்றும் புரியல, அபப்ரம் ஹுஸைனாம்மா அவர்கள் பிளாக் பேரு பிரியாணி என்றார்கள்.
மலர் பதிவில் பழக்கம் நேரில் பார்த்ததும் ஒரு ஷாக் அடிக்கடி நிறைய இடத்தில் சந்தித்துள்ளோம்.பதிவு அவ்வளவா போட வில்லை என்றாலும் எல்லா பிளாக்குக்கும் தவறாமல் கருத்து தெரிவித்து ஊக்கமளிபார்கள்.
ஆனால் வந்ததும் சீக்கிரம் போய் விட்டாஙக், பிறகு மனசு கேட்காம ஹி ஹி திரும்ப வந்தாங்க.
அடுத்து
நீரோடை மலிக்கா இவர்களை தெரியாதவர்கள் வலை உலகில் யாரும் இல்லை. கவிதையரசி, பல புத்தகங்களில் இவங்க கவிதை இடம் பெற்றுள்ளது. எல்லாம் சந்திக்கலாமுன்னு முடிவானது ஒரு குண்ட தூக்கி போட்டாங்க மக்ரூஃப் க்கு ரொம்ப ஜுரமா இருக்குன்னு. ஹாஸ்பிட்டல் போகிறேன் என்று. ஹாஸ்பிட்டல்போய் மருந்து சாப்பிட்டு மாலைக்குள் சரியாகி விட்டது.
மற்ற் படி வல்லியம்மா, சுந்தரா, ரேணு, அப்சாரா இவர்களால் சந்திக்க வரமுடியவில்லை.
அதோடு சேர்த்து இந்த அட்டகாச ராணியையும் சேர்த்து கொள்ளுஙக்ள்.
எல்லோரும் லூ லூவில் சேர்ந்து பிறகு வேறு இடத்துக்கு போய் விடலாம் என்று முடிவெடுத்து, 7.30 லிருந்து எட்டு என சொல்லி வைத்திருந்தோம் , மலிக்கா பெரிய சாப்பாடு மூட்டைய தூக்கி வந்ததால் மஹ்ரூஃப்க்கு உடம்பு சரியில்லை என்றதாலும் நேரகா பார்க்கிற்கு போய் விட்டு அங்கிருந்து போன் செய்தார்கள். நானும் 7.25 க்கு லூ லூவில் ஆஜர், யாரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை.
முதலில் ஹுஸைன்னாம்மா வர அவர்களின் இரண்டு வாண்டுகளை பார்த்ததும் கண்டுபிடித்து விட்டேன். அடுத்து மலர் வந்தாங்க அவர்கள் நுழைந்ததுமே அடிக்கடி பார்த்த முகம் நிறைய இடத்தில் யாருன்னு தெரியாமலே சந்தித்துள்ளோம், ஒகே அடுத்து ஆசியா அவஙக் மகள் ருமானா வை பார்த்ததும் ஆசியா வந்தாச்சு,, ஆசியா தேடி கொண்டே வந்தார்கள், கை அசைத்து கூப்பிட்டோம். அடுத்து ஸாதிகா அக்காவும் அவங்க தங்கையும் வந்தார்கள். ஒரே எல்லோருக்கும் கலகலப்பு தான் கிக்கி கிக்கி தான்,
மனோ அக்கா, பிரியாணி ,அநன்யா வர லேட்டாச்சு, . எவ்வள்வு நேரம் நிற்பது உடனே நானும் ஹுசைனாம்மாவும் வெயிட் செய்து கூப்பிட்டு வரோம் என்று மற்றவர்களை மலர் கூட் அனுப்பினோம்.
எனக்கு கிடைத்த ஒரு மணி நேரத்தில் ஏதாவது செய்யலாம் என்று பார்த்தால் எல்லோருக்கும் இரவு வெளியில் பார்டி, ஆனால் தூரம் தொலைவில் இருந்து வருகிறவர்களுக்கு ஏதாவது கொண்டு போகனும் என்று, முர்தபா, வேக வைத்த வேர் கடலை, மசால் வடை, எடுத்து பேக் செய்து பையனை கொண்டு வர சொல்லிட்டு வந்துட்டேன்.
எல்லோரும் ஒன்று கூடினோம் சரியான கும்மி தான் ஹா ஹா அதிரா புகை விட படாது. இப்படி ஒரு சந்திப்பை எதிர் பார்க்கவே இல்லை.உடனே ஜெய்லானிக்கு காது கிர்ருன்னும், என்ன பேசிக்கிடிட்டாங்க..
ஸாதிகா அக்காவின் தங்கை ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருந்தார்கள்.
எல்லோருடனும் நல்ல பேசி கொண்டார்கள்
ஆஹா அப்ப தான் மலிக்கா ஹொலோ எக்சுசுமி தள்ளுங்க சூப்பரா கோதுமை ஸடஃப்டு எக் நூடுல்ஸ் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தார்கள், முதலில் அதை வெட்டியாச்சு, உடனே நான் முதலில் என் பையனை கூப்பிட்டு டேஸ்ட் பார்க்க சொன்னேன், சூப்பர் என்றான், பையன் சொல்லிட்டானான்னா அதுக்கு அப்பீலே இல்லை, (என் கணவர் அங்கிருந்து எல்லோரையும் ஹோல்டலுக்கு கூப்பிட்டு போய் விடு என்றார் ஆனால் அல் அயின், ஜார்ஜா, அபுதாபியில் இருந்து எல்லோரும் துபாய் வரும் போது நாமளே ஏதாவது செய்து கொண்டு போய் விடுவோம் என்று முடிந்ததை செய்து கொண்டு வந்துட்டேன்) நானும் கொண்டு வந்ததை எடுத்து வைத்தேன். முதலில் குழந்தைய சாப்பிட சொன்னோம், பிறகு எல்லொரும் சாப்பிட்டோம்.
மனோ அக்கா பல வேலைகளுக்கிடையில் வந்தது ரொம்ப சந்தோஷ்மாக இருந்தது. நான் சிம்பிளாக எழுதி விட்டேன், யாராவது தித்திப்பான சண்ட்திபபி போடுவார்கள் என்று பார்ர்த்தேன்.
மலிக்கா வந்து விபரமா போடுவார்கள்.மீதியை சந்தித்த மற்ற தோழிகளின் பதிவில் பார்க்கலாம்.
ஆசியா அல் , அநன்யா, மனோ அக்கா கிளம்பியாச்சு, அடுத்து பிரியாணியும் கிளம்பியாச்சு, நான், ஸாதிகா அக்கா, ஹுஸைனாம்மா மலிக்கா கடைசியாக சென்றோம்.
11 மணி வரை என் பையன் எனக்கு துணையாக இருந்து, என்ன மம்மி ஜாலியா இருண்ட்தீங்களா? என்றான், ஆமாம் ரொம்ப ரொம்ப ஜாலி ஹே ஹே என்றேன்.
ஏதோ ஹுஸைனாம்மாவை கொண்டு எல்லோரும் அன்று சந்தித்தோம். எழுத இன்னும் நிறைய இருக்கு 4 நாட்கள் ஆகியும் யாரும் போடததால் சிம்பிளா முடித்துட்டேன். அடுத்து வரும் தோழிகள் ம்ம்ம்ம்ம் (ஸ்டாட் மியுசிக்) உங்கள் சந்திப்பு சுவரசியத்தையும் போடுங்கள்.