Showing posts with label மாதுளை. Show all posts
Showing posts with label மாதுளை. Show all posts

Tuesday, December 19, 2017

மாதுளை குச்சி ஐஸ் - Pomegranate popsicles



மாதுளை பழம் கர்பிணி பெண்களுக்கு மிகவும் உகந்தது, கேன்சர் நோயை கட்டு படுத்தும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யும்.
மலட்டு தன்மை நீங்க ஆண் பெண் இருவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதுளை முத்துகளை சாப்பிட்டு வர குழந்தை பேறு உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இரத்த சோகையை சீராக்கும். வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும்.


அதை குச்சி ஐஸ்சாகவும் செய்து சாப்பிடலாம்








மாதுளை குச்சி ஐஸ்

மாதுளை – 6 பழம்
தண்ணீர் – 50 மில்லி
ஐஸ் கட்டிகள் – 5
ஸ்ட்ராபெர்ரி எசன்ஸ் – 2 துளி
சர்க்கரை – அரை கப்
குங்குமபூ – சிறிதளவு
வடிகட்ட மஸ்லின் துணி

முதலில் மாதுளை முத்துக்களை பிரித்து எடுத்து கொள்ளுங்கள்
மிக்ஸியில் மாதுளை முத்துக்கள், ஐஸ்கட்டிகள், மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த கலவையை மஸ்லின் துணி அல்லது வடியில் வடித்து கொள்ளவும்.
அதில் சிறிது சாப்ரான் சேர்த்து ஐஸ் கிரீம் மோல்டில் ஊற்றி பிரீஜரில் 8 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
சுவையான மாதுளை குச்சி ஐஸ் ரெடி.

ஐஸ் கிரீம் மோல்ட் இல்லாதவர்கள் டீ குடிக்கும் கிளாஸில் வைத்து 4 மணி நேரம் முதலில் குளிர வைத்து இடையில் எடுத்து இரண்டு டூத்பிக்கை நடுவில் சொருகி  வைத்து மீண்டும் 4 மணி நேரம் வைக்கவும்.



Pomegranate popsicles
Pome Popsicle perfect summer treat
Pomegranate - 6 fruit
water - 50 ml
ice cube - 5
Strainer or muslin cloth
Strawberry essence – 2 drops
sugar – ½ cup 
saffron
In a blender (mixie), add Pomegranate and water,ice cubes and sugar blend well.
Strain the juice in a strainer or muslin cloth. Add saffron and
pour the pome juice  mix into ice cream mould keep it inside the freezer and refrigerate for 6 to 8 hours.
Enjoy.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, November 9, 2017

மாதுளை டீ - Pome skin tea for stomach ulcer




Please subscribe my You tube Channel and share to your friends 

இன்னும் பல பயனுள்ள குறிப்புகளை போட இருக்கிறேன்.


பொதுவாக மாதுளை பழத்தை கட் செய்து எடுத்து விட்டு அந்த தோலை எறிந்து விடுவர், அபப்டி போடாதீர்கள் அதில் உள்ள மருத்துவ பயன்கள் ஏறாளம். நம் அருசுவை உணவில் துவர்ப்ப்ய் உணவும் நாம் அடிக்கடி எடுத்து கொள்ளவேண்டும். மாதுளை மற்றும் இளநீர் தேங்காயை எடுத்ததும் உள்ளே உள்ள ப்ரவுன் சில் போல உள்ளது இரண்டும் துவர்ப்பு சுவை கொண்டது, இது  வயிற்றில் ஏற்படும் புண்களுக்கும், வாயில் ஏற்படும் புண்களுக்கும் மிகவும் நல்லது.



இந்த வீடியோவில் மாதுளை டீ போஸ்ட் பண்ணி இருக்கேன், வெண்ணீர் கொதிக்க விட்டு அதில் மாதுளை தோல் ஒன்றிரண்டு சேர்த்து கொதிக்க விட்டு தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.

அது சிறிது கசக்கும் மருந்து போல குடிச்சிக்க வேண்டியது. அப்படிசுவை தேவை என்றால் ஒரு டீ பேக் ஒரு டிப் செய்து சிறிது ப்ர்வுன் சுகர் சேர்த்து கலக்க்கி குடிக்கலாம்.





https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/

Wednesday, July 15, 2015

த்ரி மேஜிக் ரெட் கூலர்



மாதுளை பழம் கர்பிணி பெண்களுக்கு மிகவும் உகந்தது, கேன்சர் நோயை கட்டு படுத்தும், தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யும்.
மலட்டு தன்மை நீங்க ஆண் பெண் இருவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து மாதுளை முத்துகளை சாப்பிட்டு வர குழந்தை பேறு உண்டாகும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
இரத்த சோகையை சீராக்கும். வாய் புண் மற்றும் வயிற்று புண்ணை ஆற்றும்.

Pome cooler with Roo afsha & Saffron


தேவையான பொருட்கள்


தண்ணீர் - 200 மில்லி
உப்பு - ஒரு சிட்டிக்கை
சர்க்கரை - தேவையான அளவு 
மாதுளை - 4 பழங்கள்
ரூ ஆப் ஷா எசன்ஸ் - ஒரு பெரிய குழி கரண்டி
சாஃப்ரான் ( குங்குமப்பூ)  - அரை தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு




செய்முறை

மாதுளை முத்துக்களை பிரித்து எடுத்து மிக்சியில் போட்டு அதனுடன் ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடிக்கவும்.

ஜூஸை ஒரு மஸ்லின் துணி அல்லது வடிகட்டியில் வடிக்கவும்.

சாஃப்ரானை ஒரு மேசைகரண்டி சூடான வெண்ணீரில் ஊறவைக்கவும்.

வடித்த ஜூஸுடன் சாப்ரான் மற்றும் ரூஆப்ஷா எசன்ஸை சேர்த்து தேவைக்கு ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.




மாதுளை ஜூஸ், சாஃப்ரான் ப்லேவர் மாதுளை ஜுஸ், ரூ ஆப் ஷா மாதுளை ஜுஸ், ஹெல்தி டிரிங்,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/