Showing posts with label ஈவண்ட். Show all posts
Showing posts with label ஈவண்ட். Show all posts

Monday, January 6, 2014

பாரம்பரியம், பாதுக்காக்கப்படுகிறது இங்கே.










பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர்கள் பக்கம் Special Guest Post with Traditional Recipe.

சமையலில் பாரம்பரிய சமையல் என்றாலே ஒரு ஸ்பெஷல் தான்.அந்த வகையில் நான் அறுசுவைடாட்காமில் கொடுத்துள்ள குறிப்புகளில் பாதி என் வீட்டு இஸ்லாமிய இல்ல பாரம்பரியமாக செய்து வரும் குறிப்புகள்.

அறுசுவைடாட் காமில் தான் நான் முதன் முதல் சமையல் குறிப்புகள் பகிர ஆரம்பித்தேன்.
600 குறிப்புகள் கொடுத்து இருக்கிறேன். அதில் 50 குறிப்புகள் கிட்ட ஸ்டெப் பை ஸ்டெப் கொடுத்துள்ளேன்.


இப்போது பல பெண்கள் அறுசுவையாலும் அதன் மூலம் உள்ள என் குறிப்புகளாலும் பயனடைந்து உள்ளார்கள்.அப்படி பயனைடைந்தவர்கள் போன் செய்து சொல்லும் போது நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

அறுசுவையில் மற்ற தோழிகளின் குறிப்பும் மிக அருமையாக இருக்கும். அதை நாங்க அறுசுவையில் மன்றத்தில் அரட்டை அடிக்கும் போது இப்ப இருக்கிற நம்ம பூஸார் அதிரா ஆஷா போஸ்லே சமைத்து அசத்தலாம் என்ற ஒரு பகுதியை ஆரம்பித்து அனைவரின் குறிப்பையும் செய்ய வைத்தார். அப்ப நாங்க அனைவரும் அதிராவின் நகைச்சுவை பதிவுகளை ரசித்து படித்து இருக்கிறோம்.அதில் நாங்க எல்லோரும் கலந்து கொண்டு அசத்தி இருக்கிறோம்.
*********************

இந்த தடவை ஹஜ் பெருநாளுக்கு ஊருக்கு போயிருந்தோம். பெருநாள் முடிந்து ஹனீஃபுக்கு பள்ளி விடுமுறை இல்லாததால் அவனை மட்டும் முதலில் தூபாயிக்கு அனுப்பிவிடலாம் என்று எண்ணி  ஹஜ் பெருநாள் முடிந்து 18ந்தேதி வெள்ளி கிழமை 10 மணிக்கு சென்னையில் படு பிசியான நுங்கம்பாக்கம் ஏரியாவில் டிக்கட் கன்பார்ம் செய்ய அக்பர்  டிராவல்ஸ் போய் விட்டு வரும் போதுஆட்டோவிற்காக காத்து கொண்டிருந்த போது தான்  கீழே அதே பில்டிங்  கீழ் திண்டுக்கல் தலப்பாக்கட்டு உணவகம் இருந்தது.  சரி வந்தது வந்து விட்டோம் உள்ளே சென்று ஜூஸ் குடித்து விட்டு போகலாம் என்று நானும் என் மகன் ஹனீபும் சென்றோம் ஆனால் உளளே ஆஹா என்ன பாரம்பரியமான சமையலறை புகைப்படங்கள்ஓவ்வொரு உணவகங்களிலும் ஓவ்வொரு மாதிரி வரைபடங்கள் மாட்டி இருப்பார்கள் ஆனால் இந்த உணவகத்தில் சுற்றி பார்த்தால் சுவரெல்லாம் பண்டைய காலத்து அடுக்களைகளின் படங்கள் சுற்றியும் சுவர் முழுவதும் வரையப்பட்டு இருந்தன.ம் அனைத்தும் பார்க்க மிக அருமையாக இருந்தன. 










ஜும்மா நேரம் என்பதால் திண்டுக்கல் தலபாக்கட்டு பிரியாணியை பார்சல் வாங்கி கொண்டு நானும் ஹனீபும் புரூட் பாலூதா மட்டும் சாப்பிட்டு வீட்டு அங்கிருந்து கிளம்பி விட்டோம்.ஆகையால் போட்டோக்களை நன்கு எடுக்க இயலவில்லை அதில் நான் கிளிக்கியது இவை மட்டும் தான்,பொறுமையாக எல்லாவற்றையும் எடுக்க கால நேரம் 
அனுமதிக்கவில்லை.
*********************************



போன மாதம் தஞ்சாவூரை சேர்ந்த கீதா என்ற பெண் கனடாவில் இருந்து போன் செய்தார்கள் அறுசுவையை நான் ஓப்பன் செய்தால் உங்கள் குறிப்பு மட்டும் தான் பார்த்து செய்வேன். நான்கு வருடமாக உங்கள் குறிப்புகளை மட்டுமே  அங்கிருந்து பார்த்து  செய்து வருகிறேன். 
ஆகையால் ஒரு  முறையாவது உங்களிடம் பேசவேண்டும் என்று இப்ப உங்களிடம் பேசுகிறேன்.இதுவரை நான் பெற்ற பாராட்டுக்கு அளவே இல்லைஎன் தோழிகள் எல்லாரும் ரெசிபிகளை கேட்டு வாங்கி செல்கிறார்கள்.
பல புது குறிப்புகள் வந்தாலும் பாரம்பரிய குறிப்புன்னு பார்த்து செய்யும் போது அந்த ருசியே தனி தான்உங்களுடைய மைதா பரோட்டா மற்றும்  நீங்க பரோட்டாவிற்கு செய்யும் சைட் டிஷ் சிக்கன் குறிப்புகளும் , கறி முருங்கக்காய் சால்னாவும் சான்சே இல்ல ஓவ்வொரு அளவும் மிக துல்லியமாக இருக்கிறிது என்றார்கள்.

எங்களுக்காக நேயர் விருப்பம் போல் மற்ற ஊர்களின் பாரம்பரிய சமையலையும் பதிவிடுங்கள் என்றார்கள்.


************************************************



அன்புள்ள சகோதரி ஜலீலாவிற்க்கு என் இனிய ஸலாம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அறுசுவை யில் உங்களுடைய சமயல் குறிப்புகளை பார்த்து அதனால் பயன் பெற்றும் இருக்கிறேன்.  இன்று தான் உன்களுடைய  சமையல் அட்டகாசத்தில் உங்களை பற்றி  தெரிந்துக் கொண்டேன்.

சகோதரி  உங்களை பற்றி தெரிந்து கொண்ட நான் என்னை பற்றியும் சொல்கிறேன். என் பெயர் மஹ்மூதா. நான் குமரி மாட்டத்தை சேர்ந்தவள். உங்களின் ஆக்கங்களை பார்க்கும் போது ஓர் சமுதாய அக்கரையும் பொதுநலம் மார்க்கப் பற்றும் உள்ளவர் என்பதை புரிந்து கொண்டேன் உங்களை போன்ற அனுபவ சாலிகளின் அறிமுகம் எனக்கு வேண்டும் என்பதற்க்காகவே இந்த மெயிலை அனுப்புகிறேன். .
 இப்படிக்கு
சகோதரி மஹ்மூதா
மேலே  உள்ள தகவல் எனக்கு போன வருடம் நவம்பர் மாதம் ஒரு சகோதரியிடம் இருந்து வந்த மெயில்.   பிறகு வியாபார விஷியமாக அடிக்கடி போனில் பேசிகொண்டோம். அப்படி பேசும் போது  சகோதரி மக்மூதாவும் என்னிடம் கேட்டு கொண்டது ஒவ்வொரு ஊரின் பாரம்பரிய சமையல் வகைகளை பகிருங்கள் என்று சொன்னார்.
 **************************************

அதே போல் காரைக்காலை சேர்ந் சகோதரி ஷாமா யாஸ்மீன் சென்னை ப்ளாசா வில் உள்ள புர்காவகைகள் மற்றும் பல இதர பொருட்கள் வேண்டி என்னிடம் போன் செய்யும்போது சமையல் அட்டகாசத்தை பார்த்து சமைத்து வீட்டில் அடிக்கடி அனைவரின்  பாராட்டையும் பெற்றுள்ளேன் என்று சொன்னார்கள்.
 *****************************************

இன்னும் அறுசுவை வாசகி ஜமீலாஅஃப்சர் என் குறிப்பு மட்டுமே இது வரை 300 செய்து முடித்து இருக்கிறார்களாம்,நான் எந்த ஊருன்னு ரொம்ப நாளா தேடிகிட்டு இருந்தாங்களாம், கடைசியில் முகநூலில் கண்டு பிடித்தார்கள். பாராட்டுக்கள் ஜமீலாஅஃப்சர்.



ஆங்கில பிளாக்குகளில் எல்லா தோழிகளுமே ஒருத்தருக்கு ஒருத்தர் கெஸ்ட் போஸ்ட் என சமையல் குறிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள்,அந்தவகையில் என் கெஸ்ட் போஸ்ட் ரேவா அவர்கள் என்னை விரும்பி கெஸ்ட் போஸ்ட் பகிரும் படி சொன்னதால் பாரம்பரிய சமையலான கறி தக்குடி மட்டன் கொழுக்கட்டையை)  பகிர்ந்துள்ளேன் மற்றும் நீத்துஸ் கிச்சனில் மிட்டாகானாவும் பகிர்ந்துள்ளேன்.



My Guest post @ kaarasaaram reva  and Nithu' Kitchen  

என்னுடைய கெஸ்ட் போஸ்ட் காரசாரம் ரேவா மற்றும் நீத்துஸ்கிச்சனிலும் இடம் பெற்றுள்ளது. அதில் நான் எங்கள் வீட்டு பாரம்பரிய சமையலான கறி தக்குடியும், மிட்டா கானாவும் பகிர்ந்துள்ளேன். அந்த வகையில் இனி இங்கு மற்ற தோழ தோழியர்களும் பாரம்பரிய சமையலை மாதம் ஒரு முறை அல்லது முடிந்தால் இருமுறை இங்கு பகிரலாம் என்று இருக்கிறேன்.





அறுசுவை தோழிகள், தமிழ் குடும்ப தோழிகள்,முக நூல் தோழியர்கள் வலை உலக தோழ தோழியர்கள் மற்றும் இதை பதிவை பார்ப்பவர்கள் யாருக்கும் விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகைமதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள்மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள். குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம் மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள்  இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம்  அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில்  அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.


feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com

Burka Hijab @ Chennaiplaza

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Saturday, July 30, 2011

ஸ்வீட் கார்ன் சிக்க‌ன் சூப் - sweet corn chicken soup


//ஹோட்டல்களில் சென்றுதான் ஸ்விட் கார்ன் சிக்கன் சூப் குடிக்கனுமா, ஏன் நாமே செய்யலாமே இதை செய்து நீங்கள் பழகிவிட்டால் ஹோட்டலில் குடிக்கும் சூப் உங்களுக்கு பிடிக்காது. வீட்டிலேயே செய்ய‌ க‌த்து கொண்டால் பார்டிக‌ளில் அச‌த்த‌லாம்.
நோன்பு காலங்களில் தினம் கஞ்சி குடிப்பதற்கு பதில் இதை செய்து குடிக்கலாம். குளிர் காலங்களில் அடிக்கடி சளி பிடிக்கும் அதற்கும் இது ரொம்ப நல்லது.//



தேவையான பொருட்கள்

சிக்கன் = நான்கு பெரிய துண்டு எலும்புடன்
மேகி சிக்கன் கியுப் ‍= ஒன்றில் பாதி
கீரீம் ஆஃப் சிக்கன் சூப் பவுடர் = ஒரு பாக்கெட்
கீரீம் ஆஃப் ஸ்வீட் கார்ன் - ஒரு டின்
பட்டர் ‍ ஒரு = மேசைக்கரண்டி
கார்ன் பிளார் பவுடர் ‍ ஒரு குழி கரண்டி
உப்பு - தேவைக்கு
சோயா சாஸ் ‍= ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி
கருப்பு மிளகு தூள் ‍ = ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகு தூள் ‍= ஒரு தேக்கரண்டி
முட்டை = ஒன்று









செய்முறை


1. முதலில் சிக்கனில் மேகி கியுப்,உப்பு ஒரு தேக்கரண்டி, இஞ்சி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ் சிறிது, போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
2. வெந்ததும் வடிகட்டி சிக்கன் துண்டுகளை எலும்பில்லாமல் பிரித்தெடுக்கவும். சிக்கன் வடிகட்டிய தண்ணீரை கொதிக்க விடவும்.
3. தனியாக சிக்கன் சூப் பாக்கெட்டை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொதித்துக்கொண்டிருக்கும் சிக்க்ன் தண்ணீரில் ஊற்றவும்.
4. பிறகு கார்ன் டின்னை ஊற்றவும்.
5. பிறகு பிரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை உதிர்த்து போட்டு மீண்டும் கொதிக்கவிடவும்.
6. பிறகு கார்ன் பிளார் மாவை கால் டம்ளர் கரைத்து ஊற்றவும்.
7. கடைசியில் ஒரு முட்டையை நுரை பொங்க அடித்து ஒரு கையால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கொண்டே கிளறவும். கிளறி அடுப்பை அனைக்கவும்.
8. பிறகு உப்பு , ஒரு தேக்கரண்டி பெப்பர் தூள்,ஒரு டிராப் சோயாசாஸ் , ஒரு மேசைகரண்டி பட்டர் ஊற்றி இரக்கவும்








குறிப்பு:


இதற்கு கட்லட் சூப்பர் காம்பினேஷன். மற்றபடி சிக்கன் பஜ்ஜி, பகோடா,பஜ்ஜி, வடை, சிக்கன் போன்டா வும் செய்யலாம் ரொம்ப கட்டியாகி விட்டால் பார்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். பார்டிகளுக்கு செய்யலாம். நோன்பு காலங்களில் தினம் கஞ்சி குடிப்பதற்கு பதில் இதை செய்து குடிக்கலாம்.லைட்டாகவும் ஹெல்தியாகவும் இருக்கும். குளிர் காலங்களில் அடிக்கடி சளி பிடிக்கும் அதற்கும் இது ரொம்ப நல்லது.இதை வீட்டில் உள்ள‌ பொருட்க‌ளை வைத்து எளிதாக‌ வேறு முறையில் த‌யாரிக்க‌லாம்.



ரூ ஆப்ஷா கடல் பாசி Rooapsha agar agar

மசாலா சாய் Masala chay

ரோஸ் மில்க் |Rose milk

கேரட் ஜூஸ் Carrot juice

சிக்கன் ஸ்பிரிங் ரோல் Chicken Spring Roll

ஸ்பினாச் வடை Spinach Vadai

ஈத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி Eid Special Mutton Biriyani

சிக்கன் பிஸ்ஸா தோசை Chicken Pizza Dosai

I am sending all the recipe toUmm Mymoonah's Iftar moment event.


 Sweet corn chicken soup recipe  I am sending to reva's corn for dinner event.
பதிவுலக தோழ தோழியர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்.

புனித ரமளானே வருக - முத்தான துஆவுக்கு வாருங்கள்
நேரமின்மையால் பழைய பதிவுகள் தான் மீள் பதிவு முடிந்தால் புதுப்பதிவு.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

டிஸ்கி: நான் இவ்வளவு கழ்டபட்டு பதிவு போடுகிறேன் படிச்சிட்டு கண்டுக்காம போன எப்பூடி என் பதிவுகள் கண்டிப்பாக எல்லோருக்கும் பயனுள்ளது தான் நிறைய பேர் முக்கு சந்தில் கடை போட்டுள்ளது தெரியும். ஒரு வார்த்தை பின்னூட்டம் இடலாமே, இல்லை ஓட்டாவது போடலாமே.

Tuesday, December 28, 2010

எனது மண் எனது கலாச்சாரம்














எனது மண் எனது கலாச்சாரம்.
வளர்ந்ததில் இருந்து வீட்டை விட்டு வெளியில் அவ்வளவா எங்கும் போனதில்லை வெளியூர் டூர் எதுவும்.
வருடா வருடம் பள்ளி விடுமுறைக்கு திண்டிவனத்திலிருந்து சென்னை மட்டும் போய் வருவோம்.அதற்கு பிறகு சென்னை வந்து செட்டில் ஆனதும் சென்னைய தவிர எங்கும் போனதில்லை.
.கல்யாணத்தி|ற்கு பிறகு தேனிலவுக்கு எல்லோரும் போவது போல் பெங்ளூர் மைசூர், ஊட்டி, கொடைக்கானல் போயிருக்கேன்.
வெளிநாடு, சிங்கப்பூர்,சவுதி, நார்த் சைட் டூர் இதெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை.
கல்யாணம் ஆனதும் ரங்ஸ் உடனே சவுதி சென்றுவிட்டு அங்கிருந்து அப்படியே துபாய் என்று முன்று வருடம் ஆகிவிட்டது ஊருக்கு வர முடியாம போய் விட்டது, பிறகு ஆகையால் என்னை துபாய்க்கு