Showing posts with label தினகரன். Show all posts
Showing posts with label தினகரன். Show all posts

Monday, February 28, 2011

வேப்பிலை இஞ்சி - குழந்தைகளின் வயிற்று பூச்சி அழிய,தினகரன், கீற்று



நான் அறுசுவையில் முன்பு கொடுத்த15.01.2009 nil  வேப்பிலை இஞ்சி தினகரனில்  15.12.2009 நில் போட்டு இருக்காங்க பாருங்க. இப்படி பிரபல பேப்பரில் சமையல் குறிப்பு அனுப்புகிறவர்களை விசாரித்து போட மாட்டார்கள் போல, பிரபலமான பேப்பர், நல்ல சமையல் கலை நிபுனர்களின் அனுமதியோடு போடலாமே. எந்த லூஸு திருடி அனுப்புதுன்னு தெரியல. திருடிய லூஸு என் பெயருடன் போட்டு இருந்தா  கொஞ்சம் திருப்திஅடையலாம்.


இங்கும் போய் பாருங்கள் காப்பி அடிச்சிட்டானுங்க திருந்தாத ஜென்மஙக்ள்


போன வாரம் இதை செய்து விட்டு பதிவு போடலாம் என்று வரும் போது தற்செய்லா தினகரன் பேப்பர செக் பண்ணும் போது இதுவும் அங்கு இருக்கு. இப்ப இந்த குறிப்ப போட்டா, அங்கிருந்து நான் காப்பி அடித்தமாதிரி இல்ல இருக்கும் சே சே ,,,

இது என் மாமியாரின் கை வைத்தியம்

இதில் எழுதியுள்ள டிப்ஸ் , 80% என்னுடைய சொந்த அனுபவ கருத்து 20 % மாமியார் சொன்னது.

.
குழந்தை வளர்பு டிப்ஸ், குழந்தைகளில் வயிற்றில் உள்ள பூச்சி அழிய/

குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதாலும். மண்ணில் கீழே கையை வைத்து விளையாடுவதாலும் வயிற்றில் பூச்சிகள் இருக்கும் , பூச்சி இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது, முகத்தில் ஆங்காங்கே தேமல் இருந்தால் , சாப்பாடு சரியாக உட்கொள்ளமல் இருந்தால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும்.

அதற்கு 6 மாதம் ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிம் காண்பித்து கொடுப்பது நல்லது,
இதே இயற்கை உணவு முறையிலும் நாம் இதை வெளியேற்றலாம், குழந்தைகள் என்றில்லை, பெரியவர்களும் எல்லாருக்குமே இந்த மருந்து `மிகவும் உகந்தது.

இது என் இரண்டாம் முறை தயாரிப்பு செய்முறை - 2




தேவையானவை

இஞ்சி - 100 கிராம்
வேப்பிலை - ஆய்ந்து கழுவியது கைக்கு ஒரு கைப்பிடி
தேன் தேவைக்கு
உப்பு - ஒரு சிட்டிக்கை
சர்க்கரை சிறிது

செய்முறை

வேப்பிலையையும் , இஞ்சியை தோல் நீக்கி பொடியாக அரிந்து சுத்தம் செய்த வேப்பிலையுடன் சேர்த்து உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்து டீ வடிகட்டியில் பிழிந்து வடிகட்டவும்.

வடித்த ஜூஸை அப்படியே 15 நிமிடம் வைக்கவும், அடியில் நஞ்சு தங்கி இருக்கும், மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.

குறிப்பு

ஆறு முதல் 9 மாத குழந்தைகளுக்கு அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் படத்தில் காட்டியுள்ள சங்கில் அரை சங்கு ஊற்றலாம்

9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்
அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் 2 , 3 சங்கு (அ) கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொள்ளவும்.

பெரியவர்கள் அவ்வளவா தேவையில்ல மூக்க மூடிட்டு பல்லுல படமா முழுங்கிடுங்க..

இப்படி சாறு எடுக்க முடியாதவர்கள் வேப்பில்லையை பொடித்து வைத்து சுக்குதூள் கிடைக்குது அதையும் வாங்கி கலந்து தேன் கலந்து குடிக்கலாம் ,

( மேலும் இது சர்க்கரை வியாதியையும் கட்டுப்படுத்தும், உடலில் ரத்தத்தில் அள்வு கம்மியாக இருந்தால் அதை அதிகரிக்கவும் வேப்பிலை அருமருந்து)


ஆறுமாதம் என்றில்லை அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.
அதே போல் பூப்பெய்திய பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து.

அபார்ஷன் ஆகி கட்டி தங்கி விட்டால் கூட இதை இரண்டு முன்று முறை குடித்து விட்டு கருதரித்தால் மிகவும் நல்லது.வயிற்றில் மீதி தங்கிய அழுக்குகளும் வெளியாகிடும்.

2 மாதம் , முன்றுமாதம் (அ) கர்பிணிபெண்கள் சாப்பிடவேண்டாம்.

கர்ப்பம் தரிக்கும் முன், (அ) குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.



  • மற்றொரு முறை 

    இது என் தங்கை பசீரா செய்வது

    இஞ்சி சாறு தனியாக எடுத்து நஞ்சு எடுத்து வடித்து வைக்கவும்.
    வேப்பிலையை தனியாக அரைத்து சாறு எடுக்கவும்.
    இரண்டையும் கலந்து தேன் ,உப்பு, சர்க்கரை சேர்த்து கொடுக்கவும்

    இஞ்சி சாறு முறையை இங்கு சென்று பார்க்கவும்.


டிஸ்கி : கொஞ்ச நாள் பதிவு போடுவதை நிறுத்திட்டு இப்படி செக் பண்ண இனையம் மூலம் சம்பாதிக்க, சில பேர் நானும் வெப்சைட் ஆரம்பிக்கிரேன்னு ஆரம்பிச்சிட்டு பழியா ஓவ்வொரு இடமா போய் களவெடுத்து போடுகிறார்கள்.

தோழி சுந்தராவின் கவிதை  கீற்று.காமில் வெளியாகி உள்ளது வாழ்த்து தெரிவிக்க அங்கு போனா ச்மையல் பகுதிய கிளிக் செய்தால்
 என் ஆம்பூர் பிரியாணிய அட்டு காப்பி, இன்னும் என்ன என்னன்னு செக் பண்ணா பீபீ எகிறிடும் போல. இதுபோல் ஆளாளாக்கு செய்தால் குறிப்பு போடவே பிடிக்கல, சில பேருக்கு உத்வுதேன்னு போட்டா இந்த களவாணி பசங்கள என்ன செய்வது,
கிற்று இங்க போய் பார்க்கவும், எனக்கு தெரிந்து அங்குள்ள சமையல் குறீப்புகள் எல்லாமே காப்பிஅடிக்கப்பட்டவைதான். 









Tuesday, February 16, 2010

என் பதிவுகள் தினகரனிலும்



ஆனந்த விகடனை தொடர்ந்து பதிவர்களை ஊக்கிவிக்கும் விதமாக தினகரன் செயல் பட்டு வருகின்றது - மிக்க நன்றி.
என் குறிப்புகள் எல்லாம் என் பெயர் இல்லாமல் அங்கும் இருக்கு, ஆனால் நான் அனுப்பல யார் அனுப்பினாங்கன்னும் தெரியல. யாரையும் திட்ட முடியல அதான் நன்றி சொல்லிகொள்கீறேன்.


என்னுடைய பதிவான குழந்தைகளுக்கு டென்ஷன் வந்தால் இதை
தினகரன் வெளியிட்டு இருக்கின்றது.



என் குறிப்புகளை பிரபல நாளிதழ் தினகரனில் வெளிவந்துள்ளது ரொம்ப சந்தோஷம், உடனே என் தோழிகள் தினகரனுக்கு எப்படி குறிப்புகளை அனுப்பனும் என்றூ கேட்கிறார்கள்.

எனக்கும் ஒரு மடல் அனுப்பி தெரிவித்தால் மிக சந்தோஷமடைவேன்.
அப்படியே கீழே என் பெயரையும் போட்டு இருக்கலாம்.

இந்த டிப்ஸ் தமிழ் குடும்பத்திலும் கொடுத்துள்ளேன்.அதை இங்குசென்று படித்து கொள்ளலம்
குழந்தைகளில் விரல்கள் வலுவடைய‌
இது தினகரனில்

குழந்தைகள் திடீரென அழுதால்
இது தினகரனில்


மேலும் என் சமையல் குறிப்புகள்
சீலா மீன் பிஸ்கேட்
காக்டெயில் ஜூஸ்
இதை யார் அனுப்புகிறார்கள் என்று தான் தெரியவில்லை.