| Tweet | ||||||
Showing posts with label சௌராஷ்டிர சமையல். Show all posts
Showing posts with label சௌராஷ்டிர சமையல். Show all posts
Tuesday, June 3, 2014
அயில மீன் குழம்பு - Scud Fish Curry
அயில மீன் குழம்பு
சௌராஷ்டிரிய
முறையில் மீன் குழம்பு
இது சௌராஷ்டிர முறையில் நான் செய்த அயில மீன்
குழம்பு.
//பொதுவாக நான் செய்யும் குழம்பு வகைகளில்
வெங்காயம் தக்காளி தயிர் இல்லாமல் வைக்க முடியாது. ஆனால் சௌராஷ்டிரயர்களின் உணவு
வகைகள் மிகவும் வித்தியாசமானது.//
இந்த வகை குழம்பு ரொம்ப ஈசி, மீன் இல்லாத சமயத்தில், முட்டை , கருனை கிழங்கு, சேப்பங்கிழங்கு இது போல் ஏதாவது ஒரு
காயில் இதே போல் செய்யலாம்.
தேவையான பொருட்கள்
அயில மீன் கால் கிலோ
முழு காஞ்ச மிளகாய் ( சிவப்பு மிளகாய்) 3
முழு மிளகு 1 தேகக்ரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
சோம்பு ஒரு தேகக்ரண்டி
ஆச்சி அல்லது சக்தி குழம்பு பொடி ஒரு
தேக்கரண்டி
தேஙகாய் ஒரு சிறிய கப் ( ஒரு முடி
தேஙகாயில் முன்றி ஒரு பங்கு)
தாளிக்க
எண்ணை
சீரகம்
கருவேப்பிலை
மிக்சியில் மிளகு, சீரகம், சோம்பு,காஞ்ச மிளகாய்,
சேர்த்து திரித்து கொண்டு அத்துடன் குழம்பு பொடி தேங்காய் சேர்த்து
நன்கு மையாக அரைகக்வும்.
மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
சட்டியை அடிப்பில் ஏற்றி எண்ணை ஊற்றி
காயவைத்து எண்ணை சீரகம், கருவேப்ப்பிலை போட்டு தாளித்து அரைத்த
விழுதை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
புளி கரைத்த்ததை ஊற்றி , தேவைக்கு தண்ணீர் சேர்த்து நன்கு மசாலா வாடை போகும் வரை கொதிக்கவிட்டு
கடைசியாக மீனை போட்டு வேகவிட்டு இரக்கவும்.
குழ்ம்பு பொடி ஆச்சி அல்லது சக்தி குழம்பு
பொடி சேர்த்து செய்யவும்.அதுவும் இல்லை என்றால் தனியாத்தூள் மட்டும்
சேர்த்துககொள்ளலாம்.
Labels:
அசைவம்,
அயில மீன்,
சௌராஷ்டிர சமையல்,
பக்க உணவு,
மீன் சமையல்
Subscribe to:
Posts (Atom)
.jpg)

