பிரியாணி மசாலா பொடி.
இங்குள்ள துபாய் சூப்பர் மார்கெட்டுகளில், இதுபோல் கலவையான மசாலா சாமான்கள் பாக்கெட்டுகளில் வைத்து இருப்பார்கள்.அதில்
பிரிஞ்சி இலை, ஏலம், பட்டை, கிராம்பு, சோம்பு சீரகம், மிளகு,ஜாதிக்காய் ,என எல்லாம் கலவையாக இருக்கும்.
சில பெரிய பெரிய சூப்பர்மார்கெட்கள் மால்கள், தமிழ் கடைகளில் இந்த மசலாவகை பவுடர்கள் தனித்தனியாகவும் கிடைக்கும்.
எல்லா வகைகளையும் 50 ,.50 கிராம் வாங்கினாலும் செலவாக நாள் ஆகும். அதற்கு சில நேரம் நான் இப்படி ஒரு வாரத்துக்கு தகுந்தார்போல பிரஷ்ஷாக கொஞ்சம் கொஞ்சமாக நான் திரித்து வைத்து கொள்வதும் உண்டு.
இதை பிரியாணி , வறுவல் வகைகள் , செட்டிநாடு சமையல் வகைகள் மற்றும் ஹதர பாத் சமையலுக்கும் பயன் படுத்தி கொள்ள்லாம்.
ஹதராபாத் பிரியாணிக்கு சோம்பு சேர்க்காமல் , ஷாஜீரா சேர்த்து கொள்ளவேண்டும்.
தேவையான பொருட்கள்
பிரியாணி மசாலா - 1
பிரிஞ்சி இலை - 5 இலை
பட்டை - 2 இன்ச் சைஸ் - 3
கிராம்பு - 10 எண்ணிக்கை
ஏலம் - 6 எண்ணிக்கை
சோம்பு - ஒரு மேசை கரண்டி
சீரகம் - இரண்டு மேசை கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய் - சிறிய துண்டு ஒன்று
அன்னாசி பூ - ஒன்று
(அன்னாசி பூ வாசனை எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்காது ஆகையால் இதில் ஒரு சின்ன இதழ் மட்டும் தான் சேர்த்துள்ளேன்)
இதில்
மிளகாய் தூள் மற்றும்
தனியாதூள் தேவைக்கு சமைக்கும் கறி வகைகளை பொருத்து அதற்கேற்றாற் போல் சேர்த்து கொள்ளுங்கள்.
ஹைதராபாத்பிரியாணி மசாலா - 2
ஏற்கனவே இங்கு முன்பே கொடுத்துள்ள ஹைதராபாத் பிரியாணியில் எல்லா மசாலா வகைகளையும் முழுசாக தான் சேர்த்துள்ளேன். ஆனால் குழந்தைகளுக்கு சாப்பிடவும் இலகுவாக செய்யனும் என்றால் பொடித்துகொள்வது நல்லது.
பிரிஞ்சி இலை - 5இலை
பட்டை - இரண்டு இன்ச் சைஸ் - 3
கிராம்பு - 10 எண்ணிக்கை
ஏலம் - 6 எண்ணிக்கை
மிளகு - ஒரு மேசைகரண்டி
ஷாஜீரா - ஒரு மேசைகரண்டி
சீரகம் - இரண்டு மேசைகரண்டி
ஜாதிக்காய் - ஒரு சிறிய துண்டு
ஜாதிபத்திரி - முன்று இதழ்
அன்னாசி பூ - ஒன்று
இதில்
மிளகாய் தூள் மற்றும்
தனியாதூள் தேவைக்கு சமைக்கும் கறி வகைகளை பொருத்து அதற்கேற்றாற் போல் சேர்த்து கொள்ளுங்கள்.
செய்முறை
மேற்கண்ட அனைத்து பொருட்களையும் எல்லாம் காய்ந்த ஈரமில்லாத மிக்சியில் அல்லது பவுடர் செய்யும் மிக்சியில் திரித்து பவுடராக்கி, சிறிது நேரம் ஆறவைத்து ஈரமில்லாத காய்ந்த கண்டெயினர் களில் போட்டு வைத்து கொள்ளவும்.
பிளாஸ்டிக் கண்டெயினரை விட காய்ந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் மிகவும் நல்லது.
இதில் பிரிஞ்சி இலையின் காம்பை கிள்ளி விட்டு திரிக்கனும்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/