Showing posts with label சளி இருமல். Show all posts
Showing posts with label சளி இருமல். Show all posts

Sunday, November 2, 2014

சாஃப்ரான் டீ - குங்குமப்பூ டீ - Saffron Tea


குளீர் காலம் ஆரம்பித்து விட்டது தொண்டைகரகரப்பு, சளி, இருமலும் அழையா விருந்தாளியாக வந்து தூங்க விடாமல் பாடாகபடுத்தும்.
சளி இருமலுக்கு இஞ்சி சாறு தான் பெஸ்ட் இருந்தாலும் குங்குமபூ சேர்த்து தயாரிக்கபடும் சளி இருமலைகட்டு படுத்தும்.




சாப்ரான் டீ

பால் இரண்டு டம்ளர்
தண்ணீர் அரை டம்ளர்
சாஃப்ரான் - அரை தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கு
டீ பவுடர் - ஒன்ன்றை தேக்கரண்டி
தண்ணீர் - அரை டம்ளர்

செய்முறை

பால் இரண்டு  டம்ளர், தண்ணீர் அரை டம்ளர், சாஃப்ரான் (குங்குமப்பூ)  சேர்த்து    நன்கு கொதிக்க விடவும்.சிறிது வற்ற விட்டு இரண்டு டம்ளரில் ஊற்றவும்.

தனியாக அரை டம்ளர் தண்ணீரில் தேயிலை சேர்த்து டிகாஷன் போட்டு நன்கு கொதிக்க விட்டு இரண்டு டம்ளரிலும் பாதி பாதி டிகாஷன் மற்றும் சர்க்கரை சேர்த்து கலக்கி குடிக்கவும்.






சாஃப்ரான் சளிதொல்லைக்கு மிக அருமையான மருந்து, டீயுடன் அல்லது பாலுடன் சேர்த்து குடிக்கலாம்.

Saffron Tea For Cold, Cough Medicine, 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, February 15, 2014

சுக்கு சோம்பு பொடி & சுக்கு சோம்பு காஃபி



இந்த காஃபியை தினமும் அருந்தி வந்தால் உடல் எடை குறையவும் வாய்ப்பு இருக்கு.சுக்கு சோம்பு காஃபியை  தொடர்ந்து குடித்து வந்தால்  வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றும், கேஸ் பிராப்ள்ம் இல்லாமலும் இருக்கும்.மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் இது அருமருந்து.



சுக்கு சோம்பு பொடி

தேவையான பொருட்கள்

சோம்பு 25
சுக்கு 50
காய்ந்த புதினா இலை ஒரு கைப்பிடி
ஏலக்காய் பொடி  10 கிராம்
பனங்கற்கண்டு - 10 கிராம்

செய்முறை

சோம்பை கருகாமல் லேசாக வறுத்து ஆறவைக்கவும்.
சுக்கை வெயிலில் காயவைத்து தட்டி பொடிக்கவும்
புதினா இலைகளை ஆய்ந்து கழுவி வெயிலில் உலர்த்த்வும்.
ஏலக்காய், பனங்கற்கண்டு அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்சியில் பொடித்து வைத்து கொள்ளவும்.



சுக்கு சோம்பு காஃபி

தேவையான பொருட்கள்

பால்  - 100 மில்லி
தண்ணீர் - 250 மில்லி 
சுக்கு சோம்பு தூள் - 3/4 தேக்கரண்டி (அ) ஒரு தேக்கரண்டி
காஃபி தூள் - கால் தேக்கரண்டி
சர்க்கரை - தேவைக்கு



செய்முறை

பாலை தனியாக காய்ச்சி வைக்கவும்.
தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு தேக்கரண்டி பொடித்த பொடியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
தண்ணீர் கால் பாகத்தில் இருந்து அரை பாகம் வற்றும் போது பாலை சேர்த்து கொதிக்க வைத்து கடைசியாக சிறிது காஃபி தூள் சேர்த்து சர்க்கரை சேர்த்து கரைத்து வடிக்கட்டி குடிக்கவும்.

குறிப்பு:
இந்த சுக்கு சோம்பு காஃபியை  தொடர்ந்து குடித்து வந்தால்  வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றும், கேஸ் பிராப்ள்ம் இல்லாமலும் இருக்கும்.
மோஷன் ப்ராப்ளம் உள்ளவர்களும் இந்த பவுடர் போட்டு குடிக்கலாம். இது வயிறு வலிகேஸ் பிராப்ளம்வயிறு உப்புசம்செரிக்காமல் இருப்பவர்களுக்கு ஏற்ற அரும்ருந்து.

காப்பி தூள் அதிகம் இதில் சேர்க்க தேவையில்லை ஒரு வாசனைக்கு தான்.


கவனிக்க:


என் டிப்ஸ் மற்றும் என் குறிப்புகளை காப்பி செய்து மற்ற தளங்களிலரென் அனுமதி இல்லாமல் போடாதீர்கள். அப்படியே காப்பி அடித்தாலும் என் லின்கை கொடுத்து இங்கிருந்து எடுத்து போட பட்டது என்று தயவு செய்து சொல்லவும்.

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/