| Tweet | ||||||
Showing posts with label கேக். Show all posts
Showing posts with label கேக். Show all posts
Monday, September 26, 2016
டார்க் சாக்லேட் ப்ரௌனி கேக்
தேவையான பொருட்கள்
டார்க் சாக்லேட் – 50 கிராம்
கோக்கோ பவுடர் – 1/3 கப்
மைதா – 1/3 கப்
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
ப்ரவுன் சுகர் – 1/3 கப் (அ) நார்மல் சுகர்
பட்டர் – 3 மேசைகரண்டி
சால்ட் – ¼ பின்ச்
முட்டை – 2
நட்ஸ் மெகடேமியா நட்ஸ் – 3 மேசைகரண்டி
செய்முறை
மைதா பேக்கிங் பவுடர் கோக்கோ பவுடரை சலித்து வைக்கவும்.
டார்க் சாக்லேட் மற்றும் பட்டரை டபுள் பாயிலர் செய்யவும்.
உருக்கிய பட்டர் மற்றும் டார்க் சாக்லேட்டில் சர்க்கரையை பொடித்து சேர்த்து நன்கு கலக்கவும்.
கலவையில் முட்டையை நுரை பொங்க அடித்து கலக்கவும்.
சலித்து வைத்த மைதா கோக்கோ பேக்கிங் பவுடரை சிறிது சிறிதாக தூவி கலக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கி பேக்செய்யும் ட்ரேவில் ஊற்றி சமப்படுத்தி நட்ஸை பொடித்து தூவவும்.
ஓவனை 200 டிகிரி செல்சியசில் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
கவனிக்க
டார்க் சாக்லேட்க்கு பதில் நார்மல் நட்ஸ் சாக்லேட்டும் சேர்க்கலாம்.
ப்ரவுன் சுகருக்கு பதில் நார்மல் சர்க்கரையும் சேர்க்கலாம்.
Labels:
அயல் நாட்டு உணவு,
இனிப்பு,
குழந்தை உணவு,
கேக்
Tuesday, February 16, 2016
சீஸ் கேக் தயாரிக்க பயன்படுத்தும் ஜெலட்டின் சைவமா?
My Article published in Kungumam thozi monthly magazine15.02.16 .No Bake Party Dessert.
(Agar Agar, china Grass picture) (substitute for gelatin agar agar) For Preparing Cheese Cake advisable for agar agar instead of gelatin.
சீஸ் கேக்கு ஜெலட்டினுக்கு பதில் அகர் அகர் பயன்படுத்தலா?
கடல்பாசி என்னும் அகர் அகர் பற்றின பதிவு இந்த மாதம் 15.02.16 குங்குமம் மாத இதழில் வெளியாகி உள்ளது.
இப்போது செய்கின்ற
பார்டி மெனுவில் அதிகமாக இடம்பெறுவது சீஸ் கேக் என்னும் ஜப்பான் நாட்டு டெசர்வகை.
இதில்
கிரீம் சீஸ் பழங்கள் கலந்து கேக் போல ஓவனில் பேக் செய்யாமல் குளுரூட்டியில் வைத்து
குளிர வைத்து செட் செய்வது இதில் அது குழைந்து விழாமல் கெட்டியாக கிரிப் கொடுக்க இதில்
ஜெலட்டின் பவுடரை பயன் படுத்துகிறார்கள்.
இதில் அசைவ
பொருட்கள் சேர்த்து செய்கிறார்கள் என தெரிய வருகிறது. எதிலிருந்து தயாரிக்கிறார்கள்
நாம் சாப்பிடலாமா கூடாதா என்று சந்தேகப்படும் சைவ உணவு சாப்பிடுபவர்கள் ,
அகர் அகர்/கடல் பாசி/சைனாகிராஸ் - (Agar Agar, china Grass picture)
(substitute for gelatin agar agar)
For Preparing Cheese Cake advisable for agar agar instead of gelatin.
ஜெலட்டினுக்கு
பதிலாக நோன்புகாலங்களில் நாங்க செய்யும் கடல் பாசி என்னும் அகர் அகரை பயன்படுத்தி செய்யலாம்.
இது உடல் நலத்திருக்கு மிகவும் நல்லதும் கூட எந்த செயற்கை பொருளும் கலந்து இருக்கிறதோ
என்ற சந்தேகம் இல்லாமல் இதை பயன் படுத்தி செய்துகொள்ளலாம்.
உடல் நலத்துக்கு
மிகவும் நல்லது குழந்தைகளுக்கும் பயமின்றி கொடுக்கலாம்.
ஜெலட்டின் சேர்த்து
பயன் படுத்தும் ரெசிபிகளுக்குபதில் அகர் அகரை பயன் படுத்தலாம்.
கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .
சீஸ் கேக்
புட்டிங்
பழ புட்டிங்
கேக் வகைகளும்
சாக்லேட் மௌஸ்
இது போல பல டெசர்வகைகளுக்கு அகர் அகரை பயன் படுத்தாலாம்.
அகர் அகர் பவுடரும் கலர் கலராக ப்ளேவரில் கிடைக்கிறது.
சீஸ் கேக் ரெசிபி அடுத்த பதிவில் போடுகிறேன்.
| Tweet | ||||||
Labels:
அகர் அகர்,
கடல்பாசி,
குங்குமம் தோழி,
கேக்,
சைவம்,
சைனா கிராஸ்
Thursday, July 9, 2015
தம்மடை - Dumadai - Soji Cake
தம்ம்டை என்பது ரவை,தேங்காய் பால் ,முட்டை சேர்த்து செய்யும் கேக், பழங்காலங்களில் இதை விறகு அடுப்பில் பெரிய இரும்பு தவ்வாவில் மண்ணை சூடுபடுத்தி இந்த கலவையை ஒரு சட்டியில் வைத்து வேகவைத்து எடுப்பார்கள். இப்போது நாம் ஈசியாக ஓவனிலேயே பேக் செய்யலாம்/
இதை அரேபியர்கள் பஸ்பூசா Eggless Basbousaஎன்று சொல்வார்கள் சேர்க்கும் பொருட்கள் சிறிது வித்தியாசப்படும்.
Eggless Basbousa
தம்மடை
ரவை – ஒரு ஆழாக்கு
கட்டி தேங்காய் பால் – முக்கால் ஆழாக்கு
சர்க்கரை – முக்கால் ஆழாக்கு
நெய் – அரை ஆழாக்கு
முட்டை – இரண்டு
உப்பு – ஒரு சிட்டிக்கை
செய்முறை
ரவையை வறுத்து வைக்கவும். சர்க்கரையை பொடித்து கொள்ளவும்.
முட்டையை நுரை பொங்க அடித்து அதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
பிறகு தேங்காய் பால் சேர்த்து கலக்கி அதை ரவையை சேர்த்து கிளறி நெய் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
10 நிமிடம் முற்சூடு செய்த ஓவனில் 5 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.குங்குமம் தோழியில் வெளியான 30 சமையல் குறிப்பில் ஒன்று இந்த தம்மடை.
சுவைத்து மகிழுங்கள் , உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாலோ அல்லது செய்து பார்த்து சமையல் புகைப்படத்தை எனக்கு (feedbackjaleela@gmail.com) அனுப்பினாலோ மிகவும் சந்தோஷப்படுவேன்.
| Tweet | ||||||
Labels:
இனிப்பு,
குங்குமம் தோழி,
கேக்,
நோன்பு கால சமையல்,
பாரம்பரிய சமையல்
Subscribe to:
Posts (Atom)











