அரபிகளுக்கு இரண்டும் முன்று வேலையாட்கள் இருப்பார்கள், அவர்கள் தான் எல்லாம் செய்வார்கள்.
சிலர் குடும்பங்களோடு சேர்ந்து வேலைகளை பகிர்ந்து செய்வார்கள்.
தேவைபட்டால் வீட்டிலேயே ஓவனில் செய்து சாப்பிட்டு கொள்வது , ஆனால் என்ன தான் இருந்தாலும் கரி நெருப்பு உண்டாக்கி அதை செய்து சாப்பிட்டு உடனே சூடாக புதினா சாய் குடிக்கும் ருசிக்கு ஈடு எதுவும் கிடையாது.
இது முன்பு அறுசுவையில் 2008 லில் பகிர்ந்த குறிப்பு.
How to make Chicken Barbeque with Charcoal - step by step Barbeque Chicken Fry.
தேவையான பொருட்கள்
சிக்கன் - ஒரு கிலோ
பூண்டு - ஆறு பற்கள்
தயிர் - அரை கப்
ஆலிவ் ஆயில் - ஆறு தேக்கரண்டி (ஊற வைக்க)
ஆலிவ் ஆயில் - தேவைக்கு (சுடுவதற்கு)
காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு மேசை கரண்டி
ஷான் தந்தூரி மசாலா - ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் - நான்கு
லெமன் - முன்று
1. தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
2.சிக்கனில் ஒரு லெமனை பிழிந்து பத்து நிமிடம் ஊறவைத்து பின்பு நன்கு கழுவி தண்ணீரை வைடிகவும்.
3.முதலில் பச்சமிளகாயை அரைத்து ஊற்றி , ஆலிவ் ஆயில், தயிர் சேர்க்கவும்.
4.உப்பு, தந்தூரி மசாலா,மிளகாய் தூள்,இரண்டு லெமனை பிழிந்து நன்கு மசலா சிக்கனில் படும் படி பிசறவும்.
5.பிசறிய மசாலாவை முன்று மணி நேரம் ஊறவைகக்வும்.
6.நன்கு ஊறியதும் BBQ அடுப்பில் நெருப்பு மூட்டி நன்கு சூடு பிடித்ததும் சிக்கனை போட்டு சுடவும்.ஊறியதில் மசலா தண்ணீர் அதிகமாக இருக்கும் வெரும்சிக்கன் மட்டும் எடுத்து வைத்தால் போதும்.
7.எல்லா சிக்கனிலும் சிறிது ஆலிவ் ஆயில் விட்டு ஒரு பக்க முழுவதும் சுடவும்.
8. ஒரு பக்கம் வெந்ததும் மற்றொரு பக்கத்தை இடுக்கி கொண்டு பிறட்டி விடவும்.
9.இப்போது இரண்டு பக்கமும் வெந்து விட்டது. சூப்பரான கலர் வரும்.
-----------------------------
| Tweet | ||||||
