அரபிகளுக்கு இரண்டும் முன்று வேலையாட்கள் இருப்பார்கள், அவர்கள் தான் எல்லாம் செய்வார்கள்.
சிலர் குடும்பங்களோடு சேர்ந்து வேலைகளை பகிர்ந்து செய்வார்கள்.
தேவைபட்டால் வீட்டிலேயே ஓவனில் செய்து சாப்பிட்டு கொள்வது , ஆனால் என்ன தான் இருந்தாலும் கரி நெருப்பு உண்டாக்கி அதை செய்து சாப்பிட்டு உடனே சூடாக புதினா சாய் குடிக்கும் ருசிக்கு ஈடு எதுவும் கிடையாது.
இது முன்பு அறுசுவையில் 2008 லில் பகிர்ந்த குறிப்பு.
How to make Chicken Barbeque with Charcoal - step by step Barbeque Chicken Fry.
தேவையான பொருட்கள்
சிக்கன் - ஒரு கிலோ
பூண்டு - ஆறு பற்கள்
தயிர் - அரை கப்
ஆலிவ் ஆயில் - ஆறு தேக்கரண்டி (ஊற வைக்க)
ஆலிவ் ஆயில் - தேவைக்கு (சுடுவதற்கு)
காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு மேசை கரண்டி
ஷான் தந்தூரி மசாலா - ஒரு மேசை கரண்டி
பச்ச மிளகாய் - நான்கு
லெமன் - முன்று
1. தேவையான பொருட்களை தயாராக வைக்கவும்.
2.சிக்கனில் ஒரு லெமனை பிழிந்து பத்து நிமிடம் ஊறவைத்து பின்பு நன்கு கழுவி தண்ணீரை வைடிகவும்.
3.முதலில் பச்சமிளகாயை அரைத்து ஊற்றி , ஆலிவ் ஆயில், தயிர் சேர்க்கவும்.
4.உப்பு, தந்தூரி மசாலா,மிளகாய் தூள்,இரண்டு லெமனை பிழிந்து நன்கு மசலா சிக்கனில் படும் படி பிசறவும்.
5.பிசறிய மசாலாவை முன்று மணி நேரம் ஊறவைகக்வும்.
6.நன்கு ஊறியதும் BBQ அடுப்பில் நெருப்பு மூட்டி நன்கு சூடு பிடித்ததும் சிக்கனை போட்டு சுடவும்.ஊறியதில் மசலா தண்ணீர் அதிகமாக இருக்கும் வெரும்சிக்கன் மட்டும் எடுத்து வைத்தால் போதும்.
7.எல்லா சிக்கனிலும் சிறிது ஆலிவ் ஆயில் விட்டு ஒரு பக்க முழுவதும் சுடவும்.
8. ஒரு பக்கம் வெந்ததும் மற்றொரு பக்கத்தை இடுக்கி கொண்டு பிறட்டி விடவும்.
9.இப்போது இரண்டு பக்கமும் வெந்து விட்டது. சூப்பரான கலர் வரும்.
-----------------------------
Tweet | ||||||
7 கருத்துகள்:
BBQ சிக்கன் படங்களுடன் செய்முறை விளக்கம் சூப்பர்... நன்றி சகோ...
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அக்கா.. பார்க்கவே டெம்ப்டிங்காக இருக்கு.. பார்க்கில் அல்லது வெளியில் எங்கும் சென்றிருக்கும்போது செய்து எடுத்த படங்களா இவை
ஓட்டு டன்
ஆஹா...
நல்லா இருக்கே... சாப்பிடணும் போல இருக்கு அக்கா...
தனபாலன் சார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
பானு இது முன்பு பார்க் போன போது நான் செயத குறிப்பு
சே.குமார் நீங்கதான் ரூமில் சமைக்கிறீர்களே உடனே செய்துவிட வேண்டியது தானே//
வருகைக்கு மிக்க நன்றி
உங்கள் ப்ளாகில் எல்லாமே அருமை, பதிவுகள்
தொடரட்டும்,
வாழ்த்துக்கள்.
chitrasekaran
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா