Wednesday, January 1, 2014

தேங்காய் மினி தோசை - தேங்காய் மினி பான்கேக் - Coconut Mini Pancake






இது இஸ்லாமிய இல்ல வீடுகளில் மாப்பிள்ளை நாஷ்டா . காலை டிபனுக்கு, குழந்தைகளில் லஞ்ச் பாக்ஸுக்கு , இரவு டிபனுக்கு கூட இதை செய்து சாப்பிடலாம்.








தேங்காய் மைதா மினி தோசை
தேவையான பொருட்கள்
மைதா – அரை கப்
முட்டை – ஒன்று
பொடியாக நறுக்கிய தேங்காய் – முன்று மேசைகரண்டி
சர்க்கரை – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிக்கை
எண்ணை + நெய் – தோசை சுட தேவையான அளவு

செய்முறை

மைதா, முட்டை, சர்க்கரை , உப்பை தேவைக்கு தண்ணீர் சேர்த்து திக்கான தோசை மாவு பத்த்துக்கு கரைக்கவும்.

தோசை தவ்வாவை சூடு படுத்தி சின்ன சின்ன குட்டி தோசைகளாக வார்த்து அதில் பொடியாக நறுக்கிய தேங்காயை தூவி ஓவ்வொரு தோசையிலும் ஒரு தேக்க்ரண்டி அளவு நெய் + எண்ணையை சுற்றிலும் ஊற்றி ஒரு பக்கம் வெந்த்தும் மறு பக்கம் திருப்பி போட்டு கருகாமல் சுட்டு எடுக்கவும்.

 பரிமாறும் அளவு இரண்டு குழந்தைகளுக்கு.

ஆயத்த நேரம் : 7 நிமிடம்
சமைக்கும் நேரம் :10 நிமிடம்



                                        






புத்தாண்டு ஆரம்பமாகிறது உலகில் உள்ள அனைவரும் நோய் நொடி இல்லாமல் நலமாக வாழனும்.

நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம்.

குறிப்புகள் நிறைய செய்து வைத்து பதிவு போடும் ஆர்வம் குறைந்து விட்டது.
கடந்த சிலமாதங்கள் உடல் நிலை சரியில்லாமல் இருந்து மீண்டும் நல்ல படியாக இப்போது சுகம் பெற்று இருக்கிறேன். நினைத்ததை சமைக்க கூடிய உடல் ஆரோக்கியத்தை கொடுத்த அந்த ஏக வல்ல ஆண்டவனுக்கு நன்றி சொல்லி கொண்டே இருக்கிறேன்.

என் குறிப்புகள் மூலம் பயனடைந்தவர்கள் முகநூல் மேசேஜ் மூலம் நன்றி தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.  எனக்கும் என் குடும்பத்தார்களுக்கும் துஆ செய்து கொள்ளுங்கள்.

எல்லா புகழும் இறைவனுக்கே.. 

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

12 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டும் அருமை சகோதரி... நன்றி... பாராட்டுக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1

நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

அன்புடன் DD

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுவையான தே.மி.தோசையின் சுலபமான செய்முறை!

தங்கள் நல வாழ்விற்காக துஆ செய்கிறேன்!!

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

அருமையான் புத்தாண்டு செய்தி.
உங்களுக்கும் உங்கள் அன்பு குடுமபத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
உடம்பை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

Asiya Omar said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மினி தோசை சூப்பர்.பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்ப்பது புதுசாக இருக்கு.

இளமதி said...

மினி தோசை சூப்பர்!

உங்கள் உடல் நலனடைய வேண்டிக்கொள்கின்றேன் சகோதரி!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

த ம.4

சாரதா சமையல் said...

மினி தோசையுடன் தேங்காய் சேர்த்து செய்திருப்பது அருமை.

ADHI VENKAT said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

'பரிவை' சே.குமார் said...

ஆஹா....
வாவ்...

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா