Saturday, May 29, 2010

ஹமூஸ் - hummus

அரபிகளின் உணவு களில் இந்த குபூஸ் மற்றும் சிக்கன்,பிலாபிலுக்கு இந்த ஹமூஸ் இல்லாமல் இருக்காது.

இது பல சுவைகளில் தயாரிக்கலாம்.

அதில் சுலபமுறை இது
தேவையானவை
கொண்டை கடலை - 100 கிராம் (அரை டம்ளர்)
பூண்டு - இரண்டு பல்
லெமன் - ஒன்று
(தஹினா) வெள்ளை எள் - முன்று தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
வெள்ளை மிளகு தூள் - கால் தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் -சிறிது
ஆலிவ் ஆயில் - முன்று மேசை கரண்டி
செய்முறை
1.கொண்டைக்கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து .வேகவைத்து கொள்ளவும்.
2.வெந்த கொண்டைகடலையை ஆறியதும் பூண்டு, வெள்ளை எள் எலுமிச்சை சாறு உப்பு தேவையான அளவு தண்ணீர் ( கடலை வெந்த தண்ணீரே கூட பயன் படுத்தலாம்) சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

3.ரொம்ப கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

4. கடைசியாக ஆலிவ் ஆயில் கலந்து
பப்பரிக்கா பவுடர் கொண்டு அலங்கரிக்கவும்
5. சுவையான ஹமூஸ் ரெடி




குறிப்பு

1.இது நம் சுவைக்கேற்ப தயாரிக்கலாம், ஆனால் கலர் தான் சிறிது வித்தியாசப்படும்.

2. வெள்ளை மிளகு இல்லை என்றால் சிறிது மிளகாய் தூள், (அ) கருப்பு மிளகும் சேர்த்து கொள்ளலாம்.

3. இதையே சிறிது தயிர் வெங்காயம் சேர்த்து கொஞ்சம் நீர்க்க அரைத்தால் பிலாபில் சாண்ட்விச், சவர்மா சாண்ட்விச்சுக்கு பயன் படுத்தும் சாஸ் ஆகவும் பயன் படுத்தலாம்.

4. கைபடாமல் பிரிட்ஜில் வைத்து என்றால் நான்கு நாட்கள் பயன் படுத்தலாம்.

5. அடிக்கடி ஹமூஸ் சாப்பிடுபவர்கள் எள் பேஸ்ட் தனியாகவே விற்கிறது கடைகளில் அதை வாஙகி வைத்து சுலபமாக பூண்டு பொடி சேர்த்தும் தயாரிக்கலாம்.

6. வெளிநாடுகளில் கொண்டைகடலை கூட டின்னில் ரெடி மேட் கிடைக்கிறது. நான் இதில் எல்லாமே பிரெஷ் தான் பயன் படுத்தி உள்ளேன்.
7. புளிப்பு சுவை அதிகம் விரும்பதவர்கள் அரை பழம் பிழிந்து கொண்டால் போதுமானது.

8. இது குபூஸுக்கு என்றில்லை சப்பாத்தி ரொட்டி பூரிக்கும் தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.


டிஸ்கி:எல்லோரும் பதிவ படிக்க முடியல என்று சொன்னதால் இப்போதைக்கு சிம்பிளாக ஒரு டெம்ளேட் போட்டு உள்ளேன், இப்ப பிளாக்

52 கருத்துகள்:

Asiya Omar said...

புது டெம்ப்லேட் பளிச்சுன்னு அழகாக இருக்கு.ஹமூஸ் அருமையாக செய்து இருக்கீங்க,நான் லெமன் மட்டும் இந்த பப்ரிகா பவுடர் மட்டும் சேர்ப்பதில்லை.

Anonymous said...

This template is much better acca. Its nice to see large pics. Thanking you for considering my request.

இருமேனிமுபாரக் said...

நான் அரபகத்தில் வேலை செய்த போது இதை மிகவும் விரும்பி சாப்பிடுவேன். இப்பொழுது மலேசியாவில் இருப்பதால் கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருடிந்தேன்
கொண்டைக்கடலையில் செய்வது என்பது மட்டும் தெரியும்.முழுமையான கலவை தெரியாமல் இருந்தது. இப்பொழுது தங்களின் மூலமாகத் தெரிந்து
கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. jazak allah khairan katheerah...

Menaga Sathia said...

new template & recipe looks superr!!

ஜெய்லானி said...

புது டெம்லேட் சிம்பிலா அழகா இருக்கு.. ஓட்டு பட்டைய முதல்ல வையுங்க. ஹமூஸ் ..சூப்பர்...

Kasaly said...

இந்த பப்ரிகா பவுடர்ன்னா என்னது
தெரியல்லையே?நானும் ஒரு தடவை
ருசி பார்த்து இப்படித்தான் செய்யனும் என்று கும்சா கொண்டை கடலை வாங்கி செய்து பார்த்தேன் நல்லாவேயில்லை. இப்பத்தான் தெரிகிறது இவ்வளவு மேட்டர் சேர்க்கனும் என்று...மனக்கட்டும் சமையல் வாசம் இன்னும்?

vanathy said...

Jaleea akka, looking very yummy. I will try this very soon.

Anonymous said...

@ இருமேனிமுபாரக் ,
மலேசியாவில நிறைய அரேபிய உணவகங்கள் இருக்கு. நான் ஒரு மூணு நாலு இடங்களுக்குப் போய் இருக்கிறேன். பிபி (புக்கிட் பிந்தாங்) சைபர் ஜெயா போன்ற இடங்களில் அரேபிய உணவகங்கள் இருக்கின்றன.

Anonymous said...

கொஞ்சம் சாட் மசாலாத்தூள் போட்டு மிக்சியில ஒரு சுத்து சுத்துங்கோக்கா. இந்தியன் ஹமொஸ் ரெடி. அது நம்ம கண்டு பிடிப்பு. காப்பிரைட்டட். உங்களுக்குன்னதால சொல்லுறேன். சரியா? =))

ஒலிவ் எண்ணெய் மட்டுமல்ல நல்லெண்ணை போட்டு செய்தால் கூட நன்னா இருக்கும். எனக்கு ஹமொஸ் / தயிர் இருந்தா போதும். வேற எதுவும் வேண்டாம். சாதத்தில இருந்து பிரட் வரை தொட்டுக்க அது இரண்டும் போதும் எனக்கு. இட்லி தோசை கூட இரண்டும் தொட்டு சாப்பிடுவேன். என் கிளாசில இருக்கிற ஈராக்கி பையன் அம்மா சொல்லிக்கொடுத்தாங்க இந்த ரெசிப்பி. =))

- ஹமொஸ் பைத்தியம் அனாமிகா

Anonymous said...

குபூஸ்ன்னா குஸ் குஸ்ஸாக்கா?

GEETHA ACHAL said...

ஆஹா..நானும் இன்று hummus தான் போஸ்ட் போடாலாம் என்று இருந்தேன்...விடுமுறை என்பதால் போடவில்லை....New Template looks good and its loading fast too...

சீமான்கனி said...

ஆமாக இது இல்லாம காலை உணவே இல்லை எனக்கும் இது இருந்தான் குப்பூஸ் உள்ள எறங்கும்...
புது வீடு நல்லா இருக்கு...

இமா க்றிஸ் said...

இப்போ படிக்க ஈசியாக இருக்கு ஜலீலா. ;)
குறிப்பும் நன்று.

Chitra said...

New to me.. looks gud :)

Ahamed irshad said...

Nice dish...

உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்.. http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை .....

தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை .....

தொடர்ந்து எழுத எங்கள் வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

என்னோட பேவரட் . நானும் இதேபோல் செய்து வச்சுக்குவேன். அப்பப்ப அரபியர்கள் கடைகளில் வாங்கிக்குவேன்.

அதுசரி புதுவூடு மாத்தியாச்சா! அதான் நான் டிரைப்பண்ணுனப்ப எரார் காட்டியதா? சொல்லவேயில்ல.

இங்கு 3 .4 நாட்களால் மின்சாரம் அடிக்கடி போய்க்கொண்டிருக்கிறதுக்கா அதான் எதுவுமே செய்யமுடியல..

SUFFIX said...

புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு. ஹமுஸ் வீட்லேயும் செய்யலாமா,கிரேட்!!

athira said...

ஆ.... ஜலீலாக்கா ,... இதுதானோ ஹமூஸ்ஸ்ஸ்??? ரொம்ப சிம்பிள் ஆக இருக்கே... பாகிஸ்தான் கடைக்குப் போனபோது பப்ரிகா பவுடர் பார்த்து “இதுவும் சும்மா இருக்கட்டுமே” என வாங்கிவந்தேன். இப்போ பிரயோசனப்படப்போகுதே....

பி.கு:
இப்பத்தான் உங்கள் முகப்பு படிக்க இலகுவாக இருக்கு, உடனே ஓபின் ஆகிறது. முன்பு அதனாலேயே பலதடவை நான் வருவதில்லை. இதுவும் அழகாகவே இருக்கு.

வேலன். said...

ஹமூஸ் போலவே டெம்ப்ளேட்டும் அருமையாக இருக்கு சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.

அண்ணாமலையான் said...

உங்க எல்லா பதிவுக்கும் ஓட்டு போட்டுக்கிட்டுதானிருக்கேன்.. செக் பன்னா தெரியும்.. உங்க விசாரிப்புக்கு நன்றி... கொஞ்சம் பிசி...விரைவில் வரேன்.

எம் அப்துல் காதர் said...

புது டெம்லேட் அழகா இருக்கு மேடம். ஹமூஸ் sooopper!!

மங்குனி அமைச்சர் said...

புது வீடு , 200 பாலோவர்ஸ் பிரமாதம் ...........
ஜமாயிங்க ...................
200 பாலோவர்ஸ் கொண்ட

பிரபல பதிவர் "ஆல் இன் ஆல்" ஜலீலா மேடம்
வாழ்க
மிக , மிக பிரபல பதிவர் "ஆல் இன் ஆல்" ஜலீலா மேடம்
வாழ்க ,வாழ்க
மிக, மிக , மிக பிரபல பதிவர் "ஆல் இன் ஆல்" ஜலீலா மேடம்
வாழ்க, வாழ்க, வாழ்க

Riyas said...

நானும் அபுதாபியிலதான்.. இது சாப்பிட சுவையா இருக்கும் ஆனா செய்ய தெரியாதுங்க,,,

நான் இதுவே உங்கள் தலத்தை முதலில் பார்வையிடுகிறேன் அருமை 201 வது நபராக பின் தொடர்கிறேன்
riyasdreams.blogspot.com

நட்புடன் ஜமால் said...

புது டெம்ப்ளேட் சிம்பிளா அழகா இருக்கு.

ஹமூஸ் எனக்கு மிகவும் பிடித்த அரபிய உணவு, ‘தும்’ (பூண்டு பேஸ்ட்) இது ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

ஹமூஸ் அவசியம் செய்ய சொல்லி சாப்பிட்டு பார்க்கிறேன்

பப்ரிக்கா பவுடர் இங்கே கிடைக்குதான்னு பார்க்கனும், கிடைக்காட்டி துபாயிலிருந்து அனுப்ப சொல்லனும்.

‘தும்’மும் போடுங்களேன்.

Jaleela Kamal said...

ஆசியா முதலில் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
இது பல முறைகள், முயற்சி செய்தது.

Jaleela Kamal said...

அனாமிகா , அடுத்த முறை கரம் மசாலாவும் சேர்த்து கொள்கிறேன்.
உஙக்ளுக்காக தான் படத்தை பெரியதாக போட்டேன்.
வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க ந்ன்றி.

Jaleela Kamal said...

இருமேனி முபாரக் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி மேனகா,

ஜெய்லானிடெம்லேட் மாற்று வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது,. ஓட்டு பட்டை அதுக்கு மேல,

தொடர்வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றீ,

வானதி வருகைக்கு மிக்க நன்றி செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.

Unknown said...

Assalamu alaikum mam,how r u?im amina.now my daughters motion problem is solved.i hav to thank u only.i want another help from u mam.now my daughter got cold.mookkadaipa iruku.she is struggling to breath mam.enna saivathu help me plz. one more thing mam plz tel me how to type in tamil letters.thank u

Jaleela Kamal said...

arise உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றீ,
பபரிக்கா என்பது காஷ்மீரி சில்லி போல் ஒரு வகை சில்லி,.இது சிக்கன் , மட்டன், பார்பிகிவுக்கு பயன் படுத்தினால் நல்ல இருக்கும்.

நீங்கள் குறீப்பிடும், கும்சா கொண்டைகடலை பற்றி எனக்கு தெரியல.

நான் பிரஷா ஊறவைத்து வேகவைத்து அரைத்து செய்வேன்.

உஙக்ள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

அனாமிகா குபூஸ் என்பது அரபிகள் சாப்பிடும் ரொட்டி.

குஸ்கா இந்தியர்கள் சாப்பிடும் கீ புலாவ் போல் ஆகும்.

Jaleela Kamal said...

கீதா ஆச்சல் உஙக்ள் வாழ்த்துக்கு பாராட்டுக்கு ,தொடர்வருகைக்கு மிக்க நன்றி,

Jaleela Kamal said...

சீமான் கனி என் பதிவு போட்டததும் எங்கிருந்தாலும் பறந்தோடி வந்து கமெண்ட் தெரிவிப்பதற்கு மிக்க நன்றி

ஊரிலிருந்து மகன் வந்துள்ளால் அவனுக்கு அரேபிய உணவு வகைகள் தான் பிடிக்கும்.

Jaleela Kamal said...

இமா வந்தமைக்கு மிக்க நன்றி


நன்றி சித்ரா

அஹமது இர்ஷா வருகைக்கும் விருது கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

உலவுடாட்காம் உஙக்ள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஷபிக்ஸ் வருகைக்கும் தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்கும் மிக்க நன்றி.

ஆமாம் ஹமூஸ் வீட்டிலேயெ சுலபமாக தயாரித்து கொள்ளலாம், இது எஙக் வீட்டில் எல்லோருக்கும் பேவரிட்

Jaleela Kamal said...

மலிக்கா ஆஹா கரண்ட் இல்லையா ஜார்ஜாவுல அட கொடுமையே.ஆமாம் புது வீடு மாற்றியாச்சு.

நல்ல இருக்க்கா ரொமப் ஜந்தோஜம்... ஹி

Jaleela Kamal said...

அதிரா இப்ப படிக்க இலகுவாக இருக்கிறதா? ரொம்ப சந்தோஷம்..

இது ரொமப் சுலபம், எந்த கறியும் இல்லை என்றால் இது ஒன்றே போதுமானது,

பப்பரிக்கா பவுடர் கிரில் அயிட்டம் களுக்கு, மட்டன் சிக்கன் இறால் வகைகளுக்கு கூட பயன் படுத்தலாம்.

Jaleela Kamal said...

வேலன் சார் உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி/

Jaleela Kamal said...

அண்ணாமலையான் சார் தொடர்ந்து ஓட்டு போடுவதற்கு மிக்க நன்றி, இங்கு வருகை தந்தம்மைக்கு மிக்க நன்றி.+ சந்தோஷம்

Jaleela Kamal said...

அண்ணாமலையான் சார் தொடர்ந்து ஓட்டு போடுவதற்கு மிக்க நன்றி, இங்கு வருகை தந்தம்மைக்கு மிக்க நன்றி.+ சந்தோஷம்

Jaleela Kamal said...

//புது டெம்லேட் அழகா இருக்கு மேடம். ஹமூஸ் sooopper!

!சகோ. எம் எம் அப்துல் காதர், உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

Jaleela Kamal said...

அமைச்சரே புது வீடு பிரமாதமா?

ரொமப் சந்தோஷம், உங்கள் அன்பான வாழ்த்துக்கும் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி.

Jaleela Kamal said...

சகோ. ரியாஸ் வாங்க, உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி.

நேரம் கிடைக்கும் போது உஙக்ள் பக்கம் வருகிறேன்.

201 வதா இனைந்தமைக்கு. ரொம்ப சந்தோஷம்.

Jaleela Kamal said...

சகோ..ஜமால் கருத்து தெரிவித்தமைக்குமிக்க நன்றி,
தூம் பேஸ்ட் ம்ம் கூட்டிய விரைவில் போட்டு விடலாம்.


இதில் பப்பரிக்கா பவுடர் அவசியம் சேர்க்கனும் என்ற அவசியம் இல்லை.

அனாமிக்கா சொன்னது போல் சாட் மசாலா சேர்த்து கொள்ளுஙக்ள்.

ஸாதிகா said...

புது டெம்ப்ளேட் சிம்பிளாக இருந்தாலும் அழகாக உள்ளது.இப்பொழுது உங்களின் பிளாக் சீக்கிரம் ஓப்பன் ஆவது குறித்து மகிழ்ச்சி ஜலி.ஹமூஸ் நான் விரும்பி சாப்பிட்ட சைட் டிஷ்.இப்ப வீட்டிலேயே செய்து விடலாம்.குறிப்புக்கு நன்றி ஜலி.

Geetha6 said...

ஹமூஸ் அருமை !
வாங்க வந்து அவார்டு வாங்கிக்கங்க, தோழிகளின் சமையல்... பகுதியை
இன்று தான் பார்த்தேன் ..அதில் என்னுடைய ப்லோகுகும் அவார்ட் தந்து உள்ளீர்கள். மிக்க நன்றி தோழி !
மகிழ்ச்சியுடன் பெற்று கொள்கிறேன் .

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கீதா

சசிகுமார் said...

எப்பவும் போல நல்ல பதிவு அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். டெம்ப்ளட் அழகாக உள்ளது கலக்குறீங்க போங்க.

இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

மாதேவி said...

ஹமூஸ் வித்தியாசமாக இருக்கிறது ஜலீலா.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா