Showing posts with label டாடி. Show all posts
Showing posts with label டாடி. Show all posts

Sunday, December 30, 2012

சேமர் இப்ராஹிம் ஜலீலா பானு




சேமர் இப்ராஹிம் ஜலீலா பானு , பாஸ்போர்டில் எங்க டாடி பெயரோடுதான் என் பெயர் இருக்கும் 
இங்கு ஏர்போட் ஹாஸ்பிட்டல் எங்கு சென்றாலும் என் பெயரை சேமர் இப்ராஹிம் என்று தான் கூப்பிடுவார்கள்.அப்படி கூப்பிடுவது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.



இது என் 700 வது பதிவு, என் டாடிய பற்றியே எழுதிவிடுகிறேன்.
.

சேமர்  முகம்மது இப்ராஹிம்


 சின்ன வயதில்  டாடி தலை சீவும் போது   நான் தான் எதிரில் கண்ணாடி பிடித்து கொண்டு நிற்பேன், அப்படி இப்படி ஆட கூடாது. அப்பதான் தலை சொறி எடுக்கும். அவங்க திட்டதேவையில்லை முகம் போகிற போக்கே புரிஞ்சிக்கலாம்.
சாப்பாடு விஷயத்தில் ருசித்து அதில் உள்ள குறை நிறைகளை அழகாக சொல்லுவாங்க.

நாங்க துணி துவைத்து காய போட்டு கொண்டு இருந்தால் (அப்பதான் வாஷிங் மிஷின் கிடையாதே) அப்படியே அலசி தொங்க விட வடமாட்டாங்க நல்ல பிழி, நல்ல பிழிஞ்சி போடுங்க. அப்பதான் சீக்கிரம் காயும்/ பிழிவதிலேயே அது பாதி உலர்ந்து விடும் என்பார்கள்

கட்டி பருப்பு ரசம் வைத்தால் ஜலீ அந்த பருப்பு போட்டு அதுக்கு மேலே ரசம் ஊற்றி, பருப்பில் இருக்கும் மிளகாயை பிழிஞ்சி சாப்பிடு சூப்பராக இருக்கும்.

மீன் சால்னா வைத்தால் காரம், உப்பு, புளிப்பு கரெக்டா இருக்கனும். மாமியார் கிட்டயாவது நல்ல இருக்குன்னு பெயர் வாங்கிடலாம் ஆனால் டாடி சால்னாவ உப்பு சரி பார்க்கும் போது அவர் முகம் எப்படி போகுதுன்னு பார்ப்பேன், சாப்பிட்டு பார்த்து வாழ்த்தும் போது ஆஹா அருமையா இருக்கு என்பார்.ஆனால் கொஞ்சம் நல்ல இல்லன்னாலும் எங்க மனசு நோக கூடாதேன்னு.சரி பரவாயில்ல சாப்பிடலாம் ஆனால் முகம் காட்டி கொடுத்துடும்.
/.மதியம் சாப்பிட உட்காரும் போது ,வாங்கம்மா எல்லாரும் சாப்பிட்டலாம் முதலில் வீட்டில் வேலை செய்யும் அஜ்ஜாவை ஏய் முதல அவள சாப்பிட உட்கார சொல்லு என்பார், உடனே என் தங்கை பாரே நான் இவ்வளவு நேரம் நின்று கொண்டு இருக்கேன் என்னை உட்கார சொல்லல, அஜ்ஜாவை கூப்பிடுகிறீங்க என்பாள்.

நீ இந்த வீட்டு பிள்ளை, தேவைக்கு எப்ப வேனும்னா போட்டு சாப்பிடலாம் பாவம் அவ நம்ம கொடுத்தா தானே சாப்பிடுவா,வா என்று கூட உட்காரவைத்து தான் சாப்பிட வைப்பார். வெக்கபடமா சாப்பிடு எம்மா அஜ்ஜாவுக்கு இன்னும் கொஞ்சம் வைமா என்பார்.
ஊருக்கு போயிருந்த போது வித விதமா சிக்கன் செய்து கொடுத்தேன் அதில் அவங்கலுக்கு ரொம்ப பிடிச்சது ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரெவி.நான் இங்க வந்ததும் ஜலீ கிட்ட கேளும்மா எப்படின்னு கேட்டு செய்.சால்னா, கிரேவி என்றால் திக்காக கிரிப்பாக இருக்கனும்.

கால் பாயா ரொட்டி போட்டால் சால்னாவ ரொட்டியில் ஊற்றி சாப்பிட சொல்வாஙக் சூப் போல கை கால் வலியெல்லாம் கேட்கும் என்பாகள்.


வேர்கடலைய .மல்லாட்டை என்று தான் சொல்வார்கள் , உப்பு போட்டு அவித்து சாப்பிடுவோம்.
பகோடா ரொம்ப பிடிக்கும். எங்க கடையில் இருந்து நான்காவது க்டைதான் மிக்சர் பகோடா கடை சுட சுட போட்டால் டாடிக்கு ஒரு பாக்கெட் வந்துடும்.
ஊருக்கு வந்தபோது எனக்கு அப்ப பகோடா போட தெரியாது. 
மம்மி வெளியில் போயிருந்த போது பகோடா செய்ய தெரியுமான்னு கேட்டார் நானும் தெரியாதுன்னு சொல்லாம , நானும் என் தங்கையும் சேர்ந்து எங்களுக்கு தெரிந்த பகோடாவை செய்து கொடுத்தோம். 
சின்னவயதில் ஓரளவுக்கு சுமாராக தான் செய்தோம்.

டாடி மவுத்ரார்கன் நல்ல வாசிப்பாங்க. 


என் பையன் லீவுக்கு வந்தான்னா காலேஜ்க்கு டிரெயினில் போய் சேர 2 நாட்கள் ஆகும். டாடி முழிச்சிட்டு இருந்து அவன் துங்கிட போறான்னு அவன் இறங்கு ஸ்டேஷன் வருவதற்கு அரை மணி நேரம் முன்பே போன் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.அவனும் ட்ரெயினில் கிரான்பா எழுப்புவாங்கன்னு நிம்மதியா தூங்குவான்.

பையன் காலேஜ் போனதில் இருந்து முன்று மாதமாக சரியாக சமைக்கவே இல்லை ஏனோ தானோன்னு சமைத்துகொண்டு இருந்தேன்.
டாடி தான் இந்த மாதிரி எல்லாம் செய்ய கூடாது, இப்ப கூட இருக்கிற ஹனீபுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒழுங்கா சமையல் செய்து கொடு . ரிஸ்க் அளிப்பவன் அல்லா ,யார் யாருக்கு என்ன ரிஸ்க் கிடைக்கனுமோ அதன் படி கிடைக்கும், அவன் சாப்பிடலையே நாம சாப்பிடுறோமே இப்படி நினைக்க கூடாது. உன் பையனுக்காக அல்லாவே அவன் எங்கு இருந்தாலும் நல்ல ரிஸ்க் கிடைக்கனும் என்று துஆ கேட்டுக்கோ என்றார்கள்.



எனக்கு என்ன மனக்க்‌ஷ்டம் என்றாலும் கரெக்டா டாடி கிட்ட இருந்து போன் வந்துடும். ஜலீ என்ன செய்ற நல்ல இருக்கியா என்று கேட்ட்துமே ஒரு தெம்பு புத்துணர்வு எல்லாம் தானே வந்துடும். ஒன்றும் கவலை படாதே எல்லாம் அவன் கிட்ட விட்டுடு எல்லாம் அவன் சரியாக்கிடுவான். இத ஓது அதை ஓது என்று குர் ஆன் வசங்கள் எடுத்து சொல்லுவாங்க.



சின்னதில் இருந்து எங்க டாடிக்கு இந்த கடைதான்  35 வருடஉழைப்பு



 பள்ளியில் ஒரு வகுப்பு  முடிந்த்தும் அடுத்த வகுப்பு அல்லது இடைவேளையில் டாடியை பார்க்க்னுமுன்னா உடனே நான் பார்க்கலாம்.
 உங்கள் யாருக்காவது இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கா?
பள்ளிகூடம் நின்று ரோட் கிராஸ் பண்ணா நேராக எங்க வாப்பாவின் 
துணி  கடை பானு சில்க் பேலஸ் அங்கிருந்து பார்த்தால் டாடி உட்கார்ந்து இருப்பது தெரியும்.
உள்ளே அசம்பிலி ஹாலில் நின்று திரும்பி பார்த்தாலும் டாடிய பார்க்கலாம்.
பள்ளிகூட்த்தின் முன்புறம் டாடி கடை, பள்ளி கூட்த்தின் பின்புறம் எங்க வீடு.


ஆனால் 35வருடத்துக்கு பிறகு சவுதி சென்று விட்டார்கள்.
அங்கு போனதில் இருந்து நல்ல இஞ்சி டீ போடுவது. புளிசாதம், உப்புமா , மைதா முட்டை தோசை, பீட்ரூட் ஹல்வா இதெல்லாம் சூப்பராக செய்ய கற்றுகொண்டார்கள்.
.ஞாயிற்று கிழமை என்றால் காலை நீங்க எல்லாரும் தூங்குங்கம்மா நான் சுபு தொழுதுட்டு வந்து டீ போடுறேன் என்பார்.ஒரு சமையலுமே தெரியாது சமைக்கும் கழ்டமும் தெரியாது, வெளி ஊரில் இருக்கும் போது இரவில் தீடீர் விருந்தாளிகள் அந்த ராத்திரியிலும் என் அம்மா சமைத்து கொடுப்பாங்க

இரண்டு வருடம்  முன் ஊருக்கு போயிருந்த போது கூட என்னை உட்காரவைத்து காலையில் மைதா முட்டை தோசை அதில் ஏலம் தேங்கா கீறி போட்டு அருமையாக சுட்டு மேலே நெய் தடவி சாப்பிடு என்று கொடுத்தார். இவ்ளோ ஹெவி வேண்டாம் டாடி சாப்பிடு பரவாயில்ல எப்படி இருக்கு சாப்பிட்டு பாரு என்றார்.
பேரன் பேத்திகளுக்கும் கிரான்பா ந்னா ரொம்ப பிடிக்கும். பேத்திகள் எல்லாம் பரிட்சைக்கு மாடியில் படித்து கொண்டு இருந்தால் இரவும், காலையில் விடிகாலையிலும் ஒரு பெரிய கிளாஸ் நிறைய பாதம் காம்ப்ளான் கரைத்துகொண்டுபோய் கொடுப்பாங்களாம், இந்த தடவை ஊருக்கு போயிருக்கும் போது தஙகச்சி பிள்ளைகள் எல்லாம் என்னிடம் கிரான்பாவை பற்றி தான் பேசிகொண்டு இருந்தார்கள்.
வெளியில் ஏசி ரிப்பேருகோ, பைப் ரிப்பேருக்கோ , டேங்க் ரிப்பேருக்கோ ஆள்வந்தால் வாங்க போங்கன்னு அவர்களிடம் மரியாதையாக பேசுவதும் அவர்களை கவனிப்பதும் பார்க்க நல்ல இருக்கும்.
டாடிக்கு ரொம்ப பிடிச்ச டிரஸ் சபாரி, இங்கு இருந்து போகும் போது ஏதாவது வேணுமான்னு கேட்டால் எனக்கு ஒன்றும் வேண்டாம் நீ நல்ல படியா வந்து சேரு, காசு வேஸ்ட் பண்ணாதே என்பார்கள்.


 சபையில் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தால் அந்த சபையே கலகலப்பாக  இருக்கும். அப்படி பேசி கொண்டு இருக்கும் போது உடனே கிளம்ப வேண்டி இருந்தால்  ரொம்ப தன்மையாக அப்ப உத்தரவு வாங்கிக்கிறேன், என்று சொல்லிட்டு எழுந்திருப்பாங்க.
தெருவில் நட்ந்து போனாங்கன்னா வழியில் எல்லாரையும் நலம் விசாரிக்காம போக மாட்டாங்க.
டாடிக்கு இரண்டு தம்பி ஒரு அண்ணன், 4 பேரும் ஒற்றுமை என்றால் அப்படி ஒரு ஒற்றுமை.

நான்கு பேரும் சேர்ந்து பேச ஆரம்பித்தார்கள் என்றால் சுற்றி இருக்கும் எங்களை எல்லாம் மறந்துடுவாங்க.
குர் ஆன் ஹதிஸ் பற்றின விளக்கங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு பேசி கொண்டு இருப்பார்கள். 

எழுத எழுத நிறைய நினைவுகள் வந்து கொண்ட்டே இருக்கு .. இத்துடன் முடித்து கொள்கிறேன். கண்மூடி திறப்பதற்குள் எல்லாமே முடிஞ்சே போச்சே.. நினைக்க நினைக்க டாடி பேசியது தான் எண்ணத்தில் ஓடிக்கொண்டு இருக்கு.
ஆண்டவன் அனைவருக்கும் நல்லது கெட்டதை தாங்கிக்ககூடிய மன தைரியத்தை கொடுக்கன்னும்

700 வது பதிவு என்னால் மறக்க முடியாத என் டாடிய பற்றியே எழுதிடலாம் என்று எழுதிட்டேன்.


இது வரை என்பதிவுகளுக்கு ஊக்கம் கொடுத்துவருகின்ற பதிவுலக தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி.


டிஸ்கி :

இனி சுலப குறிப்புகள் நிறைய கொடுக்க இருக்கிறேன் ஏன் என்றால் என் தம்பி தங்க கம்பி இப்ப இத பார்த்து தான் சமைத்து கொண்டு இருக்கிறார்.அதற்காக தான் பேச்சுலர் ஈவண்டே ஆரம்பித்தேன்.

புரோக்கோலி பொரியல், சிக்கன் குருமா, ஷீர் குருமா போன்றவை செய்து பார்த்து ரொம்ப நல்ல வந்தது என்று சொன்னார். ரொம்ப ரொம்ப சந்தோஷம்.

அது இல்லாமல் என் தங்கைகள் கேட்ட குறிப்புகள், பெரியாப்பா மகள் கேட்ட குறிப்பு, என் பெரிமா பேத்தி கேட்ட குறிப்புகள் எல்லாம் முடிந்த போது எல்லாத்தையும் போட இருக்கிறேன்.

போனவார ஒரு குட்டி வி ஐ பி வந்து என் சமையலை ருசி பார்த்து விட்டு தனியாக கிச்சனில் வந்து என்னை பாராட்டிட்டு போனார், ஜல்லான்னாட்டி ரொம்ப சூப்பரா இருந்தது என்று சொன்னார் குழந்தைகள் பாராட்டை கேட்க எல்லாம் கொடுத்து வைத்து இருக்கனும்.

பெரிமா மகள் ஊருக்கு போயிருந்த சமையம் என்ன ஜலீக்கா நானும் எதிர் பார்த்து கொண்டே இருக்கேன் இன்னும் நான் கேட்ட குறிப்பை போடலையே
என் செல்லமாக கோபித்து கொண்டாள்.. நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக போடுகிறேன் என்றேன்.

ஒரு நாள் ருவைசில் இருக்கும் பெரிவாப்பா பையன் எனக்கு வெஜ் பிரியாணி ரெசிபி லின்க் கொடுங்க என்றார், செய்து விட்டு ரொம்ப சூப்பராக வந்தது என்று சொன்னான்.

என் தங்கை பொண்ணுக்கு சமீபத்தில் தான் கல்யாணம் ஆகியது, என் தங்கை  நான் ஒன்றுமே சொல்லிகொடுக்கல எல்லா சமையலும்  உன் பிளாக் பார்த்துதான் சமைக்கிறாள்.ரொம்ப நிம்மதியா இருக்கு என்றாள்
.
நான் என்றும் என்றென்றும் உலகத்தில் உள்ள அனைத்து வீட்டு சமையலறையிலும் உப்பா சர்க்கரையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்று நினைக்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இன்னும் பலபேருக்கு பயனுள்ளதாக தான் இருக்கிறது.அதை இங்கு வந்து சொல்ல தான் யாருக்கும் நேரம் இல்லை போல இருக்கு தினம் 1000 க்கும் மேற்பட்டவர்கள்  இங்கு வந்து சுவைத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் ஒரு வார்த்தை இங்கு வந்து சொல்ல தான் யாருக்கும் மனம் வரவில்லை.
கவனிக்க

பேச்சுலர் ஈவண்டுக்கு நீங்கள் அனுப்பிய குறிப்புகள் எல்லாம்  செக் பண்ணி கொண்டு இருக்கிறேன், இன்னும் எத்தனை குறிப்புகள் கிடைக்க பெற்றுள்ளன எப்ப ரிச்ல்ட் என்பதை அடுத்த போஸ்டில் சொல்கிறேன், சில பேர் லின்குகளை மற்றும் அனுப்பிட்டு அவர்க்ள் போஸ்டில் லின்க் கொடுக்கல. அனுப்பியவர்கள் உங்கள் பதிவில் என் லிங்க் கொடுத்து  இருக்கீங்களான்னு ஒரு முறை சரி பார்த்து கொள்ளுங்கள். தேதியில் இருந்து அனுப்பிய புது குறிப்பு + சில பழைய குறிப்புகள் 2012 லில் உள்ள் செலக்ட் பண்ணுவேன்.




Saturday, December 8, 2012

சிம்பிள் வெங்காய நார்த்தங்காய் ஊறுகாய் (கர்பிணி பெண்களுக்கு)









சிம்பிள் வெங்காய நார்த்தங்காய் ஊறுகாய் (கர்பிணி பெண்களுக்கு)


மசக்கையின் போது கர்பிணி பெண்களுக்கு வாய்க்கசப்பாக இருக்கும் எது சாப்பிட்டாலும் குமட்டும், சாப்பிடும் போது நல்ல இருக்கும் சாப்பிட்டு முடித்த்தும் மறுபடி வாய் கசக்கும்.
அதுக்குஇந்தஊறுகாய்ரொம்பநல்லஇருக்கும்.
அந்த காலத்தில் என் கிராண்மாவின் அம்மா செய்த்து இது.




தேவையானவை

உப்பில் ஊறிய நார்ந்தங்காய் – அரை துண்டு (அல்ல்து தேவைக்கு) அல்லது நார்த்தங்காய் ஊறுகாய் 1 மேசைகரண்டி

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2

கறி உருளை கிழங்கு சால்னாவில் இருக்கும் பச்சமிளகாய், உருளை கிழங்கு, சால்னா ஒரு குழிகரண்டி
அல்லது வெஜ் குருமா

சிருக்கா என்பார்கள் கருப்பாக இருக்கும் புளிப்பு தன்மைக்கு முன்பெல்லாம் ஊறுகாய்க்கு அதான் பயன் படுத்துவார்கள்.
இல்லை என்றால்

வெள்ளை வினிகர் (அ) கருப்பு வினிகர்  - 2 தேக்கரண்டி

செய்முறை

நார்த்தங்காயை பொடியாக அரிந்து கொள்ளவும் அதில் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் சேர்த்து கட்டியாக பிசையவும்.

ஒரு முறை செய்து சாப்பிட்டால் சுவை நாவில் அப்படியே நிற்கும்.
மறுபடியும் மறுபடியும் சாப்பிடனும் போல் இருக்கும்



டிஸ்கி: ரசம் சாதம் , தயிர் சாத்துக்கு வைத்து சாப்பிடலாம்.
கர்பிணி பெண்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
செய்த்தும் ஒரு நாளில் முடித்துவிடனும். கைபோட்டு பிசைந்த்தால் மறுநாள் கெட்டு போய்விடும்.
பிரஷர் (பீபி) அதிகம் உள்ளவர்களுக்கு டாக்டர் ஊறுகாயில் எண்ணையும் உப்புமாய் இருப்பதால் ஊறுகாயை தவிர்க்க சொல்வாங்க . இதில் எண்ணையும் இல்லை உப்பில் ஊறிய நார்த்தங்காயை கழுவிட்டும் இதில் பிசைந்து சேர்க்கலாம்.




சாப்பிடும் போது அந்த சால்னாவின் ருசி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நார்த்தங்காயின் ஊறுக்காய் ருசி ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வெங்காயத்தை நறுக்கு நறுக்குன்னு கடிச்சிக்கிட்டே, பச்சமிளகாய் காரத்துடன் ஆஆஆஆ. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் சப்பு கொட்டி கொண்டு சாப்பிடலாம்.


இது எங்க டாடிக்கு ரொம்ப பிடிச்ச ஊறுகாய் இது , ய்ம்மா இன்னும் கொஞ்சம் சிறுக்கா ஊற்றுமா என்பார்கள். இந்த ஊறுகாய் எனக்கும் ரொம்ப பிடிக்கும் 



இந்த ஊறுக்காய் சாப்பிட்ட சாப்பாட்டை நல்ல செமிக்க வைக்கும்.
இன்று அவர்கள் பிறந்த நாள் , எப்போதும் வருடாவருடம் நான் தான் காலையில் போன் செய்வேன். 
இப்ப எங்க டாடி எங்க கூட இல்லை. இன்றெல்லாம் மனசே சரியில்லை டாடி என்ன என்ன பேசுவாங்களோ அந்த பழைய நினைவுகள்ளைஎல்லாம் அசைபோட்டு கொண்டு இருந்தேன்.

Linking to Gayathri's Walk-through Memory Lane hosted by Nithu and My own event - Bachelor's Feast



Sunday, December 19, 2010

பழைய சாதத்துடன் அப்பாவை பற்றிய பழைய ஞாபகங்களும்.

இது என் 500 வது பதிவு,என் பதிவுகளை தவறாமல் படித்து பதில் அளித்து ஓட்டு போடும் பதிவுலக தோழ தோழியர்களுக்கும் மிக்க நன்றி.






பழைய சாதத்துடன் அப்பாவை பற்றிய பழைய ஞாபகங்களும்.


அப்பாக்கள் என்றுமே கிரேட் அப்பாக்கள் தான், அவர்கள் நமக்கு செய்ய்ம் ஓவ்வொரு விஷியமும் நினைத்து பார்த்தால் அனைத்தும் மிக அருமையான கனாக்காலம் தான்

அந்த காலத்தில் (அவ்வையார் பாட்டி காலம் இல்லை) சின்ன வயதில் , ஞாயிற்று கிழமைகளில் ஆகா அருமையாக ரேடியோவில் முகம்மது ரஃபி பாடல் கேட்டு கொண்டே





எல்லோரும் சேர்ந்து பழைய சாதமும், தொட்டுக்க நாலனா மசால் வடைசாப்பிட அருமையோ அருமை ஆனந்தமோ ஆனந்தம்.





அதுவும் எங்க எங்க அப்பா தான் எல்லோருக்கும் காலையில் இதை செய்து கொடுப்பது.

எப்படி செய்வது

மீதியான சாதம்
வெங்காயம்
பச்சமிளகாய்
மோர் (அ) தயிர்
கொத்துமல்லி தழை
உப்பு


//இரவே மீதியான சாதத்தை ஊற வைத்து அதை காலையில் நன்கு பிசைந்து அதில் வெங்காயம் பச்சமிளகாய் பொடியாக அரிந்து சேர்த்து மோர் (அ) தயிர் மற்றும் உப்பு, கொத்துமல்லி தழை நறுக்கி போட்டு தொட்டுக்க நாலனா மசால் வடை நான் போய் வாங்கி வருவேன்.இல்லை நார்த்தங்காய் ஊறுகாய்.//







தீபாவளி அப்ப எல்லாரும் வெளியில் வெடிக்கும் சங்கு சக்கரம், புஸ்பான், ராக்கெட் , சரவெடி எல்லாத்தையும் வேடிக்கை பார்ப்போம், உடனே மத்தாப்பு சுர் சுர் கம்பி வாங்கி வந்து வீட்டுல எல்லா லைட்டையும் ஆஃப் செய்து விட்டுஅரிக்கன் லைட், மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் தங்கைகளுடன் கொளுத்தி மகிழ்வோம். ரொம்ப அருமையான் கனாக்காலம.

/



சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும், என்பது போல் ”பானு சில்க் பேலஸ்”எங்கேன்னு கேட்டா சுற்று வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும். பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன், எங்கு வந்து வெளியூரில் இருந்து வந்து இரங்கி ”பானு சில்க் பேலஸ்” எங்கே ந்னு கேட்டா எல்லோரும் வழி காண்பிப்பார்கள், அந்த அளவுக்கு பேமஸ்.










ரேடியோ படம் சிங்கக்குட்டி பதிவில் இருந்து சுட்டது , நன்றி சிங்கக்குட்டி.







ஞாயிற்று கிழமைகளில் மதியம் சாப்பிட்டு முடித்ததும் எல்லோரும் சேர்ந்து
வானொலியில் நாடகம் கேட்டு கொண்டே கேரம் ஆடுவது ரொம்ப நல்ல இருக்கும்.





எப்பவும் எங்கும் எப்ப லேட்டா வந்தாலும் ஜலி ஜலீ என்று சொல்லி தான் கதவை தட்டுவார், அம்மா கோச்சுக்குவாங்க ஆமாம் ஜலியா வந்து கதவை திறக்கிறாள் என்பார்கள்.

இப்பவும் எப்ப போன் செய்தாலும் மனக்கழ்டமா இருந்தால் ஒன்றும் கவலை படக்கூடாது தைரியமா இருக்கனும், அனாவஷிய செலவு செய்ய கூடாது. அது அது நடப்பது தானா நடக்கும் என்பார்.அவர் சொல்லும் போதே பாதி கவலை போன மாதிரி ஆகிடும்.

ஆச்சு 35 வருடம் கடையிலேயே இருந்து அண்ணன் தம்பி எல்லோரையும் கவனித்து, அக்கா தங்கைகள் , அவர்கள் பிள்ளைகள்,பேத்திகள் வரை உதவி, நாங்க தலை எடுக்கும் போது கையில் ஒன்றும் இல்லை, பிறகு பத்து வருடகாலமாக நீச்சல் அடித்து பிறகு சவுதி சென்று சம்பாதித்து எல்லோரையும் கரை சேர்த்தார் . பிறகு அங்கேயே ஸ்டோரில் எண்ணை தடுக்கி விழுந்து கால் நடக்க முடியாம ஆப்ரேஷன் செய்து பிற்கு பணி தொடர முடியாமல் ஊருடன் வந்துவிட்டார்.




அப்பா எங்கு சென்றாலும் நடந்து தான் போவார் அவர் கூட் நடக்கனும் என்றால் நாங்க கூட் ஓடதான் செய்யனும் அப்படி ஒரு ஸ்பீட்.நானும் இங்கு வந்ததிலிருந்து இங்கு சம்பாத்தித்து முடிந்த வரை அப்பாவிற்கு உத்வினேன், அதில் என்க்கு மிக மனதிருப்தி.

கால் ஆப்ரேஷனில் இருந்து இப்ப வேகமாக நடப்பது சற்று சிரமம் தான்.
ரொம்ப கவலையாக இருக்கும் இங்கிருந்து போன் செய்தாலே டாடி கால் வலி இல்லாம இருக்கா பாத்ரூம் போனா பாத்து கால வையுங்கோ. படி இறங்கும் போது அவசர பட வேண்டாம், மெதுவா இரங்குங்கள் மழை பெய்தால் வெளியில் போகும் போது ஒழுங்கான செருப்ப போட்டு கொண்டு போங்க டாடி. போன் வந்த அவசரமா ஓடி வரவேண்டாம் என்று சொல்வேன்.



சின்ன வயதில் கூட இருந்ததோடு சரி அதற்கு பிறகு இது வரை பிரிந்து தான் இருக்கிறோம். படிக்கும் காலத்தில் பொருள் ஈட்ட பிரிந்து இருந்தார், கல்யாணம் ஆகி நாங்களும் சிறிதுகாலத்தில் பிரிந்தாச்சு. அப்ப வெக்கேஷன் லீவில் பார்ப்பதோடு சரி, ஆனால் முன்பு அடிக்கடி போன் செய்ய முடியாது. சவுதியில் இருக்கும் போது தனியா இருக்கிறாரே என்று அடிக்கடி போன் செய்து விசாரித்து கொண்டே இருப்பேன். இப்பவும் தோன்றூம் போதெல்லாம் பேசுவேன்.




அப்பாக்கள் என்றுமே கிரேட் தான் அவர்களை பற்றி சொல்லனுமுன்னா சொல்லி கொண்டே இருக்கலாம்.







///அப்பாக்களை பற்றி சுவரசியமான மறக்க முடியாதவை நிறைய வே இருக்கும் நீங்கள் இந்த பதிவை படிப்பவர்கள் தொடர நினைத்தால் தொடரலாம்///









இந்த பதிவில் சேகர் அவர்கள் பழைய சாதத்தை பற்றி அருமையா சொல்லி உள்ளார் பருங்கள்
தோழி ஆசியா அன்பாக விருதுகள். மிக்க நன்றி ஆசியா.

விருது களுக்கு மிக்க நன்றி ஆசியா/



எல்லோரும் வாங்கி விட்டார்கள் யாருக்கு கொடுப்பத்து. யோசிக்கிறேன்.இதற்கு தனியாக பதிவு போடனும், முடிந்த போது போடுகிறேன்.










இது என் 500 வது பதிவு

இந்தாங்க எல்லோரும் கேக் எடுத்து கொள்ளுங்கள்

இங்கு இவ்வளவு தூரம் வருகை தந்து என் பதிவுக்கென்று நேரம் ஒதுக்கி படித்து கமெண்ட் அளித்த அனைத்து பதிவுலக தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி,



தொடர்ந்து முடிந்த போது வந்து உங்கள் அன்பான கருத்துக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.








டிஸ்கி:
500 வது பதிவு என்ன போடலாம் என்று யோசித்து கடைசியில் அப்பாவை பற்றி எழுதலாம் என்று தோன்றியது. டிசம்பரில் தான் அவருக்கு பிறந்த நாளும், இந்த மாத ஆரம்பத்திலிருந்து என்னேரமும் அவர் நினைப்பு தான்.நேற்று அவர் மட்டும் விட்டில் இருந்தார் , அம்மா வெளியில் போயிருந்தாங்க. தனியா இருப்பதால் நான் போன் செய்யவும் அப்படி பழைய கதைய பேசி கொண்டு இருந்தார், ரொம்ப நல்ல இருந்தது. அதான் அப்படியே அவரை பற்றி பதிவில் போட்டு விட்டேன்.