Showing posts with label இத்தாலியன் உணவு. Show all posts
Showing posts with label இத்தாலியன் உணவு. Show all posts

Sunday, August 13, 2017

மீட் பால்ஸ் ஸ்பெகதி /(ஃபட்டூஸின்) - Meat Ball Fettuccine


மீட் பால்ஸ் ஸ்பெகதி /(ஃபட்டூஸின்)

ஸ்பெகதி இது ஒரு இத்தாலி , அரபிக், பிலிப்பைனிகளின்  உணவு
இது நூடுல்ஸ் க்கு அண்ணன் ன்னு சொல்லிக்கலாம்.


தேவையான பொருட்கள்

ஸ்பெகதி - 400 கிராம்

மீட் பால்ஸ் செய்ய

எலும்பில்லாத ஆட்டு கறி - 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் - 1/2 தேக்கரண்டி
அரிந்த கொத்து மல்லிகீரை  - 3 மேசை கரண்டி
ஒரிகானா - - அரை தேக்கரண்டி
லெமன் சாறு - ஒரு தேக்கரண்டி
பட்டை பொடி - கால் தேக்கரண்டி
கிராம்பு பொடி - கால் தேக்கரண்டி
பிரட் கிரம்ஸ் - 1 மேசைகரண்டி
பொட்டு கடலை - 1 மேசை கரண்டி

ஸ்பெகதி கிரேவி

தக்காளி - 200 கிராம் 
தக்காளி பேஸ்ட் =- இரண்டு தேக்கரண்டி
வெங்காயம்  - 150 கிராம்
பூண்டு – 5 பல்
சிக்கன் ஸ்டாக் மசாலா மேகி அல்லது நார் ப்ராண்ட் -அரை கியுப்
ரெட்சில்லி ஃப்லேக்ஸ் அரை தேக்கரண்டி
ஹக்கா நூடுல்ஸ் மசாலா - அரை தேக்கரண்டி
சோயா சாஸ்  - ஒரு மேசைகரண்டி
பச்ச மிளகாய்  - ஒன்று
கேரட்  ( துருவியது) - இரண்டு மேசைக்கரண்டி
வெங்காய தாள் -  ஒன்று
உப்பு - தேவைக்கு
கேப்சிகம் - கொட மொளகா -  1 மேசைக்கரண்டி

செய்முறை

For Spaghetti



ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு தேக்கரண்டி உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணை விடவும்.
ஸ்பெகதியை போட்டு நன்கு கொதிக்க விட்டு வேகவைத்து வடிக்கவும்.
10 நிமிடத்தில் வெந்து விடும். வடித்த ஸ்பெகதியை சிறிது எண்ணை தெளித்து பிசறி வைக்கவும்.



Meat Ball
மட்டன் துண்டுகளுடன் கொத்துமல்லி , இஞ்சி பூண்டுபேஸ்ட், பப்பரிக்கா, மிளகு தூள், லெமன் சாறு , பட்டை பொடி, கிராம்பு பொடி எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த கறியில் கிரம்ஸ் பவுடர் மற்றும் பொட்டுகடலை பொடியை சேர்த்து நன்கு பிசறி உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.








 Gravy

ஒரு வாயகன்ற பெரிய பேனில் எண்ணை + பட்டர் ஊற்றி வெங்காயம் பச்சமிளகாய், சேர்த்து வதக்கவும் அடுத்து தக்காளி பேஸ்ட் காய் கறிகள் அனைத்தையும் சேர்த்த்து வதக்கவும். ஹக்கா நூடுல்ஸ் மசாலா மற்றும் சிக்கன் ஸ்டாக் மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்
மிக்சியில் ரெட் சில்லி ப்லேக்ஸ், பூண்டு , தக்காளி சேர்த்து அரைத்து ஊற்றவும். தேவைக்கு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பொரித்த மீட் பால்ஸ், வடித்த ஸ்பேகதி யை சேர்த்து ஒரு சேர கிளறி சிறிது சர்க்கரை தூவி கிளறி இரக்கவும். சுவையான மீட் பால்ஸ் ஸ்பெகதி ரெடி.
இதை பாஸ்தாவுடனும் இதே போல செய்யலாம்.






ரெட் சில்லி ப்ளேக்ஸ் என்பது முழு சிவப்பு மிளகாய் ( காஞ்ச மிளகாயை உள்ளே உள்ள விதையை நீக்கி விட்டு கொஞ்சம் தண்ணீரில் ஊறவைத்து அரைத்தால் நல்ல இருக்கும். காஷ்மீரி ஹோல் ரெடி சில்லி வாங்கி கொண்டால் நல்ல சிவப்பு நிறம் கிடைக்கும்.
Meat Ball Fettuccine
டிபன் வகைகள், இத்தாலியன் உணவு, பிலிப்பைனி உணவு, அயல் நாட்டு உணவு,
Step By Step Recipe, Meat Ball Italian Fettuccine
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, December 26, 2010

சிக்கன் ஸ்பகதி - chicken spaghetti

தேவையான பொருட்கள்
1. ஸ்பகதி - 200 கிராம்
2. போன் லெஸ் சிக்கன் - 100 கிராம்
3. டொமெட்டோ கெட்சப் - முன்று தேக்கரண்டி
4. வெங்காயம் - ஒன்று
5. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
6. சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
7. பூண்டு - 3 பல்
8. சர்க்கரை - ஒரு சிட்டிக்கை

















செய்முறை

1.ஸ்பகதியை இரண்டாக ஒடித்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அரைஸ்பூன் எண்ணை- சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து வைக்க்கவும்.

2.ஒரு வாயகண்ற வானலியில் பட்டர் + எண்ணையை சேர்த்து வெங்காயம், பூண்டு பொடியாக அரிந்து சேர்த்து வதக்கவும்.

3. வதங்கியதும் அதில் சிக்கன், மிளகாய் தூள் , உப்பு தூள், சோயா சாஸ்,சர்க்கரை,கெட்சப் சேர்த்து நன்கு கிளறி தீயின் தனலை சிம்மில் வைத்து சிக்கனை நன்கு வேகவிடவும்.

4.சிக்கன் வெந்து கூட்டானதும் வடித்து வைத்த ஸ்பாகதியை சேர்த்து கிளறி இரக்கவும்.




சுவையான சிக்கன் ஸ்பகதி ரெடி குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது.இதை வெஜ், முட்டை,மட்டன் சேர்த்தும் சமைக்க்கலாம்.

Monday, November 8, 2010

புரோக்கோலி பாஸ்தா



தேவையானவை

மட்டன் கீமா – 50 கிராம்
டொமேட்டோ பேஸ்ட் – 50 கிராம்
விரும்பிய வடிவில் பாஸ்தா 200 கிராம்
புரோக்கோலி – 100 கிராம்
உப்பு – தேவைக்கு
பூண்டு – 4 பல்
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
எண்ணை + பட்டர் – இரண்டு மேசை கரண்டி
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி

செய்முறை
 முதலில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு பாஸ்தாவை சேர்த்து அதில் சிறிது உப்பு, எண்ணை விட்டு வேகவைக்கவும்.
 எண்ணையை காயவைத்து அதில் பூண்டு வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி பேஸ்ட் சேர்த்து அதில் மிளகாய் தூள், உப்பு தூள் சோயாசாஸ் சேர்த்து நன்கு கிளறவும்,
 சுத்தமாக கழுவிய மட்டன் கீமாவை சேர்த்து நன்கு வேகவிட்டு, வெந்த பாஸ்தாவை வடித்து சேர்த்து பிரட்டி இரக்க்வும்.
 சுவையான புரோக்கோலி மட்டன் கீமா பாஸ்தா ரெடி

Note:




Deit seypavarkaL
மட்டன் கீமாவிற்கு சிக்கனில் (அ) வெஜ் டேபுள்ஸ் சேர்த்து செய்து கொள்ளலாம்.
பட்டர் நெய் சேர்க்காமல் ஒரு தேக்கரண்டி எண்ணையில் தாளித்தால் கூட போதும்.
கீமாவில் செய்வதால் குழந்தைகளுக்கு ஈசியா ஜீரணம் ஆகும்.
கீமாவும், புரொக்கோலியும் ரிச் அயர்ன், கர்பிணி பெண்களுக்கு ஹிமோகுளோபின் கம்மியாக இருந்தால் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
லன்ச் பாக்ஸ்க்கும் ஏற்றது.