| Tweet | ||||||
Showing posts with label என் முயற்சி. Show all posts
Showing posts with label என் முயற்சி. Show all posts
Monday, July 13, 2015
கருப்பட்டி இளநீர் கடல் பாசி - Jaggery Tender Coconut Agar Agar
கடல்பாசியில் சர்க்கரை மற்றும் கண்டெண்ட் மில்க் சேர்த்து செய்வோம், சர்க்கரை வியாதிகாரகள் அதிகமாக சாப்பிட முடியாது அதற்கு என்ன செய்யலாம். ஒரு சேன்ஞ் க்கு கருப்பட்டி சேர்த்து செய்யலாம்.
தேவையான பொருட்கள்
இளநீர் - ஒன்னறை கப்
தண்ணீர் - ஒன்னறை கப்
கடல் பாசி - கைக்கு ஒரு பெரிய கைப்பிடி
கருப்பட்டி வெல்லம் - 100 கிராம் ( தேவைக்கு கூட்டி போட்டுகொள்ளலாம்)
இளநீர் தேங்காய்
உப்பு - அரை சிட்டிக்கை
செய்முறை
கருப்பட்டியை சிறிது தண்ணீரில் தூள் செய்து போட்டு காய்ச்சி வடிக்கட்டி வைக்கவும்.
தண்ணீரில் கடல் பாசியை உதிர்த்துபோட்டு 10 நிமிடம் ஊறவைத்து நன்கு கரைய காய்ச்சவும்.
இளநீரையும் , கருப்பட்டியை சேர்த்து ஊற்றி காய்ச்சி ஒரு பெரிய தாம்பூல தட்டில் ஊற்றி இளநீர் தேங்காயை பரவலாக தூவி விட்டு ஆறவைத்த்து குளிரூட்டியில் வைத்து குளிர வைத்து தேவைக்கு துண்டுகள் போட்டு சாப்பிடவும்.
Labels:
அகர் அகர்,
இனிப்பு,
என் முயற்சி,
கடல்பாசி,
நோன்பு கால சமையல்
Sunday, April 14, 2013
தர்பூசணி அரிசி பாதம் கீர் - Rice Badam Kheer with Watermelon
இது இஸ்லாமிய இல்ல கல்யாண விருந்துகளில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் பல வித கீர் வகைகளில் ஒன்று அரிசி பாதம் கீர், இதில் தர்பூசணி ஜூஸ் மட்டும் கூட சேர்த்து இருக்கு அவ்வளவு தான்.
முன்பே இங்கு முந்திரி ரவை கீர், பேரிட்சை , ஜவ்வரிசி கீர், ரைஸ் பிஸ்தா கீர் எல்லாம் பகிர்ந்து இருக்கிறேன்
தேவையான பொருட்கள்
தர்பூசனி ஜூஸ் - 100 மில்லி
பால் - 100 மில்லி
பாதம் பருப்பு - 10 எண்ணிக்கை
முந்திரி - 6 எண்ணிக்கை
ஏலம் - 3 எண்ணிக்கை
சர்க்கரை - 50 கிராம்
ஸ்வீட்ன் கண்டென்ஸ்ட் மில்க் - சிறிய டின் - 1
கால் சிட்டிக்கை கலர் பொடி
செய்முறை
பாசுமதி அரிசியை பொடித்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
பாதத்த்தை வெண்ணீரில் ஊறவைத்து தோலை எடுக்கவும்.
பாதம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து முக்கால் பதத்துக்கு அரைத்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பால் , ஏலம், அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அதில் தர்பூசனி சாறு, கண்டென்ஸ்ட் மில்க், சர்க்கரை, கலர் பொடி சேர்த்து கலக்கி சிறிது நேரம் திக்காக ஆகும் வரை 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
கடைசியாக சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து தர்பூசனி கீரில் சேர்க்கவும்.
சுவையான மனமான தர்பூசனி பாதாம் ரைஸ் கீர் ரெடி.
முஸ்லீம் திருமணங்களில்
மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் சுவையான பிர்ணி இது , இதை வெள்ளை பீர்னி ,மஞ்சள் பீர்னி என இருவகைகளாக தயாரிப்போம். வெள்ளை
பீர்ணி என்பது ரவை முந்திரி சேர்த்து செய்வது அல்லது அரிசி , முந்திரி, பாதாம் அரைத்து
செய்வது ஒரு வகை, மஞ்சள் பீர்னி என்பது ரவை பாதம் சாப்ரான் சேர்த்து அரைத்து செய்வது
அல்லது அரிசி பாதாம் , சாஃப்ரான் சேர்த்து அரைத்து செய்வது. கொஞ்சம் கலர் பொடியும் சேர்த்து செய்யலாம், இது மற்றொரு வகை.
இதில் நான் தர்பூசணி
ஜூஸ் சேர்த்து செய்துள்ளேன். வேண்டாம் என்றால் அதை தவிர்த்து வெறும் பீர்னி யாக வும்
தயாரித்து கொள்ளலாம்.
இதை பன், நாண்,
தோசை, இடியாப்பம் ஆகியவைக்கு பக்க உணவாக வைத்து சாப்பிடலாம்.
பிஸ்தா கிர்/பீர்னி
*********
ஆங்கில பிலாக்கில் நிறைய தோழிகள் மாதந்திர ஈவண்ட்களும் நடத்தி வருகின்றனர்.
சில ஈவண்டில் சமையல் செய்யும் (magic mingle two ingredients) இரண்டு தேவையான பொருட்கள் கொடுத்து செய்ய சொல்வார்கள்,அதில் இந்த இந்த மாதம் செய்ய கொடுத்துள்ள இரண்டு பொருட்கள் அரிசி, தர்பூசணி.
இதனால் ஒன்றும் அவார்டோ பரிசோ ஏதும் கிடையாது, சும்மா சும்மா சும்மா தான்.
இப்படி யோசித்து புதுசாக செய்வது எனக்கு பிடித்துள்ளது ஆகையால் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.
இதுக்குன்னு நெட்டில் போய் தேடுவது கிடையாது .வழமையாக செய்யும் சமையலிலேயே இதை சேர்த்து செய்ய முடியுமான்னு யோசித்து தான் மாத மாதம் அந்த ஈவண்டுக்கு செய்து லின்க் பன்ணி கொண்டு இருக்கிறேன்.
போன மாதம் விருந்து உண்ண வாங்க விஜி ஈவண்டுக்கு யோசித்து வைத்து செய்வதற்குள் ஈவண்ட் தேதியே முடிந்து விட்டது.
இந்த மாதம் இரண்டு ரெசிபி செய்தேன். இன்னும் இதில் நிறைய ஐடியா இருக்கு பின்பு செய்து பார்த்தால் பகிர்கிறேன்.
தர்பூசணி அரிசி வெல்ல உருண்டை
தர்பூசணி அரிசி பாதாம் கீர்.
இரண்டுமே சூப்பராக இருந்தது.
Akila's Dish name Start with R
பதிவுலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
| Tweet | ||||||
Labels:
இனிப்பு,
என் முயற்சி,
குழந்தை உணவு,
பார்டி உணவு
Tuesday, May 3, 2011
குபூஸ் - kuboos
குபூஸ்(அரெபியன் ரொட்டி)
துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்த குபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட் விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள்.
தேவையான பொருட்கள்
மைதா - முன்று டம்ளர்
ஈஸ்ட் - ஒரு பின்ச்
சர்க்கரை - இரன்டு தேக்கரண்டி
சூடான பால் - அரை டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி
பட்டர் - ஐம்பது கிராம்
செய்முறை
சூடான தண்ணிரில் உப்பு,சர்க்கரை,சூடான பால் ,ஈஸ்ட், பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை,மைதா கலவையில் கலக்கவும்.
ஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து முன்று மணி நேரம்
அப்படியே வைக்கவும்.
மாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும்.
பிறகு அதை எடுத்தால் புஸ் என்று உப்பி இருக்கும்.
அதை எடுத்து மறுபடியும் குழைத்து ஒரு கமலா பழம் சைஸ் உருண்டை எடுத்து நல்ல நிறைய மைதா மாவு தடவி நடுவிலிருந்து உருட்டவும்.
தேய்க்கும் போதே நல்லா சூப்பரா ரவுண்டு ஷேப் வரும் அதை எடுத்து தவ்வவில் போட்டு சுட்டெடுக்கவும்.
நல்ல பொங்கி வரும்.
சூப்பரான குபூஸ் ரெடி.
குறிப்பு:
இதற்கு தொட்டு கொள்ள எல்லாவகையான குருமாக்கள், சிக்கன், ஹமூஸ், கார்லிக் பேஸ்ட், கிரில்ட் சிக்கன் எல்லாமே பொருந்தும்.
இந்த குபூஸுடன் வெரும் ஹமூஸ் இருந்தாலே கூட வாழைப்பழத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்
கிரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும்,BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன்,பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம். இதை கோதுமை மாவிலும் செய்யலாம்.
குபூஸுக்கு சரியான காம்பினேஷன் சிம்பில் அண்ட் ஈசி குபூஸ் - ஆஃப் பாயில்
குறிப்பு : இதை பல முறை செய்து இருக்கேன், பட்டர் சேர்க்காமல் செய்தால் ஓவ்வொரு முறை செய்யும் போது தவ்வா மாவு பட்டு கரியும் , அப்ப சுத்தமா துடைத்து கொள்ளனும், அதுக்கு தான் பட்டர் சேர்த்துள்ளேன், பட்டர் சேர்ப்பதால் கரிந்து போகாது. இன்னும் விபரஙக்ள் பிற்கு எழுது கிறேன்.
| Tweet | ||||||
Tuesday, September 21, 2010
முளைபயிறு பீட்ரூட் இட்லி - Sprouted Moong Dal Beetroot Idly
சுவையான சத்தான டயட் உணவு முளை பயிறு பீட்ரூட் இட்லி,
பயிறு வகைகளை கீழே உள்ளபடி முளை கட்டி பயன் படுத்தினால் உடம்பிற்க்கும் மிகவும் நல்லது, புரோட்டின் சத்து அதிகம் உள்ளது.
இதே போல் கொண்டைகடலை கொள்ளு , வெந்தயம் போன்றவைகளை முளைகட்டி பயன் படுத்தலாம்
முழுபயிறை 8 மணி நேரம் ஊறவைத்து வைத்து வடிக்கவும்
ஒரு மல் துணியில் கட்டி ஹாட் பேக்கில் வைக்கவும், லேசாக மூடிவைக்கவும்.
இப்போது முளைகட்டிய பயறு ரெடி
முளைபயிறு பீட்ரூட் இட்லி மிளகாய் பொடி
ஸ்டெப் - 2
முளை பயிறு பீட்ரூட் பொரியல்
வெந்த முளை பயிறு - அரை கப்
தாளிக்க
எண்ணை – ஒரு மேசை கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
பூண்டு – இரண்டு பல்
வெங்காயம் - ஒன்று
கருவேப்பிலை – சிறிது
தேங்காய் - ஒரு மேசைகரண்டி தேவைபட்டால்.
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
பூண்டு – இரண்டு பல்
வெங்காயம் - ஒன்று
கருவேப்பிலை – சிறிது
தேங்காய் - ஒரு மேசைகரண்டி தேவைபட்டால்.
செய்முறை
/பீட்ரூட்டை பொடியாக அரிந்து உப்பு சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெந்த பீட்ரூட்டையும் வெந்த முளைபயிறையும் சேர்த்து சிறிது நேரம் கிளறி இரக்கவும். /
முளைபயிறு பீட்ரூட் இட்லி மிளகாய் பொடி
ஸ்டெப் - 3
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - முன்று கப்
முளைபயிறு பீட்ரூட் பொரியல் - ஒரு கப்
//முளைபயிறு பீட்ரூட் பொரியலை செய்து இட்லி மாவில் கலந்து இட்லியாக வார்க்கவும்.//
| Tweet | ||||||
Labels:
என் முயற்சி,
சைவம்,
டயட் சமையல்,
டிபன் அயிட்டம்
Tuesday, February 2, 2010
ஜோவர் சப்பாத்தி வித் கேபேஜ் கூட்டு - Jowar Atta Chappathi with cabbage
சப்பாத்தி
ஜோவர் ஆட்டா = அரை கப்
கோதுமை மாவு, ஓட்ஸ் மாவு = அரை கப்
மைதா மாவு = கால் கப்
சர்க்கரை = ஒரு தேக்கரண்டி
உப்பு = கால் தேக்கரண்டி
சூடான வெண்ணீர் = மாவு குழைக்க தேவையான அளவு
ஒரு ஸ்பூன் ஆயில் (அ) நெய்


கேபேஜ் துருவியது = ஒரு கப்
பாசிப்பருப்பு = கால் கப்
தாளிக்க
ஆலிவ் ஆயில் = ஒரு தேக்கரண்டி
கடுகு = அரைதேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = அரைதேக்கரண்டி
பூண்டு = முன்று பல்
பாசிபருப்பை லேசாக வருத்து குக்கரில் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து தீயின் தனலை மீடியமாக வைத்து முன்று விசில் விட்டு இரக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கேபேஜ் (முட்டை கோஸ்) சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள்,மஞ்சள் தூள் , உப்பு தூள் சேர்த்து முடி போட்டு 7 நிமிடம் வேகவிடவும்.
வெந்ததும வெந்த பருப்பு, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.

சுவையான டயட் சமையல் ஜாவர் ஆட்டா சப்பாத்தி வித் கேபேஜ் கூட்டு ரெடி.
இதில் தேங்காய் துருவல் வேண்டாம் என்றால் தேவையில்லை.
சப்பாத்திக்கு எண்ணை தேவைப்பட்டால் ஆலிவ் ஆயில் சிறிது தடவி கொள்ளலாம். சப்பாத்தி குழைக்கும் போதுஆயிலிக்கு பதில் நெய் கூட சேர்த்து கொள்ளலாம்
டயட் செய்பவர்கள ஒரே மாதிரியான சப்பாத்தி சாப்பிட்டு அலுத்து விடும் ஒரு மாறுதலுக்கு ஜோவர் ஆட்டா, பஞ்சாபி ஆட்டா, ஆட்டா மாவு, ஓட்ஸ் இது போல் மாற்றி மாற்றி செய்து இதற்கு தொட்டுக்கொள்ள கிரேவி போல் செய்து கொண்டால் டிரையா இருக்கும் சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.
ஜோவர் ஆட்டா என்றால் தினை மாவு
(இந்த மாவு சரியாக தேய்க்க வராது கொஞ்சம் கழ்டம் தான்,சப்பாத்தி திரட்டுவதில் எக்ஸ்பேட்க்கு உடனே செய்யவரும், இல்லை என்றால் விட்டு போகும். மைதா கலந்து குழைத்தால் நல்ல திரட்டவரும், இல்லை என்றால் அரிசிமாவு ரொட்டி போல் தான் தட்டி சுடனும்.இதில் (ஜோவர் ஆட்டா ,கோதுமைமாவு, ஓட்ஸ் முன்றும் கலந்து சுட்டாலும் நல்ல இருக்கும்).
சப்பாத்தி பிரியர்களுக்கு சொல்வது மிருதுவான சப்பாத்திக்கு உகந்த மாவு பஞ்சாப் கோதுமை. அதில் தயிர் சேர்த்து குழைத்தால் இன்னும் நல்ல இருக்கும்.
ஜோவர் ஆட்டா = அரை கப்
கோதுமை மாவு, ஓட்ஸ் மாவு = அரை கப்
மைதா மாவு = கால் கப்
சர்க்கரை = ஒரு தேக்கரண்டி
உப்பு = கால் தேக்கரண்டி
சூடான வெண்ணீர் = மாவு குழைக்க தேவையான அளவு
ஒரு ஸ்பூன் ஆயில் (அ) நெய்
சூடான வெண்ணீரில் உப்பு, சர்க்கரை,எண்ணை சேர்த்து சப்பாத்தி மாவு குழைத்து 10 உருண்டைகளாக போட்டு எல்லா உருண்டையிலும் மாவு தடவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
பிறகு மேலும் மாவு தடவி தேய்த்து சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்
பிறகு மேலும் மாவு தடவி தேய்த்து சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும்
கேபேஜ் கூட்டு
கேபேஜ் துருவியது = ஒரு கப்
பாசிப்பருப்பு = கால் கப்
தாளிக்க
ஆலிவ் ஆயில் = ஒரு தேக்கரண்டி
கடுகு = அரைதேக்கரண்டி
உளுத்தம் பருப்பு = அரைதேக்கரண்டி
பூண்டு = முன்று பல்
வெங்காயம் = ஒன்று
கருவேப்பிலை = சிறிது
தக்காளி = அரை பழம்
தேங்காய் துருவல் = ஒரு மேசைகரண்டி
பச்ச மிளகாய் = ஒன்று
மஞ்சள் தூள் = கால் தேரண்டி
உப்பு = ருசிக்கு தேவையான அளவு
மிளகாய் தூள் கால் தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
தக்காளி = அரை பழம்
தேங்காய் துருவல் = ஒரு மேசைகரண்டி
பச்ச மிளகாய் = ஒன்று
மஞ்சள் தூள் = கால் தேரண்டி
உப்பு = ருசிக்கு தேவையான அளவு
மிளகாய் தூள் கால் தேக்கரண்டி
பாசிபருப்பை லேசாக வருத்து குக்கரில் முக்கால் கப் தண்ணீர் சேர்த்து தீயின் தனலை மீடியமாக வைத்து முன்று விசில் விட்டு இரக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கேபேஜ் (முட்டை கோஸ்) சேர்த்து நன்கு கிளறி மிளகாய் தூள்,மஞ்சள் தூள் , உப்பு தூள் சேர்த்து முடி போட்டு 7 நிமிடம் வேகவிடவும்.
வெந்ததும வெந்த பருப்பு, தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
சுவையான டயட் சமையல் ஜாவர் ஆட்டா சப்பாத்தி வித் கேபேஜ் கூட்டு ரெடி.
இதில் தேங்காய் துருவல் வேண்டாம் என்றால் தேவையில்லை.
சப்பாத்திக்கு எண்ணை தேவைப்பட்டால் ஆலிவ் ஆயில் சிறிது தடவி கொள்ளலாம். சப்பாத்தி குழைக்கும் போதுஆயிலிக்கு பதில் நெய் கூட சேர்த்து கொள்ளலாம்
டயட் செய்பவர்கள ஒரே மாதிரியான சப்பாத்தி சாப்பிட்டு அலுத்து விடும் ஒரு மாறுதலுக்கு ஜோவர் ஆட்டா, பஞ்சாபி ஆட்டா, ஆட்டா மாவு, ஓட்ஸ் இது போல் மாற்றி மாற்றி செய்து இதற்கு தொட்டுக்கொள்ள கிரேவி போல் செய்து கொண்டால் டிரையா இருக்கும் சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட நல்ல இருக்கும்.
ஜோவர் ஆட்டா என்றால் தினை மாவு
(இந்த மாவு சரியாக தேய்க்க வராது கொஞ்சம் கழ்டம் தான்,சப்பாத்தி திரட்டுவதில் எக்ஸ்பேட்க்கு உடனே செய்யவரும், இல்லை என்றால் விட்டு போகும். மைதா கலந்து குழைத்தால் நல்ல திரட்டவரும், இல்லை என்றால் அரிசிமாவு ரொட்டி போல் தான் தட்டி சுடனும்.இதில் (ஜோவர் ஆட்டா ,கோதுமைமாவு, ஓட்ஸ் முன்றும் கலந்து சுட்டாலும் நல்ல இருக்கும்).
சப்பாத்தி பிரியர்களுக்கு சொல்வது மிருதுவான சப்பாத்திக்கு உகந்த மாவு பஞ்சாப் கோதுமை. அதில் தயிர் சேர்த்து குழைத்தால் இன்னும் நல்ல இருக்கும்.
| Tweet | ||||||
Labels:
என் முயற்சி,
சைவம்,
டயட் சமையல்,
டிபன் அயிட்டம்,
ஜோவர் ஆட்டா தோக்ளா
Subscribe to:
Posts (Atom)









