சுவையான சத்தான டயட் உணவு முளை பயிறு பீட்ரூட் இட்லி,
பயிறு வகைகளை கீழே உள்ளபடி முளை கட்டி பயன் படுத்தினால் உடம்பிற்க்கும் மிகவும் நல்லது, புரோட்டின் சத்து அதிகம் உள்ளது.
இதே போல் கொண்டைகடலை கொள்ளு , வெந்தயம் போன்றவைகளை முளைகட்டி பயன் படுத்தலாம்
ஸ்டெப் - 1 முழுபயிறை 8 மணி நேரம் ஊறவைத்து வைத்து வடிக்கவும்
ஒரு மல் துணியில் கட்டி ஹாட் பேக்கில் வைக்கவும், லேசாக மூடிவைக்கவும்.
முளைபயிறை வேகவைத்து கொள்ளவும்.
இப்போது முளைகட்டிய பயறு ரெடி
ஸ்டெப் - 2
முளை பயிறு பீட்ரூட் பொரியல்
தேவையானவை
பீட்ருட் – 2
வெந்த முளை பயிறு - அரை கப்
தாளிக்க
எண்ணை – ஒரு மேசை கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
பூண்டு – இரண்டு பல்
வெங்காயம் - ஒன்று
கருவேப்பிலை – சிறிது
தேங்காய் - ஒரு மேசைகரண்டி தேவைபட்டால்.
செய்முறை
/பீட்ரூட்டை பொடியாக அரிந்து உப்பு சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெந்த பீட்ரூட்டையும் வெந்த முளைபயிறையும் சேர்த்து சிறிது நேரம் கிளறி இரக்கவும். /
முளைபயிறு பீட்ரூட் இட்லி மிளகாய் பொடி
ஸ்டெப் - 3
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - முன்று கப்
முளைபயிறு பீட்ரூட் பொரியல் - ஒரு கப்
//முளைபயிறு பீட்ரூட் பொரியலை செய்து இட்லி மாவில் கலந்து இட்லியாக வார்க்கவும்.//
முளை பயிறு பீட்ரூட் இட்லி செட்டிநாடு பெப்பர் சிக்கன்
19 கருத்துகள்:
Very healthy idli.
அக்கா, சூப்பர் யோசனை ..... உங்களுக்கு ஒரு பூங்கொத்து! முளை பயறும் பீட் ரூட்டும் உடம்புக்கு மிக நல்லது. நிச்சயம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
நல்ல ஹெல்த்தி இட்லி!!!
Superb healthy idly...
ஜலீலா...
முளைப்பயிறு....
பீட்ரூட்....
இந்த காம்பினேஷன்ல பட்டைய கிளப்பற இட்லி வார்த்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி....
பீட்ரூட் நிறைய போட்டால், சிவப்பு இட்லியாயிடும் இல்லையா?
வழக்கம் போலவே அசத்தல் ரெசிப்பி...
போட்டியில் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன்....
சென்று, வென்று வருக....
அருமை அக்கா
பயனுள்ள ரெஸிப்பிகளை வெளியிடுவதற்கு வாழ்த்துகள்.
கலர் ஃபுல் இட்லி மிக சத்தான இட்லியும் கூட.
பாக்கும்போதே இட்லி சாப்பிடனும் போல இருக்கே :))
healthy idly ....
பீட்ரூட் போட்டும் இட்லி வெண்மையாகவே இருக்கே, பலே!! நல்ல ஐடியா அக்கா!!
வாவ் புதுசா இருக்கு...! சூப்பர்.
சமையல் கட்டில் உக்காந்து யோசிபீங்களோ?
சத்தான உணவு..புதுமையாகவும் இருக்கு. வாழ்த்துக்கள்
நன்றி உம்மு
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சித்ரா, வெற்றி பெற என்று அனுப்ப்பல, புதுமையான ரெசிபி எல்லோரும் செய்து பார்த்து சத்தாக இருக்கடுமே என்று தான்.
நன்றி தெய்வ சுகந்தி
நன்றி கீதா ஆச்சல்
நன்றி கோபி
பீட்ருட் போட்டால் சிவப்பு இட்லி ஆகாது, அதை வேகவைத்து பொரியாலா செய்து இட்லி வார்த்ததால் அப்ப்டியே தான் இருக்கும்/
வெற்றி எல்லாம் பெறவாய்ப்பில்லை, நிறைய அசத்தல் ராணிகள் இருக்கிறார்கள்.
இருந்தாலும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
நன்றி சசி தம்பி
நன்றி அக்பர்
நன்றி ஸாதிகா அக்கா
சை.கொ.ப. வித்தியாசமாகவும், சத்தாகவும் இருப்பதால் எல்லோருக்குமே சாப்பிடனும் போல் தான் இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வீட்டில் செய்ய சொல்லி சாப்பிடுங்கள்
நன்றி ஹுஸைனாம்மா
நன்றி ச்சாரு
நன்றி சிங்கக்குட்டி
நன்றி ஜீ ஜீ
kalakureenga , very different :)
சூப்பர்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.VERY INNOVATIVE.
healthy idli.
அருமையான கண்டுபிடிப்பு !!!
நன்றி @ சித்ரா
நன்றி @ ஆசியா
நன்ற் @ காஞ்சனா
நன்றி சும்ராஜ் வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா