முன்பு படிக்கும் காலத்தில் ஊரில் மார்ச் ஏப்ரலில் தான் நோன்பு வரும் ,அடிக்கிற வெயில் சுருண்டு போய் எநத சாப்பாடும் ஏற்காது ஒன்லி லெமன் ஜூஸ் தான்
வடை பஜ்ஜி + லெமன் ஜூஸ் தான் அதுவும் எனக்கு ஒரு பெரிய ஜக் ஃபுல்லாவேனும். அம்மாவும் 20 டம்ளர் கொள்ளும் அளவுக்கு நிறைய கரைத்து வைப்பாங்க.அந்த ஞாபகம் .அதில் எனக்கு 4 டம்ளர்
இந்த முறை சரியான வெயிலில் தான் நோன்பு எவ்வளவு தண்ணீர் குடிச்சாலும் ஜூஸ் குடித்தாலும் தாகம் அடங்கல இப்ப இந்த தடவை இரண்டு நாளைக்கு ஒரு முறை லெமன் ஜூஸ் தான் சளி பிடிக்காம இருக்க இதில் நான் இஞ்சி சாறு சேர்த்து செய்வேன். நல்ல அருமையாக இருக்கும் அதுவு அதை வடிகட்டி கிளியராக குடிக்க நல்ல இருக்கும்.
அதே போல் நன்னாரி ஒரு குழிகரண்டி சேர்த்தும் லெமன் ஜூஸ் தயாரிப்பேன். அதுவும் அருமையான் மனத்துடன் நல்ல இருக்கும்.
இதற்கு பின்னாடி உள்ள பிஷ் படம் ஹனீப் வரைந்து பெயிண்ட் பண்ணது.
தேவையான பொருட்கள்
லெமன் – 6
தண்ணீர் – 8 டம்ளர்
சர்க்கரை – 150 கிராம் (சுவைக்கு தக்க கூட்டிக்கொள்ளவும்)
இஞ்சி சாறு – ஒரு மேசை கரண்டி
உப்பு – அரை சிட்டிக்கை
ஐஸ் கட்டிகள் – 10
( இஞ்சி பிழிந்து ஒரு கிண்ணத்தில் வைத்து நஞ்சை தெளித்து சாறை தனியாக எடுத்து வைக்கவும்.) இஞ்சி சாறு செய்முறை படம் எடுத்து வைத்துள்ளேன் பிறகு போடுகிறேன்
லெமனை பிழிந்து கொட்டை எடுத்து லெமன் சாறு, ஐஸ் கட்டி, சர்க்கரை, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அடிக்கவும்.
பிறகு டீ வடிகட்டியில் வடிகட்டி இஞ்சி சாறு சேர்க்கவும்.
தொண்டையில் எதுவும் தட்டாமல் சர்ருன்னு குடிக்கலாம்.
Tweet | ||||||
33 கருத்துகள்:
ம்ம்..நல்ல குளிர்ச்சிதான்..எங்கள் வீட்டிலும் இத்னை அடைக்கடி செய்வோம்.கூடவே ரூ ஆப்சா அல்லது ஊற வைத்த பாதாம் பிசின்,சப்ஜா விதை நறுக்கிய சைனாகிராஸ் துண்டங்கள் இப்படி ஏதாவது சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
ஹனீஃப் வரைந்த படம் அழகு.ஏன் தலை கீழ் உள்ளது?
இது தான் குளிர் பானமா...
மீன் நல்லா இருக்கு!! ஜூஸ் சில்லுன்னு இருக்கு!!
சூப்பர்ர் ஜூஸ்!! மீன் பட்ம் நல்லாயிருக்கு....
20 டம்ப்ளருமா ...
ஹனீப் படம் சூப்பர் அம்மா எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் போல இருக்கே
அக்கா இந்த மாச நோன்பும் எங்க ஊரிலிலும் பயங்கர வெயில் தான் .. நோன்பு திறக்கும் பொழுது வேறு எந்த பானமும் கேட்கல தண்ணீர் மட்டுமே போதும் போல் இருந்துச்சு.
இஞ்சிசாரு சேர்த்து செய்வது உடலுக்கு நல்லது டதான்..
மீன் படம் அழகாக இருக்கு
மீன் painting - அழகு.....
லெமன் ஜூஸ் - அருமை.
இஞ்சி சாறு சேர்ப்பது நல்லது. நானும் அடிக்கடி செய்வேன். அடுத்த முறை இஞ்சி சாறு சேர்த்து செய்கிறேன்.
// ஹனீஃப் வரைந்த படம் அழகு.ஏன் தலை கீழ் உள்ளது? //
மீன்கள் தலை கீழா அப்படி இப்படி நீச்சலடிக்கும் போது வரைந்த படம்னு நாமா எடுத்துக்கணும் ஸாதிகாக்கா .. குழந்தைகளின் கற்பனை அலாதி தானே... !! ஹா.. ஹா..
ஜலீலாக்கா லெமன் ஜூஸ் அருமை!! நல்லா இருக்கீங்களா?? நான் அடிக்கடி வர முடிய வில்லை. கொஞ்சம் "ஆணி" அதிகம். ஒன்னும் நெனச்சுக்காதீங்க!! ப்ளீஸ்! ஆனா எப்படியாவது ஒட்டு போட்டுடுவேன்.
refreshing drink, beautiful fish, lovely
ஜூஸுக்கு நன்றி.
படத்துக்கு பாராட்டுகள்.
இஞ்சி சேர்ப்பது புதிய பயனுள்ள தகவல்.
ஜலீலா....
உங்களின் இந்த பதிவை படித்தவுடன் ஜில் ஜில் கிளியர் லைம் ஜூஸ் வித் ஜிஞ்சர் ஒரு கிளாஸ் அடிச்ச எஃபெக்ட் இருக்கு இப்போ...
அதுவும் நீங்கள் செய்த ஜூஸ் குடிக்க ஹனீஃப் வரைந்த அந்த மீன் வருவது போன்ற விஷயம் ரொம்பவே ரசிக்க வைத்தது....
//ஸாதிகா said...
ஹனீஃப் வரைந்த படம் அழகு.ஏன் தலை கீழ் உள்ளது?//
சின்ன பசங்க இது போன்ற குறும்புகளை செய்தால் தானே, நாமும் ரசிக்க நன்றாக இருக்கும்...
சூப்பப்ர்...
ஸாதிகா அக்க்க குடிக்கும் போது தொண்டையில் எதுவும் மாட்டாமல் சர்ருன்னு போகனும் அதுக்கு தான் இப்படி.
நீஙக்ள் சொலவது போல் தயாரித்து பார்க்கீறேன்
படம் தலை கிழா இருக்கு பார்த்து மாற்று கிறென்
ஆம், வெறும் பய இது தான் குளிர் பானம்.
நன்றி வெறும்பய
நன்றி சை.கொ.ப
நன்றி மேனகா
சகோ ஜமால் 20 டம்ளரில் எனக்கு 4 டம்ளர்
நன்றி பாயிஜா ஆமாம் இங்கும் ரொம்ப வெயில் அதான் அடிக்கடி லைம் ஜூஸ் தான்.
நன்றி சித்ரா பாராட்டுக்கு மிக்க நன்றி
நன்றி தெய்வ சுகந்தி,
அடுத்த முறை இஞ்சி சாறு சேர்த்து செய்து பாருங்கள் குழந்தைக்களுக்கு ரொம்ப நல்லது.
சசி தம்பி எனக்கு வரையவும் தெரியாது, பெயிண்டிங்கும் அவ்வளவா வராது,
எம் அப்துல் காதர் முடிந்த போடு வாஙக் நானே யார் பிலாகும் போக முடியாம பதில் போட முடியாம இருக்கேன்.
எல்லோருக்கும் அப்படி தான் சில நேரம் டைம் கிடைக்கும் சில நேரம் டைம் கிடைக்காது
நன்றி கிருஷன வேனி
நன்றி அக்பர்
நன்றி கோபி. எப்போதும் விளக்கமான கமெண்ட் .
நன்றி கீதா ஆச்சல்
fish painting ரொம்ப அழகு.
லெமன் ஜூசில் பெப்பர் சேர்த்ததுண்டு. இனிமேல் இஞ்சிசாறும் சேர்த்துப்பார்க்கிறேன்.
சூப்பர்ர் ஜூஸ்!!சுவையாக இருக்கும் போல .
Nice juice. Tried and tasted
Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
ஜிஜி நன்றி
சுனிதா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி
கருத்துதெரிவித்தமைக்கு மிக்க நன்றி
கருத்துதெரிவித்தமைக்கு மிக்க நன்றி சுந்த்ரா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா