Thursday, September 16, 2010

கருப்பு கொண்டைகடலை சுண்டல் - black channa dal sundal






இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை சுண்டல் வகைகளில் இதுவும் ஒன்றாகும்.நவரத்திரி கொலுவில் போது தினம் செய்யும் வகை வகையான சுண்டல் வகைகளில் இதுவும் ஒரு வகை சுண்டல்





தேவையான பொருட்கள்




கருப்பு கொண்டை கடலை - ஒரு கப்



துருவிய தேங்காய் - கால் கப்



சின்ன வெங்காயம் - முன்று



எண்ணை - இரண்டு தேக்கரண்டி



கடுகு - அரை தேக்கரண்டி



உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி



காஞ்ச மிளகாய் - இரண்டு
சர்க்கரை - ஒரு சிட்டிகை



எண்ணை - இரண்டு தேக்கரண்டி



உப்பு - தேவைக்கு




செய்முறை




1. கொண்டை கடலையை இரவே ஊறபோடவும்.




2. காலையில் களைந்து தண்ணீரை வடித்து அதில் முழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து குக்கரில் ஐந்து விசில் விட்டு இரக்கவும்.வெந்ததும் அதை வடித்து வைக்கவும்.




4. ஒரு வாயகன்ற வானலியில் எண்னி காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, காஞ்சமிளகாய் கிள்ளி போட்டு ,பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து கிளறி கடைசியாக கருவேப்பிலையையும் சேர்த்து தாளிக்கவும்.




5. அதில் வடித்து வைத்துள்ள கடலையை சேர்த்து தேவைக்கு உப்பு, சர்க்கரை,தேங்காய் துருவலும் சேர்த்து நன்கு இரண்டு நிமிடம் கிளறி இரக்கவும்.




6. கொத்துமல்லி தழை தூவி சாப்பிடவும்.






குறிப்பு






இது இஸ்லாமிய இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை சுண்டல் வகைகளில் இதுவும் ஒன்றாகும்.
நவரத்திரி கொலுவில் போது தினம் செய்யும் வகை வகையான சுண்டல் வகைகளில் இதுவும் ஒரு வகை சுண்டல்.
கொண்டை கடலை ஊற வைக்கும் நேரம் எட்டு மணி நேரம் போதும்.பருப்பு வகைகளில் நிறைய புரோட்டீன் உள்ளது வரம் இருமுறை சாப்பிடுவது நல்லது.




//டயட்டில் உள்ளவர்கள் வெந்த கொண்டை கடலையில் கேரட்,வெங்கயாம், கேப்சிகம்,கொத்துமல்லி தழை, எலுமிச்சை சாறு சிறிது பிழிந்து சாலட் போல் காலையில் டிபனாகவும் சாப்பிடலாம்.//




குழந்தைகளுக்கு லன்சுக்கும் கொடுத்து அனுப்பலாம், குழந்தைகளுக்கு காரம் கொஞ்சம் குறைத்து கொள்ளவும்.












hamuuS


















I am sending these recipes to nithu's kitchen CWF - LB -Chickpeas Event.








37 கருத்துகள்:

Nithu Bala said...

Sundal arumaya irukku...thanks for sending this to my event..

தெய்வசுகந்தி said...

எனக்கு பிடித்த சுண்டல்!!

Menaga Sathia said...

super sundal!!

Unknown said...

சூப்ப‌ர் சுண்ட‌ல் அக்கா

Chitra said...

நான் சீனி போட்டு செய்ததில்லை. சீனி சேர்ப்பதால், சுண்டல் இனிக்காதா?

GEETHA ACHAL said...

சூப்பர்ப் சுண்டல்....

Prema said...

wow such a collection of nutritious recipes,thanks for sharing.sundal luks delicious.

Anisha Yunus said...

எனக்கு மிக மிக மிக பிடித்தமான் ஒரு மாலை உணவு. சின்ன வயதிலே இதுக்காகவே பிள்ளையார் சதுர்ர்த்தியும் சரஸ்வதி பூஜையும் எப்ப வரும்னு காத்திருந்தது ஒரு காலம். நல்ல குறிப்பு ஜலீலாக்கா!

வேலன். said...

நான்விரும்பி சாப்பிடும் சுண்டல் சகோதரி...
வாழ்கவளமுடன்.
வேலன்.

deen_uk said...

im very new for your site sister..
neenga sonna ithey style la naanga nonbu 30 naalum seithom!! naan thaan friends kku samaitthen! they relle like this sundal..ithu ennoda amma chennaila seira style! (naan ippo london la) ..nonbellaam poyatchu!! ippo ithu seirathu illa!! bu ithu nalla tasty sundal sister..!! keep it up!!vaaltthukkal..

Priya Magesh said...

# Chitra

சீனி சேர்ப்பதால், சுண்டல் இனிக்காதா?

thengai inipe podhume. sugar edhuku?

மனோ சாமிநாதன் said...

நிறைய பேருக்குப் பிடித்த சுண்டல் இது ஜலீலா! புகைப்படம் உடனே செய்து சாப்பிடத் தூண்டுகிறது!!

Jayanthy Kumaran said...

Hy Jaleela,
Thanks for dropping by...!
Sundal looks so delicious and yummy..love yur clicks...:)

ஸாதிகா said...

எதற்காக ஜலி சர்க்கரை சேர்க்க சொல்லி இருகின்றீர்கள்?

Thenammai Lakshmanan said...

கறுப்பு கடலை சுண்டல் எனக்கு பிடிக்கும் ஜலீலா.. நன்றீ..

Thenammai Lakshmanan said...

ஈத் முபாரக் ஜலீலா

enrenrum16 said...

ஸலாம் ஜலீலா அக்கா...சுண்டல் பார்க்கவே நல்லாருக்கு. பழக்கப்பட்டது தான்... செய்து பார்க்கிறேன். அப்புறம் உங்கள் முர்தபா என் நாக்கில் நீர் ஊற வைத்துவிட்டது. செய்து பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி அக்கா.

என்றென்றும்16

சிநேகிதன் அக்பர் said...

அட்டகாசமான சுண்டல்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow...nice and healthy snack

Jaleela Kamal said...

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி நீத்து

Jaleela Kamal said...

நன்றி தெய்வ சுகந்தி

Jaleela Kamal said...

நன்றி மேனகா

Jaleela Kamal said...

சித்ரா கீழே எல்லாரும் சீனி பற்றி தான் கேட்டு இருக்காங்க
இனிக்காது

இதில் சேர்த்துள்ள சீனியின் அளவு ஒரு சிட்டிக்கை (ஒரு பின்ச்)

சுவையுட்ட.

Jaleela Kamal said...

பிரமலதா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றீ

Jaleela Kamal said...

அன்னு எங்க வீட்டில் எல்லோருக்கும்ரொம்ப பிடிக்கும்.

கருப்பு சென்னா, வெள்ளை சென்னா வேர்கடலை அவித்து சாப்பிடுவது சின்னவயதிலிருந்தே ஞா யிற்று கிழமை ஆனால் மாலை இது தான்.

Jaleela Kamal said...

நன்றீ கீதா ஆச்சல்

Jaleela Kamal said...

வேலன் சார் உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்க்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

வாங்க தீன் உங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி

நோன்பில் தான் செய்யனும் என்றில்லை மற்ற வேலைகளிலும் அடிக்கடி செய்து சாப்பிடலாம்.

இது உடலுக்கு ரொம்ப நல்ல து டயட் செய்பவர்களுக்குஅருமையான சுண்டல் இதில் சாலாட் செய்து அடிக்கடி பிரெக் பாஸ்ட்க்கும் செய்யலாம்.

Jaleela Kamal said...

வாங்க பிரியா

எந்த இனிப்பு சமையலுக்கும் ஒரு சிட்டிக்கை (ஒரு பின்ச்)அ அரை பின்ச் உப்பு சேர்த்தால் ருசி எடுத்துகாட்டும்.

அதே போல் கார சமையல் வகைகளுக்கு ஒரு சிட்டிகை அளவு சர்க்கரை சேர்த்தால் ருசி நல்ல இருக்கும்.புளி குழம்பு ரசம் வகைகளுக்கு சிறிது வெல்லம் சேர்க்கனும்

Jaleela Kamal said...

ஆமாம் மனோ அக்கா எல்லோருக்கும் பிடித்த சுண்டல்
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ மனோ அக்கா

Jaleela Kamal said...

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றீ ஜெய்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா சீனி சேர்ப்பதால் சுவை தனித்து தெரியும் ஆகையால் நான் சேப்பேன், அதுவும் இல்லாமல் மேலே விளக்க்ம் கொடுத்துள்ளேன் பார்த்து கொள்ளுங்கலேன்

Jaleela Kamal said...

தேனக்கா வருகைக்கு மிக்க சந்தோஷம்

Jaleela Kamal said...

என்றும் என்றென்றும் 16 யாருப்பாஅ பெயரை குறீப்பிட்டு இருக்கலாம்,

ரொம்ப நன்றி முர்தபா எல்லோருக்கும் நாவில் நீர் வரவழைக்கும். இது எங்க வீட்டு + இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் டிபன்

வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

அக்பர் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி அப்பாவி தங்கமணி

R.Gopi said...

கருப்பு கொண்டை கடலை சுண்டல்..

ஆஹா.... பேரை கேட்டாலே சும்மா அள்ளி சாப்பிடணும் போல இருக்குல்ல

வேக வைத்து விட்டு, லேசாக உப்பு, துருவிய தேங்காய் கலந்து சாப்பிட்டால், ஒரு கப் என்ன, ரெண்டாவது கப் கூட சாப்பிடலாம்... அவ்ளோ நல்லா இருக்கும்...

சிறு வயதில், நவராத்திரி சமயத்தில், இது போன்று பல வகை சுண்டல்கள் கலெக்‌ஷன் செய்தது நினைவுக்கு வந்தது..

இதில், சர்க்கரை சேர்த்தால், நன்றாக இருக்குமா?

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா