Showing posts with label சாண்ட்விச். Show all posts
Showing posts with label சாண்ட்விச். Show all posts

Friday, May 19, 2017

தோஃபு பரோட்டா சாண்ட்விச்


தோஃபு பரோட்டா சாண்ட்விச்

பரோட்டா
மைதா – ஒரு டம்ளர்
சர்க்கரை – அரை தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
தண்ணீர் கால் டம்ளர் + தேவைக்கு
உருக்கிய நெய் அல்லது பட்டர் – 1 தேக்கரண்டி
தோஃபு ஃப்ரை
தோஃபு – கால் கிலோ
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
சோயா சாஸ் – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
பூண்டு பேஸ்ட் – அரை தேக்கரண்டி

பரோட்டாவிற்கு கொடுக்க பட்டுள்ள பொருட்களை சேர்த்து குழைத்து அரை மணி நேரம் ஊறவைத்து திரட்டி லேயர்களாக போட்டு மடித்து பரோட்டா ரெடி செய்யவும்.
தோஃபுவை  நீளவாக்கில் ஸ்டிக் போல வெட்டி மசாலா தடவி தோசை தவ்வாவில் பொரித்து எடுக்கவும்.

சாண்ட்விச்க்கு தேவையான பொருட்கள்
  1. பரோட்டா
  2. பொரித்த தோஃபு
  3. கேரட்
  4. வல்லாரை கீரை
  5. மையானஸ்
  6. ஸ்வீட் அன்ட் சோர் கெட்சப்


பரோட்டாவில் மையாணஸ் தடவி தோஃபு மற்றும் வல்லாரை இலை, கேரட்டை வைத்து மேலே லேசாக கெட்சப் தெளித்து ரோல் செய்யவும்.

சுவையான தோஃபு பரோட்டா சாண்ட்விச் ரெடி . சிக்கனுக்கு பதில் தோஃபுவை பயன்படுத்தியுள்ளேன்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, March 4, 2017

பாலக் பனீர் மீட் பால் சம்மூன் / Palak Paneer Meat Ball Samoon (Veg Recipe)


பாலக் பனீர் மீட் பால் சம்மூன்

தேவையான பொருட்கள்

பாலக் கீரை – இரண்டு கப் பொடியாக நறுக்கியது
பனீர் – 100 கிராம்
இஞ்சி  - ஒரு மேசைகரண்டி துருவியது
பச்சமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி தழை – ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கியது
கடலை மாவு – கால் கப்
ப்ரட் கிரம்ஸ் – இரண்டு மேசைகரண்டி
வெங்காயம் – ஒன்று பொடியாக நறுக்கியது
கரம் மசாலா பொடி – அரை தேக்கரண்டி


செய்முறை

பனீரை உதிர்த்து கொள்ளவும், பாலக்கீரை, இஞ்சி, பச்சமிளகாய், கொத்துமல்லி தழை வெங்காயம் அனைத்தையும் ஒன்றாக கலந்து கடலைமாவு, கரம் மசாலா மற்றும் ப்ரட் கிரம்ஸ் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
வாயகன்ற கிடாயில் எண்ணையை காயவைத்து உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.

சம்மூன் என்னும் லாங் பண் ல் டொமேட்டோ கெட்சப் தடவி கேரட் லெட்டியுஸ் இலை வைத்து பொரித்த பாலக் பனீர் பாலை வைத்து பரிமாறவும்.
சுவையான சமூன் பாலக் பனீர் மீட்பால் சாண்ட்விச் ரெடி.

போன வருடம் நோன்பு கால ரெசிபி குங்குமம் தோழியில் வெளிவந்த ரெசிபி



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, July 24, 2016

சுரைக்காய் ஃபிஷ் கட்லட் (பர்கர்) சாண்ட்விச்

சுரைக்காய் ஃபிஷ் கட்லட் சாண்ட்விச்
Bottle guard Fish Cutlet with Sandwich

என் சமையல் முடிந்த வரை பிள்ளைகள் விரும்பி உண்ணும் வகையில் தான் இருக்கும். பிள்ளைகளுக்கு சாண்ட்விச் என்றால் ரொம்ப பிடிக்கும்.அதை கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்தால். குழந்தைகளை காய்கறி மற்றும் மீன் வகைகளை சுலபமாக சாப்பிட வைத்து விடலாம்.




கொஞ்சம் வித்தியாசமாய் சுரைக்காய் ஃபிஷ் கட்லெட் சாண்ட்விச்.
தேவையானவை
மீன் வேக வைக்க
போன்லெஸ் ஃபிஷ் ஹமுர் அரை கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை தேக்கரண்டி
உப்பு – சிறிது (தேவைக்கு)
மிளகு தூள் – ¼ தேக்கரண்டி

மீனுடன் சேர்த்து பிசைந்து கொள்ள
துருவிய சுரைக்காய் – அரை கப்

வேக வைத்த உருளை – 1
வேக வைத்த கேரட் – கால் (ஒன்றில் கால் பாகம்)
வெங்காயம் – 1
பச்ச மிளகாய் – 1
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
மிளகு தூள் – அரை தேக்கரண்டி
கொத்துமல்லி  தழை – சிறிது
கிரம்ஸ் பவுடர் – 1 மேசை கரண்டி

கட்லெட் தோய்க்க
கிரம்ஸ் பவுட்ர் – தேவைக்கு
கார்ன் மாவு – சிறிது
முட்டை -1





செய்முறை
ஹமூர் மீனை சுத்தம் செய்து அதில் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வேகவைத்து தண்ணீரை வடித்து உதிர்த்து கொள்ளவும்.
அதில் துருவிய சுரைக்காய், வேகவைத்த உருளை மற்றும் கேரட்டை மசித்து சேர்க்கவும்.
வெங்காயம் பச்சமிளகாயை பொடியாக அரிந்து சேர்த்து உப்பு தூள் ,மிளகு தூள்,கரம்மசாலா தூளை சேர்க்கவும்
அடுத்து கொத்துமல்லி தழை + ஒரு மேசைகரண்டி கிரம்ஸ் பவுடரை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடித்து கட்லெட் வேண்டிய வடிவில் தட்டி
முட்டையில் முக்கி மேலும் கிரம்ஸ் + கார்ன் மாவு கலந்த கலவையில் தோய்த்து (நல்ல கோட்டிங் கொடுத்து)எடுத்து 1 மணி நேரம் பிரீஜரில் வைக்கவும்.
பிறகு தோசை தவ்வாவில் சிறிது எண்ணை விட்டு எல்லா கட்லெட் பொரித்து எடுக்கவும்.







சாண்ட்விச் செய்ய
குபூஸ்
வெள்ளரி மற்றும் கேரட்
டொமேட்டோ கெட்சப்
பொரித்த பிஷ் பர்கர் (கட்லெட்)
ஹமூஸ் – தேவைக்கு



குபூஸை பாதியாக பிரிச்சி அதில் ஹமூஸ் தடவி,கேரட் மற்றும் குக்கும்பரை வட்ட வடிவமாக அல்லது வேண்டிய வடிவில் வெட்டி  வைத்து பொரித்த கட்லெட்டை வைத்து கெட்சப் தடவி மூடவும்.
சுவையான வித்தியாசமான சுரைக்காய் ஹமூர் மீன் கட்லட் சாண்ட்விச் ரெடி.
குபூஸ் என்றில்லை இது போல்கட்லட் தயாரித்து சப்பாத்தி,பிரட் மற்றும் பண்ணிலும் வைத்து கொடுக்கலாம்

இது கட்லட் தான் ஆனால் பார்க்க பர்கர் போல இருக்கும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும். மதிய உணவுக்கு பதில் இப்படி வைத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல பில்லிங்க்காக இருக்கும்.
கட்லட்டை முதல் நாளே செய்து வைத்து விட்டாலோ அல்லது செய்து பீரிஜரில் வைத்து கொண்டாலோ இந்த சாண்ட்விச் செய்வது மிக சுலபம்.

.இதில் ஸ்பெரட் செய்ய ஹமூஸ் இல்லை எனில் மயானஸும் தடவலாம்
இதை பண்ணில் வைத்து சாண்ட்விச் போல் செய்தால் நல்ல இருந்திருக்கும்.
இது முன்பு செய்த குறிப்பு.






 ( ஒரே தயிர் சாதம் , புளிசாதம் தானா என்று முகத்தை சுளிக்கும் பிள்ளைகளுக்கு நிறைய வித்தியாசமான சாண்ட்விச் களாக கொடுத்து அவர்களை அசர வைக்கலாம்)
அவசர உலகில் இப்போது அனைவரும் பாஸ்புட் களையே விரும்புகின்றனர். கொஞ்சம் மெனக்கெட்டால் நாமும் செய்யலாம்)




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Wednesday, August 6, 2014

பூண்டு உருளை மயோ சாண்ட்விச் - Garlic ,Potato Mayo Mini Sandwich


குழந்தைகள் லன்ச் பாக்ஸ் க்கு என்ன வைப்பது என்று குழம்பிக்கொள்ளும் தாய்மார்களுக்கு இதோ சுலபமான உருளை சாண்ட்விச்.இதில் ஆலிவ் ஆயில் பயன் படுத்தி உள்ளேன் அதற்கு பதில் பட்டர் + எண்ணையும் பயன்படுத்தியும் செய்யலாம்.


இதே போல் பீட்ரூட் மற்றும் கேரட்டிலும் செய்யலாம்





பூண்டு உருளை மயோ சாண்ட்விச்
 Garlic , Potato Mayo mini Sandwich
Small bun with potato Sandwich - Lunch box recipe
தேவையான பொருட்கள்

உருளை கிழங்கு – 1 (50 கிராம்)
ஆலிவ் ஆயில் – ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் – கால் தேக்கரண்டி
பூண்டு பொடி – கால் தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
மையானஸ் – 1 தேக்கரண்டி
ரெட் சில்லி சாஸ் – ஒரு தேக்கரண்டி
சிறிய பன் – 2 எண்ணிக்கை
செய்முறை
 உருளை கிழங்கை தோலெடுத்து சிறிய சதுர வடிவமாக வெட்டிகொள்ளவும்.
ஒரு வாயகன்ற நான் ஸ்டிக் பேனில் ஆலிவ் ஆயில் சேர்த்து வெட்டிய உருளையை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் வேகவைக்கவும்.


அதில் மிளகு தூள், பூண்டி பொடி, உப்பு சேர்த்து உருளை நன்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.


பன்னை இரண்டாக வெட்டி லேசாக் சூடு படுத்தவும்.
பன்னின் இருபுறமும் மயானஸ் மற்றும் சில்லி சாஸையும் தடவி நடுவில் ரோஸ்ட் செய்த உருளையை வைத்து மூடவும்.


சுவையான பூண்டு உருளை மையோ சாண்ட்விச் ரெடி.
குழந்தைகள் பன்னில் வைத்து கொடுப்பதால் சுலபமாக சாப்பிட்டு விடுவார்கள்.
இதே போல் கேரட், பீட்ரூடையும் வைத்து செய்து கொடுக்கலாம்.
பரிமாறும் அளவு  : 1 குழந்தைக்கு
ஆயத்த நேரம்: 5 நிமிடம்
சமைக்கும் நேரம் : 7 நிமிடம்
இரண்டு சாண்ட்விச்கள் செய்யலாம்.






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Sunday, May 25, 2014

பிட்சா ப்லேவர் சிக்கன் , புரோக்கோலி சாண்ட் விச்



பிட்சா ப்லேவர் சிக்கன் புரோக்கோலி சாண்ட் விச்


  1. சிக்கன் எலும்பில்லாதது ‍ 150 கிராம்
  2. புரொக்கோலி ‍ 50 கிராம்
  3. கேபேஜ் ‍ 50 கிராம்
  4. கேரட் 25 கிராம்
  5. கொடமிளகாய் ‍ 25 கிராம்
  6. வெங்காயம்  ‍ 1 
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ 1 தேக்கரண்டி
  8. ஒரிகானோ ‍ 1/2 தேக்கரண்டி
  9. உப்பு 
  10. சர்க்கரை
  11. பட்டர் + எண்ணை ‍ 3 தேக்கரண்டி
  12. ப்ரட் ‍ஸ்லைஸ் 10


செய்முறை


  1. ஒரு ப்ரை பேனில் எண்ணை + பட்டரை காயவைத்து வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. பிறகு சிக்கன் மற்றும் ஒரிகானோ சேர்த்து வதக்கி 2 நிமிடம் வேக விடவும்.
  3. பிறகு கேரட், பீன்ஸ்,கேபேஜ் சேர்த்து வதக்கி கடைசியாக புரோக்கோலி, கொடமிளகாய்,உப்பு , சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கி இரக்கி ஆறவைக்கவும்.
  4. பிரட் ஸலைஸ்களை பட்டர் சேர்த்து தவ்வாவில் இருபுறமும் பொன்னிறமாக  பொரித்து எடுத்து அதன் இருபுறமும் கெட்சப் தடவி. வதக்கிய பில்லிங்கை ப்ரட்டின் ஒரு புறம் வைத்து மற்றொரு பிரட்டை வைத்து மூடவும்.



இதை த்வ்வாவில் பொரிப்பதற்கு பதில் டோஸ்டரிலும் ஈசியாக் செய்துவிடலாம்.



இந்த சாண்ட்விச் ரொம்ப அருமையாக இருக்கும் , படங்கள் தான் சரியாக எடுக்க முடியவில்லை, நிறைய ரெசிபி படங்கள் சரியாக இல்லாததால் போஸ்ட் பண்ண முடியாமல் இருக்கு. இது முன்பு பிட்சா செய்துட்டு மீதி பில்லிஙகை இப்படி சாண்ட் விச்சாக தயாரித்து என் பையனுக்கு பள்ளி லன்ச்க்கு கொடுத்து அனுப்பினேன் . அங்குள்ள எல்லா பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிச்சி இருந்தது என்றான்.


Linking to Srivalli's Breakfast event
Ragi Rava Dosa

http://samaiyalattakaasam.blogspot.com/2014/03/ragi-dosai.html
Coconut Mini Pancake

http://samaiyalattakaasam.blogspot.com/2014/01/coconut-mini-pancake.html
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Monday, September 23, 2013

வடா பாவ்/வடா ப்ரட் - Vada Pav/Vada Bread


வடா பாவ்
இது வட இந்தியாவில் பிரத்தி பெற்ற ஒரு சிற்றுண்டி, பாவ் பன்னுடன் சாஸ் சேர்த்து இதை உள்ளே வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.

 Vada Pav




Vada Bread



தேவையானவை
பிரட் – 8 (அ) பன் – 4
பட்டர் – பொரிக்க தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் – தேவைக்கு
டேட்ஸ் சட்னி (அ) இனிப்பு சட்னி
வடா செய்ய
ரெடி மேட் பஜ்ஜி மாவு – அரை கப்
கார்ன் மாவு – ஒரு மேசை கரண்டி





உருளை கிழங்கு பட்டாணி மசாலா
வேகவைத்த உருளைகிழங்கு – ஒன்று
வெங்காயம்  - ஒன்று
பச்ச மிளகாய் – ஒன்று
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
எண்ணை – ஒரு தேக்கரண்டி
தாளிக்க
கடுகு – கால் தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
பட்டானி (புரோஜன்)  - ஒரு மேசை கரண்டி
பெருங்காயப்பொடி – ஒரு சிட்டிக்கை

செய்முறை
முதலில் உருளைகிழங்கு மசாலா தயாரித்து கொள்ளவும்
வாயகன்ற வானலியில் எண்ணையை ஊற்றி கடுகு, சீரகம்,கருவேப்பிலை, பெருங்காயப்பொடி சேர்த்து தாளித்து பொடியாக அரிந்த வெங்காயம் மற்றும் பச்சமிளகாய்,பட்டானி சேர்த்து நன்கு வதக்கவும்.
மஞ்சள் தூள் உப்புதூள் வெந்த உருளைசேர்த்து நன்கு மசித்து கிளறி ஆறவைக்கவும்.
ஆறிய உருளைமசாலாவை சிறிய உருண்டைகளாக பிடித்துவைக்கவும்.
( வட நாட்டு உருளை மசாலாவில் சேரும் மசாலாக்கள் வேறு, இது நம்ம பூரி பாஜிக்கு செய்யும் மசாலா போல் தான் செய்துள்ளேன்)

பிரட் (அ) பன் பொரித்து கொள்ளவும்/
பிரட்டை (அ) பன்னை பட்டர் தடவி பொரித்து கொள்ளவும்
பஜ்ஜிமாவை கார்ன் மாவு சேர்த்து கலக்கி கொள்ளவும்.
வானலியில் எண்ணையை காயவைத்து உருட்டிய மசாலா உருண்டைகளை பஜ்ஜிமாவில் தோய்த்து பொரித்து எடுக்கவும்.

வடா பன் (பாவ்)

பொரித்த பிரெட்டில் ஒரு பக்கம் கெட்சப்பும், மறுபக்கம் டேட்ஸ் சட்னியும் தடவி ஒரு பொரித்த மசாலா பஜ்ஜியை நடுவில் வைத்து  மூடவும்.

 குறிப்பு:
இது பிள்ளைகளுக்கு என்பதால் கெட்சப் மட்டும் போதுமானது,  பெரியவர்களுக்கு ஒரு பக்கம் கீரின் கார சட்னியும், மறுபக்கம் டேட்ஸ் சட்னியும் வைத்து செய்யலாம்.அருமையான மாலை நேர சிற்றுண்டியும், குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸுக்கும் சூப்பரான டிபன். சுவைத்து மகிழுங்கள்.

Vada Bread English Version
Linking to Akila's Dish Name Starts with V 


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam

Monday, March 25, 2013

புதினா சட்னி தோசை ரோல் - Mint Chutney & Dosa Roll




புத்துணர்வு தரும் புதினா சட்னி தோசை ரோல்

புதினா சட்னி  இட்லி,தோசை, பிரட் சாண்ட்விச், சேமியா, மக்ரூணி,அடை , மைதா தோசை, உப்புமா ,எல்லா வகை டிபனுக்கும் ,வடை பஜ்ஜி , உளுந்து வடை ,போண்டா,பகோடா  மாலை நேர சிற்றுண்டிக்கும், குஸ்கா கீ ரைஸ், பகறா கானா முதலிய சாதவகைகளுக்கும்  பொருந்தும்.





புதினா சட்னி - 2

தேவையானவை

ஃப்ரஷ் புதினா  - 1 கட்டு 
புளி - ஒரு சிறிய எலுமிச்சை சைஸ்
பச்ச மிளகாய் - 2
உப்பு - கால் தேக்கரண்டி  ( தேவைக்கு)
தேங்காய் பத்தை - 3 (2” சைஸ்)
வெங்காயம் - மீடியம் 1






கெட்டியாகவோ தண்ணியாகவோ அவரவர் விரும்பம் போல் அரைத்துகொள்ளலாம், தண்ணீராக அரைத்தால் அதை தாளித்து கொண்டால் நல்ல இருக்கும். தண்ணீயாக என்றால் ஒடு தண்ணீர் இல்லை சிறிது நீர்க்க அரைத்து கொள்ளலாம்.
செய்முறை 

புதினாவை ஆய்ந்து மண் போக நன்கு அலசி எடுக்கவும்.
முதலில் தேங்காய்,பச்சமிளகாய், புளியை அரைத்து கொண்டு அதனுடன் புதினா,உப்பு,வெங்காயம் சேர்த்து  மிக்சியில் அரைக்கவும்.




ஆபிஸ் க்கு எடுத்து செல்ல தோசையை வார்த்து கொண்டு அதில் ஜாம் போல் தடவி மேலே படத்தில் காட்டியுள்ளது போல் தடவி சுருட்டி எடுத்து செல்வேன். புதினா சட்னி தோசையில் ஊறி சாப்பிடவே ய்ம்மியாக இருக்கும்.

புதினா சட்னி/துவையல் மட்டும் வகைவகையாக அரைப்பேன்.இதில் சிலநேரம் இனிப்பு துவையல் போல் வால்நட், பேரிட்சை சேர்த்தும் அரைப்பேன். ஏற்கனவே ரெசிபி போட்டுள்ளேன்.




பச்ச பசேலுன்னு எங்க புதினா கொத்துமல்லி கருவேப்பிலை , கீரை வகை பார்த்தாலும் , பேய் மாதிரி அள்ளிக்குவேன்.


Dubai - Carrefour - Century Mall 
Green Leaves Section

பேச்சுலர் ஈவண்ட் ஆசியாவின் ரோல் ஈவண்டுக்காக செய்தது இணைப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது.




Linking to 
 Gayathri'sWalk through Memory Lane hostedby Hema's Adugemane

Monday, January 7, 2013

நூடுல்ஸ் தோசை ரோல் - Noodles Dosa Roll



இது முதல் முதல் மலிக்க பதிவர் சந்திப்பின்  போது கொண்டு வந்தார்கள் கோதுமை தோசையில் நூடுல்ஸ் வைத்து சுருட்டி சாண்ட்விச் போல அப்போது இருந்தே செய்து பார்க்கனும் என்று இருந்தேன்.
கொஞ்ச நாளில் மலர் காந்தி தோசை மாவில் செய்து இருந்தாஙக் அதை பார்த்து ஆசியாவும் செய்து இருந்தார்கள். ஒரு முறை செய்து பார்ப்போம் என்று செய்தேன். 


தேவையானவை

தோசை மாவு : 2 குழிகரண்டி
ரெடியாக தயாரித்து வைத்துள்ள் நூடுல்ஸ்
எண்ணை - இரண்டு தேக்கரண்டி

செய்முறை 

தவ்வாவை சுடு படுத்தி  தோசைமாவை சுற்றிலும் ஊற்றி தோசை வெந்ததும் நூடுல்ஸை வைத்து சுருட்டவும்.








பேச்சுலர்களுக்கு காலையில் சட்னி அரைத்து எடுத்து செல்வது ரொம்ப பெரிய மலை போல வேலையாக தெரியும்.
இரவே டின்னருக்கு நூடுல்ஸ் தயாரித்து சாப்பிட்டு விட்டு மீதி ஆனாலும் அதை இப்படி தோசைமாவில் வைத்து சுட்டு எடுத்து செல்லலாம்.

பேச்சுலர்களுக்கு காலை டிபன் அல்லது லஞ்ச் பாக்ஸுகு நல்ல ஃபில்லிங்காக இருக்கும்.



பரிமாறும் அளவு : 1 நபருக்கு




ஆனால் எனக்கு தோசைக்கு புதினா சட்னி , வேறு ஏதாவது சட்னி வகைதான் பிடிக்கும்.
  ஆசியாவின் ஈவண்டுக்காக செய்தது. இணைப்பு கொடுக்கமுடியாமல் போய்விட்டது. 
Linking to my own Event - Bachelor's Feast.

Sunday, December 9, 2012

தக்காளி சட்னி, தோசை ரோல் - Tomato Chutney Dosa Roll




 




தக்காளி சட்னி
வதக்கி அரைக்க
பழுத்த தக்காளி – 2
காஷ்மீரி சில்லி பவுடர் – ¼ தேக்கரண்டி
பூண்டு – 1 பல்
வெல்லம் – சிறிய துண்டு
உப்பு -1/4 தேகக்ரண்டி
எண்ணை – ½ தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை ¼ தேக்கரண்டி
கடுகு – ¼ தேக்கரண்டி
கருவேப்பிலை – 5 இதழ்
தோசை மாவு : 3 குழிகரண்டி





தக்காளியை பொடியாக அரிந்துவைக்கவும்.
ஒரு வாயகன்ற பேனில் எண்ணையை ஊற்றி வதக்கி அரைக்க்க கொடுத்துள்ளவைகளை வதக்கி ஆறவைத்து அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த தக்காளி கலவையில் சேர்க்கவும்.

தவ்வாவை சூடு படுத்தி தோசையை சுட்டு சுற்றிலும் சிறிது நெய் ஊற்றி தக்காளி சட்னியை தடவி சுருட்டவும்.

 அப்படியே லஞ்ச் பாக்ஸ் க்க்கு எடுத்து செல்லலாம். தோசையில் தக்காளி சட்னி ஊறி சாப்பிட பஞ்சுபோல் இருக்கும்.

 





Linking to Nithu's Healthy kids for Healthy diet - wraps and roll Hosted by asiya  and my own Event - Bachelor's Feast.