புத்துணர்வு தரும் புதினா சட்னி தோசை ரோல்
புதினா சட்னி இட்லி,தோசை, பிரட் சாண்ட்விச், சேமியா, மக்ரூணி,அடை , மைதா தோசை, உப்புமா ,எல்லா வகை டிபனுக்கும் ,வடை பஜ்ஜி , உளுந்து வடை ,போண்டா,பகோடா மாலை நேர சிற்றுண்டிக்கும், குஸ்கா கீ ரைஸ், பகறா கானா முதலிய சாதவகைகளுக்கும் பொருந்தும்.
புதினா சட்னி - 2
தேவையானவை
ஃப்ரஷ் புதினா - 1 கட்டு
புளி - ஒரு சிறிய எலுமிச்சை சைஸ்
பச்ச மிளகாய் - 2
உப்பு - கால் தேக்கரண்டி ( தேவைக்கு)
தேங்காய் பத்தை - 3 (2” சைஸ்)
வெங்காயம் - மீடியம் 1
கெட்டியாகவோ தண்ணியாகவோ அவரவர் விரும்பம் போல் அரைத்துகொள்ளலாம், தண்ணீராக அரைத்தால் அதை தாளித்து கொண்டால் நல்ல இருக்கும். தண்ணீயாக என்றால் ஒடு தண்ணீர் இல்லை சிறிது நீர்க்க அரைத்து கொள்ளலாம்.
செய்முறை
புதினாவை ஆய்ந்து மண் போக நன்கு அலசி எடுக்கவும்.
முதலில் தேங்காய்,பச்சமிளகாய், புளியை அரைத்து கொண்டு அதனுடன் புதினா,உப்பு,வெங்காயம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
ஆபிஸ் க்கு எடுத்து செல்ல தோசையை வார்த்து கொண்டு அதில் ஜாம் போல் தடவி மேலே படத்தில் காட்டியுள்ளது போல் தடவி சுருட்டி எடுத்து செல்வேன். புதினா சட்னி தோசையில் ஊறி சாப்பிடவே ய்ம்மியாக இருக்கும்.
புதினா சட்னி/துவையல் மட்டும் வகைவகையாக அரைப்பேன்.இதில் சிலநேரம் இனிப்பு துவையல் போல் வால்நட், பேரிட்சை சேர்த்தும் அரைப்பேன். ஏற்கனவே ரெசிபி போட்டுள்ளேன்.
பச்ச பசேலுன்னு எங்க புதினா கொத்துமல்லி கருவேப்பிலை , கீரை வகை பார்த்தாலும் , பேய் மாதிரி அள்ளிக்குவேன்.
Dubai - Carrefour - Century Mall
Green Leaves Section
பேச்சுலர் ஈவண்ட் ஆசியாவின் ரோல் ஈவண்டுக்காக செய்தது இணைப்பு கொடுக்க முடியாமல் போய் விட்டது.
Linking to
Tweet | ||||||
2 கருத்துகள்:
பேய் மாதிரி... ஹா... ஹா... ஏன் சகோதரி...?
நன்றி... நன்றி...
ஸ்கூல் பிள்ளைகளுக்கு சுலபமாக செய்து கொடுத்து விடலாம்.அருமையான குறிப்பு.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா