| Tweet | ||||||
Showing posts with label மாஸ்டர் செஃப். Show all posts
Showing posts with label மாஸ்டர் செஃப். Show all posts
Friday, February 24, 2012
மகிழ்சிக்குரிய அவார்டு - Winner & Runner up - Master chef India 2Contest
Tuiti Fruity Pancake indiblogger link - Master chef India 2 Contest
வாங்க பதிவுலக தோழ தோழிகளே எவ்வளவோ வலைப்பூவ்வுக்கு எழுத்துதவி மூலம் இது வரை 1000 த்துக்கும் மேற்பட்ட குறிப்புகள் அனுப்பி விட்டேன்.
அருசுவைடாட்காம், தமிழ்குடும்பம்டாட்காம்,சமையலறைடாட்காம், வல்லமை, இன்னும் பல பத்திரிக்கைகளில் எல்லாம் என் சமையல் குறிப்புகள் ஏராளமாக உண்டு...
உலகில் உள்ள அனைத்து சமையலறையிலும் நான் உப்பா சர்க்கரையாக வாழ்ந்து வருகிறேன்.
பரிசு கிடைக்குதோ கிடைக்கலையோ, யாரும் கமெண்ட் போடுறாங்களோ இல்லையோ , ஓட்டு போடுறாங்களோ இல்லையோ இதெல்லாம் நான் எதிர் பார்ப்பதில்லை.
சரி சரி என்ன விஷியம் விஷயத்த சொல்லுங்கன்னு கேட்பது காதில் விழுது ஹிஹி
போன வருடம் இண்டி பிலாக்கர் நடத்தும் மாஸ்டர் செஃப் இந்தியா 2 காண்டெஸ்ட்க்கு குறிப்பு அனுப்பும் படி மெயில் வந்தது.
இது போல் நிறைய மெயில் முன்புன் வந்துள்ளது, இண்டி பிலாக்கர் ஒரு திரட்டி ஆனால் இருக்கிற திரட்டிகளிலேயே குறிப்ப சேர்க்க எனக்கு நேரம் இல்லை.ஆகையால் அதில் எப்பவாவது நேரம் கிடைக்கும் போது மட்டும் குறிப்புகளை சேர்ப்பேன்.
மேலும் அங்கு போய் பார்த்தால் அதில் என்ன எப்படின்னு எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் மெயில் வந்ததுக்கு சமையல் குறிப்புக்கு தான் நம்ம கிட்ட ஏராளமாக இருக்கே சரி அனுப்புவோம் என்று இந்த பிலாக்கில் இருந்து சில குறிப்புகள் அனுப்பினேன்.
Winner - First Prize
Runner - up
Eggplant Bhajji sandwich - இந்த ரெசிபி அடுத்த குறிப்பில் போடுகிறேன்.
அதில் என் ட்யுட்டி ஃப்ரூட்டி பேன் கேக். பெரிய பெரிய செஃப் எல்லாம் சேர்ந்து செலக்ட் செய்து முதல் பரிசு கொடுத்து இருக்காங்க.
இண்டி பிலாக்கர் - சுட்டியை சொடுகவும்.
முந்தாநாள் மெயில் வந்ததும் ஒன்றும் ஓடல உடனே மெயில் செய்து கேட்டேன். அங்கு முதல் பரிசு யாருக்கு என மொத்தமா ரன்னர் அப் அவார்டிலும் என் பெயர் இருந்தது.
உடனே பதில் வந்தது உங்களுக்கு தான் முதல் பரிசு.
( எல்லா புகழும் இறைவனுக்கே)
ரொம்ப சந்தோஷம்.
தோழ, தோழிகள்அனைவரும் இந்த வலை உலகில் ஒருவருக்கொருவர் சந்தோஷத்திற்காக நிறைய அவார்டுகளை பரிமாறி கொண்டு இருக்கிறோம்.
ஆனால் இப்ப கிடைத்த பரிசு என் உழைப்புக்கு கிடைத்த பரிசு.
பெரிய பெரிய செஃப் கள் செலக்ட் செய்து கொடுத்து இருப்பது மிக்க மகிழ்சி.
இது வரை இங்கு நீங்க எல்லாரும் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி.
அடுத்த அவார்டு என் ஆங்கில பிலாக்குக்கு. இங்கு உள்ள குறிப்புகள் தான் அங்கும் போட போகிறேன்இது வரை நான் யாருக்கும் லிங்க் கொடுக்க வில்லை..சில புது குறிப்புகள்.
அதில் மிக்சட் தந்தூரி பிஷ் ஃபிரைக்கும் ,எக் ப்லாண்ட் பஜ்ஜி சாண்ட்விச்சுக்கும் கிடைத்துள்ளது.பிஷ் ரெசிபி ஏற்கனவே இங்கு இருக்கு, மற்றயது கூடிய விரைவில் இங்கு பகிர்கிறேன்.
அனைவருக்கும் நன்றி.நன்றி நன்றி.....
Labels:
அவார்டு,
இது தான் உண்மையான அவார்டு,
மாஸ்டர் செஃப்
Subscribe to:
Posts (Atom)




