Showing posts with label தக்காளி. Show all posts
Showing posts with label தக்காளி. Show all posts

Wednesday, May 1, 2019

கொத்துமல்லி தோசை , கேரட் தக்காளி சட்னி / Carrot tomato chutney , Coriander Dosai


கம கமன்னு கொத்துமல்லி தோசை





தேவையான பொருகள்

கேரட் - 1
பழுத்த தக்களி -2
காஞ்ச மிளகாய் - 4
உப்பு தேவைக்கு

தாளிக்க

சிறிது எண்ணை

கடுகு
உளுத்தம் பருப்பு

காஷ்மீரி சில்லி பொடி சிறிது
கருவேப்பிலை


செய்முறை

கேரட்டையும் தக்காளியையும் காஞ்சமிளகாய் உப்பு சேர்த்து அரைக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ள்வைககளை தாளித்து அரைத்து வைத்த தக்காளியை ஊற்றி நன்கு சுருள கிளறீ இரக்கவும்.






கொத்துமல்லி தோசை


தோசைமாவு
கொத்துமல்லி - 1 கட்டு

வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
பச்ச மிளகாய் - ஒன்றூ சிறியது



தோசைமாவில் வெங்காயம் , கொத்துமல்ல்லி மல்லி கீரையை சேர்த்து கலக்கி தோசைகளாக வார்க்கவும்.




omato Carrot Chutney/Coriander Dosai / Samaiyal attakaasam by Jaleelakamal #vegetarian #Recipes தக்காளி கேரட் சட்னி - 1 தக்காளி வதக்கிய சட்னி 2 & Mix Millet Idli https://youtu.be/320rGEZM6Lg 3. கருவேப்பிலை சட்னி / கரிவேப்பிலை தொக்கு அடர்ந்த நீண்ட கூந்தலுக்கு https://youtu.be/KsQ0rLrnluk 4. Gooseberry Chutney - https://youtu.be/-HclaXd3Trk நெல்லிக்காய் துவையல் இளமையாக இருக்க , தலைமுடி நரைக்காமல் இருக்க இந்த சட்னியை தினம் சாப்பிடலாம். 5.Green Idli https://youtu.be/JjaxdmQvmuM 6. heart Shape Plain Idli https://youtu.be/YsuGcvm9mtI 7. barnyard Millet adai / paruppadai/ Protein recipe
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Wednesday, November 22, 2017

தக்காளி பீட் ரூட் ரசம் (சூப்) - Tomato Beet Indian Soup/Rasam



Key Iron Ingredients: Tomato and Beetroot
Preparation Time : 7
cooking time : 13 minutes
serve 3 or 4

சாதரண புளி ரசம் தயாரிப்பதோ அதற்கு பதில் இப்படி இரும்பு சத்து அதிகமாக உள்ள பீட்ரூ, தக்காளி சேர்த்து செய்தால் சும்மா 3 டம்ளர் அப்படியே குடிக்கலாம்.


என்ன டயட்டோஅது வெயிட் குறைக்கவோ அல்லது டயாபட்டீஸ்க்கோ வேற என்ன காரணத்துக்காக குறைக்கனும் நினைக்கிறீங்கள் .
அதுக்கு முதலாவதாக நான் சொல்லும் டயட்
சூப் தான் !! ஆமா!1
சூப்  என்றால் ஐய்யோ நமக்கு செய்ய வராதே என்ன செய்யலாம் என்று யோசிக்கிறீங்களா?
கவலை வேண்டாம் எளிமையாக செய்ய நான் சொல்லி தரேன்
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஆரோக்கியமான சூப் தயாரிக்கலாம்.
வாங்க

Tomato Beet Rasam (soup)
*தக்காளி பீட் ரூட் ரசம் (சூப்)*

தக்காளி பெரியது 4
பீட் ரூட் பொடியாக அரிந்தது கால் கப் அ இரண்டு மேசைகரண்டி
உப்பு தேவைக்கு
ரசம் பொடி ஆச்சி அ சக்தி
கொத்து மல்லி தழை கொஞ்சம்
புளி ஒரு சின்ன திராட்சை பழம் அளவு - தேவைபட்டால்
மஞ்சள் தூள் சிறிது
மிளகாய் தூள் கால் தேக்கரண்டி

தாளிக்க

நெய் ஒரு தேக்கரண்டி
கடுகு கால் தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது பூண்டு இரண்டு பல்
பச்சமிளகாய் சின்னது ஒன்று
பெருங்காயம் ஒரு சிட்டிக்கை



செய்முறை

தக்காளி பீட் ருட் மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சிறிது கருவேப்பிலை சிறிது கொத்துமல்லி தழை
இவை அனைத்தையும் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி வேக விடுங்கள்
வெந்ததும் மசித்து தண்ணீரை வடிகட்டவும்.
மறுபடி அந்த வடிகட்டிய தக்காளியில் அரை கப் தண்ணீர் ஊற்றி கலக்கி வடித்து வடிகட்டிய தக்காளி பீட் சாற்றை கொதிக்க விடவும்.
பிறகு கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொதித்து கொண்டு இருக்கும் தக்காளி சாறில் சேர்த்து கலக்கி இரக்கவும்.
இதை வாரம் ஒரு நாள் அல்லது முன்று நாட்கள்
ஒரு முட்டை மற்றும் பொரியலுடன் இரண்டு டம்ளர் அளவுக்கு குடிக்கலாம்

Liquid Diet

Linking to   #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.  

happy healthy deit,Tomato Beetroot rasam/soup


ரசம் வகைகள், சூப் வகைகள், பீட்ரூட், தக்காளி, டயட் சமையல்,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, December 19, 2015

தக்காளி கேரட் சட்னி - 2


தக்காளி கேரட் சட்னி

அரைக்க

பழுத்த தக்காளி - 3 பெரியது
காரட் - ஒன்று
முழு சிவப்பு மிளகாய் - 2
ஆச்சி சிவப்பு மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
இஞ்சி - சிறியதுண்டு (கால் இன்ச் சைஸ்)
வெல்லம் - சிறியது துண்டு ( கால் இன்ச் சைஸ்)
உப்பு - தேவைக்கு
தாளிக்க 
எண்ணை - 1 தேக்கரண்டி (பேலியோ சட்னிக்கு சாதா எண்ணைக்குபதில் நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையில் செய்து கொள்ளவும்
கடுகு - ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது

செய்முறை

முதலில் அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியை காயவைத்த்து எண்ணை கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த கலவையை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு தண்ணீர் சிறிது வற்றியதும் இரக்கவும்.
Tomato carrot chutney - paleo diet
பேலியோ சட்னி. பக்க உணவு

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Saturday, February 14, 2015

ட்ரை கலர் தோசை – டூப்ளிகேட் புல்ஸ் ஐ ஆம்லேட் தோசை - Indian Flag Dosai


ட்ரை கலர் தோசை – ஆம்லேட் தோசை


குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொண்டு சொல்ல இது போல் கலர்ஃபுல்லாக செய்து கொடுத்தால் அம்மாமார்களின் கவலை தீர்ந்தது, உங்கள் வீட்டு பிள்ளைகளின் டிபன் பாக்ஸ் காலி ஆகி ஒன்ஸ்மோர் கேட்பார்கள்.





தேவையான பொருட்கள்
தோசைமாவு தேவைக்கு ( 1 கப் (அ) 2 கப்)

தக்காளி கேரட் சட்னி

வதக்கி அரைகக
எண்ணை – அரை தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
கருவேப்பிலை பொடி – அரை தேக்கரண்டி

தக்காளி – முன்று
கேரட் – 1
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேசைகரண்டி
உப்பு – தேவைக்கு
காஞ்ச மிளகாய்  - 2
பூண்டு – 1 பல்

தாளிக்க
எண்ணை – ஒரு தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
கருவேப்பிலை -  சிறிது
உளுந்து  - அரை தேக்கரண்டி
 செய்முறை
தக்காளி பொடியாக அரியவும், கேரட்டை துருவிவைக்கவும்.
வதக்க கொடுத்துள்ளவைகளை வதக்கி ஆரவைக்கவும்.
ஆறியது மிக்சியில் கட்டியாக அரைத்து எடுக்கவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து அரைத்த சட்னி கலவையை சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்,


பாலக் பெஸ்டோ / டிப் . சட்னி

தேவையானவை
பாலக் கீரை – ஒரு கப்
உப்பு – தேவைக்கு
பச்சமிளகாய் – இரண்டு
பூண்டு – 1 பல் பெரியது
வால்நட் – 5
சர்க்கரை – ஒரு பின்ச்

செய்முறை

பாலக் கீரையை கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடிக்கவும்.

வெண்ணீரை கொதிக்கவிட்டு , ஒரு சிட்டிக்கை உப்பு, சர்க்கரை, இட்லி சோடா கால் சிட்டிக்கை சேர்த்து பாலக்கீரையை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இரக்கி வெண்ணீரை வடித்து விட்டு குளிர்ந்த நீரில் கழுவி மீண்டும் தண்ணீரை வடிக்கவும்.
மிக்சியில் வடித்த பாலக், பச்சமிளகாய், தேவைக்கு உப்பு, பூண்டு , வால்நட் சேர்த்து நன்கு அரைக்கவும்.

கிரீன் தோசைக்கான பில்லிங்கும், ரெட் தோசைக்கான பில்லிங்கும் ரெடி

தேவையான அளவு தோசை மாவை முன்று பாகங்களாகா பிரித்து
ஒரு பாக மாவுடன் பாலக் கலவையை கலக்கவும்.
அடுத்த பாக மாவுடன் ஏதும் கலக்க வேண்டாம்.
அடுத்த பாக மாவுடன் தக்களி கேரட் சட்னியைகலந்து வைக்கவும்.

தவ்வாவை சூடு படுத்தி உள்ளங்கை சைஸ் குட்டி குட்டி தோசைகளாக சுட்டு எடுக்கவும்.

குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ்க்கு தோசை தனியாக சட்னி தனியாக வைத்து அனுப்பாமல் இப்படி அழகாக மாவிலேயே சேர்த்து கலர்ஃபுல்லாக அனுப்பலாம்.


மற்றொரு வகை

கலவையை மாவில் கலக்காமல் முதலில் தோசைமாவை தவ்வாவில் ஊற்றி விட்டு முதலில் வட்ட வடிவமாக ரெட் சட்னியை சுழற்றவும், அடுத்து வெள்ளை மாவை அதை சுற்றிலும் ஊற்றவும்.
அடுத்து பாலக் பெஸ்டோ கலந்த மாவை சுற்றிலும் ஊற்றவும்.




Independence Day Recipe அன்று போஸ்ட் செய் ய செய்து வைத்து பப்லிஷ் பண்ண மறந்துட்டேன்.
இந்த மூவர்ண  தேசிய கொடியில் ரெசிபி செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். நாட்டு பற்று. என் பள்ளி சீருடை கலரும் இது தான்.


இது என் மகனுக்காக அடிக்கடி இப்படி செய்வது.என் மகன் ஹனீபுதீனுக்கு இன்று பிறந்த நாள் தூஆ செய்து கொள்ளுங்கள்,




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/