பிளம்ஸ் ரசம் , பிளம்ஸ் நிறைய வாங்கி அது புளிப்பாக இருந்தால் சாலட் செய்து சாப்பிடலாம். சத்தான ரசமும் வைக்கலாம். நீங்கள் சொன்னால் தான் இது பிளம்ஸ் ரசம் என்று தெரியும்.
ஊட்டி ஆப்பில் = 3
தண்ணீர் = இரண்டு டம்ளர்
புளி = சின்ன கொட்டை பாக்களவு
தண்ணீர் = இரண்டு டம்ளர்
புளி = சின்ன கொட்டை பாக்களவு
தட்டி கொள்ள
மிளகு = அரைதேக்கரண்டி
சீரகம் = அரை தேக்கரண்டி
பூண்டு = முன்று பல்
பச்ச மிளகாய் = ஒன்று
கருவேப்பிலை = சிறிது
சீரகம் = அரை தேக்கரண்டி
பூண்டு = முன்று பல்
பச்ச மிளகாய் = ஒன்று
கருவேப்பிலை = சிறிது
தாளிக்க
எண்ணை = ஒரு தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை
உளுத்தம் பருப்பு = கால் தேக்கரண்டி
கடுகு = அரை தேக்கரண்டி
கருவேப்பிலை = சிறிது
பெருங்காயப்பொடி = ஒரு சிட்டிக்கை
உளுத்தம் பருப்பு = கால் தேக்கரண்டி
கொத்து மல்லி கீரை = சிறிது கடைசியில் தூவ
ஊட்டி ஆப்பிலை இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் இரண்டு விசில் விட்டு வேக விட்டு இரக்கவும்.
அப்படியே நல்ல மசுமையாக வெந்து விடும், புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.தட்டி கொள்ள வேண்டிய பொருட்களை மொத்தமாக முதலில் மிளகு சீரகத்தை இடித்து அத்துடன் பச்சமிளகாய்,பூண்டு கருவேப்பிலையை சேர்த்து தட்டிகொள்ளவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தட்டிய பொருள்களை சேர்த்து நன்கு வதக்கி பிளம்ஸ் வெந்த தண்ணீர் + புளி கரைசலை சேர்த்து உப்பு சேர்த்து நுரைத்ததும் இரக்கவும்.
தேவைபட்டால் சிறிது நெய் சேர்ர்த்து கொள்ளலாம்.
அப்படியே நல்ல மசுமையாக வெந்து விடும், புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.தட்டி கொள்ள வேண்டிய பொருட்களை மொத்தமாக முதலில் மிளகு சீரகத்தை இடித்து அத்துடன் பச்சமிளகாய்,பூண்டு கருவேப்பிலையை சேர்த்து தட்டிகொள்ளவும்.
தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து தட்டிய பொருள்களை சேர்த்து நன்கு வதக்கி பிளம்ஸ் வெந்த தண்ணீர் + புளி கரைசலை சேர்த்து உப்பு சேர்த்து நுரைத்ததும் இரக்கவும்.
தேவைபட்டால் சிறிது நெய் சேர்ர்த்து கொள்ளலாம்.
சுவையான சத்தான பிளம்ஸ் ரசம் ரெடி.
Tweet | ||||||
44 கருத்துகள்:
ஆஹா...வித்யாசமாய் இருக்கு அக்கா...
சூப்பர் ...
Plums rasam - very innovative idea. :-)
இது ஆப்பிள் ரசமா, ப்ளம்ஸ் ரசமா :))
வித்தியாச முயற்சிகளில் இது ரொம்ப வித்தியாசமா இருக்கே!
ஜலீலா அக்கா நலமா?.
எங்க ஊரு பேர இருக்கேன்னு பார்த்தா சூப்பர் குறிப்பா இருக்கே!!!!...நல்ல இருக்குக்கா
நாங்க கல்லால் அடித்து பழம் பறித்த நாட்கள் எல்லாம் நினைவில் வருகிறது :-)
ஊட்டி ஆப்பிள்னு தலைப்பை குடுத்துட்டு ப்ளம்ஸ் ரஸம் உள்ளே இருக்கே!! ( ப்ளம்ஸுக்கு இப்டி ஒரு பேரு இருக்கோ!! நமக்குதான் விவரம் பத்தாதோ!!)
ம்ம்..ரெசிப்பியைப்பார்த்தாலே சுவை அள்ளுதே!
ஜலீலாக்கா ,அப்படியே அந்த தோல்ல அச்சார் எதுவும் செய்ய முடியுமாங்களா???.
வித்யாசமான் ரசம் ரொம்ப நல்லா இருக்கு அக்கா
Plums rasam sounds very interesting..
Must give a try :-)
ரசத்திலும் கலக்கலா?சூப்ப்ர்.புதுசு புதுசாக போட்டு அசத்துறீங்க.
சூப்பர்கா. வரத்தாமுடியல பார்சலாவது அனுப்பினா போதும்
“எத ரசத்தையா ஹா ஹா”
மிளகு ரசம், தக்காளி ரசம், பூண்டு ரசம், பைனாப்பிள் ரசம் ஓகே...
ஆனால், இப்போ தான் முதன் முதலாம இந்த “ஊட்டி ஆப்பிள்” ரசம் கேள்விப்படுகிறேன்...
இன்னும் எதிலாவது ரசம் வைக்க பாக்கி இருக்கிறதா என்றும் தெரியப்படுத்தவும்...
நடத்துங்க....ரைட்....ரைட்......
சூப்பர்ப் ரசம்...ஊரில் இருந்து வந்ததில் இருந்து ஒரே ஜுரம், சளி....climate change ஆனதால்....இப்படி ரசம் பார்க்கவே சூப்பராக இருக்கின்றது...செய்து பார்க்க வேண்டியாது தான்..
நன்றி சீமான் கனி ஆமாம் இது ஒரு வித்தியாசம் + சத்தும் கூட
தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பப்தற்கு மிக்க நன்றி.
சைவ கொத்து பரோட்டா பிளம்ஸ் என்ற ஊட்டி ஆப்பில் ரசம்
சகோ. ஜமால் மிக்க நன்றி,
தொடர் வருகை தந்து உற்சாக மூட்டுவதற்கு மிக்க நன்றி
வாங்க ஹர்ஷினி ரொம்ப நாள் கழித்து வந்து இருக்கீங்க.
உங்க ஊர் ஊட்டியா? அப்ப எப்ப்போதும் குளு குளுன்னு இருக்கும் , என் இடுகை மூலம் பழைய ஞாபகஙக்ள் அசை போடுதா, அதை நினைப்பதே ஒரு இனிமையாச்சே..
(ப்ளம்ஸுக்கு இப்டி ஒரு பேரு இருக்கோ!! நமக்குதான் விவரம் பத்தாதோ!!)
ஜெய்லாணி நெசமா தான் கேட்கிறீஙககளா? ஆப்பில் அச்சார் மட்டும் இல்ல அல்வா கூட செய்யலாம் ஹிஹி
ஸாதிகா அக்கா உஙக் பின்னூட்டமே என்னை அள்ளுது.
கோகுல ராணி தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பமைக்கு மிக்க நன்றி
அருனா கண்டிப்பா செய்து பாருங்கள் , வருகைக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி ஆசியா இது அடிக்கடி செய்வது தான், (ஹஸுக்கும், பையனுக்கும்) பிளம்ஸ் ரொம்ப பிடிக்கும் அது புளிப்பா இருந்தா ஒன்று ஸ்விட் அன்ட் சோர் சாலட், இல்ல ரசம் தான். செய்வேன்.
எத ரசத்தையா. அப்படியே ஊரில் லாரியில் தண்ணீருக்கு கொடுக்கும் பெரிய டியுப் போல ஜார்ஜாவுக்கு கனெக்ஷென் கொடுத்துடவா?
ஹி ஹி
கோபி ரசத்தின் அருமை தெரிந்ததிலிருந்து வித விதமான ரசம் தான் இன்ன்னும் நிறைய வகைகள் இருக்கு. மெதுவாக தான் போடனும், வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி.
ஆலோசனைகள், குறிப்புகள் தருவீங்களா...
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலா அக்கா, நலமா.. நான் புதிதாக பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன். உங்கள் ஆதரவு வேண்டி மின்மினி.
Super .. very different rasam..must be yummy :)
// Jaleela said...(ப்ளம்ஸுக்கு இப்டி ஒரு பேரு இருக்கோ!! நமக்குதான் விவரம் பத்தாதோ!!)
ஜெய்லாணி நெசமா தான் கேட்கிறீஙககளா? //
எங்க ஊர்ல ப்ளம்ஸுன்னுதான் சொல்வோம். ( சில பேரு சீனத்தக்காளின்னும் சொல்வாங்க )
வித்தியாசமாக இருக்கிறது. சாப்பிட்டு மீண்டும் கருத்து கூறுகிறேன்.
Plums rasam pakkave arumaiya irruku..saapta yeppadi irrukum!!yummm..
வா அலைக்கும் அஸ்ஸ்லாம் மின் மினி கண்டிப்பாக என் ஆதரவு உங்களுக்கு உண்டு,
நன்றி சித்ரா, வருகைக்கு மிக்க நன்றி
//எங்க ஊர்ல ப்ளம்ஸுன்னுதான் சொல்வோம். ( சில பேரு சீனத்தக்காளின்னும் சொல்வாங்க .//எனக்கு தெரியல
மதுரை சரவணன் முதல் வருகைக்கு மிக்க நன்றி.
ஆமாம் ஒரு வித்தியாசமான ரசம்
பிரியா உண்மையில் அருமையாக இருக்கும் செய்து பார்த்து சொல்லுஙக்ள்
அருமையான ப்ளம்ஸ் ரசம்!!
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி மேனகா.
வித்தியாசமான ரசம்... செய்து பார்க்க வேண்டும்போல் உள்ளது.... நன்றி!
முதல் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி, செய்து பாருங்கள் வித்தியாசமாக இருக்கும்.
சூப்பர் ரெசிபி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
ஆஹா.. சூப்பர்!
வித்யாசமான ரசம். முதல் வேலையாக இதை நான் செய்து ருசிக்க வேண்டும்.
உங்கள் ப்ளோக்கை நான் http://www.filmics.com/tamilshare என்ற இணைய தலத்தில் பார்த்து அறிந்து கொண்டேன். உங்களுக்கு தெரிந்த இணையத்தில் நீங்கள் கண்ட பக்கங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள இந்த தளத்தில் இலவசமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
Dear Akka, you should have sent this recipe to my Event which I hosted last month..
This rasam sounds too good and yummy..Great recipe..would love to try soon..
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா