Sunday, March 7, 2010

இறால் சேப்பங்கிழங்கு வறுவல்



தேவையான பொருட்கள்



இறால் = 12
சேப்பங்கிழங்கு = 2
காஷ்மிரி மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு ‍= அரைதேக்கரண்டி (தேவைக்கு)
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்கரண்டி
க‌ருவேப்பிலை = சிறிது
எண்ணை = முன்று தேக்க‌ர‌ண்டி










செய்முறை


இறாலை தோலெடுத்து முதுகிலும் வயிற்றிலும் உள்ள அழுக்கை எடுத்து வினிகர் ஊற்றி கழுவி எடுக்கவும்
சுத்தம் செய்த இறாலில் காஷ்மீரி மிளகாய்தூள்,உப்பு, இஞ்சி பூண்டு,சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊறவைக்கவும்.
சேப்ப‌ங்கிழங்கை தோலெடுத்து பொடியாக அரிந்து இறாலுடன் சேர்த்து பிசறி வைக்கவும்.
கனமான இரும்பு வானலியில் இரண்டு தேக்க்கரண்டி எண்ணை விட்டு சிறிய பட்டை, கருவேப்பிலை போட்டு தாளித்து இறால் சேப்பங்கிழங்கை சேர்த்து நன்கு வறுத்து ஐந்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.
க‌டைசியாக‌ ஒரு தேக்க‌ர‌ண்டி எண்ணை விட்டு மேலும் வ‌றுத்து இர‌க்க‌வும்.

குறிப்பு

காஷ்மீரி சில்லி என்பது நல்ல சிகப்பு நிறத்தில் இருக்கும்.



காஷ்மீரி சில்லி என்பது நல்ல சிகப்பு மிளகாய் தூள் ஆனால் காரம் இருக்காது. இல்லை என்றால் சாதா மிளகாய் தூள்+கொஞ்சம் ரெட் கலர் சேர்த்து கொள்ளலாம்.


இறாலை பலவகையாக மசாலாக்கள் போட்டு வறுக்கலாம் அதில் இது ஒரு வகை.

19 கருத்துகள்:

SUFFIX said...

வறுவல் புதுமுறையா இருக்கு, இறாலை வினிகர் ஊற்றி கழுகணுமா? ஏன்? அப்புறம் இங்கே ஆப்பிள் போன்ற நிறைய ஃப்ளேவர்களில் வினிகர் வருகிறது, இது போன்ற சமையலுக்கு எந்த வகை வினிகர் நல்லது?

நட்புடன் ஜமால் said...

இப்படியெல்லாம் போடுறது அநியாயம்

பார்த்தவுடன் சாப்பிட எங்க போறது

:)

ஹுஸைனம்மா said...

ரெண்டும் ஒண்ணா சேத்துப் போட்டா வெந்துடுமா அக்கா? இறால்ல நிறைய தண்ணி ஊறுமே?

mdniyaz said...

சகோதரிக்கு ஜலீலா
இன்னும் வெந்தகிரை பருப்பு செய்து பார்ககவில்லை அதற்க்குள் இரால் வறுவலா?
அசத்துறீங்க
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

அன்புடன் மலிக்கா said...

ஆகா வாசம் தூக்குதே! அந்தகஞ்சிக்கலயத்தயும் சேர்த்து அனுப்புங்கக்கா!

வேலன். said...

இறால் வறுவலே அருமை...அதைப்போல் சேப்பங்கிழங்கு வருவலும் அருமை...்இரண்டும் சேர்ந்தால் சூப்பர்...வாழ்க வளமுடன்,வேலன்.

ஜெய்லானி said...

சேப்பங்கிழங்குக்கு பதில் உருளைக்கிழங்கை சேர்த்தால் நல்லா இருக்குமா ?

ஜெய்லானி said...

காலையில் போட்ட பழைய பதிவை ஏன் கேன்ஸல் செஞ்ஜிட்டீங்க. நல்லாதான் இருந்தது.((என் கமெண்ட்ட பார்த்தா))

ஸாதிகா said...

இறாலோடு சேர்த்து சேப்பங்கிழங்கும்..வித்தியாசமாகத்தான் இருக்கும்.

Jaleela Kamal said...

ஆமாம் ஷபிக்ஸ் இறைச்சிகள் கழுவும் போது வாடை போக‌
1. வினிகர் ஊற்றி கழுவலாம் (வொயிட் வினிகர்)

2. உப்பு தூள், கடலை மாவு போட்டு ஊறவைத்து கழுவலாம்.

3. மஞ்சள் தூள் போட்டும் கழுவலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கமெண்ட் , மிக்க நன்றி.

Jaleela Kamal said...

ஹா ஹா உங்கள் தங்கமணி கிட்ட சொல்லுங்கள் உடனே செய்து தர போறாங்க....

சாருஸ்ரீராஜ் said...

happy Womens Day

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா நீங்கள் சொல்வது சரிதான். அது ரொம்ப கெட்டியா கிழங்கு இருந்தால் சிறிது தண்ணீரில் போட்டு வேகவைத்து போடலாம் அது கொழ கொழவென ஆகிடும்.

இறாலுடன் உருள சேர்த்து வதக்கினால் சூப்பரா இருக்கும்,

அன்று இறால் செய்யும் போது புளி குழம்பிற்கு செய்து மீதி இரண்டு கிழங்கு இருந்தது, பொடியாக அரிந்து போட்டதால் வெந்துவிட்டது.


தண்ணீர் ஊறதான் செய்யும் அதுக்கு ‍ = முதலில் கிடாயில் இறால் கிழங்கு கலவையை போட்டதும் அதிக தீயில் இரண்டு நிமிடம் வதக்கி விட்டு, தீயின் தனலை சிம்மில் வைத்து முடி போட்டு 7 நிமிடம் விட்டால் வெந்து விடும், மறுபடி தீயை அதிக படுத்தி தண்ணீர் வற்றவிட்டு சிறிது எண்ணை ஊற்றி வறுத்தெடுக்கனும்

Jaleela Kamal said...

சகோதரர் நியாஸ் கருத்து தெரிவித்தமைக்கும் உங்கள் பாராட்டுக்கும் மிகக் நன்றி.

Jaleela Kamal said...

மலிக்கா நேர வாங்க பா வாசமா சுட சுடத்தரேன்.

Jaleela Kamal said...

ஜெய்லானி உருளையோடு ரொம்ப சூப்பரா இருக்கும்,

ஆமாம் உங்கள் கமெண்டை பார்த்து தான் எடுத்துட்டேன், அபப்ரம் நீங்க நல்ல இருந்தது சொன்னதால் மீண்டும் பப்லிஷ் பண்ணியாச்சு.


தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா ஆமாம் வித்தியாசமான சுவை ரொம்ப சூப்பரா இருந்தது,
என் சின்ன பையனுக்கு சிக்கனை தவிர ஒன்றும் பிடிக்காது. அவனே இதை சாப்பிட்டு விட்டு அவனா ஒரு பெயரை வைத்து கொன்டான் ஆச்சி ரெஸ்டாரண்ட டிரை மஞ்சூரியன் என்று. அவங்க டாடி வந்ததும் டாடி பிரான் சூப்பரா இருக்கு போய் சாப்பிடுங்கள் என்றானாம்.

Jaleela Kamal said...

ஹுசைனாம்மா இறால் சிக்கன் மட்டன் எல்லாம் வறுக்கும் போது தண்ணீர் விடாமல் இருக்க கழுவியதும் புளி வடிக்கட்டும் கண்வடிகட்டியில் வைத்து நல்ல தண்ணீரை வடியவிட்டு பிறகு சமைக்கனும்

ஹுஸைனம்மா said...

Jaleelakka, as I have mail follow-up for this, I have already seen this. Thanks for ur reply.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா