ஒரு வெள்ளி கிழமை இந்த கிழங்கை வாங்கலாம் என்று தினம் வாங்கும் குராசரியில் போன் செய்து கேட்டேன், எப்படின்னு பாருங்க.
நான்: ஹலோ மரவள்ளி கிழங்கு இருக்கா?
குராசரி மேன்: எந்த விளிக்கிது மர வள்ளியா? ஒன்றும் அறியலயேப்பா
நான்: என்ன சொன்ன இவனுக்கு புரியும், (யோசனை) ஆள்வள்ளிகிழங்கு இருக்கா?
குராசரி மேன்: இல்லல்லோ, எந்தப்பா விளிக்கிது நீங்களு ஒன்னும் மனசிலாவுல
நான் :ஐய்யோ என்னத்த சொல்லி கேட்பது, மரவள்ளிய நாங்க ஆள் வள்ளி இன்று சாப்பிட்டே ஆகனும்.
நான்: ஆ ஞாபகம் வந்துடுச்சி கப்ப கிழங்கு ,கார்த்திக் ராதாவின் முதல் படமான அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக் அந்த படத்தில் பாடியது நினைவுக்கு வந்தது ,வாடி ஏ கப்ப கிழங்கு.
நான்: கப்ப கிழங்கு உண்டா?
குராசரி மேன்: ஓ அதே கப்பயா ஓஒ இப்ப மனசிலாவுது/
குராசரி மேன்: உண்டல்லோ
ஓகே அத கொடுங்க.ஒரு வழியா வாங்கியாச்சி
கேரளத்து மக்களின் தினசரி உணவில் செய்யப்படும், கப்ப கிழங்கு, இதில் நாங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவது இனிப்பு உருண்டைதான். சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
கப்ப கிழங்கு இனிப்பு உருண்டை
கிழங்கை நல்ல மண் போக கழுவி தோலை செதுக்கி கேரட் துருவியில் பெரிய துளையில் துருவி கொள்ளவும்.
துருவியதை இட்லி பானையில் ஈர துணியை விரித்து அவித்து எடுக்கவும்.
அவித்த கிழங்கில் உப்பு, சர்க்கரை,தேங்காய் துருவல் அனைத்தையும் கலந்து உருண்டைகளாக பிடித்து சாப்பிடவும்.
ரொம்ப சூப்பரா இருக்கும்
இந்த மரவள்ளி கிழங்கில் பிட்சா , கே.எஃப்.சி ஷாப்பில் சாலட் மையானஸுடன் வைத்து இருப்பார்கள்.
குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்ல சத்து. அப்படியே அவித்து சாப்பிட்டால் ரொம்ப நல்லது.
இதில் குழம்பு, பொரியல்,கூட்டு, அடை என பல உணவுகள் தயாரிக்கலாம்.
இது அதிகமாக சாப்பிட்டால் கேஸ் பிராப்ளம் வரும், மலையாளிகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்
Tweet | ||||||
23 கருத்துகள்:
"இதை அதிகம் சாப்பிட்டால் காஸ் ப்ரோப்ளம் வரும். மலையாளிகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்."
.........அக்கா, லொள்ளு வர வர ஜாஸ்தியா ஆகுது. அட்டகாசமான ஸ்டைலில் ரெசிபி கொடுக்குறீங்க.
அப்படியே செஞ்சும் கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும். :))
ம்ம்..இதெல்லாம் சாப்பிட்டு வெகு நாட்களாகி விட்டது.பிள்ளைகளுக்கு பிடித்தததையே சமைத்து கொடுத்து நாம் விரும்பி உண்ட உணவுப்பொருட்கள் எல்லாம் மறந்தே விட்டது.ரெசிப்பி போட்டு ஆசையை தூண்டிவிட்டீர்கள் ஜலி.மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரைவள்ளிக்கிழங்கு,இன்னும் ஊரில் கிடைக்கும் பனம்பழம்,தவன்,கொட்டிக்கிழங்கு,சிலந்தரிசி,தென்னங்குருத்தோலை,காராமணி ஒடியல்,பனங்கிழங்கு ஒடியல்,பினாட்டு அனைத்தும் ரெக்கை கட்டிக்கொண்டு கண்முன் நிற்கிறது.
ஜலி,"இது அந்த தம்மல்ல"இது போன இடுகையில் ஜலி விட்ட லொள்ளு.இப்பொழுது சமையக் குறிப்பிலும் வித்தியாசமான முன்னூட்டமிட்டு..நான் முன்பு பார்த்த சீரியஸான ஜலி காணாமலே போய் விட்டார்.இன்னொரு பிரபல பதிவரின் இடுகையில் ஜலி கும்மிய கும்மி...அடடா..ஜலி புது அவதாரம் எடுத்து விட்டீர்கள்?இது..இது..இது..இதுவும் நல்லாத்தான் இருக்கு. KEEP IT UP.
இப்படி பாட்டெல்லாம் பாடி கப்பங்கிழங்கை நினைவுபடுத்திட்டீங்க,அதை வேக வைத்து துருவி அல்லது கட் செய்து தாளித்தும் சாப்பிட எனக்கு பிடிக்கும்.
எங்க ஊர்ல் கப்ப கிழங்குன்னு(ம்) சொல்லுவோம்
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
கப்பக் கிழங்கு ரெஸிப்பியை விட, அதன் முன்கதை வெகு ஜோர்!
அட , அவல் (ஏதோ ஃபாத்திஹாவுக்கு ஓதுவது மறந்து போச்சே.ச்.ச்.ச்) அதுபோல ஈஸிதான்.
///ஆ ஞாபகம் வந்துடுச்சி கப்ப கிழங்கு , ,வாடி ஏ கப்ப கிழங்கு.///
விக்ரம் பாடும் இன்னொரு பாட்டும் இருக்கே..
ஆஹா.... மலையாள விளக்கம் அருமை...
எனக்கு கப்ப கிழங்கு பிடிக்காது ஆனால் இதை பார்த்ததும் சாபிடதொணுது அக்கா...
இன்றைய தலைமுறை மக்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியபோகின்றது...நல்ல பதிவு சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.
ஜலீலாக்கா கப்பக்கிழங்கு இங்கே தாராளமா கிடைக்கும். ஆனா சாதிகா அக்கா வேற சும்மா இருக்காம பனங்கிழங்கு, தவன், தென்னங்குருத்து அது இதுன்னு சொல்லி ஜொள்ளு விட வச்சுட்டாங்க. இப்போ இதெல்லாம் ஊரில் கூட கிடைக்குமான்னு தெரியல :-(
ஜலீலாக்க நீங்கள் உருண்டையாக பிடிப்பதை நாங்கள் புட்டு செய்யும் குழாயில் இட்டு வேகவைத்து புட்டாக செய்வோம்.
சித்ரா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. ஆமாம் ரொம்ப லொள்ளு தான் என்னப்பா இது மனசுல பட்டத எழுதினா லொள்ளுன்ன்றிங்க ஹாஹா
சைவ கொத்து பரோட்டா பார்சல் அனுப்பிடுவேன் ஆன அதற்குள் ஊசி போய்விடுமே
//ஜலி.மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரைவள்ளிக்கிழங்கு,இன்னும் ஊரில் கிடைக்கும் பனம்பழம்,தவன்,கொட்டிக்கிழங்கு,சிலந்தரிசி,தென்னங்குருத்தோலை,காராமணி ஒடியல்,பனங்கிழங்கு ஒடியல்,பினாட்டு //
ஸாதிகா அக்கா எல்லாத்தையும் ஞாபகப்படுத்திட்டீங்க இனி எனக்கு வாய் சும்மாவே இருக்காது போல.
ஊருக்கு போனபோது வருஷ காலம் சாப்பிடாத பனங்கிழங்கை சாப்பிட்டேன்.
மரவள்ளி, சர்க்கரை வள்ளி எல்லாம் இப்ப இங்கு கிடைக்கிறது ஆனால் மற்றது எல்லாம் கிடைக்காது.
ஆசியா நான் தாளித்து சாப்பிட்டதில்லை ஆனால் வெந்து அப்படியே சாப்பிடுவேன்.
ஜெய்லானி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
சீமான் கனி சாப்பிடாத உங்களையும் சாப்பிடச்சொல்லுதா ரொம்ப சந்தோஷம்
.//இன்றைய தலைமுறை மக்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியபோகின்றது..//
வேலன் சார் சரியாக சொன்னீர்கள் மறந்து போன பழங்காலத்து உணவுகளை இப்ப பிட்சா, பர்கர் சாப்பிடுபவர்களுக்கு எங்கே தெரிய போகுது.
கவி சிவா நீங்கள் குழாய் புட்டாகவே அவித்து சாப்பிடுவீர்களா? எனக்கு எந்த மாதிரி கொடுத்தாலும் சாப்பிடுவேன்.
சகோ.ஜமால் உங்கள் ஊரிலும் கப்ப கிழங்குனு தான் சொல்வீஙகளா?
சுஹைனா வாங்க ரொம்ப நாள் கழித்து வந்து பதில் போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
//;நான்: ஹலோ மரவள்ளி கிழங்கு இருக்கா?
குராசரி மேன்: எந்த விளிக்கிது மர வள்ளியா? ஒன்றும் அறியலயேப்பா
நான்: என்ன சொன்ன இவனுக்கு புரியும், (யோசனை) ஆள்வள்ளிகிழங்கு இருக்கா?
குராசரி மேன்: இல்லல்லோ, எந்தப்பா விளிக்கிது நீங்களு ஒன்னும் மனசிலாவுல
நான் :ஐய்யோ என்னத்த சொல்லி கேட்பது, மரவள்ளிய நாங்க ஆள் வள்ளி இன்று சாப்பிட்டே ஆகனும்.
நான்: ஆ ஞாபகம் வந்துடுச்சி கப்ப கிழங்கு ,கார்த்திக் ராதாவின் முதல் படமான அலைகள் ஓய்வதில்லையில் கார்த்திக் அந்த படத்தில் பாடியது நினைவுக்கு வந்தது ,வாடி ஏ கப்ப கிழங்கு.
நான்: கப்ப கிழங்கு உண்டா?
குராசரி மேன்: ஓ அதே கப்பயா ஓஒ இப்ப மனசிலாவுது/
குராசரி மேன்: உண்டல்லோ
ஓகே அத கொடுங்க.ஒரு வழியா வாங்கியாச்சி//
*******
காரசாரமான ரெசிபி போட்டு அசத்திய ஜலீலா இப்போது காமெடி காமெடியா ரெசிப்பி போட்டு அசத்துறாய்ங்கப்பு...
இவங்களுக்கு எல்லாரும் சுத்தி போடுங்க....
மரவள்ளி எனக்கு ஏனோ பிடிப்பதில்லை... என் வீட்டிலும் அம்மா செய்வதில்லை... சர்க்கரை வள்ளி கிழங்கு ஓகே...
ஆனால், மரவள்ளி அப்பளம் படு ஜோராக இருக்கும்....
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா