துவரம் பருப்பு = கால் கப்
பாசிப்பயறு = ஒரு மேசை கரண்டி
எண்ணை = ஒரு தேக்கரண்டி
நெய் = அரை தேக்கரண்டி
வெங்காயம் = ஒன்று
பூண்டு = முன்று பல்
தக்காளி = அரை பழம்
மிளகாய் தூள் = கால் தேக்கரண்டி
தனியாத்தூள் = கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
உப்பு = தேவைக்கு
தேங்காய் துருவல் = ஒரு மேசை கரண்டி
வெந்தய கீரையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும்.பருப்பு வகைகளை ஊறவைக்கவும்.
குக்கரில் எண்ணை விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து தாளித்து தக்காளியை அரைத்து ஊற்றி தூள் வகைகள் அனைத்தையும் போட்டு வதக்கி, கீரையை சேர்த்து வதக்கவும்.
கடைசியாக பருப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட்டு, தேங்காய் துருவல், நெய் சேர்த்து குக்கரை மூடி முன்று விசில் விட்டு இரக்கவும்.
ரொம்ப அருமையான சுலபமான வெந்தயக்கீரை பருப்பு.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
குறிப்பு
டயட்டுக்கு ஏற்ற உணவு, டயட் செய்பவர்கள் (நெய், தேங்காய் சேர்க்க தேவையில்லை). சப்பாத்தியுடன் சாப்பிட நல்ல இருக்கும்.
அபார்ஷன் ஆனவர்கள் வெந்தய கீரை உணவில் சேர்த்து கொண்டால் கர்பப்பையில் உள்ள அழுக்குகள் வெளியாகும்.
கர்ப்பப்பையில் உள்ள அழுக்குக்களை வெளியேற்ற பிள்ளை பெற்றவர்களுக்கும், கருகலைப்பானவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் நல்லது
உடல் சூடு, வயிற்று புண் வாய் புண் அல்சருக்கும் மிகவும் நல்லது இந்த வெந்தயக்கீரை.
இதில் மேத்தி புலாவ், மேத்தி பரோட்டா, மேத்தி மீன் கூட்டு, மேத்தி சிக்கன் என வித விதமாக செய்யலாம்.
இதில் மேத்தி புலாவ், மேத்தி பரோட்டா, மேத்தி மீன் கூட்டு, மேத்தி சிக்கன் என வித விதமாக செய்யலாம்.
இது குக்கரில் செய்வதால் நல்ல வெந்து இருக்கும் குழந்தைகளுக்கு அப்படியே சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.
மற்ற கீரைகளையும் இதே முறையில் செய்யலாம்.
வெந்தயக்கீரை கிடைக்கவில்லை என்றால் வீட்டிலேயே ஈசியாக சின்ன தொட்டியில் வைத்து பிரெஷாக கூட சமைக்கலாம்.
மற்ற கீரைகளையும் இதே முறையில் செய்யலாம்.
வெந்தயக்கீரை கிடைக்கவில்லை என்றால் வீட்டிலேயே ஈசியாக சின்ன தொட்டியில் வைத்து பிரெஷாக கூட சமைக்கலாம்.
ஒரு கைப்பிடி வெந்தயத்தை மண்ணில் புதைத்து தண்ணீர் ஊற்றினால் முன்றே நாளில் வெந்தயக்கீரை ரெடி.
Tweet | ||||||
19 கருத்துகள்:
வெந்தய(க்)கீரை ரொம்ப பிடிக்கும்.
அந்த மீன் கூட்டு சுட்டி கொடுங்க, இன்னும் போட்டாட்டி நேயர் விருப்பம் சீக்கிரம் போடுங்க.
வெந்தயைகீரையை உருவாக்கும் விதம் சொன்னதற்கும் நன்றி.
மேத்திகீரை பருப்பு சிம்ப்ளி சூபர்ப்.ஜலீலா உங்க டிப்ஸ் தாஙக் இதில் ஹைலைட்.
நல்ல சத்துள்ள கீரை , செய்முறை ஈசியாகவும் இருக்கு
கீரையில் பருப்பு போட்டு சமைப்பது ரொம்ப பிடிக்கும்.இந்த முறையில் செய்து பார்க்கிறேன் ஜலி.
நல்ல ரெஸிபி.....
very healthy one. :-)
healthy recipe
அப்படீன்னு ஒரு கீரை இருக்கிறதா நல்ல பதிவு, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஜலீலாக்கா வெந்தயகீரை பருப்பு நல்லா இருக்கு. இப்பதான் செய்து சாப்பிட்டேன் சப்பாத்தியோடு. வோட்டும் போட்டாச்சு :-)
சகோ.ஜமால் அந்த மேத்தி மீன் இன்னும் கொடுக்கல , அடுத்த முறை வாங்கியதும் செய்ததும் போடுகிறேன்
சைவ கொத்து பரோட்டா வருகைக்கு மிக்க நன்றி,
ஆமாம் ஈசியாக வீட்டிலேயே வெந்தயக்கீரை ரெடி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ஆசியா
நன்றி சாருஸ்ரீ
ஸாதிகா அக்கா வெந்தயக்கீரை கசக்க்கும் இப்படி பருப்புடன் சேர்த்து செய்யும் போது நல்ல இருக்கும்.
நன்றி ஜெய்லானி
நன்றி சித்ரா
நன்றி காஞ்சனா
சசி குமார் இப்படி ஒரு கீரை இருப்பதே தெரியாதா?
வெந்தயக்கீரை பற்றி தெரியாது என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கு.
"methi dal"Simply Super....
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா