Wednesday, June 20, 2018

பாரகோட மீன் சால்னா & மீன் ஃப்ரை





பாராகோட மீன் சால்னா மீன் ஃப்ரை -- Barracuda Fish
பார கோட என்ற மீன் சீலா மீன் போல இருக்கும் ஆனால் ஒரு முழ நீளம் சின்ன மீனாக இருக்கும், அதில் செய்த குழம்பு செய்து பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள், முடிந்தால் செய்த போட்டோக்களை அனுப்பினால் இங்கு பகிர்வேன்.

பாரகோடா மீன் சால்னா & மீன் ப்ரை

பாரகோடா மீன் – 1 கிலோ
எண்ணை – 25 கிராம் (நல்லெண்ணை) 
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – ½ தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – 15 இதழ்
சின்ன வெங்காயம் – 6
பூண்டு  - 4 பல்

அரைக்க

வெங்காயம் – 3
பூண்டு – 4 பல் பெரியது
பழுத்த தக்காளி – 6 மீடியம்

மசாலாக்கள்

காஷ்மீரி சில்லி பொடி  - 1 மேசைகரண்டி
தனியா(கொத்துமல்லி தூள் ) – 2 ½ மேசை கரண்டி
மஞ்சள் தூள்  - ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு

புளி  - இரண்டு லெமன் சைஸ் பால்ஸ்
தேங்காய் பவுடர் - 2 மேசைகரண்டி
























செய்முறை:
மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதில் சிறிது வினிகர் சேர்த்து 5 நிமிடம் ஊறவைத்து மீண்டும் கழுவ்வும்.
அரைக்க கொடுத்துள்ள வெங்காயம் தக்காளி, பூண்டை விழுதாக அரைக்கவும்.
பூண்டு, சின்ன வெங்காயம், கருவேப்பிலை ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.
வாயகன்ற பாத்திரதில் எண்ணை ஊற்றி சூடாக்கி, கடுகு, வெந்தயம், சீரகம், கருவேப்பிலை, பூண்டு சின்ன வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
 அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கலக்கி கொதிக்க விடவும்.
அரைத்த அதே மிக்சியில் சேர்க்கவேண்டிய மசாலாவகைகளை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு அரைக்கவும்.
கொதித்து கொண்டிருக்கும் மீன் சால்னாவில் சேர்க்கவும்.
மசாலாவாடை அடங்கியதும் புளியை கட்டியாக கரைத்து சேர்த்து கொதிக்க விடவும்.

புளி மசாலா வகைகள் ஒரு சேர நன்கு கொதித்ததும் மொத்த முன்றில் ஒரு பகுதியை போடவும், தேங்காய் பவுடரை வென்னீரில் கரைத்து ஊற்றவும்.
நன்கு கொதிக்க விட்டு கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.

பாரகோட என்பது  ஒரு முழ நீளத்தில் சிறிய மீன் சீலா மீன் போலவே இருக்கும்.
இங்கு துபாயில் இந்த மீன் அதிகமாக கிடைக்கும்.

மீதமுள்ள மீனை ஃப்ரைக்கு பயன் படுத்தவும்
பரிமாறும் அளவு - 5 நபர்களுக்கு


கடல் உணவு. Barracuda fish

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Thursday, June 14, 2018

Dubai Burka //துபாய் புர்கா - Hand Stone Design -Jk



Dubai Burka

வீடியோவை கிளிக் செய்து பாருங்கள் ஹாண்ட் வொர்க் புர்கா எல்லாம் பிச்சர் இருக்கு அது போல என்ன சைஸ் வேண்டுமானாலும் ஆர்டர் செய்தால் தைத்து தருவோம்.

எப்படி ஆர்டர் செய்வது அதில் உள்ள கான்டாக் நம்பருக்கு வாட்ஸ் அப் செய்யுங்கள்.

என்ன டிசைன் தேவையோ செலெக்ட் செய்து எங்க வாட்ஸ்அப் க்கு அனுப்பவும்.
பிறகு நாங்க எங்க அகோன்ட் நம்பர் தருவோம்.


புர்காக்கு பணம் எங்க அகோன்ட் நம்பரில் டெப்பாசிட் செய்யனும். பிறகு தைத்து அனுப்புவோம்

ஒரு வாரம், அல்லது 10 நாட்களில் அல்லது 21 நாட்களில் டெரிவரி பண்ணுவோம்.
.

samaiyal attakaasam youtube channel subscribe செய்து வைத்து கொள்ளுங்கள் , அப்டேட் பன்றோம்ம்


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

Monday, June 11, 2018

ஸ்ராபெர்ரி கேசரி -Strawberry Kesari


ஸ்ராபெர்ரி கேசரி



நாம் அடிக்கடி செய்யும் கேசரி தான் ஆனால் அதே சிறிது பழம் சேர்த்து அல்லது காய் சேர்த்து செய்தால் சத்தாக சாப்பிடலாமே

கேசரியில் பல விதம் பைனாப்பிள் கேசரி, பீட்ரூட் கேசரி,கேரட் கேசரி,என்று பட்டியிலிட்டு கொண்டே போகலாம். ஆனால் குழந்தைகளுக்கு பிடித்த ஸ்ட்ராபெர்ரி கேசரியை செய்து பாருங்கள் சுவையே அலாதி தான்..பார்ட்டியில் வைக்கும் போது வித்தியாசமான சுவையில் கலரும் சிவப்பு வண்ணதில் பார்க்கவே அசத்தலாக இருக்கும்.


Strawberry Kesariஇ
தேவையான பொருடகள்

ஸ்ராபெர்ரி பழம் – 5
ரவை – 100 கிராம்
சர்க்கரை – 75 கிராம்
தண்ணீர் – 200 மில்லி
பிஸ்தா ப்ளேக்ஸ் – இரண்டு ஸ்பூன்
முந்திரி – 6 நெய்யில் வறுத்தது
நெய் – 2 தேக்கரண்டி
பட்டர் – ஒரு மேசைகரண்டி






செய்முறை

பட்டரில் ரவையை கருகாமல் வறுக்கவும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தை மிக்ஸியில் அரைக்கவும்
200 மில்லி தண்ணீரை சூடுபடுத்தி அதில் சர்க்கரையை கொட்டி கரைந்ததும் அதில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேர்த்து கொதிக்க விட்டவும்
தீயின் தனலை குறைவாக வைத்து விட்டு வறுத்து வைத்துள்ள ரவையை தூவி கிளறவும்.
கிளறும் போது இடையில் நெய்விட்டு வறுத்த முந்திரி சேர்த்து நன்கு சுருள கிளறி இரக்கவும்.
பிஸ்தா பிலேக்ஸ் தூவி தட்டில் கொட்டி ஆறவைத்து இதய வடிவில் அல்லதுவேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு பரிமாறவும்.


மூவர்ண கேசரி .

பைனாப்பிள் கேசரி

சாப்ரான் நட்ஸ் பிலைன் கேசரி

சிம்பிள் ஸ்வீட் , ஈத் ஸ்பெஷல்ல்

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

Tuesday, June 5, 2018

How to Make Chikoo Agar Agar - சப்போட்டா பழ கடல்பாசி

Chikku agar agar pudding

சப்போட்டா பழ புட்டிங்
sappoottaa  pudding

கடல்பாசி என்னும் சைனா கிராஸ்(அகர் அகர்) ஒரு சைவ உணவு. இது நோன்பு காலங்களில் இஸ்லாமியர்களின் இல்லங்களில் நோன்பு திறக்க செய்யும் பல வகை உணவுகளில் இதுவும் ஒரு வகையாகும்.உடலுக்கு மிகவும் குளிர்ச்சி, கொளுத்தும் கோடையிலும் இதை செய்து சாப்பிடலாம். அல்சர், வாய் புண் மற்றும் வயிற்று புண்ணையும் ஆற்றும்.ஜெல்லி போல் கலர் கலராக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உணவகங்களில் டெசர்ட் மற்றும் ஐஸ்கீரிம் வகைகளுக்கும் இதைசேர்த்து செய்வார்கள் .





Please Subscribe and share with your friends



 

தேவையான பொருட்கள்

அகர் அகர் (கடல் பாசி) – ஒரு கைப்பிடி
சர்க்கரை  - 6 தேக்கரண்டி
தண்ணீர் – 2 டம்ளர்  (400 கிராம்)
பால் – 1 டம்ளர்
சப்போட்டா – 4
பொடியாக நறுக்கிய பிஸ்தா  – தேவைப்பட்டால்

அகர் அகர் என்னும் கடல் பாசியை தண்ணீரில் ஊறவைத்து வடிக்கடி அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கரைய கொதிக்க விடவும்.
சப்போட்டாவை பால் சேர்த்து அரைத்து அகர் அகர் உடன் கலக்கவும்.
சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
ஒரு பெரிய தாம்பாள தட்டில் அகர் அகர் கலவையை ஊற்றி ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்கவும்.மேலே பிஸ்தால் அல்லது உங்களுக்கு விருப்பட்ட நட்ஸ் தூவி விடவும்.இரண்டு மணி நேரம் குளிர வைத்தால் போதுமானது, வேண்டிய வடிவில் கட் செய்து பரிமாறவும்.
சூப்பரன சப்போட்டா பழ கடல் பாசி ரெடி






https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/